மன்னார் வளைகுடாவில் கடும் சண்டை

நேற்றிரவு (ஏப்ரல்-6,2007) மன்னார் வளைகுடா கடற்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் கடும் சண்டை நடந்தது. இத்தகைய சண்டைகளால் மன்னார் வளைகுடாவில் அதிரைப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்படாமல் இந்தியக் கடற்படை கண்கானிப்பை தீவிரப்படுத்தி மீனவர்களுக்கும் கடற்கரையோர மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNJ20070406154011&Title=Srilankan+News&lTitle=CXe%FBLf+%F9Nn%A7Ls&Topic=0
Share:

அறிமுகம்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிராம்பட்டினத்திற்கு என அதிரை.காம் இருக்கும்போது "அதிரை எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் ப்ளாக் தேவையா? என்று கேட்கலாம். இணைய தளத்தில் செய்திகளை உள்ளிடுவதற்கு இணையதள நிர்வாகியின் அனுமதி தேவைப்படலாம்.செய்திகளின் தரம்,உள்ளடக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிர்வாகி அனுமதிக்கலாம் அல்லது தேவையான மாற்றங்கள் செய்து பிரசுரிக்கலாம்.

அவசர உலகில் வாசிப்பாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் பொறுமை இருப்பதில்லை. நுட்பக்குறைபாடுகளால் சில சமயம் கஷ்டப்பட்டு எழுதிய செய்திகள் பிரசுரம் ஆகாமல் அலைக்கழிக்கலாம். இத்தகைய சிக்கல்களைக் கருத்தில் கொண்டால் இணையதளத்தில் செய்திகளை உள்ளிடுவதை விட, ப்ளாக் என்னும் வலைப்பூக்களில் எழுதுவது இலகுவானது.

ஆங்காங்கே கிடைக்கும் அதிரை மற்றும் சுற்றுவட்டாரச் செய்திகளை கூட்டுப்பதிவாக ஒரே இடத்தில் எழுதுவதன் மூலம் தேடுபவர்களின் தேடல் இலகுவாகும்.மேலும் இணையதள வசதி இல்லாதவர்களும் மின்மடலாகச் செய்தியை அனுப்புவதன் மூலம் வலைப்பூவில் செய்திகளை நேரடியாக உள்ளிட முடியும். யாரையும் நோகடிக்காமல், அதிரை மக்களுக்குப் பயனுள்ள தகவல்களையும் செய்திகளையும் இப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ள மட்டுமே இவ்வலைப்பூ பயன்படுத்தப்படும்.

இத்தகைய செலவற்ற முயற்சியால் எழுத்தார்வம் மிக்க அதிரை மாணவர்களை ஊடகப் பயிற்சி அளிக்கலாம். இதன் மூலம் நம் தாய்மொழியாம் தமிழில் சரலமாக எழுதப் பழகுவதுடன் இணையத்திலும் எழுத்தாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது.

செய்திகளை நேரடியாகவும், மின்மடல் மூலமாகவும் உள்ளிடுவதுடன் பின்னூட்டமாகவும் உள்ளிடலாம். இதன் மூலம் ஒருவர் பதிவேற்றிய செய்தியை இன்னொருவர் அப்டேட் பண்ணவும் முடியும்.

அதிரை எக்ஸ்பிரஸில் நமதூர் பற்றிய நிகழ்வுகள், விளம்பரங்கள், திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற பகிர்ந்து கொள்ளக்கூடிய செய்திகளைப் பதியலாம்.
ஆர்வமுள்ள இணையர்களும் வலைஞர்களும் adiraixpress@gmail.com என்ற முகவரிக்கு மடலிட்டு தொடர்பு கொண்டால் மேற்கொண்டு சிறப்பாகச் செய்யலாம்.
Share: