தினமலரின் திரித்தல் செய்திகள்

அதிரை முஸ்லிம் பொதுமக்களும் வர்த்தகர்களும் மெயின் ரோட்டில் தங்களுக்கென வழிபாட்டுத்தலம் வேண்டும் என்று பல ஆண்டுகள் பாடுபட்டு, ஹிமாயத்துல் இஸ்லாம் அமைப்பு சங்கத்தின் முயற்சியால் சொந்தச் செலவில் நிலம் வாங்கி பள்ளிவாசல் அமைத்து தொழுது வருகின்றனர். இதனை எதிர்க்கும் மதவெறியர்களுடன் பஞ்சாயத்து போர்டும் சேர்ந்து கொண்டு பல இடையூறுகளைச் செய்து வருகின்றனர்.

மின்சார வாரியத்தின் மெத்தனத்தால் பள்ளிவாசலுக்குத் மின்னிணைப்பு கேட்டு கொடுக்கப்பட்ட கோரிக்கைகள் 'மீட்டர் ஸ்டாக் இல்லை' என்று காரணம் சொல்லப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளன. தொழுகையாளிகள் 'உளு' (சுத்தம்) செய்வதற்கும், தொழுகை நடத்தவும் மின்சாரத்தை அருகிலுள்ள வீட்டிலிருந்து தற்காலிகமாகப் பெற்று பயன்படுத்தி வந்தனர்.

மதவாதச் சக்திகளின் திட்டத்திற்கு உடந்தையாக அதிரை மின்சார வாரியம் பள்ளிவாசலுக்கான மின்னிணைப்பை நேற்று (29-06-2007) துண்டித்துள்ளனர். இதுபற்றி முந்தைய செய்திகளில் குறிப்பிட்டுள்ளோம்.

ஆனால்,தினமலர் நாளிதழ் தஞ்சாவூர் பகுதி செய்திகளில் (30-06-007) பள்ளிவாசலை ஆக்கிரமிப்புக் கொட்டகை என்று புழுகியுள்ளது.
ஆக்ரமிப்பு பிரச்னை போராட்ட அறிவிப்பு ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையால் நிறுத்தம்

பட்டுக்கோட்டை: இஸ்லாம் அமைப்பினர் ஆக்ரமிப்பு செய்ததால் அறிவிக்கப்பட்ட போராட்டம், ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையால் விலக்கி கொள்ளப்பட்டது. பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தை முஸ்லாம் சமூகத்தை சேர்ந்த சிலர் ஆக்ரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும். அங்கு வைக்கப்பட்ட பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக அங்கு மின் இணைப்பு பெற்றுள்ளதை துண்டிக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அப்பகுதி ஹிந்து அமைப்புக்கள் அறிவித்தன.

இதனால், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., கலைச்செல்வி தலைமையில் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., விஜயன் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடந்தது.பிரச்னைக்குரிய நிலத்தின் உரிமை குறித்து பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு பெற்ற உடன் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.டவுன் பஞ்சாயத்து சொத்துக்களை சேதப்படுத்திய நபர்கள் மீது அதிராம்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தலைமைறைவாகி விட்டனர். குற்றவாளிகளை தேடிவருகின்றனர். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பிரச்னைக்குரிய நிலத்திலுள்ள கீற்றுக் கொட்டகைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் பட்டுக்கோட்டை மின்வாரி கோட்ட பொறியாளரிடம் புகார் அளித்தார். இதன்படி மின் இணைப்பை துண்டித்ததாக நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். எனவே, போராட்டங்களை கைவிட வேண்டுமென ஆர்.டி.ஓ., கலைசெல்வி கூறினார். இதை ஏற்று, ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் பரமானந்தம், நகர தலைவர் பாலு, டி.எஸ்.பி., விஜயன், அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

http://www.dinamalar.com/2007june30/district/thanjavur.asp
பொதுமக்களின் சொந்தப்பணத்தில் வாங்கிய நிலத்தில்,அவர்கள் தொழுவதற்காகக் கட்டப் பட்டுள்ள இறையில்லத்தை இவ்வாறு கொச்சை படுத்துவது வணிக ரீதியில் செய்திகளை விற்கும் நாளிதழுக்கு அழகல்ல.

செய்திகளின் நம்பகத்தன்மைக்கு சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் கமிட்டி மற்றும் பொறுப்பாளர்களிடம் விசாரித்து எழுதுவதே பத்திரிக்கை தர்மம். தினமலர் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அதிரை தினமலர் வாசகர்களின் எதிர்பார்ப்பு!

-Cellல துரை-
Share:

Watch "Adirai masjid"

Your friend, aussitamilmuslim@gmail.com, has sent you the following video from Google Video and included this message:

Adirampattinam is a famous islamic town of Tamil nadu

Adirai masjid

3 min 25 sec - 29/06/2007
Description: Adirampattinam masjid Populor islamic town of Tamilnadu India

Want to see more cool videos?
Go to video.google.com/

Think you have an even cooler video?
Add it at video.google.com/videouploadform

If you're having trouble watching the video, try copying the following URL into your browser:
http://video.google.com/videoplay?docid=3489271762609002702&pr=goog-sl

Share:

அல் அமீன் பள்ளிக்கு மின் இணைப்பு துண்டிப்பு

மெயின் ரோட்டிலுள்ள அல் அமீன் பள்ளியிக்கு பல மாதங்களாக மின் இணைப்பு இல்லாமல் இருந்து வந்தது. மின் இணைப்பு வேண்டி கொடுக்கப்பட்டிருந்த கோரிக்கையை வேண்டுமென்றே இழுத்தடித்து காலம் கடத்தி வரும் மின்சார வாரியம், தற்காலிகமாக பக்கத்து வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் துண்டித்துள்ளது.

மீட்டர் ஸ்டாக் இல்லை என்று பலமாதங்களாகச் சொல்லி வரும் மின்சார வாரியத்தின் மெத்தனத்தால் தொழுகை நடந்துவரும் பள்ளியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மின்கட்டணம் வசூலிக்க நகரின் மையப்பகுதியில் வசூல் அலுவலகம் அமைக்கக் கோரி மின்சார வாரியத்துக்கு எதிராக த.மு.மு.க தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்குப் பழிவாங்கும் நோக்கிலும், பஞ்சாயத்து போர்டிலுள்ள இந்துத்துவா வெறியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் முகமாகச் செயல்பட்டு வரும் அதிரை மின்சார வாரியத்தின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சொந்தக் கட்டிடம் இன்றி இயங்கி வந்த அதிரை மின்சார வாரியத்திற்கு அதிரையைச் சார்ந்த முஸ்லிம்கள் சுமார் முப்பது இலட்சம் மணை மதிப்புள்ள சொந்த இடத்தை இலவசமாக வழங்கினர் என்பது குறிப்பிடத் தக்கது.
Share:

பஸ் மறியலுக்கு அனுமதி மறுப்பு - போலீஸ் குவிப்பு

நேற்று (28-06-2007) அதிரையில் காவல்துறை அனுமதியின்றி மறியல் செய்யத் திட்டமிடிருந்த இந்து முன்னணியின் சதியை போலீஸார் முறியடித்துள்ளனர். அதிரையில் ஆங்காங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பதட்டமான சில பகுதிகளில் 144 ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அல்-அமீன் பள்ளிவாசலுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் பஞ்சாயத்து போர்டிலுள்ள இந்துத்துவா வெறியர்கள் அதிரையின் சுற்று வட்டார கிராம்ங்களான புதுக்கோட்டை உள்ளூர், நடுவிக்காடு, மாளியக்காடு ஆகியவற்றில் இருந்து கூலிக்கு ஆட்களைத் தூண்டி பள்ளிவாசல் பிரச்சினையை மதச்சண்டையாக மாற்ற முயன்று வருகின்றனர்.

அதிராம்பட்டினம் மக்களின் சுற்றுவட்டாரத் தோப்புகளில் கருணை அடிப்படையிலும் பாரம்பரிய நட்பின் அடிப்படையிலும் வசித்து வரும் 'குடி' எனப்படும் காவல்குடும்ப இளைஞர்களை அதிரை மக்களுக்கு எதிராகத் தூண்டி வரும் இந்து முன்னணியின் விஷமத்தனம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
Share:

பேரூராட்சியின் மெத்தனம் - சீரழிந்த சாலைகள்

அதிராம்பட்டினத்தில் மணை விலை அதிகமாக விற்கப்படும் பகுதி CMP லேன். பேரூராட்சிக்கு வீட்டுவரி, தண்னீர் வரி என வருவாயை அள்ளிக் கொடுக்கும் பகுதிகளில் CMP லேனும் ஒன்று. வராத குடிதண்ணீருக்கு வரிகட்டும் அப்பாவிகள் நிறைந்த பகுதியான CMP லேனில் 4-5 மாதங்களுக்கு முன் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் இவை:

அதெல்லாம் பழையகதை ஐயா! உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் தற்போது இப்பகுதிகள் ஜொலிக்கின்றன. வந்து பாருங்கள்" என்று பேரூராட்சி அலுவலரோ அல்லது ஆளும் கட்சியினரோ ஆதாரங்களுடன் மடலிட்டால் இப்பகுதியில் பிரசுரிக்கப்படும்.

-நமது அரசியல் நிருபர்-
Share:

இதெல்லாம் உள்விவகாரம் சார்.

அல் அமீன் பள்ளிவாசலுக்கு பேருந்து நிலையம் வழியாகப் பாதை அமைக்கத் தடையாக இருக்கும் முக்கிய புள்ளியின் பேரன், தப்லீக் ஜமாத் அமைப்பில் ஈடுபாடு கொண்டு சுன்னத்தான வழிமுறையில் இளந்தாடியுடன இருந்து வந்துள்ளார்.

சென்றவாரம் முக்கியப் புள்ளியின் அடாவடித் தனங்களைப் பொதுமக்களோடு சேர்ந்து எதிர்த்துக் கோஷம் போட்டதால், தாத்தாவுக்கு பேரன் மீது செம எரிச்சல். பேரனை சமாதானம் செய்தும் பிரயோஜனமில்லை,இனிமேல் தேவையின்றி் பொதுக் காரியங்களில் தாத்தாவுக்கு எதிராக கோஷம் போடக்கூடாது என்று அன்பாக குடும்பத்தினரால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

பேரன் விடாப்பிடியாக தாத்தவுடன் ஒத்துழைக்க மறுத்ததோடு "ல்லாஹ் ரசூலுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று வசனம் பேசி இருக்கிறான். தாத்தாவுக்கு கோபம் தலைக்கேறியது. தாத்தா என்ன சாதாரண ஆளா? கொதிந்தெழுந்த சுற்றமும் நட்பும் பேரனின் தாடியை மழித்து சமுதாய உணர்வைக் குறைத்துள்ளனர். இளந்தாடியுடன் தாத்தாவுக்கு எதிராகக் கோஷம் போட்ட ஈமானுள்ள பேரன், வழுவழு முகத்துடன் சோகமாக இருப்பதை நேரில் பார்த்தவர்கள் சொல்லி வருத்தப்பட்டார்கள்.

அரசியல்வாதி வீட்டில் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறை எதற்கு? என்று ஆணவமாகச் செயல்படும் முக்கிய புள்ளிக்கு அல்லாஹ் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்.

சீப்பை ஒழித்து விட்டால் கல்யானம் நின்றுவிடுமா?

-ஊர்சுத்தி உமர்-
Share:

மல்லிபட்டினம் மீனவர்கள் 3 பேர் உடல் இன்று கரை ஒதுங்கியது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் அருகில் உள்ள மல்லிப்பட்டினத்தில் இருந்து கடந்த 21ம் தேதி, மீன்பிடிப்பதற்காக 40 படகுகள் கடலுக்குள் சென்றன. 37 படகுகள் கரை திரும்பியுள்ள நிலையில் மற்ற 3 படகுகளில் சென்ற 7 மீனவர்கள் மட்டும் இன்னமும் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களின் உறவினர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மீன் பிடிக்கச் சென்று 4 நாட்களாகியும் 7 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இந்நிலையில் இன்று 3 மீனவர்கள் உடல் கரை ஒதுங்கியது. மற்றவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. இதனால் அம்மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியது.

-
Share:

அதிரை இந்து முன்னணியின் சதித்திட்டங்கள்

24-06-2007 மாலை 5:00 மணியளவில் மெயின் ரோட்டிலுள்ள செல்லி அம்மன் கோவிலில் கூடிய இந்து முன்னணி பயங்கரவாதிகள், அதிரை முஸ்லிம்களுக்கு எதிராகத் தீட்டியுள்ள சதித்திட்டங்கள் வெளியாகி உள்ளன. பழஞ்செட்டித் தெரு 'கூலூ' என்று அழைக்கப்படும் பால சுப்ரமணியன் சகோதரர்கள் (மறைந்த பெரியவர் ஷன்முக தேவரின் பேரன்கள்) தலைமையில் சுமார் 30-40 RSS வெறியர்கள் கூடியுள்ளனர். கூட்டத்தின் முடிவில் மதவெறியுடன் நிறைவேற்றப்பட்ட பயங்கர தீர்மானங்கள் வருமாறு:

1) அல் அமீன் பள்ளிவாசலை அப்புறப்படுத்த பேரூரட்சியை நிர்ப்பந்திப்பது.காலம் தாழ்த்தினால் பலவந்தமாக அப்புறப் படுத்துவது.

2) மேற்கொண்டு பள்ளிவாசலில் தொழுகை நடக்காமல் தடுப்பது.

3) முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள துலுக்கன்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல், போராட்டங்கள் நடத்துவது.

4) மெயின் ரோட்டில் பள்ளிவாசலை அகற்றாவிட்டால் மேலத்தெருவில் முனிக்கோவிலையும் அகற்ற முடியாது. பள்ளிவாசலில் தொழுகை நடந்தால்,முனிக்கோவிலில் கிடாவெட்டி பலியிடுவது தொடர வேண்டும். (முனிகோவில், முஸ்லிம்களின் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதையும், உயர் நீதிமன்றம் அதனை அப்புறப்படுத்தச் சொல்லி தீர்ப்பு வழங்கியதையும் நினைவில் கொள்க)

5) மக்கள் உரிமை வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் M.M.S அப்துல் வஹாப் அவர்கள், "நான் பள்ளிவாசல் கட்டுவதற்கு இடையூறாக இருந்தேன் என்று நிருபித்தால் பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்" என்று சொன்னதைச் சுட்டி, M.M.S அப்துல் வஹ்ஹாப் மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டுவர முயற்சிப்பது.

ஆகியவை முக்கிய தீர்மானங்கல். இவையல்லாமல் பாபர் மஸ்ஜிதில் சிலை வைத்ததுபோல் பேரூந்து நிலையத்தில் வினாயகர் சிலையை வைத்து தேவையற்ற பதட்டத்தை உண்டு பண்ணவும் திட்டமிட்டுள்ளதாக சமூக நல்லிணக்கம் விரும்பும் இந்து சகோதரர்கள் கவலை தெரிவித்தனர்.
-நமது நிருபர்-
Share:

அதிரை பேரூராட்சித் தலைவருக்கு எதிரான போஸ்டர்

அதிராம்பட்டினம் பேரூராட்சித் தலைவரும் நகர காங்கிரஸ் தலைவருமான M.M.S.அப்துல் வஹாப் அவர்கள் மீது அதிருப்தி கொண்டுள்ளவர்,அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஊரெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.அதிரை முஸ்லிம்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முஸ்லிம்களின் சொந்த இடத்தில் பள்ளிவாசல் கட்ட ஒத்துழைக்காததால் M.M.S அப்துல் வஹாப் அவர்கள் மீதான அதிருப்தியை பரவலாகக் காணமுடிகிறது.

M.M.S மீதான ஊர்மக்களின் அதிருப்தியை, திமுகவும் அ.தி.மு.கவும் நன்கு பயன்படுத்தி அரசியல் இலாபம் அடைந்துள்ளனர். இதற்கு மேலும் M.M.S அப்துல் வஹாப் அவர்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு ஒத்துழைக்காமல் காலம் கடத்தினால் இதுவரை கட்டிக் காத்த அரசியல் செல்வாக்கை இழக்க நேரிடும்.

உலக்கைக்கு ஒரு பக்கம் அடி என்றால் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி!

-நமது அரசியல் நிருபர்-
Share:

சிக்குன்குன்யா -தூங்கும் பேரூராட்சி Vs. தூங்காத மக்கள்

தென்மாநில மக்களை வாட்டும் சிக்குன்குன்யா எனும் கொசுக்களால் பரவும் கொடிய நோயால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நகராட்சிகள் சுகாதார ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகின்றனர்.அதிரை பேரூராட்சி வழக்கம்போல் இவ்விசயத்தில் மெத்தனப் போக்கைக் கடைபிடிக்கிறது. ஒப்புக்கு ஒரே ஒருநாள் மட்டும் கொசு மருந்தை புகையாக ஊரின் ஒருசில பகுதிகளுக்கு மட்டும் அடித்து விட்டு வழக்கம்போல் ஓய்ந்து விட்டனர். அதிரை பேரூராட்சியின் தற்போதைய கவனமெல்லாம் பள்ளிவாசலுக்கு இடையூறு செய்வதில்தான் இருக்கிறது.

பேரூராட்சியின் அலட்சியத்தால் புதுமனைத் தெரு,நடுத்தெரு பகுதியில் குப்பை அகற்றும் பணியை சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் சொந்த செலவில் செய்கின்றனர். மேலும் இப்பணியை விரிவுபடுத்த குப்பை அள்ளும் வண்டி இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.

சிக்குன்குன்யாவாவது சிக்கன் பிரியானியாவது என்று அலட்சியத்துடன் குறட்டை விட்டுத் தூங்கும் அதிரை பேரூராட்சியுனரால் பொதுமக்கள் கொசுத் தொல்லையால் அவதிக்குள்ளாகி தூங்காமல் தவிக்கிறார்கள்.

-ஊர்சுற்றி உமர்-
Share:

அதிரையில் பா.ஜ.கவை வளர்த்து விடும் திமுக

இன்று (24-06-2007) மாலை ஐந்து மணியளவில் மெயின்ரோடு செல்லியம்மன் கோவிலில் இந்து முன்னனியின் கூட்டம் திமுகவைச் சார்ந்த இராம.குணசேகரன் தலைமையில் நடந்துள்ளது. சுமார் 30-40 இந்துத்துவா வெறியர்கள் கலந்து கொண்டதாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது. (RSS மற்றும் இந்து முன்னணியினர் மதவெறியுடன் வெளியிட்டுள்ள ரகசிய சுற்றறிக்கையை முந்தைய செய்தியில் காண்க)

பஞ்சாயத்து போர்டுக்கும் பள்ளிவாசல் கமிட்டிக்கும் உள்ள பிரச்சினையை இந்து முஸ்லிம் பிரச்சினையாக எடுத்துச் சென்று முஸ்லிம்களை தேவையற்ற போலீஸ் வழக்குகளில் இழுத்தடித்து, பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தும் சங்பரிவாரச் சூழ்ச்சியை திமுகவைச் சார்ந்த இராம.குணசேகரனனின் கட்டுப்பாட்டில் உள்ள செல்லியம்மன் கோவிலில் நடத்துவது ஏன்?

இராம.குணசேகரனுக்கு இந்து முன்னணியை வளர்க்கும் ஆவல் இருந்தால் திமுகவிலிருந்து ராஜினாமா செய்து விட்டு தாராளமாக வளர்த்துக் கொள்ளட்டும். மத்தியிலும் மாநிலத்திலும் முஸ்லிம்களின் பாதுகாவலர்களாகச் சொல்லிக் கொண்டு ஓட்டுக்களை இலவசமாக அருவடை செய்யும் திமுகவில் இருந்து கொண்டு பாஜகவின் கொள்கைகளை நிறைவேற்றும் இராம. குணசேகரனை திமுக தலைமை எச்சரிப்பதோடு சமய நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்க
பதவியையும் அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்வதையும் தடுக்க வேண்டும் என்பதே பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் திமுகவின் கோட்டையாக அதிரையை நிரந்தரமாக வைத்திருக்கும் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு.

-நமது நிருபர்-
Share:

வெளிவரும் அதிரை பேரூராட்சியின் ஊழல்கள்!!!

அரசு அலுவலகங்களில் இலஞ்சம் தலை விரித்தாடும் என்பதும், தொட்டதற்கெல்லாம் மேசையின் அடியில் கைநீட்டி லஞ்சம் பெறும் காலம்போய் நேரடியாகவே லஞ்சத்தை பேரம் பேசும் அளவுக்கு முன்னேறியுள்ளன அரசு அலுவலகங்கள்.

தெருக்கூட்டும் வேலைக்கு குறவர் இனத்தைச் சார்ந்த ஊழியர்களை நியமிக்க மூன்று இலட்சம் லஞ்சமாகப் பெற்று பேரூராட்சி பெருந்தலைகள் தலா ஒரு இலட்சமும்,எஞ்சியதை விசுவாசமான வார்டு மெம்பர்கள் தலா ஆயிரம ரூபாய் என்ற கணக்கில் பகிர்ந்து கொண்டுள்ள செய்தி தற்போது வெளியாகி நாறுகிறது.

வீட்டு வரிக்கான ரஷீதுகளை முறையாக வழங்காமல் நாளை தருகிறோம்; முதலில் வரியைக் கட்டிவிட்டு அபராதத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்ற பசப்பு வார்த்தைகளால் ஆண்கள் உள்ளூரில் இல்லாத பெண்களிடம் வரி வசூலித்து ஏமாற்றியுள்ள விபரங்களும் கசிந்துள்ளது.

அரசுக்குச் சேரவேண்டிய வருவாய்களை பங்கு பிரித்துக் கொண்டு வயிறு வளர்ப்பவர்களை வருவாய்த்துறையும் லஞ்ச ஒழிப்புத் துறையும் கண்காணித்து ஊழலற்ற நிர்வாகம் நடக்க வழி செய்ய வேண்டும் என்பதே அதிரை பொதுமக்களின் தற்போதைய கோரிக்கை.
-நமது நிருபர்-
Share:

FIR இல் மனித உரிமை மீறல்!

அல் அமீன் பள்ளிவாசல் சம்பந்தமாக சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் சென்றவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் பற்றியும் அதில் அனாவசியமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முஹல்லா நிர்வாகிகள் பற்றியும் முந்தைய செய்தியில் காண்க.

குற்றம் சுமத்தப்பட்டுள்ளதை பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) குறிப்பிடப்பட்டுள்ள பத்து பேருடன் "அடையாளம் தெரிந்த - பெயர் தெரியாத ஐம்பது பேர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக குழுவாக குற்றம் சுமத்தப்படும்போது எழுதப்படும் முதல் தகவல் அறிக்கைகளில் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்படும்.ஆனால் இவ்வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள FIR இல் மேற்சொன்ன வரிகள் மூலம் குற்றம் சுமத்தியவர்கள் தங்களுக்கு எதிராகக் கருதும் எவரையும் வழக்கில் சேர்க்க முடியும். இது ஒருவகையான மனித உரிமை மீறல் என்றே கருதப்பட வேண்டும்.

இத்தகைய அனாவசிய மனித உரிமை மீறல்களால் பொதுமக்கள் காவல் துறையினரின் மீது அதிருப்தி கொண்டுள்ளார்கள். இதன் மூலம் எவரையும் எளிதில் பழிவாங்க முடியும் என்ர அச்சம் உள்ளூர் மக்களிடம் நிலவுகிறது.மக்கள்நேச காவல்துறை என்று காவல் நிலைய முகப்பில் விளம்பரப்படுத்திக் கொணடு பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறையினர் பயத்தை உருவாக்கலாமா?

-ஈமெயிலில் வந்த தகவல் -
Share:

பதட்டத்தை உண்டு பண்ணும் இந்து முன்னணி

அதிராம்பட்டினம் மெயின் ரோட்டில் முஸ்லிம்களால் வாங்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ள அல் அமீன் பள்ளிவாசலுக்குத் தடையாக பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதும்,பள்ளிவாசல் கமிட்டியார்களுக்கு எதிராக பொய்வழக்கு பதிவு செய்து அதிரை முஸ்லிம்களை மிரட்டி வருவதும் அறிந்ததே.

எரியும் நெருப்பில் எண்ணை விடுவதுபோல், அதிரையில் செயல்பட்டுவரும் இந்து முன்னணி விஷமிகள் முஸ்லிம்களுக்கு எதிராக சுற்றுவட்டார இந்துக்களைத் தூண்டி மதக்கலவரத்திற்கு வித்திடும் நோக்கில் நோட்டீஸ் விநியோகம் செய்து வருகின்றனர்.மதவாத சக்திகளுக்குத் துணைபோகும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஆளும் கட்சியினரின் செய்கைகளால் அதிரைமக்கள் நிம்மதியின்றி உள்ளனர்.
Share:

பொய்வழக்குகளில் அதிரை முஸ்லிம்கள்

அல்-அமீன் மஸ்ஜித் முஹல்லா கமிட்டியார்கள் மீதும் ஊர் பொதுமக்கள் மீதும் அதிராம்பட்டினம் காவல்துறையில் பஞ்சாயத்து போர்டு சார்பில் போடப் பட்டுள்ள பொய் வழக்குகளில் அதிரையின் பல்வேறு சேவை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப் பட்டுள்ளவர்களின் விபரம்:

1) S.K.M.அஹமது (குலாப்ஜான்) அன்சாரி
த/பெ.முஹம்மது ஃபாரூக் - புதுத்தெரு

2) கட்டப்பிள்ளை முஹம்மது தமீம் (அ.தி.மு.க)
த.பெ.அபுல் ஹசன் - ஆஸ்பத்திரி தெரு

3) S.M. சாகுல் ஹமீது (த.மு.மு.க கிளைத் தலைவர்)
த/பெ.முஹம்மது ஹனீபா - கீழத்தெரு

4) சர்புதீன் (த.மு.மு.க முன்னாள் மாவட்டத் தலைவர்)
த/பெ.அப்துல் சமது

5) முஹம்மது யூசுப்
த/பெ. செய்யது அப்துல் காதர் மரைக்காயர் - நடுத்தெரு

6) ஹைதர் அலி (த.த.ஜ கிளைத் தலைவர்)
சம்சுதீன்-கீழத்தெரு

7) அனஸ்
த/பெ.சேக் தாவுது - புதுத்தெரு

8) ஹாஜி (த.த.ஜ)
த/பெ.காதர் சுல்தான் - கீழத்தெரு

9) ரஹ்மத்துல்லாஹ்
த/பெ.முஹம்மது சாலிகு - நெசவுத் தெரு

10) ரஃபீக் (ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் தலைவர்)
த/பெ.M.K.S. இப்றாஹிம் - நடுத்தெரு

கொலைமிரட்டல், பொதுச் சொந்துக்குச் சேதம் விளைத்தல்,அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் என்ற சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் (147,148,353,506 (ii) IPC, 3 & 4 PPD ஆகிய வழக்குகளில் சுமார் பத்துபேர் மீதும், அடையாளம் தெரிந்த ஆனால், பெயர் தெரியாத ஐம்பது பேர் மீதும்?! குற்றம் சுமத்தப் பட்டுள்ளன.

மேலும், பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்று தீர்மானம் போட்டு, பயன்படுத்தத் தக்கதல்ல (Scrap) என்று கழித்து வைக்கப்பட்ட டிராக்டர்/டம்பர் மற்றும் குப்பை வண்டிகளுக்கு நஷ்ட ஈடாக பஞ்சாயத்து போர்டுக்கு ரூபாய் 1,25,000 வழங்க வேண்டுமென்றும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) கோரப்பட்டுள்ளது.
Share:

இந்து முன்னணியின் விஷமம்

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்ட திடீர் முனிக்கோவில்


அதிராம்பட்டினத்தில் மேலத்தெருவில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் திடீர் முனிக்கோவிலைக் கட்டி தொக்காளிகாட்டிற்குச் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. பொதுப்பாதையில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள திடீர்கோவிலை உயர் நீதிமன்றம் அகற்றச் சொல்லி உத்தவிட்டு ஏறக்குறைய ஆறுமாதங்களுக்கும் மேலாகி விட்டது. ஆனால் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

இந்த ஆக்கிரமிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் 'அதிரை இந்து முன்னனியினர்' முஸ்லிம்கள் சொந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள மஸ்ஜிதை 'ஆக்கிரமிப்புக் கொட்டகை' என்றும் பள்ளிவாசல் கமிட்டியார்களை 'தேசத் துரோகிகள' என்றும் விஷமத்தனமாக நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளனர்.

பஞ்சாயத்து போர்டு - பள்ளிவாசல் கமிட்டிக்கும் இடையிலான பிரச்சினையை இந்து-முஸ்லிம் பிரச்சினையாக்க முயலும் கயவர்களை சட்டம் தண்டிக்க வேண்டும் என்பதே அதிரை பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
Share:

துபாய்க்கு இலவச விசா

ஐக்கிய அரபு அமீரகத்தின் ETA ASCON நிறுவனத்திற்கு தகுதியான பணியாளார்கள் தேர்வு அதிரை பைத்துல்மால் முதல்மாடியில் 19-06-2007 அன்று நடைபெருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் தச்சர் (Carpenter), வெல்டர் (Welder) மற்றும் கனரகத் தொழிலாளர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று ETA குழுமங்களின் அங்கீகாரம் பெற்ற தேர்வாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடம் இதுபற்றி கருத்துக் கேட்டபோது, தேர்வுக்கான இடம் மட்டுமே (பைத்துல்மாலின் மேல்மாடி) வாடகைக்கு விடப்படுகிறது. ஆளெடுப்புக்கும் பைத்துல்மாலுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தனர்.

ஆகவே, விசா சம்பந்தமான சந்தேகங்களை நன்கு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியது தேர்வில் கலந்து கொள்பவர்களின் பொறுப்பாகும்.
Share:

காதிர்முஹைதீன் பள்ளி பிரசிடண்ட்டின் அறிவிப்பு

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்வி ஸ்தாபனங்களின் பிரசிடெண்ட்
ஜனாப். அப்துல் ஹலீம் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "மாணவ மாணவியர்கள் பள்ளிக்கட்டணம் தவிர எவ்வித உபரிக்கட்டணமும் செலுத்த வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
Share:

அதிரை முஸ்லிம்களைப் பிரித்தாளும் அரசியல்வாதிகள்

அதிராம்பட்டினம் மெயின்ரோடு அல்அமீன் பள்ளிவாசல் ஊர்பொதுமக்களின் சொந்த பணத்தில் கிரயம்பேசி வாங்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டதாகும். ஆஸ்பத்திரி தெரு முஹல்லாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஹிமாயத்துல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் சார்பில் வாங்கப்பட்ட நிலத்தில் பொதுமக்கள் பேருந்து நிலையம் அருகே மசூதியைக் கட்டி தொழுகை நடத்தி வருகிறார்கள்.

பள்ளிவாசலுக்கு சுற்றுச்சுவராக வேலி அடைக்கும்போது பஞ்சாயத்து போர்டு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு பல தடைகளையும் ஏற்படுத்தினார்கள். அதிராம்பட்டினம் பேரூராட்சியை பொருத்தவரை பெரும்பான்மையான உறுப்பினர்கள் முஸ்லிம்கள். இருந்தாலும் ஒருசில காவிச்சிந்தனை கொண்ட மாற்றுமத உறுப்பினர்களும் உள்ளனர்.

அல்அமீன் பள்ளிவாசலுக்கு பேருந்து நிலையத்தில் வழியாக பாதை ஏற்பட்டால் அங்கு ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் கடைகள், உணவகம் மற்றும் பெட்டிக் கடைகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் என்ற நோக்கத்தில்தான் ஆளும் பேருராட்சி உறுப்பினர்கள் சர்ச்சையைக் கிளப்பி குளிர் காய்கின்றார்கள்.

பள்ளிவாசலுக்கு இடையூறாக இருக்கும் துணைச் சேர்மன் இராம.குணசேகரன் சார்ந்துள்ள தி.மு.கவினர் பள்ளிவாசலின் எதிர்புறம் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலின் நிலத்தை ஆக்கிரமித்து தர்போதுள்ள திமுக கட்சி அலுவலகம் கட்டியதால் சிலவருடங்களுக்கு முன் கோவில் நிர்வாகத்தினரின் அதிருப்திக்கு ஆளாகினர். இதனால் இந்துமுன்னணியினருக்கும் திமுகவினருக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு அதிரையின் பொது அமைதி கெட்டதை பலரும் அறிவர். இதற்குப்பரிகாரமாக முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு இடையூறு செய்தால், இந்துக்களின் ஆதரவைப் பெறலாம் என்ற அரசியல் உள்நோக்கமும் இருப்பதாக பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

மேலும், நகர காங்கிரஸ் தலைவரும் பேரூராட்சி சேர்மனும் ஆகிய எம்.எம்.எஸ் அப்துல் வகாப் அவர்களுக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டிவிட்டால் அதிருப்தியடைந்த முஸ்லிம்களின் ஓட்டு திமுகவுக்கு ஆதர்வாகத் திரும்பும் என்பதாலும் பஞ்சாயத்து போர்டுக்கும் அல்அமீன் மஸ்ஜித் நிர்வாகத்திற்கும் இடையிலான பிரச்சினையை இந்து முன்னணி விஷமிகளைத் தூண்டிவிட்டு மதப்பிரச்சினையாக்க முயல்கின்றனர்.

அதிராம்பட்டினம் முஸ்லிம்களைப் பொருத்தவரையில் திமுக-பா.ஜ.க கூட்டனி அமைத்த போதும் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் சமுதாயத் தலைவர்களின் அறிவுரைகளையும் மீறி திமுகவுக்கு கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து வருகின்றனர்.பட்டுக்கோட்டை வட்டாரத்தில் திமுக அல்லது கூட்டனிகளின் வெற்றியை உறுதி செய்யும் நிரந்தர வாக்கு வங்கியான அதிரை முஸ்லிம்களின் ஓட்டுக்கள் காவிச்சிந்தனை கொண்ட திமுகவினரால் எதிர்க்கட்சியினருக்குச் செல்லும் வாய்ப்புள்ளதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டால் நல்லது.
Share:

அதிரை இந்து முன்னணிக்கு பொதுமக்கள் கண்டனம்

அதிராம்பட்டினம் மெயின் ரோடு அல் அமீன் பள்ளிக்கும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் பட்டுக்கோட்டை தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இரண்டு தரப்பினருக்கும் சம்பந்தமில்லாத நபர்கள் (கரையூர் தெரு ராஜதுறை மற்றும் சிலர்) முஸ்லிம்கள் அல்அமீன் பள்ளியின் மெயின் கேட்டை அப்புறப்படுத்தாவிட்டால் மசூதி அருகே விநாயகர் சிலை வைப்போம் என்று துவேசமாகப்பேசி பேச்சுவார்த்தையைக் குழைத்தனர்.இதனால் கோபமடைந்த தாசில்தார் அவ்வாற்று பேசியவர்களை எச்சரித்து வெளியேற்றினார். சுமூகமாக பேசித்தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விசயத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதால் நிலைமை கேட்டிற்கு சீல் வைக்கும் அளவுக்கு சீரியஸாகியது.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் நீதிமன்ற அனுமதியுடன் மசூதி கட்டப் பட்டுள்ளது. இதனை உள்நோக்கத்துடன் சுயலாபத்துக்காக எதிர்க்கும் விஷமிகளைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி,த.மு.மு.க, த்.த.ஜ மற்றும் மனித நீதிப்பாசறை உள்ளிட்ட அரசியல், பொதுநல அமைப்புகள் கண்டன நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
Share:

அல் அமீன் பள்ளிக்குப் பேரூராட்சி இடையூறு

அதிரை பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதே அல்அமீன் பள்ளியின் பேருந்து நிலைய வாசலை அதிரை பஞ்சாயத்து போர்ட் நிர்வாகம் எவ்வித முன்னறிவூபும் இன்றி அடைத்துள்ளது.

பஞ்சாயத்து போர்டுக்கும் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டிக்கும் இடையேயான நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது, பேரூராட்சியின் இத்தகைய அடாவடி நடவடிக்கையால் இன்று மாலை (14-07-2007) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு அதிரை முஸ்லிம்கள் ஒன்றுகூடி பள்ளிவாசலில் ஆலோசனை நடத்தினர்.இதனால் எழுந்துள்ள அனாவசிய பதட்டத்தைத் தனிக்க காவல்துறையினர் பேருந்துநிலைய பள்ளிவாசல் அருகே பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டுள்ளனர். பேரூராட்சி அலுவலரின் அத்துமீறிய செயலைக் கண்டித்து அதிரையில் நோட்டீஸ் மூலம் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது.

மத்தியிலும் மாநிலத்திலும் மதநல்லிணக்க அரசுகள் அமைந்துள்ளதைப் பொறுக்க முடியாத சில மதவாத சக்திகள் சிலவருடங்களுக்கு முன் நமதூரின் அமைதிக்கும் மதநல்லிணக்கத்திற்கும் வேட்டுவைக்க மேலத்தெருவில் முஸ்லிம்கள் மட்டுமே குடியிருக்கும் பகுதியில் 'திடீர்' முனிக்கோவிலை ஏற்படுத்தினர்.

நீதிமன்றம் தலையிட்ட மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் இத்தகையச் செயல்களை தடுத்து நிறுத்த முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிரை நகர உலமாக்கள் மற்றும் ஊர்ப்பெரியவர்களின் ஆலோசனைப்படி,எத்தகைய பிரச்சினைகளையும் சட்டரீதியில் அணுகுவது என்றும், பேரூராட்சி அலுவலருடன் மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும் சில விஷமிகளும் கூட்டு சேர்ந்துகொண்டு தேவையற்ற பதட்டத்தை உண்டு பண்ணுவதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் சார்பில் சொல்லப்பட்டது. தொழுகைக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என்றும் சில மதவாத சக்திகள் மட்டுமே தேவையற்ற பதட்டத்தை உண்டு பண்ணுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேவையற்ற வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்படும் செயல்களில் எவரும் ஈடுபட்டு நம்தூரின் பொதுஅமைதிக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதே அதிரை நலன்விரும்பிகளின் தற்போதைய எதிர்பார்ப்பு.
Share: