-அய்டா அன்பர்களும் அதன் நண்பர்களும்---

அரபு நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியாவில் ஈதுல் பித்ர் & ஈத்அல்அதா நோன்புப் பெருநாள்- ஹஜ்ஜிப் பெருநாளில் தலா ஐந்தாறு நாட்கள் விடுமுறை கிடைப்பதல்லாமல் வேறு எப்போதும் கிடைப்பதில்லை! பொங்கல், திபாவளி, ஆயுத புஜை, ஓனம், போகி, சங்கராந்தி, குருனானக்-- அண்ணா பிறந்தநாள் , அய்யா இறந்தநாள்....என எந்த விடுமுறையும் இல்லாததால் இந்த விடுமுறையை (19/09/09 - 26/09/09) நல்ல முறையில் பயன் படுத்த நீண்ண்ண்ட நாள் ஹாஜத்தால்தான் மதாயின் சாலெஹ் சென்று வர அய்டா (ADIRAI YOUTH DEVELOPMENT ASSOCIATION) அன்பர்களும் சில வெளியூர் நண்பர்களின் குடும்பத்துடன் புறப்பட்டோம்.

இதை வாசிக்கும் வாசகர்கள் ஆர்வப்ப்ட்டால் இந்த பயணக்கட்டுரை & போட்டோக்களை தொடர்ந்து MADA'IN SALEH என்ற HISTORICAL PLACE வரலாற்று சிறப்புமிக்க ஊரைப் பற்றியும் அங்கு வசித்த கூட்டத்தினர், அவர்களுக்கு இறைவனின் அதாபு இறங்கியது, அது பற்றி குர் ஆனில் கூரப்பட்டுள்ளது பற்றி சுற்று விளக்கமாக விரைவில் வெளியிடுவோம். இன்ஷாஅல்லா! இது பற்றிய தாங்கள் அறிந்த விபரங்கள் மேலும் விமர்சனங்களை வரவேற்கின்றோம்.Share:

அதிரையில் மர்ம காய்ச்சல்... உஷார் நிலையில் அதிகாரிகள்!

அதிராம்பட்டினத்தில் பரவும் “மர்ம” காய்ச்சல் இருவர் பலி 300 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!புதுவையில் 100 சதவீதம் படித்தவர்கள்! நாராயணசாமிஅதிராம்பட்டினத்தில் பரவும் “மர்ம” காய்ச்சல் இருவர் பலி 300 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு! புதன், 23 செப்டம்பர் 2009 20:04 அதியமான் Tஅமில் ணடு அதிராம்பட்டினம் அருகே உள்ள மீனவர் கிராமம் ஏரிப்புறகரையை சேர்ந்தவர் மீனவர் சிதம்பரம். இவரது 9 வயது மகள் கமலி அருகில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 19 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த கமலிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

உடனே சிகிச்சைக்காக அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கமலி நேற்று பரிதாபமாக இறந்து போனார். இதேபோல் கடந்த 19-ந்தேதி கீழ தோட்டம் என்ற இடத்தை சேர்ந்த 12 வயதான தர்மராஜ் என்ற மாணவனும் “மர்ம” காய்ச்சலுக்கு பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. மேலும் இந்த இரண்டு கிராமங்களையும் சேர்ந்த முன்நூறுக்கும் அதிகமான மக்கள் “மர்ம” காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தகவலறிந்த தஞ்சை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மற்றும் மாவட்ட மலேரியா அலுவலர் மற்றும் டாக்டர்கள் கொண்ட குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். சுகாதார குறைபாடு காரணமாகவே காய்ச்சல் பரவி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
Share:

ஹலால் சான்றிதழ் இந்தியாவிலும்...

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...நாங்கள் Halal India Pvt Ltd எனும் இந்திய அரசு அங்கீகாரம்பெற்ற ஓர்நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளோம்.


அது இந்தியாவில்தயாரிக்கப்படும் அனைத்துவகையான உணவுப்பொருட்கள், இறைச்சி வகைகள்,அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் போன்ற தயாரிப்புகளுக்குசட்டப்பூர்வமான ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.உலகின் பல நாடுகளில் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமேமுஸ்லிம்கள் உபயோகிக்கின்றனர், ஹலால்சின்னம் பொறிக்கப்படாத பொருட்களைமுஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணித்துவிடுகின்றனர் என்பதுநடைமுறையாகும்.


ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கும்இந்திய£வில் இதற்கான விழிப்புணர்வு முற்றிலும் இல்லை.எனவே, இந்தியமுஸ்லிம்கள் தாம் உபயோகிப்பது ஹலால்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளஇயலாத சூழ்நிலையில் இருப்பதைத் தவிர்க்கும் விதமாகவே Halal India Pvt Ltdஎனும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.


இது இந்திய£வின் அனைத்து மாநிலங்களிலும் தலைசிறந்த முஸ்லிம் அறிஞர்கள்,ஆய்வாளர்கள் மற்றும் பரிசோதனை மையங்களைக்கொண்ட நிறுவனமாகும். இந்திய£வின்பிரபல நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு அதில்தகுதியானவற்றிற்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாகத்தொடங்கியுள்ளோம். பல நாடுகளில் Halal India Pvt Ltd வழங்கும் ஹலால்சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே இந்தியாவிலிருந்து இறக்குமதி
செய்யவேண்டும் என்ற உறுதிமொழியையும் பெற்றுள்ளோம்.இந்தசேவையில் நீங்களும் பங்கேற்கும் விதமாக நீங்கள் ஓர்பயனீட்டாளர்(consumer) என்ற உரிமையில் கடைகள், shopping centre களில்பிஸ்கட்,சாக்லேட், மென்பானங்கள் -cool drinks- போன்ற உணவுப்பொருட்கள்,இறைச்சி வகைகள், அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் ஆகியவற்றைவாங்கும்போது இதில் ஹலால் சின்னம் பொறிக்கப்படவில்லையே, நாங்கள் இதைஎப்படி உபயோகிக்க முடியும் என்பது போன்ற விழிப்புணர்வுக் கேள்விகளைக்கேட்பதன் வழியே அவை விரைவில் ஹலால் சான்றிதழ் பெறுவதற்கு நீங்களும்துணைசெய்யலாம்.எமது சேவைகள் குறித்த விபரங்களைத்தெரிந்து கொள்ளவும் தங்களது மேலானஆலோசனைகளை வழங்கவும் தொடர்புகொள்க.


Share:

ஆயிஷா பல் மருத்துவமனை துவக்கம் !!

அன்பிற்குரியவர்களே,அஸ்ஸலாமு அலைக்கும், நமதூரை சார்ந்த சகோதரர்டாக்டர் பஜ்லுர் ரஹ்மான் பட்டுக்கோட்டையில்ஆயிஷா பல் மருத்துவமனையை துவக்கியுள்ளார், அதுசமயம் நமதூரைசார்ந்த அனைவரும் பயன் பெற்றுக் கொல்ளுமாரருஅனைவரையும் அழைக்கிறார்கள்.


Share:

நோன்புப் பெருநாள் - ஈகைத் திருநாள் சிந்தனை!


நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.


நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.


பெருநாள் வாழ்த்துக்கள்
Share:

PLZ RAISE YOUR VOICE AGAINST THIS RACIST ACT

"Kaaba" Bar will be opened soon in New York

Shocking?

In the business area of MID TOWN MAN HATTAN in?New York?a new BAR is opened in the name of APPLE MECCA which is familiar to KAABA MAKKAH This bar will be used for supply of VINE and Drinks. The Muslims of New York are pressurizing Government of USA to not open this BAR.

Please do Forward this to as many peoples as you can.

We need 2 wake up and 2 stand for the dignity of our RELIGION ISLAM!!

Together we can and we will?Inshallah.
Share:

லைலத்துல் கத்ர் பிரார்த்தனை!

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூலகள்்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்
Share:

மரண அறிவிப்பு (M.M. முஹம்மது அபூபக்கர்-நடுத்தெரு)

அஸ்ஸலாமு அலைக்கும்.

நடுத்தெரு முஹல்லாவைச் சார்ந்த அல்முல்லா என்றறியப்படும் M.M. முஹம்மது அபூபக்கர் அவர்கள் 12-09-2009 இரவு 10:30 மணியளவில் வஃபாதாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் 13-09-2009 லுஹர் தொழுகைக்குப் பிறகு அதிரை தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


மர்ஹும் M.M. முஹம்மது அபூபக்கர் அவர்கள் ஜனாப்.M.M. செய்யது உதுமான் (சிங்கப்பூர்) அவர்களின் சகோதரரும் ஜனாப்.ஏர்லிங்க் தமீம் (துபாய்) அவர்களின் மாமாவும் ஆவார்கள்.

அல்லாஹ் அன்னாரது நல்லமல்களைப் பொருந்திக் கொள்வானாக. ஆமின்
Share:

அதிரை புதுப்பள்ளி (ஆஸ்பத்திரி தெரு) கட்டிடநிதி வேண்டுகோள்

நமதூர் ஆஸ்பத்திரி தெருவிலிருந்த புதுப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டுமானப் பணிகளுக்காக அதிரைவாசிகள் மற்றும் நல்லுள்ளம் படைத்த முஸ்லிம்களின் நிதியுதவியை எதிர்நோக்கி உள்ளது. ஒன்றுக்கு பலமடங்கு நன்மைகள் கிடைப்பதோடு இவ்வுலகில் அல்லாஹ்வின் இல்லத்திற்கு உதவியவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் பொறுப்பேற்றுக் கொள்வதால் ரமழானில் உங்கள் சதகா மற்றும் தருமங்களை கீழ்கண்ட வங்கிக் கணக்கில் அனுப்பி வைக்க சகோ.அப்துல் ரஷீத் (பணியிடம்: அபுதாபி) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.


மொத்தக் கட்டுமாணப் பணிகளுக்கான தோரய மதிப்பீடு சுமார் 65 இலட்சம் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளதால் அதிரை சகோதரர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் கட்டுமான நிதிக்கு உதவும்படி தெரிவிக்கவும்.

Insha Allah the construction work for Puthu Palli in hospital street would be commenced shortly.
Estimated cost of the project is Rs. 65 lakhs.

Cheques may be sent to:

SHADULIYA PUTHU PALLIVASAL
Account No: 115-1-12695
Dhanalakshmi Bank Ltd.,
Adirampattinam-614701.

if anybody want to pay by cash in your region, pls let me know.

also we kindly request you to acknowledge safe receipt of this email.

wassalam


"Rasheed Ahmed"
Share:

தொழுது கொள்வோம்,நமக்கு தொழுகை வைக்கப்படுமுன்!

அறிவிப்பாளர் : அப+ஹுரைரா (ரலி)
நபி அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். 1. நீதி செலுத்தும் அரசன். 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் இளமையைக் கழித்த வாலிபன். 3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பான். 4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள். 5. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் மனிதன். 6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி தகாத செயல் செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்ட மனிதன். 7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தருமம் செய்த மனிதன்.”(புகாரி, முஸ்லிம்)

இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். 2:110
Share:

மூன்றாவது பத்தில், ரமலான்!

மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையை தண்டனையும் உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளையும் பார்க்கவும்.

அல்லாஹ் அல் குர்ஆனில்,
நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். ( அல் குர் ஆன் 4 : 56 ) என்று எச்சரித்துள்ளதையும் மேலும் நரகத்தின் கொடுமையை உணர்த்தும் கீழ்க்கண்ட வசனங்கள் அதன் கொடுமையை அஞ்சி அதை விட்டுத் தப்பிடும் விதமாக வாழவேண்டியதை நினைவூட்டும் ஓர் அறிய அச்சுறுத்தல் கலந்த உபதேசம் ஆகும்.


திண்ணமாக, நரகம் வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றது - வரம்பு மீறியவர்களின் வாழ்விடமாக! அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர். அங்கு, குளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை - கொதியூட்டப் பட்ட நீரையும் சீழையும் தவிர. அவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து) வாழ்ந்தனர். மட்டுமின்றி, நம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர். ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம். எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே!) அனுபவியுங்கள்; நாம் உங்களுக்கு அதிகப் படுத்தவிருப்பதெல்லாம் வேதனையைத் தவிர வேறன்று. (அல் குர் ஆன் 78:21-33.


நபிமொழி : "இறைவனை அஞ்ச வேணடிய அளவுக்கு அஞ்சுங்கள்! முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி(ஸல்) ஓதினார்கள். பிறகு (நரக வாதிகளுக்குக் கொடுக்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலக வாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உணவாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும்!? என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா


நரகவாசிகளில் இலேசான தண்டனைக்குரியவரது உள்ளங்கால்களில் தீக்கங்குகள் வைக்கப்படும். அதனால் மூளை கொதிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நீங்கள் மூட்டும் நெருப்பு நரகத்தின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பங்காகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

இவற்றை நினைவில் எந்நேரமும் நிறுத்தி அல்லாஹ் எச்சரித்துள்ள நிரந்தர நரகத்திற்குரிய ஷிர்க் இணைவைத்தல், (4 : 48,116) வட்டி வாங்குதல் (2 : 275-278), போன்றவற்றை உடன் கைவிட வேண்டும், மேலும் நரகத்தின்பால் நெருக்கம் ஏற்படுத்தும் இதர எல்லாவிதமான பாவமான சொல், செயல்களில் இருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் பொருள் ஈட்டலிலிருந்தும் தம்மை முழுமையாக தடுத்துக் கொள்ள உறுதி பூண்டு,(17 : 28-31) நிகழ்ந்து விட்டவைக்கு வருந்தி அதில் மீண்டும் செல்லக்கூடிய வழிகளை கைவிட்டு நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும். குர்ஆனில் வசனங்களைப் பார்க்க.


மேலும் அல்லாஹ்வின் உபதேசம் தொடர்கிறது:


முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 : 6)


மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொள்ளும் தாங்க இயலாத பயங்கரமான வேதனையாம் நரகத்திலிருந்து நாமும் நம் பொறுப்பில் உள்ள நம் குடும்பத்தினரும் முழு மனித சமுதாயமும் மீட்சியையும் பாதுகாப்பும் பெறக்கூடிய விதத்தில் நாம் என்றென்றும் தியாக மனப்பான்மையுடனும் இஸ்லாமிய இறை வரம்பினுள்ளும் அவற்றின் அடிப்படைக்குச் சிறிதும் மாற்றமில்லாத விதத்திலும் மன உறுதியுடனும் தெளிவுடனும் செயல்பட முனைய வேண்டும்.

உதாரணமாக ஒரு சிலர் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மைபெற முறையாக முயல்வதும் இறைவனைத் வேண்டி தொழுவதும் தொழுது முடித்த பின்னர் நீண்ட நேரம் இரு கரமேந்தி அல்லாஹ்விடம் பிராத்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
இன்னும் சிலர் அவசர அவசரமாக தொழுது முடித்தவுடன், பிராத்தனைகளை முடித்துக் கொண்டு அல்லது துவா எனும் இந்த பிராத்தனையே செய்யாமல் வெளியேறி விடுகின்றனர்.


நபி (ஸல்) அவர்கள், "அத்துவாஉ ஹுவல் இபாதா - துவா என்பதே ஒரு வணக்கமாகும்" என்று கூறியுள்ளார்கள் என்பதை நாம் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நினைவில் வைத்து அல்லாஹ்வைப் புகழ்ந்து, நமது அனைத்துத் தேவைகளையும் கேட்க வேண்டும். நமது தேவைகளை நிறைவேற்ற வல்ல ஒருவன் அவனே! நாம் கேட்டும் கேட்காமலும் நமக்கு எல்லாம் வழங்கிய, வழங்கிடும் கருணையாளன் அவனே! கஷ்டங்கள், நோய்கள், துயரங்கள், சோதனைகள் அனைத்தையும் நீக்க வல்லவன் அவன் ஒருவனே! என்றும், அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்து விட்ட குற்றங்கள், குறைகள், பாவங்கள் என்று எல்லாவற்றையும் மன்னித்தருளக் கூடியவன் அவனே! என்றும் முறையாக உள்ளத்தால் நம்பி, எல்லாம் வல்லவனாகிய அல்லாஹ்விடம் மனமுருகி சமர்பித்து நாமறிந்த மொழியில் நமக்காகவும் நமது குடும்பத்தினருக்காகவும் உலக முஸ்லிம்களுக்காகவும் ஈருலக வெற்றியையும் ஈடேற்றத்தையும் கேட்க வேண்டும். மிகப் பெரும் இழப்பும் வேதனையுமாகிய நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பும் தேடவேண்டும்.


எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)


அதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.


ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.


அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, "அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)

அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல் கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும்.


நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி(ஸல்) அவர்கள் வழியில் முயல வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் 'இஃதிகாப்' இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.


அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)


ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்; தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.


நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாப்' இருந்ததைப் போல் இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாப்' இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.
நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம். அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும் குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின் தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள், வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும் மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள் பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாது. இம்முயற்சியை முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற முயல வேண்டும்.


இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும் நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் நரகமீட்சி பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும். ஆனால் சிலர் இந்த லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிகு இரவு ஒரே ஒரு இரவில் இருப்பதாக அதுவும் ரமலானின் 27ம் நாளில் இருப்பதாகத் தவறாக நம்பி, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.


நபி(ஸல்) அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும் அவர்கள் வாழ்க்கையில் இது 21,23,25,27,29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27ஆம் இரவை மட்டுமே சிறப்பிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்பதை நமது மறுமைக்காக கவனத்தில் கொள்ள வேண்டும். நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:
லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.THANKS
JALAL RAHMAN,
SHEIK DAWOOD ABDUL MAJEED,sacramento,california
Share:

நோன்பு என்பது!

நோன்பு பட்டினி தியாகமல்ல!
பக்குவத்தின் அனுசரிப்பு!
நோன்பு வயிற்றை காயப்போடுவதற்காக வல்ல-
அது ஆன்மாவிற்கான உணவழிப்பு!
நோன்பு சாதனையல்ல!
ஈமானை பலப்படுத்த கிடைத்த பொக்கிசம்!
நோன்பு உடல் சோர வைக்கும் நோய்யல்ல-
அது மனப்பினிக்கும்,உடல் பினிக்கும் மாமருந்து.
நோன்பு என்பது சும்மா கால விரயம் பண்ண கிடைத்த விளையாட்டுப் பொருள்லல்ல-
அது அல்லாஹ் தந்த அருள்கொடை!


ஆக்கமும் ,பதிவும் முஹம்மது தஸ்தகீர்(crown).
Share:

சில வைர வரிகள்....

(தபால் பெட்டிஇணையத்தில் வந்த கவிதைகளிலிருந்து சில வரிகள் இங்கே தரப்பட்டுள்ளன).

தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்?.

தீய பார்வை நீங்காத வரை
மண்டையில் கிடக்கும் கண்களில் நோன்பில்லை.
தீய வார்த்தை நீங்காத வரை
தாடைக்குள் கிடக்கும் நாவினில் நோன்பில்லை
நன்மைகளை அள்ளாதவரை
தோள்களில் முளைத்த கைகளில் நோன்பில்லை.
தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்.

நோன்பின் பெறுமதி
தக்வாவில் தங்கியிருக்கிறது.

நெற்றிகள் சுஜூதில் கிடக்குமே
கால்கள் கண்ணீரில் வேர் விடுமே
கொஞ்சக்கூடிய பிஞ்சுக் கால்களும்
தராவீஹ்-ல் வீங்குமே
இடக்கை அறியாமல் - சிலரின்
வலக்கையில் இதயங்கள் முளைக்குமே
அவைகள் நோன்பு கால உயிரோவியங்கள்.

இளைஞர்களே,
சுவனத்தின் வாரிசுகளே
உங்களோடு நானும் வருகிறேன் வாருங்கள்.

இந்த நன் நாளில்
கேரம்போர்டு விட்டு கையை எடுங்கள்.
டி.வியிலிருந்து
கண்ணை கழட்டுங்கள்.
அந்த டி.வி.டியை
இன்றேனும் தூக்கில் போடுங்கள்.
காதுகளுக்கு கீதம்
விஷம் என்று சொல்லுங்கள்.

எங்கள் மானத்திற்கு வெட்கம் வேண்டும் இளைஞர்களே

அந்த இரவு நேர மரத்திலிருப்பது
தெம்பிலி அல்ல உங்கள் ஒழுக்கங்கள்
- வெட்டாதீர்கள்
அந்த மாமரத்திலிருப்பது
உங்கள் சகோதரனின் நம்பிக்கைகள்- திருடாதீர்கள்
ஒளிரும் தெரு விளக்குகள்
உங்கள் சொத்துகள்
- ஏன் உடைக்கிறீர்கள்.
வெடிகளை அல்ல
- அதை கொளுத்த வேண்டும் என்ற மடமையை கொளுத்துங்கள்.

நோன்பு கால இரவுகள்
மறுமைக்கான ஆயத்தங்கள்.
அந்த இரவுகள்
தூய்மையாகவே இருந்துவிட்டு போகட்டும்.

நாளை உங்கள் இருதயம் வளர்ந்திருந்தால்
பெருநாளின் மறுநாள்
அது நோன்பு நோற்கத் தூண்டினால்
அது ரமலான்
இல்லையேல்
இதுவும் ஒரு செப்டெம்பர் என்று சொல்லுங்கள்.

தோழர்களே....
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல.

இந்த நோன்பு
வாஜ்பாயின் வாசலுக்குச் சென்றிருந்தால்
கத்தியும் கரைவேட்டியும் கீழே விழுந்திருக்கும்.

இந்த நோன்பு
இந்துக்களின் இதயத்திற்குச் சென்றிருந்தால்
பாபரி மஸ்ஜிதும் இந்தியாவின் மானமும் நிமிர்ந்தே நின்றிருக்கும்.

இந்த நோன்பு
பிரபாகரனின் இரத்தத்தில் கரைந்திருந்தால்
என் தம்பியும் வாப்பாவும்
மயானத்தில் அல்ல காத்தான்குடி மஸ்ஜிதில் இருந்திருப்பார்கள்
சுடுகாட்டில் அல்ல சுஜூதில் கிடந்திருப்பார்கள்.

இந்த நோன்பு
ஒரு இராணுவ வீரனின் நெஞ்சில் தக்வாவை தட்டியிருந்தால்
கொகட்டிச் சோலையில் ஒரு கோடீஸ்வரி கொழுத்தப் பட்டிருக்க மாட்டாள்.

நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.

நோன்பில்லாத கிளின்டன் தான்
மோனிகாவிடம் தோற்றான்.
நோன்பில்லாத ஹிட்லர்
மண்ணிடம் தோற்றான்.
நோன்பில்லாத கார்ல் மார்க்ஸ்
படைத்தவனிடம் தோற்றான்.

நோன்பு மரம்,
இந்த மரம் மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்
நோன்பு குழந்தை,
இந்த குழந்தை தாய்க்கும் பாலூட்டும்
நோன்பு சுவனத்து வாகனம்,
இது மனிதனின் இருதயத்திற்கு பெட்ரோல் ஊற்றும்.

நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.


நன்றி,
ஜம்மியா
Share:

அழகிய கடன் அறக்கட்டளை-2

அஸ்ஸலாமு அலைக்கும், அன்புடையீர்
அழகிய கடன் அறக்கட்டளை,
அதிராம்பட்டினம்.
மக்களிடம் காணப்படும் பெரும்பாவங்களில் ஒன்றான வட்டியை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது. வட்டிக்கு துனை போகிறவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் என இறைவன் எச்சரிக்கிறான். மேலும் தனக்கு எதிரான போர்ப்பிரகடனம் என்று அல்லாஹ் குர்ஆனில் எச்சரிக்கக் கூடிய அளவிற்கு வட்டி கடுமையான பாவமாகும்.

அந்த வட்டியை ஒழிப்பதற்காகத்தான் நமதூரில் 'அழகிய கடன் அறக்கட்டளை' என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி நம் சமுதாய எழை எளிய மக்களின் நலன் கருதி நகையின் பேரில் வட்டியில்லா கடன் கொடுக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வம் உள்ள நல்ல எண்ணம் கொண்டவர்கள் தங்களால் இயன்ற பொருளாதார உதவியை கொடுத்து நன்மையை பெற்று கொள்ளலாம். இறைவழியில் தங்களின் செல்வத்தை செலவிடக் கூடிய நல்லடியார்களிடம் நன்கொடையின் மூலம் வசூலிக்கலாம். இந்த அமைப்பிற்கு கடனாகவும் தந்து உதவலாம். தங்களின் பொருளாதார உதவிகளை கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
__________________________________________
M.S. அப்துல் ரஜாக் ,
Indiyan Bank, Ac/no : 560618111,
அதிராம்பட்டினம் - 614701.
__________________________________________
இந்த வங்கி கணக்கிற்கு DD யோ அல்லது செக்கோ எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முகவரி
--------
அழகிய கடன் அறக்கட்டளை ,
20 B , சேது ரோடு (மீடியா மேஜிக் முதல் மாடி),
அதிராம்பட்டினம்.
----------------

இறைவனின் உதவியும், மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால் 'அழகிய கடன் அறக்கட்டளை' படிப்படியாக உயர்ந்து இன்ஷா அல்லாழ் 'இஸ்லாமிய வங்கி' யாக மாறும்.

நன்றி.

குறிப்பு:
--------

தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்க தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்.
'9750969302 - 9994836098 - 9791438912 - 9865299919.'
Share:

இந்துக்களே விழிமின்,எழுமின், கல்கி வந்துவிட்டார். வாருங்கள் அவரைப் பின்பற்றுவோம்!!மோட்சம் பெறுவோம்!!!

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

தமிழ் மொழி பெயர்ப்பு:சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)

ஆங்கிலத்தில் படிக்க http://comparativestudy.blogspot
.com
Share:

இன்னுமா உறக்கம்?

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

தொழுகையை விட்ட என் சோதரனே! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய். உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு – அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ!.

அல்லது உன்னைப் பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ! நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ!

அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து விட்டானோ! உனது மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ!

நன்றாகத் தெரிந்து கொள் சோதரனே! நீ இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒரு நாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அது உனக்குத் தெரியாதா?! அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும்!. நீ பிறக்கும் போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட இல்லாமல்ப் பிறந்தாயே! நீ போகும் போது அதையேனும் உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா!? முடியவே முடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் எப்படி உன்னால் படைத்த இறைவனை மறந்த வாழ முடிகின்றது.

இவ்வுலகில் அவனை மறந்து வாழும் நீ நாளை மரணித்த பின்னர் அவனது சன்னிதானத்தில் எழுப்பப்படுவாயே! அவ்வேளை எந்த முகத்தோடு அவனைச் சந்திப்பாய்?, உன்னைப் படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு இதுதானா? என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்?. நீ என்னைப் படைக்க வில்லையென்று சொல்வாயா?, நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று சொல்வாயா?, நீ என்னைக் காக்கவில்லையென்று சொல்வாயா?.

நீ அவனைச் சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் எப்போதென்று நீ அறிவாயா?. இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம். ஏன்? இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்து விட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்னால் முடியுமா?. இல்லை, கொஞ்சம் தாமதப் படுத்தவாவது முடியுமா? முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்த, வாழ்ந்த இந்த உலகை விட்டுச் செல்லும் போது உனக்கு வழித்துணையாக வருவது எது? துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னைக் காப்பாற்றுவது எது? உனது பணமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா? எதுவுமேயில்லை. ஓரேயொன்றைத் தவிர அதுதான் நீ செய்த நல்லமல்கள். நீ புரிந்த தொழுகை நோன்பு இன்ன பிற வணக்கங்கள். அதைத் தான் நீ உலகத்தில் சேமிக்க வில்லையே! நீ உண்டாய், உழைத்தாய் உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னைப் படைத்தவனை நினைக்க வில்லையே!. அவனுக்காக உன்சிரம் பணிய வில்லையே, அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்ல வில்லையே!. அவனைப் பயந்து உன் விழிகள் அழ வில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்ய வில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாத போது உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா?. உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காத போது பிறர் உனக்காகப் பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா?. அது ஒரு போதும் நடக்காது.. நடக்கவும் முடியாது...

போதும் நண்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம் துன்பத்தில் முடிகின்றது. யவ்வனம் விருத்தாப்பியத்தில் முடிகின்றது. அன்பு பிரிவில் முடிகின்றது. வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை என்ன? என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.

தொழுகையை மறந்த என் தோழனே! தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்குரிய எளிய அடையாளமென்பது உனக்குத் தெரியாதா?. அது ஒருவனிடம் இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறியாயோ!
நபியவர்கள் கூறினார்கள்...

'இஸ்லாத்தின் கயிறுகள் இறுதி காலத்தில் ஒவ்வொன்றாக அறுந்திட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கயிறும் அறும்போது மக்கள் அடுத்துள்ள கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன் இறுதிக் கயிறுதான் தொழுகையாகும். (அதுவும் அறுந்து விட்டால் அவனிடத்தில் இஸ்லாமே இல்லாமலாகி விடும்,) என்றார்கள். (இப்னு ஹிப்பான்)

தொழுகையை மறந்தவனே! தொழாதிருத்தல் குப்ரும் வழிகேடுமாகும் என உனக்குத் தெரியாதா? நபியவர்கள்' எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடே தொழுகையை நிறைவேற்றுவதுதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ அவன் காபிராகி விட்டான்' என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ் விடத்தில் நீ முஸ்லிம்தானா?. தொழாதவன் காபிர் என நபியவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும்???

'நபித் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த இபாதத்தையும் விடுவதை குப்ர் எனக் கணிக்க மாட்டார்கள்.' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்.)

இமாம் தஹபி அவர்கள் கூறுகின்றார்கள் ...
'தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துபவன் பெரும்பாவம் செய்தவனாவான். யார் தொழுகையை விட்ட நிலையில் இறக்கின்றானோ அவன் துரதிஷ்ட்ட வாதியும் பெரும் பாவியுமாவான்.' என்கின்றார்கள்.

என் தோழனே! தொழுகையில் அலட்சியமாயிருப்பதும் நேரம் கிடைக்கும் போது தொழுவதும் முனாபிக் - நயவஞ்சகர்களின் செயல் என்பதை நீ அறிவாயா?
அல்லாஹ் சொல்கின்றான்...

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُواْ إِلَى الصَّلاَةِ قَامُواْ كُسَالَى يُرَآؤُونَ النَّاسَ وَلاَ يَذْكُرُونَ اللّهَ إِلاَّ قَلِيلاً

நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதி செய்ய எத்தனிக்கின்றனர் . ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும் போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் செற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில்லை.
(நிஸாஃ 142ம் வசனம்)

நயவஞ்சகர்களுக்கு இஷாத் தொழுகையையும் ஸுப்ஹுத் தொழுகையையும் விட மிகவும் சிரமமான தொழுகை வேறு ஏதுமில்லை. அவ்விரு தொழுகையிலுமுள்ள நன்மைகளை அவர்கள் அறிந்து விட்டால் (நடக்க முடியாதவர்கள் கூட) தவழ்ந்து நாக்கரைத்தவாறு அத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள் என நபியவர்கள் சொல்லியிருப்பது உன் செவிகளில் விழவில்லையா?

பார் நண்பா! பார்! அக்காலத்தில் நயவஞ்சகர்கள் கூட பள்ளிக்கு வராதிருந்ததில்லை. அவர்களோ தமது தொழுகையைப் பிறருக்குக் காட்டவேண்டுமென்பதற்காகப் பள்ளிக்கு வந்தார்கள், ஆனால் நீயோ நிரந்தரமாகப் பள்ளிவாயலுக்கே முழுக்குப் போட்டு விட்டாயே!

கொஞ்சம் சிந்தித்துப் பார் நண்பா! உனக்குப் பகுத்தறிவுண்டல்லவா?. அதனாலேயே உனக்கு மனிதன் எனப் பெயர் வந்தது. ஆனால் பார்! உன்னை விடக் கேவலமான ஐயறிவுள்ள மிருகங்கள் பறவைகள் கூட அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றனவே! அவனை மறந்து நொடிப்பொழுது கூட அவை இருந்த தில்லையே!

அல்லாஹ் கூறுகின்றான் ..

'நிச்சயமாக வானங்கள் பூமியிலுள்ள அனைத்துமே.. சூரியன், சந்திரன், நட்சத்திரம், மலை, மரம், உயிரினங்கள், இன்னும் அனேக மனிதர்களும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டிருக்கின்றன என்பதை நீ பார்க்க வில்லையா? (இவ்வாறு செய்யாத) அதிகம் பேருக்கு அவனது வேதனையும் நிச்சயமாகி விட்டது, (அல்ஹஜ் : 18)

ஆனால் பகுத்தறிவுள்ள உன்னால் உன்னைப் படைத்த கடவுளை மறந்து எங்ஙனம் இருக்க முடிகின்றது.?, ஐயறிவுள்ள மிருகங்களுக்கே இப்படி நன்றியுணர்வு இருக்கின்றதே! உனக்கு அந்த நன்றி எங்கே?. உன் வீட்டு எச்சில் பாத்திரத்தை உண்ணும் நாய் கூட உனக்கு நன்றியுடன் வாலாட்டுகின்றதே! நீயோ உன்னைப் படைத்தவனான அல்லாஹ்வின் இடத்தில் இருந்து கொண்டு, அவனது உணவை உண்டு கொண்டு அவனை மறந்து வாழ்கின்றாயே! அவனுக்கு மாறு செய்கின்றாயே! உனக்கு மனச் சாட்சியே இல்லையா? உன் உள்ளம் மரத்துப் போய்விட்டதா?.

மனிதா! ஐயறிவுள்ள மிருகங்களும் ஏனைய ஜடங்களும் உன்னை விட அல்லாஹ்விடம் மதிப்புப் பெறுவதும் அவற்றை விடக் கேவலங் கெட்டவனாக நீ ஆகுவதும் பற்றி உனக்கு வெட்கமில்லையா? உனது தன்மானம் அதை அனுமதிக்கின்றதா?

என்னருமைச் சோதரனே! நிச்சயம் மரணம் வரும் நீ என்றோ ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்டத்துக்கும் கைசேதத்துக்குமுரியவன் வேறு யார்?. கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாயா?
நபியவர்கள் கூறியதைக் கொஞ்சம் கேள்!!

'ஜும்ஆத் தொழுகைக்குச் செல்லாமலிருப்போர் அதை விட்டும் அவசரமாக விலகிக் கொள்ளட்டும்! அன்றேல் அவர்களுடைய இதயங்களை அல்லாஹ் முத்திரையிட்டு விடட்டும். பின்னர் அவர்கள் பராமுகமான பாவிகளாகி விடட்டும், (ஆதாரம் முஸ்லிம்)

தொழுகையைப் பாழ்படுத்திய என் சினேகிதா! இதே நிலையில் நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை நேர்ந்தால் நீ எந்தக் கூட்டத்தில் மறுமையில் எழுப்பப்படுவாய் என்பதை அறியாயோ?. கேள் நண்பா! நபியவர்கள் சொல்லியிருப்பதைக் கேள்.

'யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிடும். எவர் அதனைச் சரிவர நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக் அது ஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகி விடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்.' (ஆதாரம் முஸ்லிம்)

அல்குர்ஆன் சொல்வதைக் கேள்!...

وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى ، قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا، قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى ، وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِن بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى

'யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம் குறுடனாக எழுப்புவோம் . அப்போதவன் என் றப்பே! நான் உலகில் கண்பார்வையுள்ளவனாகத்தானே இருந்தேன்? என்னை ஏன் குறுடனாக எழுப்பியிருக்கின்றாய்? என வினவுவான் .அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான். ஏனெனில் (உலகில்) எனது அத்தாட்சிகள் உன்னிடம் வந்த போது அவற்றை மறந்து (குறுடன் போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்) மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை நம்பாது (காலத்தை) விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம். இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும் நிரந்தரமானதுமாகும். (தாஹா : 124)

ஆகவே நண்பா! நீ நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப்படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது அதை இது வரைக்கும் மண்ணாக்கி விட்டாய்!. இது வரை தூங்கியது போதும். இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்துவதற்காக உனக்களித்த இறுதிச் சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு, அதையும் வீணாக்கி விடாதே!

போதும் நண்பா! போதும்!. இத்தோடு நிறுத்திக் கொள். நான் என்னைப் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச்சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை. ஆம் தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக மன்னிப் கோரிடு. அழு, அழு நன்றாக அழு உன் இதயச் சுமை குறையும் வரைக்கும் அழுதிடு, இனிமேல் பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற வசிடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதி மொழி எடுத்துக் கொள் .

(அல்லாஹ்வை) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வர வில்லையா?

தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! .. நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கிருபையுள்ளவனுமாவான்.
(ஸூரா அல் ஹதீத் 53)

ஒரு முஸ்லிம் தொழுகையை விட்டுவிட்டால் அவனது விடயத்தில் என்னென்ன இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும் என்பதை நீ அறிவாயா?. இதோ கேள்!.

தொழுகையை விட்டவன் காபிராக ஆகி விடுகின்றான்.

அவன் மரணித்தால் அவனைத் தொழ வைக்கக் கூடாது

அவனுக்காக எவரும் துஆக் கேட்கக் கூடாது.

அவனைக் குளிப்பாட்டக் கூடாது. முஸ்லிம்களின் மைய வாடியில் அடக்கம் செய்யவும் கூடாது.

அவனுடைய மகளுக்கு வலியாக இருந்து திருமணம் முடிந்து வைக்கவும் கூடாது.

அவன் இறந்தால் அவனது சொத்தில் உறவினருக்கோ, அவனது உறவினர் இறந்தால் அதில் அவனுக்கோ எவ்விதப் பங்குமில்லை.

அவன் மக்கா ஹரத்தின் எல்லைக்குள் பிரவேசித்திட அனுமதியில்லை.

அவன் அறுத்த பிராணிகளை யாரும் உண்ணக் கூடாது.

அவனுக்கு முஸ்லிம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. அப்படி முடித்திருந்தால் அந்தத் திருமணத்தை ரத்துச் செய்ய வேண்டும்.

அவன் தான் முஸ்லிம் பெண்ணை மணப்பது கூடாதெனத் தெரிந்து கொண்டே மணமுடித்திருப்பின் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் கூட அவனது குழந்தைகளாகக் கணிக்கப்பட மாட்டாது.

பார்த்தாயா சினேகிதனே? நீ செய்து கொண்டிருந்த பாவம் எவ்வளவு மகா கெட்டது என்பதைப் பார்த்தாயா?. ஆனால் அதே பாவத்தை நீ தொடர்ந்து செய்ததால் அது பாவமென்றே தெரியாதளவுக்கு உன் உள்ளம் வலித்து விட்டதே பார்த்தாயா?

இன்றே நீ தவ்பாச் செய்வாயல்லவா? ஆம். அதைத் தாமதப்படுத்தாதே! அல்லாஹ்விடம் தஞ்சமடைந்து விடு. அவன் உன்னைக் கைவிட்டால் வேறு உன்னைக் காப்பவர் யார்? அவனிடம் கையேந்தியோர் என்றுமே கைசேதப் பட்டதில்லை . கடவுளை நம்பினார் கைவிடப்படார்.

அதே போல் நீ செய்த ஏனைய பாவங்களுக்காகவும் சேர்த்தே தவ்பாச் செய்து விடு. இனிமேல் அவற்றை விட்டு முழுமையாக விலகி விடு. அவை பற்றிய எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடு. இன்றிலிருந்து நீயொரு புதிய மனிதன்,
(அல்லாஹ்வின் அருள் எம் அனைவர் மீதும் உண்டாகட்டும்.
thanks for பழனி பாபா.blogspot
Share: