ஈத் முபாரக்

Share:

தொகுப்பு வீடுகள் !!

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் 3,000 ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இவற்றில் 300க்கு மேற்ப ட்ட தொழிலாளர்கள் உப் பளத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் முதல் கட்டமாக இந்திய உப்புத்துறை மூலம் உப்பளத் தொழிலாளர்கள் 22 பேருக்கு அதிராம்பட்டினம் சால்ட்லைன் பகு தியில் உப்புத்துறைக்கு சொந்தமான இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது.

தொகுப்பு வீடுகளை திறந்து வைத்து உப்பளத் தொழிலாளர்களிடம் வீடு களின் சான்று, சாவி ஆகியவற்றை உப்புத்துறை கண்காணிப்பாளர் மேஸ் தம் வழங்கினார். அதிராம்பட்டினம் சால்ட் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், கட்டுமாவடி சால்ட் இன்ஸ்பெக்டர் கனகராஜ், உப்புத்துறை லைசென்ஸ்தாரர் ராஜேந்திரன், சால்ட் பணியாளர்கள் ராமையா, முத்துசாமி மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
Share:

ஹஜ்ஜின் சிறப்புகள்

அமல்களில் சிறந்தது

“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26

பெண்களின் ஜிஹாத்

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்” என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1520

அன்று பிறந்த பாலகர்

“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1521

சுவனமே பரிசு
“ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1773

தவிடுபொடியாகும் தவறுகள்
அல்லாஹ் என்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்தை அருளிய போது நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நான் உடன்படிக்கை செய்வதற்காக உங்கள் வலது கையை விரியுங்கள்” என்று கூறினேன். அவர்கள் தன் கையை விரித்து எனது கையைப் பிடித்துக் கொண்டு, “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நிபந்தனை விதிக்கப் போகின்றேன்” என்று கூறினேன். “என்ன நிபந்தனை விதிக்கப் போகின்றாய்?” என்று கேட்டார்கள். “எனக்கு மன்னிக்கப்பட வேண்டும்” என்று நான் பதிலளித்தேன். “அம்ரே! நிச்சயமாக இஸ்லாம் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹிஜ்ரத் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹஜ் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது என்று உனக்குத் தெரியாதா?” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 173, இப்னுகுஸைமா

சிறப்பு விருந்தினர்
“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2884

இஹ்ராமின் போது இறந்தவர் தல்பியா சொல்லி எழுவார்
(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர் தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். அது அவரது கழுத்தை முறித்து விட்டது. (அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1266, முஸ்லிம் 2092

ரமளானில் ஒரு ஹஜ்
உம்மு ஸினான் என்றழைக்கப்படும் அன்சாரிப் பெண்ணை நோக்கி, “நீ என்னுடன் ஹஜ் செய்வதற்குத் தடையாக அமைந்தது எது?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “எங்களிடம் தண்ணீர் கொண்டு வருவதற்கான இரண்டே இரண்டு ஒட்டகங்கள் தான் உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் சென்றுள்ளனர். நாங்கள் (இங்கே தண்ணீர் எடுத்துச்) செல்வதற்காக இன்னோர் ஒட்டகத்தை இங்கே எங்களுக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர்” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரமளான் மாதம் வந்ததும் நீ உம்ரா செய்! ஏனெனில் ரமளானில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 2201
அரஃபா நாள் – மலக்குகளிடம் அல்லாஹ் பெருமிதம்
“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக நிற்கும் எனது அடியார்களைப் பாருங்கள்” என்று அரஃபா பெருவெளியில் நிற்கும் மக்களைப் பற்றி மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 7702

ஒன்பதாம் நாள் விடுதலை நாள்
அரஃபா நாளை விட வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியானை அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. (அந்நாளில்) அவன் நெருங்கி வந்து இந்த அடியார்கள் என்னை விரும்புகின்றார்கள் என்று சொல்லி மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 2402

அரஃபா நாளின் துஆவே சிறந்த துஆவாகும்

துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும். நானும் எனக்கு முந்தைய நபிமார்களும் சொன்னதில் சிறந்தது, “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு ஹுல்ல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்’ ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி),

நூல்:திர்மிதி3509

அரஃபா நோன்பு (ஹாஜி அல்லாதோருக்கு)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாதத்தில் மூன்று (நாட்கள் நோன்பு நோற்பது)ம், ரமளானுக்கு ரமளான் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும். அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 1976

சிறியவரின் ஜிஹாத் – ஹஜ்
முதியவர், சிறியவர், பலவீனமானரின் ஜிஹாத் ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ 2579

தல்பியாவின் சிறப்பு
எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ 758

தவாஃபின் சிறப்பு
யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2947

சாட்சி சொல்லும் ஹஜருல் அஸ்வத்

கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். யார் இதை முத்தமிட்டாரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதீ 884

மழித்துக் கொள்பவருக்கு மன்னிப்பு

நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1727

ஜம்ஜமின் சிறப்பு
அது (ஜம்ஜம் நீர்) பரக்கத் செய்யப் பட்டதாகும். உண்ணுபவருக்கு உணவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 4520

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவதன் சிறப்பு

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது அது அல்லாததில் (மற்ற பள்ளிகளில்) ஒரு லட்சம் தொழுவதை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மத் 14167, இப்னுமாஜா 1396

மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதன் சிறப்பு

மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட

எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1190

மஸ்ஜிதுல் குபாவில் தொழுவதன் சிறப்பு

யார் தனது வீட்டில் உளூச் செய்து மஸ்ஜிது குபாவுக்கு வந்து அதில் ஒரு தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு உம்ரா செய்த கூலி உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹனீஃப் (ரலி), நூல்: இப்னுமாஜா 1406, நஸயீ 692
Share:

மரண அறிவிப்பு

மர்ஹூம் முஹம்மத் தம்பி மரைக்காயர் (கட்ட பிள்ளையார்)அவர்களின் மகனாரும்,சகோதரர்கள் முஹம்மத் தமீம்,சாதிக்,ரபீக்,தௌபீக் ஆகியோர்களின் தகப்பனாரும்,மர்ஹூம் ஷேய்க்காதியார்,மர்ஹூம் அபுல் ஹசன்,அப்துல் ரஜாக்,ஹாஜா அலாவுதீன் ஆகியோர்களின் சகோதரரும்,அப்துல் ரஜாக்,ஷேய்க் அப்துல் காதர்,அப்துல் ரஜாக்,ஹாஜா ஆகியோர்களின் மாமனாருமாகிய நடுத்தெருவில் வசித்து வந்த சாகுல் ஹமீத் அவர்கள் இன்று காலை சுமார் ஆறு மணியளவில் அதிராம்பட்டினத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்.அன்னார் அவர்கள் மிக எளிமையான நடத்தையும்,மேன்மையையும் பேணி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னாரின் மறுமை உலக நற் பேருக்காகவும்,ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துவா செய்யுமாறு வேண்டுகிறோம்.

இப்படிக்கு

கட்டப்பிள்ளையார் குடும்பத்தார்.
Share:

அதிரை தைக்கால் தெரு, பிலால் நகரில் வெள்ளம்

வடகிழக்கு பருவமழை, புயல் சின்னம் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களாக நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் கடந்த வாரம் மழை கொட்டி தீர்த்தது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக மழை சிறிது ஓய்வு கொடுத்து இருந்தது. தற்போது நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை இன்று அதிகாலை கனமழையாக கொட்டியது. தஞ்சாவூரில் இன்று அதிகாலை 5 மணி முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு உள்ளது. வல்லம் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. அங்கு 80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதே போல பாபநாசத்திலும் அதிகாலை அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. கும்பகோணம், ஒரத்தநாடு, அதிராம்பட்டினத்திலும் மழை கொட்டியது.

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வல்லம் - 80

அணைக்கரை - 48.8

திருக்காட்டுப்பள்ளி - 42

திருவையாறு - 22

தஞ்சை - 18

பூதலூர் - 17.6

அதிராம்பட்டினம் - 12.1

ஒரத்தநாடு - 10.6

பாபநாசம் - 7.2

நெய்வாசல்

தென்பாதி - 5.2

பேராவூரணி - 3.8

வெட்டிகாடு - 1

மொத்தம் 268.30 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. சராசரி 12.78 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

நாகை மாவட்டத்தில் மழை ஓய்ந்தது. நேற்று வேதாரண்யத்தில் இரவு பனிப்பொழிவு சற்று அதிகமாக இருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் அதிகாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, சீர்காழியில் மழை இல்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியில் மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் மழை இல்லை. அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பதிவாகி உள்ளது.புகைப்படங்கள் : அஹமது ஹசன் -அதிரை
செல்: 9600714719

Share:

ஹஜ் செய்பவர்கள் குர்பானி கொடுக்க வேண்டுமா? – இதப்படிங்க முதல்ல…

முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ் கிரியை 35 லட்சத்திற்கும் மேலதிகமான மக்களால் ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்படுகின்றது. இன, மொழி, நாடு, நிற வேறுபாடுகளைக் கடந்து, உலகம் முழுவதிலிருந்தும் ஆண்களும், பெண்களுமாக ஹஜ் கடமையை நிறைவேற்ற, ஒவ்வொரு வருடம் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்குச் செல்கின்றனர். குறிப்பிட்ட நாட்களில், மக்கா மற்றும் மக்காவை சுற்றியுள்ள சில இடங்களில் தங்கி, சில வணக்க வழிபாடுகளைச் செய்வதே ஹஜ் எனப்படுகின்றது. அவற்றுள், ஓர் ஆட்டையோ அல்லது மாடு, ஒட்டகங்களை கூட்டாகவோ குர்பானி என்ற பெயரில் இறைவனுக்காக பலியிட்டு தேவையுள்ளவர்களுக்கும், ஏழைகளுக்கும் விநியோகிப்பதும் ஒன்றாகும்.

இந்த வருடம், இந்தியாவிலிருந்து 1,60,491 பேர் ஹஜ் செய்ய இருக்கின்றனர். இவர்களுள், 1,15,000 பேர் இந்தியா ஹஜ் கமிட்டி மூலமும், 45,491 பேர் தனியார் ஹஜ் டிராவல்ஸ் மூலமும் மக்கா வர இருக்கின்றனர்.

பல்வேறு நாடுகள், நகரங்களில் இருந்து ஹஜ்ஜுக்கு செல்பவர்கள், பலிப்பிராணிகளை நேரடியாக சென்று வாங்கி, பலி கொடுத்து, விநியோகம் செய்வது இயலாததாகையால், தங்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லும் ஏஜெண்டுகளிடம் அதற்கான தொகைகளை ஒப்படைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், பெரும்பாலான ஏஜண்டுகள் அந்த தொகைகளை ஏப்பம் விட்டு விடுகின்றார்கள் என்பது நிதர்சனமான அதே நேரம் கசப்பான உண்மை. பேருக்கு சில ஆடுகளை பலியிட்டு, அந்த இறைச்சியை ஹஜ் செய்பவர்களுக்கு உணவாக வழங்குகின்றனர். மீதத் தொகை, ஏஜண்டுகள் மற்றும் குர்பானி விநியோகம் செய்பவர்களிடையே பங்கிடப்படுகின்றது. இதை அறியாத ஹாஜிகள் தங்களின் பணத்தைக் கொண்டு, குர்பானி கொடுக்கப்பட்டு விட்டதாக எண்ணி ஏமாந்த வண்ணம் உள்ளனர். மேலும், பல மக்களை கூட்டிச் செல்லும் ஹஜ் ஏஜெண்டுகள், தங்கள் கூடாரங்களில் உணவுத் தேவைக்கு இறைச்சி தேவைப்படுவதால், அரசாங்கம் மூலம் குர்பானி கொடுக்க விரும்புவர்களையும் அவ்வாறு கொடுக்க விடுவதில்லை. குர்பானி இறைச்சியை கண்டிப்பாக ஹாஜிகள் சாப்பிட வேண்டும் என பொய்யான மார்க்கத் தீர்ப்பைக்(!) கூறி, தடுக்கின்றனர். மேலும், தங்கள் மூலம் கொடுத்தால் குறைந்த விலையில் குர்பானி கொடுக்கலாம் எனவும் ஆசை காட்டுகின்றனர்.

மேலும், இவ்வாறு தனியார் மூலம் அறுக்கப்படும் பலிப்பிராணிகள் சுத்தமான இடத்தில் வைத்து அறுக்கப்படுவதில்லை; அறுக்கப்பட்ட பிராணிகளின் இறைச்சியும் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை.

இந்நிலையை களையும் பொருட்டு, சவூதி அரசானது, ஹஜ் இறைச்சி உபயோகத்திற்கான சவூதி திட்டம் (Saudi Project for Utilization of Haj Meat SPUHM) – என்ற பெயரில் மக்காவைச் சுற்றி பல பகுதிகளில், பலிக்கூடங்களை நிறுவியுள்ளது. ஹாஜிகளின் சார்பில் குர்பானி கொடுக்க சவூதி அரசால் அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பு இதுவே. பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் இக்கூடங்களில், ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பலிப்பிராணிகளை – இஸ்லாமிய முறைப்படி பலியிட்டு, சுகாதாரமாகவும், இறைச்சிகளை வீணாக்காமலும் விநியோகிக்க முடியும். இஸ்லாமிய வளர்ச்சி வங்கி (IDB) – இன் மேற்பார்வையில் நடைபெறும் இந்த ஏற்பாடு, ஹஜ் செல்லும் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எண்ணிக்கைக்கும், எடைக்கும், நியாயமான விநியோகத்திற்கும் IDB உத்தரவாதம் அளிக்கின்றது.

சவூதியில் உள்ள பிற நகரங்களில் இருந்து வருபவர்களும், வெளிநாடுகளில் இருந்து ஹஜ் செய்ய வருபவர்களும், சவூதியில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் கிடைக்கக் கூடிய SR 430 மதிப்பிலான கூப்பன்களை பெற்றுக் கொள்ளலாம். ஹாஜிகளின் சார்பாக IDB மூலம் குர்பானி கொடுக்கப்பட்டு, இறைச்சியானது தரை-கடல்-வான் மார்க்கமாக மக்கா, மதீனா மற்றும் சவூதியின் பிற நகரங்களில் உள்ள ஏழைகளுக்கும், மேலும் 25 -க்கும் அதிகமான நாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. இதன் மூலம், ஹாஜிகள் தங்கள் கடமையை சரியாக இறைவழியில் நிறைவேற்றிய திருப்தி கிடைக்கும். மேலும், ஏஜெண்டுகளிடம் ஏமாறாமல், தேவையுள்ளோருக்கு குர்பானி இறைச்சியும் சென்றடையும்.

tntj.net
Share:

இலவச பல் மருத்துவ முகாம் !

அதிராம்பட்டினம் டாக்டர் ஹனீப் மருத்துவமனையில் அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் சார்பில் சிறப்பு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

அதிராம்பட்டினம் முன்னாள் லயன்ஸ் சங்க தலைவர் டாக்டர் ஹனீப் முகாமை துவக்கி வைத் தார். டாக்டர் முகம்மது இலியாஸ், டாக்டர் சீனி வாசன் ஆகியோர் 200 பேருக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் பகுதி அவைச்செயலாளர் கண பதி, வட்டாரத்தலைவர் முகம்மது இபுராகிம் பொருளாளர். செய்யது அகமது கபீர் மாவட்டத்தலைவர்கள் அப்துல் ஹமீது, முகம்மது முகைதீன், லியோ மாணவர்கள் மற் றும் லயன்ஸ் உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.
Share:

அதிரையில் தமுமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்


புகைப்படங்கள் & தகவல் அனுப்பியார்கள்
Muslim malar /muslimmalar@gmail.com
Right jumma-makkal urimai
9791381110
Share:

ஐஐடியில் முஸ்லீம்கள் – மாணவர்களே! கனவை நினைவாக்க களமிறங்குங்கள்!

அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவர்களை சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது. கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை, மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு, கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது, இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.
இங்கு படிக்க மிக குறைந்த கட்டணமே, வசதி இல்லாத மாணவர்களுக்கு மத்திய அரசே கல்வி செலவை ஏற்க்கும் ( ஐஐடி-யில் படிக்கும் சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது. படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.1,00,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள். இவை அனைத்தும் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.
இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்,
இட ஒதுக்கீடு : ஐஐடி-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.
IIT-JEE 2010 : தற்போது ஐஐடி-யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2010 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (IIT-JEE 2010) விண்ணப்பம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் கீழே இடம் பெற்றுள்ளது).
இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.
ஐஐடி-யில் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லி கொள்பவர்களின் ஆதிக்கம் : ஐஐடி-யில் பெறும்பாலும் படிப்பதும், ஆசிரியர்களாக இருப்பதும் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்ளும் பார்பனர்கள், , இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, ஐஐடி-யில் சேருவது மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.
அரசு இட ஒதுகீடு என்று அறிவித்த பிறகும் இவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி (ஐஐடி-யில் அதிகார மட்டத்தில் இவர்களே அதிகம் உள்ளனர்) இட ஒதுக்கீட்டை கிடைக்கவிடாமல் செய்வது, சென்ற ஆண்டு மாணவர் சேர்கையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கோட்டாவில் சேர்க்க தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி 1,100 இடங்கள் காலியாக வைத்து, அதே போல 53 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்களில் சேர்க்கவும் தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி, இதனால் அனைத்து இடங்களும் பொதுக் கோட்டாவுக்கு மாற்றுகின்றோம் என்று கூறி அந்த இடத்தையும் இவர்களே எடுத்து கொண்டனர். இது சம்ந்தமாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடந்தும் எந்த பலனும் இல்லை .
மாணவ மாணவியர்களே!
இதை மாற்ற நாமும் ஐஐடி-யில் படிக்க வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.
உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்களை படிக்கவைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகின்றது நமது மாணவரணி, உங்களுக்கு வழிகாட்ட ஐஐடி-யில் படித்த சகோதரர்களும் நமது மாணவரணியில் உள்ளனர். உயர் கல்வி கற்க முஸ்லீம்களை ஊக்குவிக்க தமிழகத்தின் மூலை முடுக்குகளெள்ளாம் விழிபுணர்வு பிராசாரங்களையும் வழிகாட்டும் முகாம்களையும் நடத்தி வருகின்றோம்.
ஐஐடி நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது TNTJ மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம். நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு ஐஐடி தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வுகள் பற்றியும், விண்ணப்ப படிவங்கள் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள TNTJ மாணவரணியின் சிறப்பு குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.

1. S.N. அஹமது இப்ராஹீம். B.Tech – 9841464521.

2. K. ஹஸன் B.E - 9940611315

e-mail : tntjedu@gmail.com

S.சித்தீக்.M.Tech
TNTJ மாநில மாணவரணி செயளலார்
IIT-JEE 2010 தேர்வை பற்றிய முழு விவரம்

1. விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 19 (19/12/09)
2. தேர்வு நடைபெறும் தேதி; ஏப்ரல் 11, 2010 (இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் இரவு)
3. தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி; மே 26,2010
4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி; Chairman, JEE IIT Madras, Chennai 36, 044-22578220
5.விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :

இந்தியன் வங்கி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள Help line சென்டர்கள்

6. விண்ணப்ப படிவத்தை பற்றி அறிந்து கொள்ள, சந்தேகங்களுக்கு தெளிவு பெற ஐஐடி - மெட்ராசின் ஹெல்ப் லைன் எண் (Help line Number) -

044-2250 4500 (காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை)


விண்ணப்ப படிவத்தை பற்றி அறிந்து கொள்ள, சந்தேகங்களுக்கு தெளிவு பெற ஐஐடி - மெட்ராசின் ஹெல்ப் லைன் எண் (Help line Number)

044-2250 4500 (காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை)

விண்ணப்பத்தின் விலை :

Rs.1,000,

(ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)

வயது வரம்பு

அக்டோபர் 1, 1985 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :

a) +2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள்,

b) +2 வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள்.

c) 3 ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள்

குறைந்தபட்ச மதிப்பெண்

+2-வில் குறைந்த்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்


Share:

இறை இல்லம் கட்ட நிதி உதவி தேவை.சென்னை கீழ்பாக்கத்தில் இறை இல்லம் கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது.எனவே அல்லாஹ்வின் அருள் நாடி,நிதி உதவி செய்யும்படி சகோதரர்களை வேண்டுகிறோம்.அல்லாஹ்விற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு,அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்று கட்டுகிறான் என்பது ஹதீஸாகும்.

பள்ளிவாசல் கட்ட இடம் வாங்கவும்,கட்டவும் ரூபாய் 50,0000.00 என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, AL-MADRASATHUL DHEENIYATH ( Regd)NO.12,Halls Road, Kilpauk, CHENNAI-600010 என்ற இடத்தில் தொழுகை நடைபெற்று வருகிறது,ஆனால்- 25 நபர்கள் மட்டுமே தொழ இடம் உள்ளது,இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய மக்கள் தொழ வேண்டும் என்றால்,அதற்கு பெரிய பள்ளியாக கட்டினால் மட்டுமே முடியும்.தாராளமாக உதவுங்கள்,இன்ஷா அல்லாஹ்,அதை பன் மடங்காக்கி இம்மையிலும்,மறுமையிலும் தருவான்,ஆமீன்.

மேலும் விவரங்களுக்கு,

saibudeen 91-9841045673

kilpauk muslim welfare association

தகவல்:சைபுதீன்,அதிரை.
Share:

அதிரையில் மீண்டும் சாலை விபத்து

நமதூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் நமதூரை சார்ந்த சகோதரர்கள் விதிமுறை மீறி3நபர்களாக இருசக்கரவாகனத்தில் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்பட்டு மிகவும் கவலைகிடமாக தஞ்சை வினேதகன் மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலநாட்களுக்கு முன்பு முத்துப்பேட்டையிலிருந்து அதிரைக்கு வந்த இருவர் சாலைவிபத்தில் மரணமடைந்த வடு ஆறும்முன் இச்சம்பவம் நிகழ்துள்ளது மிகவும் வேதனையளிகிறது. இனிஇது போன்ற சம்பவங்கள் நிகழாவன்னம் வாகனங்களை இயக்க அதிரைஎக்ஸ்பிரஸ் வேண்டுகிறது.


Share:

பாருங்கள்,பார்க்கத் தூண்டுங்கள்.

மும்பையில் அல்லாஹ்வின் அருளால்,பீஸ் கான்பரன்ஸ் தொடங்கி நடந்துவருகிறது,அந்த நிகழ்ச்சிகள் யாவும் பீஸ் டிவி மூலம் நேரடி ஒளி பரப்பாகவும் காண்பிக்கப்படுகிறது.சுமார் 30 நாடுகளிலிருந்து அழைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.மேற்கொண்டு விபரம் அறிய
http://peaceconference.in/index.htm இந்த தளம் சென்று விபரங்கள் அறியலாம்.மேலும் டாகடர் ஜாகிர் நாயக் அவர்களின் இணைய தளமான http://irf.net/ சென்றும் அறிந்துகொள்ளலாம்.நீங்கள் பார்ப்பதோடு,உங்கள் மாற்று மத நண்பர்களையும் பார்க்கத்தூண்டுங்கள்.
Share: