ஊருக்குள் விடாதீர்

விளம்பரமல்ல விபரீதம்!! உஷார் ....
இன்று மாறிவரும் உலகில் நம் சமுதாயங்களின் பிளவுகளைச் சொல்லி மாளாது தினம் ஒரு இயக்கம் உருவாகிகொண்டுதான் உள்ளன. எத்தனை ஜமாத்துக்கள், கழகங்கள் லீக்குகள். இது போன்ற சமூதாய(?)அமைப்புகள் சில நேரங்களில் நமக்கு எரிச்சலை தந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஆதரித்தும் விமர்ச்சித்தும் வருகிறோம்.

ஆனால் தற்பொழுது "சத்தியமே ஜெயம்"என்ற பெயரில் சமீப நாட்களாக ஓர் இயக்கம் சிங்கப்பூரை தலைமயகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை சார்ந்தவர்கள். அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட சூது,மது,மாது, விபச்சாரம் இவையனைத்தும் விதியின்படி தான் நடக்கிறது. அல்லாஹ் நான் குடிப்பதற்கு எனக்கு விதியாக்கியுல்லான் இறைவன் நாடியுள்ளான் நான் குடிக்கிறேன்" என்பது போன்ற பதில்கள்தான் வருகிறது.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்டபொழுது 'எந்த ஒரு செயலும் இறைவன் நாடினால்தான் நடக்கும் அது போல்தான் இதுவும்" என்றார் கொள்கை???ப்பிடிப்புடன் இவ்வியக்கத்தின் முக்கிய நபர் சிங்கபூரில் வசிக்கும் முத்துப்பேட்டையைச் சார்ந்த முஸ்லிம் (?) ஆவார். இவர் நடத்தும் மினிமார்ட்டில் மது போன்ற போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அவரை எனது நண்பர் மூலம் தொடர்புகொண்டு இது விஷயமான சில சந்தேகங்ககளை கேட்ட பொழுது என்னை நேரில் வருமாறு அழைத்தார். எனது வேலைப்பளு காரணமாக நேரில் செல்ல இயலவில்லை.

அன்பார்ந்த அருமை நண்பர்களே! நாம் இயக்கங்களால் பிரிந்துகிடந்தாலும் இது போன்ற அபாயகரமான, அல்லாஹ்வும் ரசூலும் சொல்லித்தராத மிகக்கேடுகெட்ட வழிகளில் செல்ல வேண்டாம் இது போன்ற இயக்கங்களின் பெயரைச் சொல்லி யாரேனும் ஊருக்குள் வந்தால் விரட்டியடிக்க தயாராக இருக்க வேண்டும். பல அப்பாவி இளையதலைமுறையினரை மூளைச்சலவை செய்து இந்த பலாயின் பக்கம் ஈர்த்து வருகின்றனர். இவர்களின் சூழ்ச்சி வலையில் விழுந்தஇளைஞர்கள் பலர் தங்களுக்குச் சாதகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் அவர்களை நம்பி பல லட்சம் செலவு செய்து இங்கு அனுப்பிவைத்த பெற்றோர்கள் கவலையில் கரைந்து வருவதும் இவர்களின் பார்வையில் இதுவும் "விதி" தான் என்று எண்ணிக்கொண்டுள்ளனர் போலும்!

இவர்கள் நடத்தும் வணிக நிறுவனங்களில் SJ முத்திரை போட்டுவைத்துள்ளனர்.

எனவே அன்பு நண்பர்ளே... இதுபோன்ற வழிகெடுக்கும் இயக்கங்ளை ஊருக்குள் விடாமல் நம் சமுதாயத்தை காப்பது உலமாக்களுக்கும் நமக்கும் தலையாய கடமையாக உள்ளது. அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றி நேர்வழி காட்டுவானாக! ஆமீன்!!
Share:

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.

டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).

ஹார்ட் அட்டாக் இந்த வார்த்தையே பயத்தை உண்டாக்கும், இதனால் ஏற்படும் பதட்டமோ பிரச்சனையை அதிகமாக்கும். நிதானமாக இக்கட்டுரையில் இருப்பது போல் செயல்பட்டால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து மிகவும் எளிதாக விடுபடலாம். (இன்ஷா அல்லாஹ்).

இதயம் இதன் அழகிய துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம் அதுதான் மரணம். இறைவன் நம்உடல் இயக்கத்திற்காக அளித்த ஓர் அற்புத தொழிற்சாலை. இதயம் அது தானாக இயங்குவதில்லை உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்திரவிடுகின்றது. இதயம் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்புக்கு சக்திஅளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது. பாதிப்படைந்த உறுப்பு அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல் போனாலோ, இதயத்திற்கு தகவல் கிடைத்து இரத்தத்தை (சக்தியை) அனுப்பும்போது தடங்கல் ஏற்பட்டாலோ (இரத்த குழாய் அடைப்பு போன்ற காரணங்களால்) பல உறுப்புகள் பாதிப்படைந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு உறுப்புக்க போதுமான இரத்தத்தை அனுப்ப முடியாமல் போனாலே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.

ஆனால் நவீன மருத்துவத்தில் இதயம் தானாகவே இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து, மாத்திரைகள் கொடுத்து நன்றாக இருக்கும் இதயத்தை அநியாயமாக கெடுத்துவிடுகின்றனர்.

நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், இதயம், சிறுகுடல், சிறுநீரகம் (கிட்னி), சிறுநீர் பை, பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவைகள் மிக மிக முக்கியமான உடல் உறுப்புகள். மற்றவை அனைத்தும் இந்த உறுப்புகளை சார்ந்தவையே. இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு சம்பந்தப்படுகிறது என்பதையும் எந்தெந்த உறுப்பு பாதிப்படைந்தால் எந்தெந்த நேரத்தில் ஹார்ட் அட்டாக் வரும், எந்த சூழ்நிலைகள் மற்றும் சந்தற்பங்களில் வரும் இதற்கான முதல் உதவி முறைகள் என்ன? எப்படி செய்வது என்பதை இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் நாம் தெரிந்துகொள்வோம்

கல்லீரல் (Liver) பித்தப்பை (Gall Bladder) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

பித்தப்பை :

அதிகமாகக் கோபம் வரும், ஒரு பக்கத்தலைவலி, கண்களில் எரிச்சல், பித்தப்பையில் கல், வாய்ப்புண், வாந்தி, வாய் நாற்றம், காதுவலி, அடிக்கடி ஏற்படும் ஜுரம், தொடையில் வெளிப்பக்கத்தில் ஆரம்பித்து கால் சுண்டு விரல் வரை வரும் வலி அதனால் நடக்க இயலாமை, வாயில் கசப்புச் சுவை, கிறுகிறுப்பு, காது அடைத்தல், மசலா அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பை பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்புண்டு, உடம்பில் ஏற்படும் எரிச்சலோடு கூடிய வலி, துணி உடம்பில் பட்டால் கூட எரிச்சல் உண்டாகும். கால் கைகளை படுக்கைக்கு வெளியே நீட்டி விட்டுக் கொண்டு தூங்குவார்கள்.

கல்லீரல் :

கண் நோய்கள், பசியின்மை, தலைவலி, கோபம், மஞ்சள் காமாலை, வயிற்றுவலி, மலச்சிக்கல், குழந்தைகளின் வளர்ச்சி பாதித்தல், வாந்தி, மன அழுத்தம், முதுகுவலி, சிறுநீர் பிரியாமை, ஹெரனியா, அடிவயிற்று வலி, இரவு 1 மணிக்கு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு பிறகு 3 மணிக்கு மீண்டும் தூங்க ஆரம்பித்தல், தூக்கத்தில் ஏற்படும் அரிப்பு, அலர்ஜி.

வரும் நேரம்:
இரவு 11 மணியிலிருந்து 3 வரை.

மற்ற சூழ்நிலைகள்:
குடிகாரர்களுக்கும், விடிய விடிய கண்விழிப்பவர்களுக்கும், ஓய்வில்லாமல் செயல்படுபவர்களுக்கும், மேற்குறிப்பிட்ட நேரம் இல்லாமல் மற்ற நேரத்திலும் வரும்.

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்:
கை சுண்டு விரல் (small finger) நகத்தின் மேற்புறத்தில் உள் பக்க ஓரத்தில் ஆட்காட்டி விரலால் அழுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்

இதயம் (Heart) சிறுகுடல் (Small Intestine) இதய மேல்உறை (Pericardium) உடல் வெப்பம் (மூவெப்ப மண்டலம் -Triple Warmer) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்

ஆரம்ப கால அறிகுறிகள்:

இதயம்:

நெஞ்சுவலி, இதயத்திற்கு மேல் பகுதி தோள்பட்டை பகுதியில் ஏற்படும் வலி, போலியோ, அதிகமாக தாகம் எடுத்தல், சிறுநீர் மஞ்சள் நிறம், கை சுண்டு விரலில் உள்பக்க சைடில் ஆரம்பித்து அக்குள் வரை செல்லும் வலி, மஞ்சள் காமாலை, உள்ளங் கையில் சூடு அதிகமாகுதல், மனதில் பயம், நாக்கின் மேல் பகுதி சிகப்பு நிறமாகுதல், ஞாபக சக்தி குறைவு, மார்பு பகுதியில் தோன்றும் புண், மூச்சுவிட சிரமம், திடீர் வியர்வை, தூக்கமின்மை படபடப்பு, மணிக்கட்டு வலி, விரைவாகக் களைப்புத் தோன்றுதல், தூக்கத்தில் தொடர் கனவுகள், தூங்க ஆரம்பித்தவுடன் கனவும் ஆரம்பித்து விடும், நெருப்பு சம்பந்தப்பட்ட கனவுகள் தான் அதிகம் வரும்.

இதயமேல் உறை:

இதயத்தில் மேல்உறை பாதிப்புக்கு உள்ளாகும் போது நெஞ்சுவலி, படபடப்பு, மார்பு நெஞ்சுப் பகுதி அடைத்தது போலிருத்தல், மன அமைதியின்மை, முழங்கையில் ஏற்படும் வலி, உள்ளங்கையில் சூடு பரவுதல், கைகளில் ஏற்படும் தசைவலி, கடுமையான நெஞ்சுவலி, (இதயத் தசைகளில் இரத்தக் கசிவினால் ஏற்படும் நெஞ்சுவலி வலது முழங்கை வரை கடுமையாக இருக்கும்.) தலைவலி, தூங்கும் போது நெஞ்சு பாரமாக இருப்பது போல் உணர்வு, யாரோ அமுக்குவது போன்று உணர்வு இதனால் தூக்கத்தில் எழுந்து விடுதல்.

உடல் வெப்பம் (மூவெப்ப மண்டலம்):

உடம்பில் சில பகுதிகள் சூடாகவும் சில பகுதிகள் குளிர்ச்சியாகவும் இருப்பதற்கு இது தான் காரணம். உடம்பு முழுவதும் வெப்பத்தை சீர்படுத்தும். இது பாதிப்படைந்தால், காது மந்தம், காது செவிடு, காது இரைச்சல், கண்ணத்தில் வீக்கம், காதுகளில் வலி, முழங்கை வலி, தொண்டை வறட்சி, உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை அல்லது அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி ஏற்படுதல், தலை மிகவும் சூடாக இருப்பது. ஆடை மூடிய பகுதிகள் சூடாக இருப்பது, வயிறு உப்புதல், காற்று அடைத்தது போல் தசைகளில் வீக்கம், (விரல் கொண்டு அழுத்தினால் பள்ளம் ஏற்படும்), சிறுநீரை அடக்க முடியாமை, தூக்கத்தில் சிறுநீர் கழித்தல், நீர் கடுப்பு, வெளிச்சத்தில் தூங்க இவர்களுக்கு மிகவும் பிடிக்கும், சிறு வெளிச்சம் இவர்களுக்குத் தேவை.

சிறுகுடல்:

அடிவயிற்று வலி, காது பிரச்னைகள், கன்னம் வீக்கம், தொண்டைப் புண், மலச்சிக்கல், மலத்துடன் இரத்தம், கழுத்தில் சுளுக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொந்தரவு, அடிக்கடி ஏப்பம், வயிறு மந்தம், நெஞ்செரிச்சல், வாயில் புண்கள், வயிறு பெறுத்தல், சிறு குடலில் ஏற்படும் அஜீரணமே கெட்ட வாய்வுக்கு மூலகாரணம். மதியம் சாப்பிட்டவுடன் தூங்க நினைப்பவர்கள், சிறிது நேரமாவது மதியம் சாப்பிட்டவுடன் தூங்கியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சிறுகுடல் பாதிக்கப்பட்டவர்களே. அக்குள், அக்குள் மடிப்புகளிலும் மார்புப் பக்கவாட்டிலும் இவர்களுக்கு சதை விழும்.

வரும் நேரம்:
காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை

மற்ற சூழ்நிலைகள்:
இதயம், இதயமேல் உறை, சிறுகுடல், உடல் வெப்பம் இவையெல்லாம் வெப்பம் எனும் அடிப்படையை சார்ந்தவை இவைகளில் எவை பாதிக்கப்பட்டாலும் கீழ் குறிப்பிட்ட இடத்தில் சிகிச்சை அளித்தாலே போதும் இன்ஷா அல்லாஹ். சிறுகுடல் பாதிப்பால் வரும் ஹார்ட் அட்டாக் மதியம் 1 மணியிலிருந்து 3 மணிக்குள் வரும். இதயத்தால் பாதிப்பு ஏற்பட்டால் காலை 11 முதல் மதியம் 1 மணிக்குள் வரும். இதய மேல் உறையால் பாதிப்பு ஏற்பட்டால் இரவு 7 முதல் 9 மணிக்குள் வரும், உடல் வெப்பத்தால் (Triple Warmer) பாதிப்பு ஏற்பட்டால் இரவு 9 மணியிலிருந்து இரவு 11 மணிக்குள் வரும். இவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்:
சுண்டு விரலையும் மோதிர விரலையும் உள்ளங்கை பக்கம் மடக்குங்கள் உள்ளங்கையில் விரல்களுக்கு அருகிலிருக்கும் ரேகைக்கு ம் நடுரேகைக்கும் இரண்டு விரல்களுக்கும் இரண்டு ரேகைக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் சிறிய இடத்தில் அழுத்தம் கொடுத்து ஆட்காட்டி விரலால் கசக்கி விடுங்கள்.

வயிறு (Stomach) மண்ணீரல் (Spleen) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

வயிறு:

அல்சர், வாய்வுத் தொல்லை, நாக்கு மஞ்சளாக மாறும், பற்களில் இரத்தக் கசிவு, கால் வலி, வாந்தி, முகவாதம், தொண்டை வறட்சி, இரத்தக் கசிவு நோய், கண் கீழ் இமை துடிப்பு, முகத்தில் தோன்றும் நரம்புவலி, வயிற்றுப் பொறுமல், பசியின்மை, கெட்ட கனவுகள், உணவிருந்தும் சாப்பிட முடியாமல் போவது போலவும் கனவுகள் உண்டாகும்.

மண்ணீரல்:

உடம்பில் அதிக எடை கூடுதல், அடிவயிற்று வலி, நாக்கில் ஏற்படும் விறைப்பு, மற்றும் வலி, வாய்வுகளால் ஏற்படும் வலி, மஞ்சள் காமாலை, வாந்தி, உடல் பலவீனம், உடல் பாரமாகத் தெரிதல், கால் பகுதிகளில் ஏற்படும் வீக்கம், வலி, காலை 10 மணிக்கு தூக்கம் வந்து அசத்தும், சாப்பிட்டவுடன் தூங்கச் சொல்லும் சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும், தூக்கத்தில் இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கும், இடுப்பில் பக்க வாட்டில் மடிப்புகளுடன் சதை உண்டாகும்.

வரும் நேரம்:
காலை 7 மணியிலிருந்து 11 மணி வரை

மற்ற சூழ்நிலைகள்:
சாப்பிடும் போது, அளவுக்கதிகமான மனவேதனையின் போது

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்:
கை மணிகட்டு ரேகை சுண்டு விரல் பக்கம் முடியும் இடத்தின் அருகே ஆட்காட்டி விரலால் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். (உள் எலும்பின் பக்கம்).

நுரையீரல் (Lungs) பெருங்குடல் (Large Intestine) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

நுரையீரல் :

மூச்சுத் திணறல், இருமல், சளி, ஆஸ்துமா, கைகளில் கட்டை விரல் ஆரம்பித்து மார்பு மேல் முடியும் வலி, Frozen Shoulder என்னும் கைகளை அசைக்க முடியாத நிலை (பெண்களுக்கு அதிகம் வரும்), உடம்பில் உள்ள முடி கொட்டுதல் (தாடி, மீசை, புருவம் உள் உறுப்புக்கள்) மார்பகம் அடைத்தது போல் பாரமாக இருப்பது, தொண்டை காய்ந்து போதல், பேச முடியாத நிலை, டான்சில் கோளாறுகள், தோள்பட்டை வலிகள், தோல் வியாதிகள், அலர்ஜி, அக்குள், கழுத்து, தொடை பகுதிகளில் வியர்வை, 3 மணிக்கு விழிப்பு வந்து விடும், தூக்கத்தில் நெஞ்சை அடைப்பது போன்று மூச்சு முட்டுவது போல் இருக்கும், உட்கார்ந்து சாய்ந்தபடி தூங்குவார்கள், கைகளை அகற்றி வைத்து குப்புறப்படுத்துக் கொண்டு தூங்குதல்.

பெருங்குடல்:

அடிவயிற்றுவலி, மலச்சிக்கல், வயிற்றுப் பொறுமல், பல்வலி, வயிற்றுப் போக்கு, உதடு வறட்சி, நாக்கு வறட்சி, மூச்சுவிடச் சிரமம், தொப்புளைச் சுற்றிலும் வலி, தோல் வியாதிகள், இருமல், மூக்கு வழியாக இரத்தம் கசிதல், முகவாதம், தோள்பட்டை வலி, இடுப்புவலி, சைனஸ், நெஞ்சு எரிச்சல், புட்டமும் இடுப்பும் சேருமிடத்தில் சதை ஏற்படும்.

வரும் நேரம்:
காலை 3 மணியிலிருந்து 7 மணி வரை

மற்ற சூழ்நிலைகள்:
வேகமாக சிரிக்கும் போதும் மற்றும் ஓடும் போது

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்:
கை மணிகட்டு ரேகை ஓரத்திலிருந்து (சுண்டு விரல் பக்கத்திலிருந்து கீழ் நோக்கி மணிகட்டு பக்கம்) கீழ்நோக்கி 1½ இன்ஞ்சில் (பாதிக்கப்பட்டவரின் விரலில் அளவு எடுக்கவேண்டும்) ஆட்காட்டி விரலால் அழுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

சிறுநீரகம் (Kidney) சிறுநீர் பை (Urinary Bladder) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

சிறுநீரகம்:

பயம், சிறுநீரகக் கல், மூட்டு வலி, கால்களில் வீக்கம், முகத்தில் வீக்கம், முகம் கருப்பாக மாறுதல், பிறப்பு உறுப்பில் வலி, பல் வலி, கால் பாதங்கள் சூடாக இருப்பது, முதுகு வலி, நாக்கு உலர்ந்து விடுதல், தொண்டைப் புண், வீக்கம், மலச்சிக்கல், மூச்சுத் திணறல், தசைகள் சுருங்குதல், சிறுநீரகங்களில் ஏற்படும் வலி, தலைமுடி கொட்டுதல், மாதவிடாய்ப் பிரச்னைகள், ஆண்மைக் குறைவு, மனநோய், இரவில் வியர்த்தல், விதைகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம், கர்ப்பப்பை இறங்குதல், டான்சில், மார்பக அழற்சி, கழுத்தில் முன்புறம் சதை போடுதல், மாலை நேரத்தில் 5 மணிக்கு மேல் உடல் சோர்ந்து விடுதல், உடல் மிகவும் பலவீனமாய் மாறுதல், கைகள் நடுக்கம், இவர்கள் குப்புறப்படுத்துத் தான் தூங்குவார்கள். அப்போது தான் இவர்களுக்கு தூக்கம் வரும்.

சிறுநீர் பை:

சிறுநீர் பிரியாமை, சிறுநீர் அடக்க முடியாமை, இரு கண்களுக்கு நேர்மேல் பக்கமாக ஏற்பட்டு பின்னால் போகும் தலைவலிகள், கண் நோய்கள், இடுப்புவலி, முதுகுவலி, கழுத்துவலி, சிறுநீர்ப் பையில் கல், முழங்கை வலி, குதிகால் வலி, உடம்பு அசதி, பய உணர்ச்சி, இரண்டு புட்டங்களிலும் அதிகமான சதை போடுதல், தொடைகளின் பின்புறம் அதிக சதை போடுதல், அடிக்கடி மலம் கழித்தல், தூக்கத்தில் மாறி மாறி புரண்டு கொண்டிருத்தல், இவர்களின் கழுத்துக்குப் பின்புறம்சதை போடும்

வரும் நேரம்:
காலை 3 மணியிலிருந்து 7 மணி வரை

மற்ற சூழ்நிலைகள்:
உணவை மென்று சுவைத்து சாப்பிடாமல் மிக வேகமாக அப்படியே விழுங்குபவர்கள். மருந்து மாத்திரைகள் அதிகம் சாப்பிடுபவர்கள்.

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்:
கையை செங்குத்தாக (90 டிகிரி) மடக்கும் போது முழங்கைக்கு மேலே சுண்டு விரலிருந்து நேர் கீழே முழங்கைக்கு மேற்புறத்திலிருந்து வரும் கோடு முடியும் இடம்.

اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

Source : http://naturecuredr.com/articles.htm
Share:

உழைப்பே உயர்வு (குறும்படம்)

மொபைல் ஃபோன் வைத்திருப்பவர்களில் கேமரா இல்லாதவர்களே இல்லை எனுமளவுக்கு செல்பேசிக் கேமராக்கள் பலரிடமும் உள்ளன. ஆர்வத்தில் வாங்கி எதற்கு உபயோகிப்பது என்று தெரியாமல் பலரும் "சும்மா" வைத்து இருக்கிறார்கள்.

கீழுள்ள காணொளி குறும்படம்(DOCUMENTARY) வகையைச் சார்ந்தது. ஓரிரு நிமிடங்களிலேயே சொல்ல வந்த கருத்தை 'நச்' என்று சொல்லியிருக்கும் கான்செப்ட் அருமை!இதுபோன்ற குறும்படங்களை பதிவு செய்து வாய்ப்புள்ளவர்கள் தங்கள் திறமைகளைக் காட்டலாமே! அதிரை எக்ஸ்ப்ரஸ் நமதூர் சார்ந்த ஒலி/ஒளி வடிவிலான நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் திட்டத்தில் இருப்பதையும் இன்னேரத்தில் வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்
Share:

மயிலாடுதுரை-காரைக்குடி அகலப்பாதை திட்டத்திற்கு ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு.

தமிழகத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதைகளை அகலப்பாதையாக மாற்றும் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.355 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

விழுப்புரம்& காட்பாடி ரூ.15 கோடி. மானாமதுரை& விருதுநகர் ரூ.55 கோடி. திண்டுக்கல்& பொள்ளாச்சி& பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி& கோவை ரூ.65 கோடி. மயிலாடுதுறை& திருவாரூர்& காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி & அகஸ்தியம்பள்ளி ரூ.60 கோடி. மதுரை& போடி ரூ. 7 கோடி. திருச்சி& நாகூர்& காரைக்கால் ரூ.35 கோடி. கொல்லம்& திருநெல்வேலி, திருச்செந்தூர் மற்றும் தென்காசி& விருதுநகர் ரூ.65 கோடி. மதுரை&ராமேஸ்வரம் ரூ.8 கோடி. தஞ்சை& விழுப்புரம் ரூ.35 கோடி. கடலூர்& சேலம் ரூ.7 கோடி. திருச்சி& மானாமதுரை ரூ.3 கோடி.

நன்றி: தினகரன் நாளிதழ்((25/02/2010)(பக்கம்:7)
Share:

முழு உடல் பரிசோதனை . இஸ்லாத்தில் அனுமதி இல்லை !

விமான நிலையங்களில் வைக்கப்பட்டுல் முழு உடலை பரிசோதிக்கும் ஸ்கேனர் கருவி இஸ்லாமுக்கு எதிரானது, என அமெரிக்க முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரத்துக்கு வந்த விமானத்தை நைஜீரிய வாலிபர் ஒருவர் தன் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த வெடிமருந்தில் ஊசி மூலம் ரசாயனத்தை செலுத்திய போது புகை வந்தது. இவர் இந்த விமானத்தை தகர்க்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் உஷாரடைந்த அமெரிக்க நிர்வாகம், அனைத்து விமான நிலையங்களிலும் உடல் முழுக்க சோதனையிடும் ஸ்கேனர் கருவியை வைக்க ஏற்பாடு செய்தது. இதன் மூலம் பயணிகள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருக்கும் ஆயுதத்தையோ, போதை பொருளையோ எளிதில் கண்டு பிடித்து விடலாம்.

இந்த ஸ்கேனர் கருவி இஸ்லாம் கொள்கைக்கு எதிரானது, என அமெரிக்க இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது. "ஒரு ஆணின் அந்தரங்க உறுப்பை பெண்ணோ, அல்லது பெண்ணின் அந்தரங்க உடல்பாகங்களை ஆணோ பார்ப்பது இஸ்லாமுக்கு விரோதமானது. இந்த ஸ்கேன் கருவி ஆண், பெண் உடல் பாகங்களை தெளிவாக காட்டவல்லது. எனவே, இந்த கருவி இஸ்லாத்துக்கு எதிரானது' என, இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Share:

பள்ளிப் பாடத்திட்டத்தில் காவிச்சிந்தனைகள்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

"நன்மைக்கும் இறையச்சத்திற்கும் உதவி செய்துகொள்ளுங்கள்;
பாவத்திற்கும் பகைமைக்கும் உதவி புரியாதீர்கள். அல்லாஹ்வையே அஞ்சுங்கள். ஏனென்றால்,திண்ணமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்."
-அல் குர்ஆன்(5:2)அண்மையில்,"காவி மயமாகும்.." என்று தொடங்கிய கைபேசிக் குறுஞ்செய்தியும், அதனைத் தொடர்ந்து சில ஆட்சேபனைக்குரிய பாடநூல் பக்கங்களின் பிரதிகளும் எமது பார்வைக்கு வந்தன.

இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் பள்ளியின் பொது அறிவுப் பாட (G.K.) நூல்களில் இருக்கும் ஆட்சேபனைக்குரிய - இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாறான - சில தகவல்கள் நம் சகோதரர்களின் கவனத்துக்கு வந்து, அவற்றிற்கு எதிரான அவர்களின் இஸ்லாமிய உணர்ச்சியை உந்தச் செய்தன.

சின்னஞ்சிறு பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் இத்தகைய 'கல்விச் சாதனத்தை' நம்மில் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.

இதனை அறிந்த நம் இளைஞர் சமுதாயம் கொதித்தெழக் காத்திருந்தது! நாங்கள் அவர்களின் உணர்வைப் பாராட்டும் அதே வேளை, கல்விப் பணியில் கால் நூற்றாண்டைக் கடந்து நற்பணியாற்றிக் கொண்டிருக்கும்"இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் பள்ளி"யின் சேவைக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணம் எங்கள் மனத்தில் உதித்ததால், அதிராம்பட்டினப் பொதுமக்கள், பெற்றோர்கள் சார்பான ஆட்சேபனையை அடக்கமாகவும் முறையாகவும் அப்பள்ளியின் நிர்வாகத்திற்குத் தெரிவித்து, மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 20-2-2010 அன்று அப்பள்ளிக்கு நேரில் சென்றோம்.

பள்ளியின் தலைமை ஆசிரியை, மேலாளர் பேரா. அப்துல் காதர், நிர்வாகி ஹாஜா முஹைதீன் சார் ஆகியோர் முன்னிலையில் எமது ஆட்சேபனையை எடுத்துக் கூறினோம். அவர்கள் அனைவரின் கவனத்துக்கு அப்பால் நடந்து விட்ட தவற்றிற்காக வருத்தம் தெரிவித்தார்கள். மேற்கொண்டு இது போன்ற தவறுகள் நிகழாதபடிக் கவனம் செலுத்துவதாகவும் வாக்களித்தார்கள்.

இக்கல்வியாண்டு நிறைவடையப் போவதால், அடுத்த கல்வியாண்டிலிருந்து, இதுபோன்ற 'பாட நூல்' தங்களின் பாடத் திட்டத்தில் இடம்பெறாது என்றும் வாக்களித்தார்கள்.

எங்களின் முறையான எதிர்ப்புக்காக அவர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தார்கள். எதிர்காலத்தில் இமாம் ஷாஃபிப் பள்ளியின் இது போன்ற பாட நூல்களின் மீது எங்கள் கவனம் நிச்சயமாக இருக்கும்; தேவையானால், அதற்கான பங்களிப்பை வழங்கவும் நாங்கள் ஆயத்தமாயுள்ளோம் என்பதையும் முத்தாய்ப்பாக அவர்களுக்குக் கூறிவைத்தோம். வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

இத்தவற்றை எமக்கு எடுத்துக்காட்டிய இளைய சமுதாயத்திற்கு நன்றி! எமது உணர்வை மதித்து, தவற்றைத் திருத்திக்கொள்வதாகத் திறந்த மனத்துடன் வாக்களித்த இமாம் ஷாஃபிப் பள்ளி நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி!! வல்லாஹு வலிய்யுத் தவ்ஃபீக்.
---------------------------------------------------------------------------------------------
இம்முயற்சியில் பங்குபெற்றோர்: (1) அதிரை அஹ்மது (அபூ பிலால்) s/o. பாகிர் ஆலிம்சாஹிப் (மர்ஹூம்) (2) ஏ.கே. நிஜாமுத்தீன் s/o. அல்ஹாஜ் அப்துல்காதிர்.
Share:

பட்டுக்கோட்டையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி திட்டங்கள். தகுதியுடையோர் முயற்சிக்கலாமே. பள்ளிவாசல் நோட்டீஸ் போர்டில் வாய்ப்புள்ளவர்கள் இதை காப்பி எடுத்து வைக்கலாம்.நன்றி: Rajaghiri Gazzali

http://www.rajaghiri.net/

Share:

அதிரை இலவச விளம்பர வலைப்பதிவு


அதிரை சுற்று வட்டார பொதுமக்களுக்கு ஓர் இனிய நற்செய்தி. நீங்கள் வியாபாரம் செய்கிறீர்களா? அல்லது உங்களது புதிய பழைய பொருட்களை விற்க, வாங்க வேண்டி விளம்பரம் செய்ய எண்ணுகிறீர்களா? விளம்பரம் செலவில்லாமல் இருக்கவேண்டும் அப்படித்தானே?

நீங்கள் இணைய விளம்பரம் மூலம் உங்களது பொருளை விற்கலாம் அல்லது வாங்கலாம். இந்த வலைப்பதிவு இலவசமாக இதனை நீங்களாகவே செய்ய வழிவகுக்கிறது.

இந்த வலைப்பதிவில் எல்லாவிதமான பொருட்களும், நிலம் வாங்க, விற்க, வகுப்புகள் பற்றிய அறிவிப்பு, புக் பைண்டிங், எலக்ட்ரீசியன் முதல் கொத்தனார் வரை, சகல விதமான தேவைகளுக்கும் இந்த வலைத்தளத்தில் தங்களது விளம்பரங்களைப் பதிந்துகொள்ளலாம். உங்களுக்கு வலைப்பதிவில் பதியும் முறை தெரியாவிட்டால் எங்களது முகவர்களை அனுகி பதியலாம். அவர்கள் இதற்காக சிறிய தொகை வசூலிக்கலாம். (விளம்பரத்திற்கான கட்டணம் பிறகு அறிவிக்கப்படும்). உங்களது விளம்பரம் தனியாக தெரிய அதற்கு நாங்கள் சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்க இருக்கிறோம். இதன் மூலம் உங்கள் விளம்பரம் சில நாடகளுக்கு அதிக பார்வையில் இருக்கும்.

நீங்களாகவே இங்கு பதியும் பட்சத்தில் அவை இலவசமாகவும் மற்றவர்கள், அல்லது முகவர்கள் மூலம் பதியும் போது அவை கட்டணம் செலுத்தி பதியலாம்.

உங்கள் ஆலோசனைகள், முகவர்களாக விருப்பம் உள்ளவர்கள் மற்றும் விளம்பரங்களை பதிய adirampattinam_at_gmail.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

http://adiraiclassifieds.blogspot.com
Share:

கம்பன் எக்ஸ்ப்ரஸ் கனவு எக்ஸ்ப்ரஸ் ஆகுதோ?

2010-11-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்: வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 3,000 கோடி தேவை!

சென்னை,பிப்.16: 2010-11-ம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில்,ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ. 3,000 கோடி நிதி ஒதுக்கீடு தேவை என தெற்கு ரயில்வே கோரியுள்ளது.


இதற்கான திட்டமதிப்பீடுகளுடன் சிறப்பு கருத்துருக்களை ரயில்வே துறைக்கு தெற்கு ரயில்வே அனுப்பியுள்ளது. வரும் ஆண்டில் நிறைவேற்ற தேர்வு செய்யப்பட்டுள்ள முக்கிய திட்டங்களின் விவரம்:

அகலப் பாதை திட்டங்கள்: இதில் அகலப் பாதைப் பணிகளுக்காக (293 கிலோ மீட்டர்) ரூ. 606 கோடியில் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2-வது மற்றும் 3-வது அகலப் பாதைப் பணிகளுக்காக (87 கிலோ மீட்டர்) ரூ. 366 கோடி ஒதுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேபோல புதிய அகலப் பாதைப் பணிகளுக்காக (61 கிலோ மீட்டர்) ரூ. 280 கோடி ஒதுக்கவும் கோரப்பட்டுள்ளது. இவை உள்பட ரயில்வே கட்டுமானப் பணிகளுக்காக மட்டும் ரூ. 1,530 கோடி நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது.

ரயில் பாதைகள், பாலங்கள், சிக்னல்கள், மின் இணைப்புகள், பணிமனைகள் ஆகியவற்றைப் பராமரிக்கும் பணிகளுக்காக ரூ. 1,470 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான வசதிகள்: ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குடிநீர், பிளாட்பாரம் விரிவாக்கம், ஓய்வறைகள், இணைப்புச் சாலைகள், இருக்கை வசதி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுக்காக ரூ. 150 கோடியில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ரயில்வே பட்ஜெட்டில் இந்தப் பணிகளுக்காக ரூ. 80 கோடி மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

நிதியில்லாமல் முடங்கிய திட்டங்கள்: கடந்த பட்ஜெட்டில் தமிழகத்தின் முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாக இருந்தது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் நிலுவையில் உள்ளன.

இதில் ரூ. 498 கோடி மதிப்பீட்டிலான இரண்டாவது அகலப் பாதை திட்டங்கள் நித்திரையில் உள்ளன. இதன் விவரம்:

செங்கல்பட்டு- விழுப்புரம் (53 கி.மீ.) எண்ணூர்- அத்திப்பட்டு (6 கி.மீ.) ஆகிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதே போல ரூ. 613 கோடியிலான, சேலம்- நாமக்கல் (51 கி.மீ.), நாகூர்- காரைக்கால் (10 கி.மீ.) ஆகிய திட்டங்களும் முடங்கியுள்ளன.

இவை தவிர, ரூ. 639 கோடியிலான திருநெல்வேலி- தென்காசி (72 கி.மீ.), மயிலாடுதுறை- திருவாரூர் (38 கி.மீ.), மானாமதுரை- விருதுநகர் (67 கி.மீ.), பாலக்காடு- பொள்ளாச்சி (58 கி.மீ), திண்டுக்கல்- பழனி (58 கி.மீ.) ஆகிய அகலப் பாதை திட்டங்களுக்கும் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை.

இதனால், "கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத' நிலையில் இத்திட்டங்கள் "பெயரளவில்' ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதோடு நிற்கின்றன.

அனுமதியை எதிர்நோக்கியுள்ள திட்டங்கள்: சென்னை கடற்கரை-கொருக்குப்பேட்டை 3-வது அகலப் பாதை (ரூ. 53.60 கோடி).

சென்னை கடற்கரை- அத்திப்பட்டு 4-வது அகலப் பாதை (ரூ. 103.25 கோடி).
மதுரை- போடிநாயக்கனூர் அகலப் பாதை (ரூ. 200.90 கோடி).

திருச்சி- தஞ்சாவூர்- நாகூர்- காரைக்கால் அகலப் பாதை மற்றும் நாகப்பட்டினம்- வேளாங்கன்னி, நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி (திருத்திய மதிப்பீடு ரூ. 535.13 கோடி), திருவாரூர்- திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி அகலப் பாதை (ரூ. 574 கோடி) ஆகிய திட்டங்கள் ரயில்வே வாரியத்தின் அனுமதி பெற அனுப்பப்பட்டுள்ளன.

எனினும், இந்தத் திட்டங்கள் ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்கப்படுவது மட்டுமன்றி தேவையான நிதியையும் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

தகவல்: தினமணி நாளிதழ்
நன்றி. அன்சாரி

Share:

வாழ்க்கைத் துணைவி

உங்கள் வாழ்க்கைத் துணைவி

هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن

அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).

திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்!நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .

அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும்;, சுகத்தையும்;, துக்கத்தையும்;, கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.

நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.

உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி.

உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.

சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!

“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187).

எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.

இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது

وَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا

மேலும்,அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (சூரா அல்-நஹ்ல் 16:72)

அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).

ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.

நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.
திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.

பெருமானார் நபி (ஸல்) அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா(ரலி) வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள்.

மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.

நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும்உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.

ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா?

அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி (ஸல்)அவர்கள் வாழ்த்தியிருக் கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.

எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விசயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.

உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்.

இறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.
விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.

நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.
சூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:

ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ

நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் ( என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).

இந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்) எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்:

இருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.

தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.

அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி (ஸல்..) அவர்களின் வாழ்விலும் நிச்சயம் மனிதாபிமானம் நீடுழி வாழ அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு.
Share:

பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சனை

முன்பு நான் எழுதிய விசயம்தான் என்றாலும்
எப்போதும் தேவைப்படும் விசயம் என மறுபதிப்பாகிறதுபெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சனை
நம் ஊரில் உள்ள சில வெட்டிஆபிசர்கள் ஏற்படுத்திய சில பிரச்சினைகளில் உண்மையிலேயே மிகப்பெரியது "திருமண சடங்குகளில் உள்ள வழமை என்ற போர்வையில் பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சனையும் ,இன்ன பிற கொசுரு சடங்குகளும்'
20 வருடங்களுக்குமுன் நான் கேள்விப்படாதது இப்போது உள்ள பால்குடம் சமாச்சாரம்.
சில தெருக்களில் வீடு / நகை / வெளிநாட்டு விசா என்று வரதட்சிணைக்கு "செல்லப்பெயர்" வைத்திருப்பார்கள்.
இப்போது நம் ஊரில் பட்டம் படித்தவர்களுக்கு பஞ்சம் இல்லை.ஆனால் இந்த நடை முறை வாழ்ககையில் எதை தடுக்க வேண்டும் எதை ஆதரிக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கவில்லை என்றால் அந்த படிப்பு ஒரு அஃறினைக்கு சூட்டப்படும் பட்டயம்.
படிததவர்கள் பெண் வீட்டில் அவர்கள் படித்த படிப்புக்கு பெண்ணை பெற்றவரை ஏழையாக்குவது எந்த விதத்தில் ஞாயம் என்று தெரியவில்லை
இது போன்ற இஸ்லாத்தில் இல்லாத விசயங்களை அறிமுகப்படுத்துபவர்கள் பெரும்பாலும் ஊரில் உட்கார்ந்து கொண்டு "தான் ஒரு அறிவுஜீவி" / " நான் பார்க்காத தேவைகளா?:" / எனக்கு எல்லாம் தெரியும் என்று பில்ட் அப் கொடுக்கும் "வெட்டி ஆபிசர்கள்". இவர்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினையே பெரும் பிரச்சினையாக இருக்கும், ஆனால் இவர்கள் ஏதோ பல விசயங்களை இவர்கள் அறிவை [!] முன்னிறுத்தி ஒரு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மாதிரி தீர்த்து வைத்தது போல் பேசுவது கொடுமை.
இந்தமாதிரி ஆட்கள் எல்லாதெருவிலும் இருக்கிறார்கள்.

இதில் சில பெண்களும் சலைத்தவர்கள் அல்ல, இவரகள் பெரும்பாலும் தன்னை பிசியாக வைத்திருக்க, அடிக்கடி விருந்து சாப்பிட இதுபோன்ற வழமைகளை உருவாக்கிவிட்டர்கள்.
நாம் நம் ஊரில் 26 பள்ளிவாசல் உள்ள ஊர் , கல்லூரி, பள்ளிக்கூடம் அதிகம் உள்ள முஸ்லிம் சென்டர் என்று வாய் கிழிய பேசி புண்ணியம் இல்லை , மேற்குறிப்பிட்ட எதுவும் நம்மை திருத்தி ' அதிராம்பட்டினமா?...அங்கு வரதட்சிணை பற்றி பேசினாலே அடிக்க வருவார்கள் ..என்று பேசும் அளவுக்கு நம் ஊரை மாற்றி அமைக்க வேண்டும். [கொஞ்சம் பேராசைப்படுகிறேனா?..]. இது கொஞசம் எழிதல்ல என்று எனக்கு தெரியும்..ஆனால் நிச்சயம் முடியாதது அல்ல. அதற்கும் காரணம் இருக்கிறது நம் தமிழ்நாட்டிலேயே சில கிராமங்கள் சாராயத்தை , வரதட்சினையை, கந்து வட்டியை உள்ளெ நுழைய விடாமல் தடுத்து சாதனை புறிந்திருக்கிறார்கள் [ இதில் பெரும்பாலும் படிக்காத ஊர்பெரியவர்கள் அந்த சாதனைக்கு மத்திய / மாநில அரசு பதக்கம் பெற்றுக்கொள்வதை மீடியாவில் பார்க்கும்போது நம் ஊர் ஞாபகம் வரும்]
நாம் இப்படி "பெண் வீட்டில் பிச்சை எடுப்பது" தவறு என்று சொன்னால் இவர்கள் தரும் பதில் "நீ இன்னைக்கு சொல்லிட்டு நாளைக்கு ப்ளேன் ஏறி போய்டுவேப்பா...ஊருக்கு யாரு பதில் சொல்றது" என்று கேட்பார்கள். தற்சமயம் யாரோ ஊர்மானத்தை காப்பாற்றும் வேலையை இவர்களிடம் கொடுத்த மாதிரி.
சரி இது இப்படியே இருக்கட்டும். இந்த மார்கத்தில் இல்லாத இந்த அவலத்தை நம் ஊரை விட்டு எப்படி அகற்றுவது என்று இங்கு comments அல்லது கட்டுரையாகவோ இதை படிப்பவர்கள் எழுதுங்கள். வருங்காலத்தில் பெண்ணை பெற்ற எத்தனையோ பேர் நிம்மதியாக வாழ நீங்கள் வழி செய்ததாக இருக்கும்.
ZAKIR HUSSAIN
Share:

குவைத்தில் வேலை

குவைத் நாட்டில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார், அரியலூர் மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெரம்பலூர், அரியலூர் ஆட்சியர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குவைத் நாட்டின் தொலைத் தொடர்புத் துறை திட்டப் பணிகளுக்கு பணியாளர்கள் பெருமளவில் தேவைப் படுகிறார்கள். இந்தப் பணிக்கு 10-ம் வகுப்பு வரையில் படித்து, ஓராண்டு அனுபவம் உள்ள 40 வயதுக்குள்பட்டவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் இலவசமாக விசா, உணவு, விமான டிக்கெட் மற்றும் இலவச தங்கும் வசதியுடன் இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். மேற்காணும், தகுதி மற்றும் அனுபவத்துக்குள்பட்டவர்கள் தங்களின் விண்ணப்பதுடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் இரண்டு வண்ணப் புகைப்படத்துடன் எண்.48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை- 600 020 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விவரங்கள் அறிய 9444690026, 9381800181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல்
ஜெய்னுல் ஹூசைன்
குவைத்
Share:

(கள்ளக்) காதலர் தினம்

இன்றைய உலகம் பல முன்னேற்றங்களையும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினையும் அடைந்துள்ளது. குறிப்பாக அச்சு, இலத்திரனிய ஊடகங்களில் அபிவிருத்தி ஏராளமான மாற்றங்களையும் தாக்கங்ளையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊடகங்களின் விரிவாக்கத்தால் நன்மையையும், பயனையும் அடையும் நாம் சீரழிவுகளையும் மற்றும் மனிதநேயம், மனிதாபிமானத்தையும் தொலைத்து நாகரீகம் என்ற வார்த்தையில் அநாகரிகமாய் அடைய விட்டு வைத்து இருப்பதை நடைமுறை வாழ்க்கையில் நாம் காண்கிறோம்.

தவறான வாழ்க்கை முறையிலிருந்து கௌரமான மதிக்கத்தக்க ஒரு சூழலை உருவாக்க வேண்டிய கடப்பாட்டுடனும் கடமையுடனும் இருக்கிறோம்.

இன்றைய காலக்கட்டத்தில் சீர்படுத்த வேண்டிய சீரமைக்க வேண்டிய முக்கியமான ஒன்று நாம் இளைய சமுதாயம். ஆம்.. இன்றைய இளையவயதினர் குறிப்பாக மாணாக்கர்கள் அறிவுபூர்வமாய் ஆக்கப்பூர்வமாய் செயல்படாமல் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் தீய விளம்பரங்களுக்கும் அடிமைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

இதற்கு உதாரணமாய் ஏராளமான விஷயங்களை நாம் காணலாம். அதில் பிப்ரவரி 14 காதலர்களின் களியாட்ட கொண்டாட தினமான காதலர்கள் தினத்தினை (Valentine’s Day) கூறலாம்.

எந்த காதலரும் மறக்காத மற்றும் மறக்க முடியாத காத்து காத்து தவம் கிடக்கும் தினமாக அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நமக்கு ஜனவரி என்றால் புதுவருடம் பிறப்பது சர்வ சாதாரணம். ஆனால் காதலர்களோ இன்னும் 45 நாள்கள் தான்.. காதலர்கள் தினம் நெருங்கி விட்டது. இனி களத்தில் இறங்க வேண்டியது தான் என்று கொண்டாடத்திற்கான ஆயத்தங்களிலும் கற்பனைகளிலும் திட்டம் தீட்டுவதிலும் மூழ்கி விடுவார்கள்.

இந்த நேரமாக பார்த்து கையிலும் காசு இல்லை பரிசுப்பொருட்கள் புதிய ஆடைகள் பார்ட்டிக்கென்றும் இன்னும் எவ்வளவு தேவைகள் இருக்கிறது என்று அங்கலாய்த்து கொள்வார்கள்.

வீட்டில் கொடுக்கும் பாக்கெட் மணியை மிச்சம் பிடிப்பது, வீட்டில் உள்ள பொருட்களை, பணத்தை திருடுவது நண்பர்கள் உறவினர்கள் என்று எல்லோரிடமும் வெட்கப்படாமல் கடன் வாங்குவது என்று பரப்பரப்பாக சுறுசுறுப்பாக ஒடித்திரிவார்கள். எங்கேடா.. பணம் கிடைக்கும்.. யாருடைய தலையினை தடவுவது என்ற திண்டாடங்களும் கூடவே கொடி பிடிக்கும்.

அடுத்து, இத்தினத்தில் (காதலன் காதலியை) சந்திக்கக்கூடிய இடங்களை பூந்தோட்டம், கடற்கரை, விடுதிகள், காதலுக்கு ஆதரவான நண்பர்கள் உறவினர்கள் வீடுகள், நடுத்தெரு, சந்து பொந்து என்று பட்டியல்கள் நீளமாக போகும். கண்டிப்பாய் சந்திப்பதாக உறுதி மொழியும் எடுத்துக்கொள்வார்கள். இதற்காக பாடசாலை பகுதி நேர வகுப்பு இன்னும் சொந்த பந்தங்களின் வீட்டு விசேஷங்கள் என்று அனைத்திற்கும் கட் அடிப்பார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி சமாளித்து வீட்டை விட்டு வெளியேறுவது, காதலை எதிர்க்கும் நண்பர்களிடம் இருந்து என்னென்ன கதைகள் பொய்கள் சொல்லி அன்றைய தினம் அவர்களிடமிருந்து தனிமை படுவது என்றெல்லாம் திட்டம் தீட்டுவார்கள்.

வேறு எந்த காரியத்திற்கு இப்படி வேகமாய் விவேகமாய் செயல்பட மாட்டார்கள் இதுவெல்லாம் எதற்கு வாழ்க்கையே திண்டாட்டத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் காதலர் தின கொண்டாட்டதிற்கு தான். இளம் வயது பயம் அறியாது அதன் வீனையும் வீபரீதமும் அறியாது. கேட்டால் நாங்கள் நாகரீகம் பெற்றெடுத்த வாரிசுகள் டீன் ஏஜ்கள் என்று திரை கதை வசனம் பேசுவார்கள்.

மேலோட்டமாய் பார்த்தால், இது காதலர்களுக்கு வருடத்தில் ஒரு நாள் மகிழச்சியாய் சந்தோஷமாய் உல்லாசமாய் இருக்க சுதந்திரம் கொடுக்க தான் வேண்டும் என்று தோன்றும். ஆனால் இந்த காதலிக்கு கொடுக்கும் ரோஜா மலருக்காக அல்லது பரிசுப்பொருட்களாக சில சந்தர்ப்பங்களில் திருட, பொய் சொல்ல இளவயதிலேயே கையேந்தி கடன் கேட்க காதலன் தூண்ட படுகிறான். இதனால் எற்படும் அவமானத்தையும் அபகிருத்தியையும் மோசமான கெட்ட பழக்கவழக்கங்களையும் துச்சமென நினைக்கிறான். காதலிக்காக எதையும் செய்வேன் என்று சபதம் எடுக்கிறான். இதனால் பள்ளிக்கூடம் படிப்பும் எதிர்காலமும் பழக்க வழக்கங்களும் பாழ் பட்டு போவதை காதல் போதை எதையும் சிந்திக்க விடுவதில்லை. என் இதயம் உயிர் ஏன்.. நானே அவள் தான் என்ற காதலி கைவிட்டு காதலுக்கு குட்பை சொல்லும் வரைக்கும் பேதையில் கொண்ட போதை இறங்குவதில்லை. புத்தி தெளியும் போது காதலி மட்டும் அல்ல தன்னை தவிர தன்னுடன் இருந்த அனைத்தும் தன்னை விட்டு வேகுதூரம் கடந்து போய் இருப்பதை உணருவான்.

இந்த ரோஜா மலருக்காக பரிசுக்காக காதலுடன் கொஞ்சிகுலவா வீட்டில் ஆயிரம் அரிய பெரிய பொய்களை சொல்லி ஏமாற்றி விட்டு வரும் இக்கன்னி பெண்களின் நிலைமை தான் முக்கியமாய் சிந்திக்கப்பட வேண்டியது.

பெண்கள் இயற்கையிலேயே இரக்க சுபாவம் அன்புள்ளமும் கொண்ட எதனையும் தூர நோக்கம் இன்றி நம்பி விடும் தன்மை உடையவர்கள். இது ஒரு பலவீனம் என்றே சொல்லலாம். அதனை இந்த ஆண்கள் குறிப்பாக காதலன் இந்த காதலர்கள் தினத்தினை பயன் படுத்தி கொள்கிறான்.

காதலர்கள் தினந்தன்று காதலியின் தலையில் அடித்து நீ தான் இறுதி மூச்சு உள்ளவரை என் மனைவி என்று. இதனை ஏதோ முனிவன் சொன்ன வேத வாக்கு என்று நம்பி இந்த பெண்களும் நம்பி விடுகின்றனர். வார்த்தைகளால் வலைப்பின்னி தந்திரமாய் இப்பெண்களை அதில் சிக்க வைத்து விடுகிறார்கள்.

நண்பர்கள் எல்லோரும் காதலர்கள் தினத்தன்று ஒரு இடத்தில் கூடுவார்கள். அங்கு மேலைத்திய பாணியில் உல்லாச பார்ட்டி நடைபெறும். மதுக்கும் பஞ்சம் இருக்காது. கூட்டத்துடன் குடிப்பார்கள். இதில் கண்றாவி என்னவென்றால் இவன் காதலி அவனுடனும் அவன் காதலி இவனுடனும் சல்லாப்பிப்பார்கள். இது தான் பரஸ்பர நட்பாம். காதலர்கள் தினத்தினை என்ஜாய் பண்ணுகிறோம் என்று சொல்லி பல பெண்கள் கற்பினை தரைவார்த்து விட்டு ஒன்றும் தெரியாத அப்பாவியை போல் வீட்டிற்கு வருவார்கள்.

நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கி இருங்கள். முந்தைய அறியாமைக்காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதை போன்று வெளிப்படுத்தி திரியாதீர்கள்.. திருக்குர்ஆன் 33:33

இந்த வருடம் இவளுடன் கூத்து அடிக்கும் இவர்கள் அடுத்த காதலர்கள் தினத்திற்கு இன்னொருத்தியுடன் இவர்களுக்கு முன்னேலேயே கும்மாளம் அடிப்பதை இந்த கன்னி பெண்கள் கண் கூடாக கண்டும் விளக்காமல் போவது தான் புரியாத புதிராக இருக்கும்.

காதல்..
பொழுது போக்கு,
காதலி..
தேர்வு செய்யும்
சந்தையே
காதலர்கள் தினம்..

என்ற கொள்கையோடு காதலர் தினத்தன்றே காலை மாலை இரவு என்று நேரத்திற்கு ஒரு காதலியோடு கூடிக்கூத்தடிக்கும் காதலர்கள் எத்தனையோ பேர்கள்..!..?

கன்னியருக்கு
காதல் போதை
கற்பு
கரைபடியும் வரை தான்..

பின்னர் வாழ்க்கை நிர்கதியாய் போய் கேள்விக்குறியானப்பின் அழுதும் ஆவேசப்பட்டும் ஆர்ப்பரித்தும் அர்த்தம் இல்லை. நல்லொழுக்கம் இல்லைமாய் தான் இதற்கு தான்.

நபியே..! உம்முடைய மனைவியருக்கும் உம்முடைய புதல்வியருக்கும் விசுவாசிகளின் பெண்களும் அவர்கள் தங்கள் தலைமுந்தானைகளை தாழ்த்திக்கொள்ளுமாறு நீர் கூறுவீராக..! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியபடுவதற்கு இது மிக நெருக்கமானதாகும், அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யமாட்டார்கள். திருக்குர்ஆன் 33:59

பெற்றோர்களே..! நீங்கள் அன்பாய்.. ஆசையாய்.. எதிர்கால கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடன் வளர்க்கும் தன் பிள்ளையின் வாலிப பருவத்தை மிகவும் உன்னிப்பாய் அவதாணியுங்கள். தீடீரென அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை விசாரியுங்கள். காரணத்தினை ஆராய்ந்து கண்டு பிடியுங்கள்.

இன்றைய அச்சு இலத்திரனியல் ஊடகங்களும், பணத்தாசை பிடித்த வியாபாரிகளும் சேர்ந்து இளம் வயதினரின் வாழ்க்கையினை சீரழிப்பதுடன் சமூக சீர் கெட்டிற்கு வழிகோல்கிறார்கள்.

இளம் வயதினர் இவர்களை போல் உள்ளவர்களால் சரியான பாதை இன்றி நேர்த்தியான வழிகாட்டல் இன்றி இவர்களின் வக்கீர எண்ணங்களுக்கு ஆபாச விளம்பரங்களுக்கும் ஆசைகளுக்கும் அடிமைப்பட்டு போகிறார்கள்.

பெற்றோர்களும், ஆசிரியர்களும், மார்க்க அறிஞர்களும் இக்கயவர்களின் தீய விளம்பரங்களை பற்றியும் விழ்ப்புணர்வுடன் தெளிவுப்படுத்த வேண்டும். மேலும், பெண்களை காதலர் தினத்தன்று வெளியே எங்கும் அனுப்பாமல் வீட்டிலேயே முழு நேரமும் இருக்கப்படியாக பார்த்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் பாடசாலைக்கோ பகுதி நேர வகுப்புக்கோ மற்ற இடங்களுக்கோ போகமாமல் விட்டாலும் பிரச்சனை இல்லை. ஏனென்றால் வெளியே சென்று வீட்டுக்கு கொண்டு வரும் அவமானத்தையும் அசிங்கத்தையும் விட வீட்டிலேயே இருப்பது சிறந்தது. தொலை பேசி உட்பட்ட இவர்கள் தொடர்புக்கொள்ளக்கூடிய வழிகளை பற்றியும் எச்சரிக்கையாக இருங்கள்.

தன் பிள்ளைக்கு கெட்ட வந்து விட்டால், திருமணம் முடித்துக்கொடுப்பது மிக சிரமமாகவும் சிக்கலாகவும் போய் விடும். மானம் போனால் திரும்பி வருமா..? வாழ்க்கை முழுக்க கண்ணீரோடும் ஏக்கத்தோடும் தாக்கதோடும் பிள்ளை வாழாவேட்டியாய் இருப்பது உங்களுக்கு சந்தோஷமா..? சில பெற்றோர் சீதனம் இன்றி திருமணம் முடிப்பது என்றால் காதல் தான் ஒரே வழி என முட்டாள் தனமான முடிவோடு இருக்கிறார்கள். இந்த காதலால் வாழ்க்கையை தொலைத்த எத்தனை பேர்களை நாம் தினம் தினம் சந்திக்கிறோம்.. நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டால் பின்னர் வாம் எதிர் பார்த்து இருந்த நம்பி இருந்த வாழ்க்கையினை அமைந்துக்கொடுப்பது என்பது கானல் நீராகி விடும்.

அதிகமான பெற்றோருக்கு இந்த காதலர் தினம் எப்போது என்றோ, அப்படி என்றால் என்னவோன்றோ தெரிவதில்லை. இன்றைய நாகரீகம் அறிமுகப்படுத்தி இருக்கும் காதலர்கள் தினம் 'இளவயது பெண்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் தினம்'.

ஆதிக்க ஷைத்தான்கள் உங்கள் பிள்ளைகளை வழிகெடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பிப்ரவரி 14ம் நாள் அன்று.. பெற்றோர்களே.. நீங்கள் விழிப்போடு இருங்கள்.

(மனிதர்களே..) நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் தீடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக, உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களின் பக்கம் இறக்கி வைக்கபட்ட மிக்க அழகானவற்றை பின்பற்றுங்கள். திருக்குர்ஆன் 39:55

நன்றி : இதுதான் இஸ்லாம்.காம்(www.idhuthanislam.com)
மூலம் : http://www.idhuthanislam.com/podu1/kaadalday-2008.htm
Share:

மரண அறிவிப்பு-ஷைக் தம்பி மரைக்காயர் (65)-CMP லேன்

நமதூர் CMP லேனை சார்ந்தவரும் சோத்துபானை வீட்டை சார்ந்தவரும் ஆம்புலப்பாவீட்டில் மனம் முடித்தவரும் சென்னை அஹமது அன் கம்பெனியில் நீண்ட நாட்கள் பணியாற்றி ஒய்வு பெற்று, சமீப நாட்களாக உடல் நலம் குன்றி வீட்டில் இருந்த சென்னையில் மரைக்காயர் என்று அழைக்கப்பட்ட ஷைக் தம்பி மரைக்காயர் (65) அவர்கள் இன்று அவரது மகளாரின் CMP லேன் (நிஜாம் இடியாப்ப மாவு மில்) இல்லத்தில் காலமாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியூன்.அன்னாரின் மஹ்ரத் நல் வாழ்விற்கு எல்லாம் வல்ல ஏகனிடம் பிரார்த்திப்போமாக. ஆமின்.

தகவல்: அதிரை புதியவன்
Share:

மண்குதிரையை நம்பிய முஸ்லிம் அபலைப்பெண் (காணொளி)

தங்கள் பெண் பிள்ளைகளுக்காக வாலிபத்தை அடகு வைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கஷ்டப்படும் பெற்றோர்களைப் பற்றிய கவலையின்றி, முன்பின் அறியாதவர்களை நம்பி வீட்டை விட்டு பணம்,நகைகளுடன் ஒட்டிப்போய் சொந்த-பந்தங்களை இழந்து,இளமையும் தொலைந்தபிறகு நம்பி வந்தவனால் கைவிடப்படும் எத்தனையோ பெண்களின் நிலையை அறிந்த பின்னரும் இளம்பெண்களில் சிலர் எதார்த்தம் அறியாமல் வீட்டையும் (ஆம்! நமதூரில் பெண்ணுக்குதானே வீடு!) பெற்றோரையும் துறந்து கஷ்டப்படுகிறார்கள்.மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினால் வாழ்க்கை என்னாகும், எத்தகைய கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை தினமலர் நாளிதழ் வசதியாக மறைத்து சாதனைப் பெண்கள் என்று ஒரு முஸ்லிம் சகோதரியின் சோகக் கதையை காணொளியாக வெளியிட்டு உள்ளது.

வேண்டாம் சகோதரிகளே! இனியும் உங்களுக்காக வாழும் உங்கள் சொந்தபந்தங்களை நம்பாமல் உங்கள் புறஅழகை மட்டுமே விரும்பும் முன்பின் தெரியாதவர்களை நம்பி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்.

நன்றி: தினமலர்.காம்
Share:

அதிரை சுற்றும் வாலிபன்

ஒமராக்கா எங்கே ரொம்ப நாளா ஆளையேக் காணோம்? - காதரு

அவசரமாக சைக்கிளில் போயிக்கிட்டு இருந்த ஊர்சுத்தி உமர் சடக்குன்னு ப்ரேக் அடிச்சு நிறுத்தி, அடடே காதரு நல்லா ஈக்கிரியாடா? போன வருசம் செக்கடித்தெரு விருந்துல ஒரே சஹனுல சந்திச்சதுக்கப்புறம் இப்பதான் சந்திக்கிறோம்னு நினைக்கிறேன்.

ஆமா காக்கா. உங்களோட சஹன்ல உட்கார்ந்து சாப்புட்டாத்தான் சாப்ட்ட மாதிரி ஈக்கிம். இப்ப எங்கே விருந்துக்கா போயிக்கிட்டு இருக்கிய?

ஆமாடா காதரு. ரொம்ப வற்புறுத்திக் கூப்புட்டாங்க. நீயும் வராயிருந்தா சைக்கிள் கேரியர்ல ஏறிக்க ஒன்னா போயிடலாம்.

சரிகாக்கா. இவ்ளோ வற்புறுத்தி கூப்புடுறிய வரலேன்னா கோச்சுக்கிடுவிய.அனேகமாக எனக்கு கூப்பாடு வந்திருக்கும்னுதான் நினைக்கிறேன்.வாங்க போகலாம்.எல்லாம் நம்ம தாயபுள்ளைங்கதான். காக்கா நான் சைக்கிள ஓட்டுறேன். நீங்க பின்னாடி உட்கார்ந்துக்கிடுங்களேன்.

பின் வீலுல காத்து கம்மியா ஈக்கிதுடா. முன்னாடி நீ உட்கார்ந்துக்க. நானே ஓட்டுறேன். மணல் வந்தா எறங்கி தள்ளு.

அப்புறம் என்னா காக்கா இண்டர்நெட்டுக்ல நம்ம அதிரை எக்ஸ்ப்ரஸ்லாம் பார்க்கிறியலா?

ரொம்ப நாளைக்கி அப்புறம் அதிரை எக்ஸ்ப்ரஸுக்கு வந்து பார்த்தா ஒரே பொகைச்சலா ஈக்கிது. கம்பன் எக்ஸ்ப்ரஸ் பொகை எப்போ நம்ம ஊருக்கு வருங்கறதப் பத்தி பேசாம யாரு எவருன்னு எதுக்கு கொடையுறாங்கன்னு தெரியல.

ஊர் நெலவரம் எப்புடிடா ஈக்கிது காதரு? மலேஷியாவுக்கு விசிட் விசாவ்ல போனேன். ஒன்னும் நமக்கு தோதா வேலை கெடைக்கலே. தோட்டவேலை விசாங்கறதால சிடிலயும் வேலைக்கு எடுக்க மாட்டங்றானுங்க. அதான் வந்துட்டேன்

புது மார்ட்டின் சட்டையைப் பார்த்ததும் டவுட் வந்துச்சு. நம்மஊர் நெலவரம் சொல்லிக்கிற மாதிரியில்ல காக்கா. எங்க பார்த்தாலும் சிக்கன்குனியா போட்டு வாட்டுது.ஊரை சுத்தமா வைக்க வேண்டிய பஞ்சாயத்து போர்டுக் காரனுங்க சிக்கன் பிரியாணி சாப்புட்டுட்டு ஏப்பம் உட்டுக்கிட்டு இருக்கானுவ.

தரும ஆஸ்பத்திரில போடுற ஊசிக்கு சிக்கன் குனியா கொஞ்சம் கேட்குது. இலவச டீவியே இன்னும் குடுத்து முடியலே. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டை நம்ம கைக்கு வந்து சேர்ரதுக்குள்ளே அடுத்த எலக்சன் வந்துடாம இருக்கனும்.

யார்ரா காதரு நம்மூரு பையன கிட்னிக்காக கொலை செஞ்சிப்ட்டானுங்க பேசிக்கிட்டாங்களே. நெசந்தானா?

அது உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா?. அது யாருமில்லே.ஊக்குரி ஊதிக்கிட்டு தெருத்தெருவா திரிவான்ல. அவந்தான். எந்த தெருன்னு சரியா லெக்குத் தெரியல. ரெண்டுமூணு நாளா ஆளக் காணோம்.கொத்துவாவ்ல அனோன்ஸ் பண்னுனாங்க. மய்க்காநாளு எங்கையோ மையத்தா கெடக்கிறான். யாரோ கிட்னிக்காக கொலை செஞ்சிட்டாங்கன்னு எவனோ கெளப்பி உட்டுட்டான்.

நாலு நாள் கழிச்சு பையன் ஊட்டுக்கு வந்திருக்கான். யாரோ கட்டிப்போட்டு அடைச்சு வச்சிருந்திருக்காங்க.அவ்ளோதாங்காக்கா. வல்லாநாளைல புரளிய கெளப்பி உட்டுட்டானுங்க.

நல்லதாப் போச்சு. இருந்தாலும் இப்பதான் புள்ளப்புடிக்கிறவன் தொல்லை இல்லாம இருக்கு. ஆமா முத்துப்பேட்ட பிரச்சினையெல்லா ஓய்ஞ்சிடுச்சா?

அதாங்காக்கா வருசம் வருசம் வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தி தகராறு பண்ணுவானுங்கள்ள அவனுங்களோட வேலைதான் இது. இப்பதான் பிரச்சினை ஓய்ஞ்சி கைது செஞ்சவங்கல விடுதலை பண்ணிட்டாங்கன்னு சொன்னாங்க.

எப்புடியோடா காதரு. நம்ம ஊறுமாதிரி முத்துப்பேட்டை இல்லே எல்லாம் ஒத்துமையா இருந்து பெரும்பெரும் பெரச்சினைகளை சமாளிக்கிறாங்க. நம்மூர நெனச்சாத்தான் பயமா ஈக்கிது. அல்லாதான் காப்பாத்தனும்.

உங்கள மாதிரி ஆளுங்க துவா ரொம்ப முக்கியம் காக்கா!

காதரு செருப்பை பள்ளியாவாசல்ல கெழட்டி வச்சிட்டு சாப்டப் போகலாம். போனதடவ சின்னத்துக்கார ஊட்டு சாப்பாட்டுல புது அட்டாசோ செருப்பை அடிச்சிக்கிட்டு போயிட்டனுங்க.

அட! அது உங்கடதானா காக்கா! மன்னிச்சுக்கிடுங்க. லெக்குத் தெரியாம நான் போட்டுக்கிட்டு வந்துட்டேன்.

டேய் காதரு.கடைசில ஆட்டக்கடிச்சு மாட்டக்கடிச்சு என் அடிமடில கைய வச்சிட்டடா! பரவாயில்ல. நீயே போட்டுக்க. நேர்மையா நீ ஒத்துகிட்டதால என் பரிசா அதை வச்சிக்கடா.

காதரின் ஆனந்தக் கண்ணீர் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் ஊர்சுத்தி உமரின் கையில் ஒரு துளி விழுகிறது. காற்றில் வந்த பிரியாணி வாசம் விருந்து நடக்குமிடம் நெருங்கிவிட்டதை சொல்லாமல் சொல்லியது!
Share:

ஆரோக்கியதிற்கு வந்த புற்று!

காம கழுகுகளின் திருவிழா!
கள்ள கா(ம)தலர்களின் பெருவிழா!
அன்னியன் கொண்டுவந்த சனியன் இது!
இதன் பின்னே....
அடங்காமல் ஆ(ஓ)டும் இளைய சமுதாயம்.
வியாபர மூளையோ இந்த விபச்சாரதிற்கு விளம்பரம் செய்யுது!
தடுக்க வேண்டிய அரசோ இந்த அனாச்சாரத்தை-
கலாசார வண்டியில் பூட்டுது.
சமூகத்தின் வாசலில் இந்த சாக்கடை!
சுத்தம் செய்யவேண்டுவது நம் கடமை.
crown
Share:

இஸ்லாமியர்களுக்கு சமூக நீதி: நிசமாவது எப்போது?

நமது நாட்டின் மக்கள் தொகையில் 14 விழுக்காடு உள்ள இஸ்லாமிய மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றில் உரிய பங்கினை அளித்து சமூக நீதியை தெளிவாக உறுதி செய்ய வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.

இதற்கு மேலும் ‘வசதி’யானக் காரணங்களைக் கூறி, அவர்களுக்கு உரிய சமூக நீதியைத் தவிர்க்க இயலாத நிலையை நேற்று(08-02-2010) நடந்த இரண்டு நிகழ்வுகள் உருவாக்கியுள்ளன.

ஒன்று, ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்துவரும் இஸ்லாமிய மக்களில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையிலுள்ள சமூகத்தினருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து அம்மாநில அரசு வெளியிட்ட உத்தரவை, ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு, தனது பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் நிராகரித்துவிட்டது.

இரண்டாவது, மேற்கு வங்கத்தில் வாழ்ந்துவரும் இஸ்லாமிய மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு 5-2 நீதிபதிகளின் தீர்ப்பு என்று வழங்கியுள்ள பெரும்பான்மை தீர்ப்பின் முக்கிய அம்சம், இந்த இட ஒதுக்கீடு (இஸ்லாமிய) மதத்தை மையமாகக் கொண்டு வழங்கப்படுகிறது, எனவே அது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், இப்படி மதத்தை மையப்படுத்தும் இட ஒதுக்கீடு மத மாற்றத்தை ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் ஜனநாயக அமைப்பில், நமது நாட்டின் சமூக கட்டுமானத்தின் அங்கமாகவுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகியன உரிய அளவிற்குக் கிடைத்திட வேண்டும் என்று விரும்புவோர் அனைவருக்கும் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஏமாற்றத்தை அளித்திருக்கும்.

கல்வி, வேலை வாய்ப்பில் ஆந்திரத்தில் வாழும் இஸ்லாமியர்களில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்ற பரிந்துரை செய்த பி.எஸ். கிருஷ்ணா ஆய்வுக் குழுவின் அறிக்கையில் உள்ள குறைபாடுகளை - அது தரகுகளை சேகரித்த விதம் முழுமையானதல்ல - என்று கூறி, அதனடிப்படையில் வெளியிடப்பட்ட ஆந்திர அரசின் உத்தரவை நிராகரித்துள்ளது ஆந்திர உயர் நீதிமன்றம்.

அரசமைப்பு உறுதி செய்துள்ள இட ஒதுக்கீடு!

இந்தியாவின் சமூகக் கட்டமைப்பில் அங்கமாகவுள்ள எந்த ஒரு சமூகமானாலும், அது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் இருந்தால், அவைகளின் மேம்பாட்டிற்காக (Advancement) சிறப்பு ஏற்பாடுகளை (இட ஒதுக்கீட்டை) செய்வதற்கு தடையேதுமில்லை என்று இந்திய அரசமைப்பின் பிரிவு 15 (4) கூறுகிறது (சமூக நீதிக்காக தந்தை பெரியார் நடத்திய கிளர்ச்சியைத் தொடர்ந்து 1951ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பில் செய்யப்பட்ட முதல் திருத்தம் இது என்பதுக் குறிப்பிடத்தக்கது).

இதே அடிப்படையில், அதாவது சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள சமூகங்களின் மேம்பாட்டிற்காக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும், பட்டியல் சமூகத்தினருக்கும் தனியார் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு செய்வதற்கும் வழி செய்கிறது கடந்த 2005ஆம் ஆண்டு அரசமைப்பில் செய்யப்பட்ட 15 (5) திருத்தமாகும்.

இது மட்டுமல்ல, நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் - அதாவது அரசுப் பணிகளில் - இப்படி கல்வி, சமூக ரீதியான இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிய பிரதிநிதித்தும் (Adequate Representation) பெற மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு செய்யலாம் என்கிறது இந்திய அரசமைப்புப் பிரிவு 16 (4). இச்சட்டப்பிரிவின் அடிப்படையிலேயே - மண்டல் அறிக்கையின் பரிந்துரையின்படி - இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை 1990ஆம் ஆண்டு பிரதமர் வி.பி.சிங் பிறப்பித்தார். பின்னாளில் அதனை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் 6-5 என்ற பெரு்ம்பான்மை தீர்ப்பின் மூலம் ஆமோதித்தது.

ஆக, நமது நாட்டின் சமூகக் கட்டமைப்பில் பின்தங்கிய நிலையிலுள்ள சமூகத்தினரை (சாதியாகவும் இருக்கலாம், மதப் பிரிவினராகவும் இருக்கலாம்) கல்வி, சமூக ரீதியாக அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்க அரசமைப்பில் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பு நமது நாட்டிலுள்ள இந்து மதத்தின் உட்பிரிவுகளாகக் கருதப்படும் தாழ்த்தப்பட்ட (பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிகள்), பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குத்தான் உறுதி செய்யப்பட்டுள்ளதே தவிர, அதற்குத் தகுதிபெற்ற இஸ்லாமிய, கிறித்தவ மதங்களைச் சேர்ந்த, அதன் உட்பிரிவு மக்களுக்கு கிடைக்காத நிலை தொடருகிறது.

மதப் பிரிவாக இருப்பது சமூக நீதிக்குத் தடையா?

இது சமூக நீதிக்கும், இந்திய ஜனநாயகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட நெறிமுறைகளுக்கும் முரணானதாக உள்ளது. இந்து மதம் மட்டுமின்றி, நமது நாட்டிலுள்ள எந்த மதமானாலும் அதில் பல்வேறுபட்ட உட்பிரிவுகள் உள்ளதும், அவர்களின் கல்வி, சமூக வாழ்நிலைகளில் பெருத்த வேறுபாடு நிலவி வருவதும் யாரும் அறியாதது அல்ல.

அப்படிப்பட்ட மத உட்பிரிவுகளை - அவைகள் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனவா என்பதை மட்டும் உறுதி செய்து, அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு - குறிப்பாக அரசுப் பணிகளில் உரிய இட ஒதுக்கீடு செய்ய முடியும் என்பதை மேற்கண்ட அரசமைப்புப் பிரிவுகளை ஊன்றி படிக்கையில் எவருக்கும் புரியும். ஆனால், அப்படிப்பட்ட அடிப்படையில் மத உட்பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்போது, அது சமூக ரீதியானது அல்ல, மத ரீதியானதாகவே உள்ளது என்று பலமுறை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்படுகிறது. ஆந்திர உயர் நீதிமன்றம் ஏற்கனவே அப்படிப்பட்ட ஒரு அரசு உத்தரவை செல்லாது என்று அறிவித்துள்ளது. இது சமூக நீதி மறுப்பிற்கும், ஜனநாயக ரீதியான ஆட்சி அதிகார பிரதிநிதித்துவ உரிமைக்கும் எதிரானதாகவே ஆகிறது.

இது நியாயமல்ல. இப்போது ஆந்திர உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூட, இது மத ரீதியாக மையப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு என்று கூறப்பட்டுள்ளது. ஆந்திரத்தில் வாழும் இஸ்லாமிய மக்களில் பல்வேறு பிரிவினர்களை, அவர்களின் கல்வி, சமூக நிலைகளின் அடிப்படையில் பகுத்து, மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள சில பிரிவுகளுக்கு (ஈ பிரிவு) மட்டுமே பி.எஸ். கிருஷ்ணா குழு இட ஒதுக்கீட்டிற்கு பரிந்துரைத்துள்ளது! ஆனால் அதையும் நீதிமன்றம், மத ரீதியாக மையப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு என்று எப்படி புரிந்துகொண்டுள்ளது என்பது புரியவில்லை.

அது மட்டுமல்ல, இப்படிப்பட்ட இட ஒதுக்கீடு மதமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இது ஆச்சரியமான ஒரு நிலையாகும். இட ஒதுக்கீடு பெறுவதற்காக ஒருவர் மதம் மாறுவார் என்பதை வாதத்திற்கு ஏற்றாலும், அந்த மதப்பிரிவி்ன் - இட ஒதுக்கீட்டிற்குத் தகுதி பெறும் அந்தக் குறிப்பிட்ட பின்தங்கிய பிரிவிற்கு எப்படி மாற முடியும்? எனவே நீதிபதிகளின் கருத்து பிழையுடையதாகும்.

ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவு, அந்த மாநில அரசின் மதிப்பீட்டின்படி, கல்வி, சமூக ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளதா என்பதை, தனக்கு அளிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்வது மட்டுமே நீதிமன்றத்தின் நியாயப் பணியாக இருக்க வேண்டுமே தவிர, அதன் விளைவு என்னவாகும் என்பதைப் பற்றியெல்லாம் அது வினவுவதும், அதனடிப்படையில் அரசின் நிலையை நிராகரிப்பதும் அப்பட்டமான நீதி மறுப்பே ஆகும்.

இஸ்லாமியர்களின் நிலை என்ன?

நமது நாட்டின் மக்கள் தொகையில் 13.4 விழுக்காடாக உள்ள இஸ்லாமிய சமூகத்தின் கல்வி, பொருளாதார, சமூக நிலை எப்படியுள்ளது என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை அளித்த நீதிபதி இராஜேந்திர சச்சார் குழு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட 15 பரிந்துரைகளை மத்திய அரசிற்கு செய்துள்ளது.

அந்த அறிக்கையில் நீதிபதி இராஜேந்திர சச்சார் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள முக்கிய புள்ளி விவரங்களாவன:

1) இந்திய மக்கள் தொகையில் 13.4 விழுக்காடு இருந்தும், இஸ்லாமியர்களில் 4.9 விழுக்காட்டினர் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

2) அவர்களில் பெரும்பான்மையினர் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.

3) இவர்கள் பெற்றுள்ள வேலை வாய்ப்புகளிலும் 98.7 விழுக்காட்டினர் மிகவும் கீழ்மட்ட வேலைகளிலேயே உள்ளனர்.

4) உயர் மட்ட வேலைகளில் அவர்களின் பங்கு வெறும் 3.2 விழுக்காடாக மட்டுமே உள்ளது. இது இந்திய அளவிலான நிலையாகும்.

5) மாநிலங்களில் எடுத்துக் கொண்டால், மேற்கு வங்க மாநிலத்தின் மக்கட் தொகையில் 25.2 விழுக்காடு இஸ்லாமியர்கள். ஆனால் பணி வாய்ப்பு பெற்றவர்கள் 4.7 விழுக்காடு (இப்போது முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா அறிவித்துள்ள வேலை ஒதுக்கீடு கூட 10 விழுக்காடுதான்).

6) பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 18.5 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள், வேலை வாய்ப்பு 7.5 விழுக்காடு.

7) அஸ்ஸாமில் இவர்களின் மக்கள் தொகை 30.9விழுக்காடு. வேலை வாய்ப்பு பெற்றோர் 10.96%

8) கல்வியைப் பொறுத்தவரை எழுத்தறிவு பெற்றவர்கள் 5.91 விழுக்காடு, பட்டம் பெற்றவர்கள் 3.4 விழுக்காடு

9) வறுமை எனும் அளவுகோலை எடுத்துக் கொண்டால், இவர்களில் 31 விழுக்காட்டினர் ஏழ்மையில் உழல்கின்றனர்.

10) இதில் அடித்தட்டு மக்களில் 10 விழுக்காடு கடுமையான வறுமை சூழலில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

11) மாநிலங்களைப் பொறுத்தவரை அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மதிப்பிடப்படும் கேரளத்தில் மொத்தமுள்ள இஸ்லாமிய மக்களில் 9 விழுக்காட்டினரின் மாத வருவாய் ரூ.300க்கும் கீழ்தான்.

இப்படிப்பட்ட நிலையிலுள்ள ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக, அவர்களுக்கு உரிய அதிகாரப் பங்கு அளிப்பதற்காக, மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் சட்ட ரீதியான தடைகளை தாண்ட இயலாமல் அடிபட்டுப் போய்விடுகிறது. இந்த நிலை நீடித்தால், அவர்களுக்கு நியாயப்படி வழங்க வேண்டிய சமூக நீதி - திட்டமிட்டு மறுக்கப்படுவதாக ஆகாதா?

கிறித்தவர்களுக்கும் இதே அநீதிதான்

இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்படும் அதே உரிமை மறுப்பு, தாழ்த்தப்பட்டோராக இருந்து மதமாறிய கிறித்தவர்களுக்கும் மறுக்கப்படுகிறது. இந்து மதத்தின் சாதிய தாக்கம் எல்லா மதங்களிலும் உள்ளதை நமது நாட்டின் சமூக ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்கின்றனர். இந்த நிசத்தை உணராதவர்களாகவோ அல்லது மறுப்பவர்களாகவோ தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்கள் உள்ளனர்.

மதம் மாறியதால் அவர்களின் நிலை மாறியதா? என்ற கேள்விக்கு இதுநாள்வரை இவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அவர்களுக்கு உரிய கல்வி, வேலை வாய்ப்பு கிடைத்திட வகைசெய்யும் சட்ட ரீதியான வழிமுறைகளுக்குத் தொடர்ந்து தடையாக இருந்து வருகிறார்கள்.

ஒரு குடும்பம் இந்து மதத்தின்படி தாழ்த்தப்பட்டதாக உள்ளது, அது கிறித்தவ மதத்திற்கு மாறுவதால், இதுகாறுமிருந்த அதன் சமூக, கல்வி நிலை (அந்தஸ்து) எவ்வாறு மாறுவிடும்? கும்பிடும் தெய்வமும், சென்றிடும் வழிபாட்டுத் தலமும்தான் மாறுகிறதே தவிர, சமூக, கல்வி நிலை அப்படியேதானே உள்ளது.

அதுமட்டுமா? அவர்களைப் பற்றிய சமூக (உயர் சாதியப்) பார்வை மாறுகிறதா? அவர்கள் ஏற்கனவே இருந்த சாதியின் பெயருக்கு முன் மதத்தை சேர்த்து அர்ச்சிப்பதை இன்றளவும் காண்கிறோமே! இதுதானே இந்தியாவின் சமூக சிந்தை நிலை! இது ஏன் நீதிபதிகளுக்குப் புரியாமல் போகிறது என்பது தெரியவில்லை.

சமூக எதார்த்தம் இவ்வாறிருக்கையில், மதம் மாறிய தாழ்த்தப்பட்ட கிறித்தவருக்கு பட்டியல் சாதிக்குறிய இட ஒதுக்கீடு உரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு மாற்றப்படுகிறார்கள். இதற்கும் மத மாற்றக் காரணமே கற்பிக்கப்படுகிறது.

நமது நாட்டுச் சமூகத்தின் அடிதட்டு மக்களை மேம்படுத்த வகுக்கப்பட்ட அரசமைப்பு ரீதியான உரிமைகள், மத கலப்புடன் கூடிய சமூகப் பார்வையால் மறுக்கப்படுவதை எத்தனை காலத்திற்கு அனுமதிப்பது?

இந்த நிலை நீடிப்பது நமது நாட்டின் சமூக கட்டமைப்பிற்குள் பலவீனத்தையும், எதிர்வினையாற்றலையும் உருவாக்காதா?

மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். சமூக நீதியை நிலைநிறுத்த, அரசமைப்புச் சட்டமளிக்கும் உரிமைகள் அனைத்தும் தங்கு தடையின்றி அம்மக்களுக்கு சென்று சேரும் வகையில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். இன்று இதனை செய்யாவிடில், நமது நாட்டின் சமூகக் கட்டமைப்பு பலவீனப்பட இந்த அநீதியே காரணமாகிவிடும்.

நன்றி : வெப்துனியா.
Share:

விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.

ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-

Ö அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?

Ö ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?

Ö இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?

Ö ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?

Ö தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?

Ö தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?

Ö மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?

Ö மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?

Ö யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா? ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)

Ö இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?

Ö தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?

Ö அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?

Ö செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா?

Ö இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா?

Ö உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?

Ö பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா?

Ö அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?

Ö ஃபஜ்ருத்தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?

Ö நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும், இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?

Ö இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்)

Ö மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?

Ö உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?

Ö இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா?

Ö இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.

Ö இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?

Ö உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா?

Ö மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?

Ö உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?

Ö இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?

Ö யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்.""

Ö இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?

மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""

யா அல்லாஹ்! இந்த செய்திகளை மற்றவர்களுக்கு எத்தி வைப்பத்தோடு நின்று விடாமல் எங்கள் வாழ்விலும் பின்பற்றி, உன் பொருத்தத்தை அடைத்து, அந்த கடுமயான விசாரணை நாளில் எங்கள் அனைவதராயும் சுவன வாதிகளாத எழுப்புவாயாக ..ஆமீன் !!!
Share:

உங்கள் பிள்ளை பத்தாம் வகுப்பு படிக்கின்றதா? அவர்களது எதிர்காலம் குறித்து திட்டமிடும் நேரம் இதுவே!!

"பத்து வரை படிப்பு
பின் பாஸ்போர்ட் எடுப்பு,
செத்து செத்து பிழைப்பு
சேர்த்து வைத்ததை எல்லாம்
செலவளித்து அழிப்பு
"
என்று அதிரைவாசிகள் வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. வளைகுடா நாடுகளின் கதவுகள் நமக்கென திறந்தகாலம் இன்று இறந்த காலம் ஆகிவிட்டது. "எப்படியும் எம்புள்ள பொழச்சுக்குவான்" என்ற பெற்றோர்களின் நினைப்பு பெரும்பாலும் வெளிநாட்டு வருமானத்தை எதிர்நோக்கிய நினைப்பேயாகும்.
நம்புங்கள், வளைகுடா இனிமேலும் நமக்கென வளைந்திடா.
இக்கால நிலை என்ன?
இனிமேலும் அத்தகைய நிலை தொடர வேண்டுமா? என் வீட்டிலும், உங்கள் வீட்டிலும் இருக்கின்ற குழந்தைகளின் எதிர்காலத்தை திட்டமிட இதுவரை முனைந்திருக்கின்றோமா? குறைந்த பட்சம் 'திட்டமிடவேண்டும்' என்றாவது நினைத்திருக்கின்றோமா? நம் எதிர்கால சந்ததிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம்.

கல்வியாண்டில் இது கடைசி பருவம். மாணவர்களுக்கு 'ஆண்டுப் பரீட்ச்சை' நெருங்கும் நேரம். நம்மூரில் உயர்நிலை (பத்தாம்) வகுப்பில் பயிலும் மாணவர்களில் 98% சதவிகித மானவர்களுக்கு அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற தெளிவு, இல்லை இல்லை, சிந்தனை கூட இல்லாது படிக்கின்றனர்.
"அடுத்து என்ன படிக்கப் போகிறாய்" என 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனைக் கேட்டால் "ப்ளஸ் ஒன் தான்" என்கிறான் கேலியாக!! சரி 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனது பெற்றோரிடம் அடுத்து உங்க மகன்/மகளை என்ன படிக்க வைக்கப் போகிறீர்கள் எனக் கேட்டால், அதே பதிலே வருகிறது. இது நகைச்சுவையாகத் தோன்றலாம். உண்மையில், தன் மகனை/மகளை பதினொன்றாம் வகுப்பில் எந்த பிரிவில் சேர்த்துவிடப் போகின்றோம் என்கிற சிந்தனைக் கூட அவர்களுக்கு வந்திருக்காது.

நம் இலக்கை நாம் எங்கே தவறவிடுகின்றோம்?
இப்படி இலக்கற்று வாழுகின்ற மாணவன் இறுதியில் என்ன பிரிவில் சேருகின்றான் என்று பார்த்தால், தன்னுடைய நண்பன்/தோழி எந்தப் பிரிவில் சேருகின்றானோ/ளோ அந்த பிரிவில் தான் இவன்/ளும் சேருகின்றான்/ள். "ஏன் இந்த பிரிவை படிக்கின்றாய்" எனக் கேட்டால், "அதான் தேவலை" என்பார்கள். "தேவலை" என்பதற்கு இன்று வரை யாருக்கும் அர்த்தம் விளங்கியதாய் எனக்குத் தோன்றவில்லை. இதற்கு அவர்களைச் சொல்லி ஒன்றும் குற்றம் இல்லை. நான் படிக்கும் போது கூட, பி.எஸ்.சி என்பது ஒரு பட்டப்படிப்பு என்று தான் தெரியுமே ஒழிய, அதில் கணிதம், கணிணி அறிவியல் என உட்பிரிவுகள் இருக்கும் என, கல்லூரியில் சேர்கைக்காக போகின்ற வரைக்கும் எனக்குத் தெரியாது. இன்றளவும் உண்மை இது தான். இந்நிலை இனிமேலும் தொடர வேண்டாம்.

மருத்துவப் படிப்பில் பட்டதாரி ஆக வேண்டுமானால் பதினொன்று/பனிரெண்டாம் வகுப்புகளில் கணிதம் மற்றும் உயிரியல் (Biology) படித்திருக்க வேண்டும் என்னும் அடிப்படை அறிவு, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு இருத்தல் அவசியம்.
சரி, என்ன செய்ய வேண்டும்?
இவையாவற்றுக்கும் அடிப்படை திட்டமிடுதலே ஆகும்.
1) உங்கள் குழந்தை என்னவாக வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும், ஆனால் நீங்கள் மட்டுமே முடிவு செய்யாதீர்கள். உங்கள் மகன்/மகளோடு நெருங்கிப் பழகி, மனம் விட்டு பேசி, அவன்/அவளுக்கு ஆர்வம் இருக்கும் துறையைக் கண்டறியுங்கள்.
2) அவர்கள் குழப்பத்தில் இருந்தார்களானால், எதிர் கால நோக்கோடு நீங்கள் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் உங்கள் மகன்/மகளுக்கு ஆர்வமூட்டுங்கள்.
3) முடிவு செய்யப் பட்ட துறை சார்ந்த தகவல்கள், வேலைவாய்ப்பு, உயர் பதவிகள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரிக்கத் துவங்குங்கள்.
4) கல்வியில் மூத்த சான்றோர்கள் நம்மூரில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். தேவைப்படுக்கின்ற நேரத்தில் ஆலோசனை வழங்கவும், வழி காட்டவும் அவர்கள் என்றைக்கும் தயக்கம் காட்ட மாட்டார்கள். இது நிச்சயம். அத்தகையவர்களை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். நம்மூரில் வாழும் பள்ளி,கல்லூரி ஆசிரியர்களைச் சந்தித்து, நீங்கள் தெரிவு செய்து வைத்திருக்கும் துறைசார்ந்த விஷயங்களை கேட்டறியுங்கள். நிச்சயம் ஒரு தெளிவு பிறக்கும்.

உரிய நேரத்தில் திட்டமிடுதலும், அதனை செயல் முறைப் படுத்துதலும் இன்ஷா அல்லாஹ் நம்மூரில் நடக்கத் தொடங்கினால், நமதூரின் கல்வி முன்னேற்றத்திற்குஇதுவே போதுமானதாகும்.

பயனுள்ள கல்வியைப் பெற்று, நாமும் நமது சமுதாயமும் பயனுறும் படி வாழ நம் எல்லோருக்கும் அல்லாஹ் அருள் செய்திடுவானாக, ஆமீன்.

ஆக்கம்: அதிரை என்.ஷஃபாத்
Share:

புஷ்ரா ஹஜ் நிறுவனம் குறித்து ஓர் ஹாஜியின் குற்றச்சாட்டு

தமிழக முஸ்லிம்களின் இணைய குழுமத்தில் கீழ்கண்ட மின்மடல் அனுப்பப்பட்டுள்ளது. இது உண்மையா என்று நமதூர் சகோதரர்கள் கருத்து தெரிவித்தால் சம்பந்தப்பட்ட குழுமத்திற்கும், குற்றச்சாட்டை அனுப்பியவருக்கும் பதிலிட வசதியாக இருக்கும்.
 
புஷ்ரா ஹஜ் நிறுவனம் சார்பில் விளக்கம் கொடுத்தாலும் அதையும் இங்கு பதிவதோடு சம்பந்தப்பட்ட குழுமத்திலும் தெரிவிப்போம்.
 
---------- Forwarded message ----------
From: Riyas Noushad <riyas_cr@hotmail.com>
Date: Feb 8, 2010 12:24 PM
Subject: BUSHRA HAJ SERVICE - WORST SERVICE


 
Dear brother,

Assalumu alaikkum,

Sorry I couldn't type in tamil but the following is something which should reach as many people as possible and I would request you to publish in your group.

Wassalam.Assalumu alaikkum,

Alhmadulilah, with the grace of Allah, me with my wife performed haj in 2009.

We went through BUSHRA HAJ SERVICE which is operating from Chennai and Adirampatinam.

The service provided by this agency is in the worst possible way. Nothing was organised properly and they were handling things/issues as and when it comes without any planning at all.

For me, there is nothing wrong in doing haj travel with business motive of making profit. But this should also have the service mind set which I feel is missing in Bushra Haj (I do not want to use the term 'service' which is part of the name)

There only motive seemed to be making money by whatever possible means.

For a package of 22 days they have collected different amounts from different persons ranging from RS.1.95 to 2.35 lakhs per person.

They had give a lot of false promises regarding accommodation and other services.Elderly persons who came in the group suffered a lot.

All the above are related to worldly things which, in a way we can accept. But, there were so called imams whom  Bushra had brought them as guide for the group. They were giving guidelines to Haj which was not based on sunnah but based on the madhabs. Most of the haj rituals were different from of what prophet Rasulluah has performed in his only haj.

When we (some other brothers from the group ) questioned this to them, they said that they will follow only the madhabs and they told us to follow our own way if we do not like the way they are doing which for us is totally not acceptable. (of course we did not follow as per what they told us and also haj rituals(all rituals for that matter) are not something which you are I can do based on how and what we like).


We have seen some other travel agencies who had come from other states and the amount which they had collected is much less than what we had paid and their service was very good (from what we had observed).


I think this is high time to take some collective and harsh action against such travel agencies (which I believe is not only Bushra) and make sure that what ever hardship encountered does not happen in future (insha Allah).

Please let me know your inputs/feedback as what can be done to correct the behavior of such travel agencies.

Please spread the word as not to take BUSHRA travels for haj.

Wassalam,
Riyas.
Share:

மரண அறிவிப்பு

நடுத்தெருவைச் சார்ந்த ஜமாலுதீன் காக்கா அவர்களின் மகனும், இமாமுதீன், ஷம்சுத்தீன் ஆகியோரின் சகோதரருமான அல்தாஃப் அவர்கள், இன்று,06-பிப்ரவரி-2010, காலை இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். அன்னாரின் மஹ்ஃபிரத்துக்காக துஆ செய்யுங்கள்.


தகவல்: அதிரை என் ஷஃபாத்Share:

'ஹி..ஹி..எங்கள் ஒட்டு எப்போதுமே உங்களுக்குத்தான்"

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 22ம் தேதி தொடங்குகிறது. 24ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 26ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. முதல் நாளன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்துவார்.

இதையடுத்து 24ம் தேதியன்று 2010-11ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்வார்.

26ம் தேதியன்று 2010-11ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்வார்.
மார்ச் 16ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும். பின்னர் ஏப்ரல் 12ம் தேதி மீண்டும் கூடும் என லோக்சபா செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
நமதூரில் ஊரளவில் அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அஷோசியேசன், அதிரை பைத்துல்மால் ஆகியவையும், தமுமுக, ததஜ,முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் பின்புலமுள்ள சிறுபான்மையினர் நல அமைப்புகளும், தமிழகம் மற்றும் தேசியளவில் செயல்படும் அரசியல் கட்சிகளும், லயன்ஸ் கிளப் போன்ற சர்வதேச அமைப்புகளும் செயல்பட்டும், சில பெயரளவிலும் இருந்து வருகின்றன.

இத்தனை அமைப்புகள் இருந்தும் அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அஷோசியேசன் மட்டும் நமதூர் வழியாகச் சென்ற கம்பன் எக்ஸ்ப்ரஸ் ரயிலை மீண்டும் கொண்டுவரும் நோக்கில் அகல ரயில்பாதை திட்டத்தை துரிதப்படுத்த வேண்டி மத்திய/மாநில அமைச்சர்களை சந்தித்தும், துறை அமைச்சருக்கு நமதூர் கோரிக்கையை தெரியப்படுத்தவும் செய்தனர்.

அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அஷோசியேசன் தவிர ஏனைய அமைப்புகள் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டியே தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுள்ளனர். அதிரை பைத்துல்மால் முஸ்லிம்களின் நிதியில் செயல்பட்டு வந்தாலும் திரட்டப்பட்ட நிதிகளை ஒப்புக்கொண்டபடி பகிந்து செலவிடுகிறது.

இவ்விரண்டு அமைப்புகள் தவிர இதர அமைப்புகள் எதற்காக நமதூரில் கிளை அமைத்து செயல்படுகின்றனர்? தேவைப்படும்போதெல்லாம் குடும்பத்துடன் கூட்டம்கூட அழைக்கும் அமைப்புகளே, எமதூரில் இருந்துவந்த ரயில்பாதையை மீண்டும் அகல ரயில்பாதையாகத் திரும்பப் பெறவும், அதன்வழியாகச் சென்றுவந்த கம்பன் ரயில் மீண்டும் செல்லவும் வேண்டி நீங்கள் சிறுதுரும்பையாவது எடுத்துப்போட்டீர்களா?

ரூ.400 கோடி மதிப்பிலான 135 கிமீ அகல ரயில்பாதை திட்டத்திற்கு வெரும் ரூ.10 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. சம்பந்தபட்ட துறை அமைச்சரிட.ம் இதை எடுத்துச்சொல்ல வேண்டிய நமது மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் தேர்தலுக்கு மட்டும் கூழைக்கும்பிடு போட்டு வலம் வருகிறார்கள். நாமும் வெட்கமின்றி 'ஹி..ஹி..எங்கள் ஒட்டு எப்போதுமே உங்களுக்குத்தான்" என்று சொல்லி அனுப்பி வைக்கிறோம்.

முடங்கி கிடக்கும் திருவாரூர்-காரைக்குடி அகல ரயில்பாதை திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தக்கோரி ஆளும் அதிகார வர்க்கப் பூனைக்கு மணி கட்டப்போவது யார்?

ஓட்டுக்காக தொகுதி வலம் வரும் அரசியல்வாதிகளா? கூட்டம் கூட்ட குடும்பத்தோடு அழைக்கும் இயக்கங்களா? என்பதே விடைகாண வேண்டிய கேள்வி.
Share:

அதிரை to சென்னை / சென்னை to அதிரை டிக்கெட் விலையை அதிரடியாக உயர்த்தும் தனியார் பஸ் நிறுவனம்.

சுமார் 7 அல்லது 8 வருடங்களுக்கு மேலாக நமதூரில் தனியார் சொகுசு பேருந்துகள் அதிரை - சென்னை மார்க்கமாக இயங்கிவருகின்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இரயில் போக்குவரத்து இல்லாமல் போனதால் இந்த தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய வேறு வழியில்லாமல் அடிமையாகி விட்டோம். வியாபாரிகள், சென்னையில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள், வெளிநாடு செல்பவர்கள், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், நேர்முக தேர்வுக்குச்செல்பவர்கள், ஹஜ்ஜாலிகள் குறிப்பாக வயதானவர்கள் மருத்துவ தேவைக்காக பல சிரமங்களுக்கிடையே இந்த பஸ் போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதை சரியாக புரிந்துக்கொண்ட ஒரு தனியார் பஸ் நிறுவனம் டிக்கெட் விலையை தாருமாறாக உயர்த்தி கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

பொதுமக்கள் கூறும் புகார்:

பல வருங்களாக நமதூரில் பல தனியார் பஸ் நிறுவனங்கள் பேருந்து சேவை செய்து வருகிறார்கள், அதில் ஒரு பேருந்துக்கூட நமதூரை சார்ந்த உரிமையாளர்கள் இல்லை
என்பது நமக்கெல்லாம் ஒரு வருத்தமாக இருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதமாக நம்மூர் மேலத்தெருவை சார்ந்த ஜனாப் அப்துல் ஹமீது காக்கா அவர்களால் துவங்கப்பட்ட அதிரை - சென்னையிடையே A.S.M. சொகுசு பேருந்து சேவை சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அல்ஹம்துல்லில்லாஹ் நம் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி நம் ஊர் பேருந்து என்று.

இது இப்படி இருக்க இந்த பேருந்துக்கு டிக்கெட் புக்கிங் செய்யும் புக்கிங்-ஏஜண்டுகள் பண்டிகைக்காலங்களில் சிறப்பு பேருந்து என்ற போர்வையில் டிக்கட் விலையை தாருமாறாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கிறார்கள். இதனால் பாமரமக்கள், ஏழைகள், மருத்துவத்திற்காக அடிக்கடி செல்பவர்கள், மாணவர்கள், தனியார் கம்பெனிகளில் பணிபுரிபவர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் இந்த திடீர் டிக்கெட் விலை ஏற்றத்தினால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.

இத்தனை ஆண்டுகாலம் இதுப்போன்ற தீடீர் விலை ஏற்றம் நமதூரில் இயங்கும் எந்த ஒரு தனியார் பஸ்ஸிலும் எந்த ஒரு பண்டிகைக்காலங்களிலும் அமல்படுத்தப்படவில்லை. ஆனால் A.S.M. பஸ்ஸில் அதுவும் நம்ம ஊர் உரிமையாளர் கொண்ட பஸ்ஸில் மட்டும் டிக்கெட் விலையை உயர்த்தி பொதுமக்களை அவதிக்குள்ளாக்குவது வேதனையளிக்கிறது. இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதினால் நம்மூரில் இயங்கும் மற்ற தனியார் பஸ்களும் நாளைக்கு டிக்கெட் விலையை உயர்த்துவார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அப்படி நடந்தால் A.S.M. பஸ்தான் அதற்கு வழி அமைத்துக் கொடுத்தது என்ற பலத்த குற்றச்சாட்டிற்கு ஆளாகிவிடும்.

A.S.M பேருந்தில் பண்டிகைக்காலங்களில் ஏஜண்ட்டுகளால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் ரூ. 500. (தற்போது நடைமுறையில் உள்ள கட்டணம் ரூ. 270, கூடுதலாக ரூ.230 சேர்த்து ரூ. 500 வசூல் செய்யப்படுகிறது) சாதரணமாக சென்னையிலிருந்து பெங்களூருக்குச் செல்ல குளிர்சாதன பேருந்துகளில் கூட இது போன்ற மெகா கட்டணம் வசூலிப்பதில்லை.

A.S.M. பஸ் உரிமையாளர் ஜனாப் அப்துல் ஹமீது காக்கா அவர்களின் கனிவான கவனத்திற்கு!

1.உங்களையோ, உங்கள் நிறுவனத்தையோ, எந்த ஒரு தனி நபரையோ இப்படி நேரடியாக குற்றம் சுமத்துவது என்பது எனது நோக்கமல்ல மாறாக பொதுமக்கள் நலனில் கருத்தில்கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சியே இங்கே நான் இதை பதிவு செய்தேன்.

2. இதுபோன்ற திடீர் விலையேற்றம் உங்களுக்கு தெரிந்தே நடக்கிறதா என்பதை இங்கே நீங்கள் தெளிவுப்படுத்துங்கள்.

3. ஊர் நலனில் அக்கறைக்கொண்டு உங்களால் அதிரை மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட பஸ் சேவை இவ்வாறு அசாதாரணமாக செயல்படுவதை தடுத்து நிறுத்துங்கள்.


இன்ஷா அல்லாஹ் தடுத்து நிறுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
-அப்துல் பரக்கத்.
Share:

திரை விலகும் நேரம்?

சகோ.மு.இ.முஹம்மது ஷாஃபி அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்

அதிரை எக்ஸ்ப்ரஸ் வலைத்தளம் நமதூரின் பொதுவான நல்ல/கெட்ட விசயங்களைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டுத்தளமாகவே செயல்பட்டு வருகிறது. இதில் எழுதும் பதிவர்களில் சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொண்டும், சிலர் புணைப்பெயரிலும், சிலர் தகவல்களை மட்டும் அனுப்பியும் தத்தம் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள்.இதில் வெளியாகும் படைப்புகள் அதிரை நலன் சார்ந்தவை என்பதால் ஆக்கியோரைப் பற்றிய தகவல்களை விட ஆக்கங்களையே பிரதானப் படுத்துகிறோம்.

வார்டு மெம்பர்முதல் முதலமைச்சர்வரை நமதூர் சார்ந்த பிரச்சினைகளில், அவர்களின் பங்களிப்பையும் பாதிப்பையும் விருப்பு வெருப்பின்றி எழுதி வருகிறோம். உள்ளூர் பஞ்சாயத்து போர்டின் மெத்தனங்கள், பாரபட்சம், ஊழல், அடாவடி, பொய்வழக்குகள் குறித்த நமதூர் மக்களின் பாதிப்பை தேவையான பதிவுகளில் புகைப்பட ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளோம்.

தவ்ஃபீக் என்ற நமதூர் சகோதரரை சிறுசிறு வழக்குகளில் சம்பந்தப்படுத்தி தேடப்படும் குற்றவாளியாக்கியதை உள்ளூர்காரர்கள் நாம் நன்கு அறிவோம். ஊடகங்கள் மறைத்த உண்மையை அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக ஊடகப்படுத்தினோம்.

அல்-அமீன் பள்ளி விசயத்தில் ஆளும் பிரமுகர்கள் கொடுத்த நெருக்குதல்கள், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீதான புணைவு வழக்குகள் முதல் வழக்குகளை எதிர்கொள்ளத் தேவையான நிதியுதவிகோரிய பதிவுகளையும் அல்லாஹ்வின் பொருத்தம் மட்டுமே நாடி பதிவிட்டோம்.

நமதூர் பைத்துல்மால் மீதான முச்சந்திப் பேச்சுக்களுக்கு உரிய பதிலைப் பெற்று முறையாக விளக்கமளிக்க வாய்ப்பளித்தோம்.

மருத்துவ உதவி தேவைப்பட்ட நமதூர் சகோதரர்களின் நிலையை உலகெங்குமுள்ள அதிரைவாசிகளிடம் எடுத்துச்சென்று உரிய மருத்துவம் கிடைக்கவும் களம் அமைத்தோம்.

எழுத்தார்வம் கொண்டவர்களுக்கு வடிகாலாக, எழுத்து, புகைப்பட திறமைகளை வெளிக்கொணரும் பட்டறையாக இருந்ததோடு முகப்பில் தனிப்பதிவர்களை முதல்பக்கத்தில் முன்னிறுத்தியும் அடையாளப்படுத்தியும் கவுரவித்தோம்.

CMP லேன் வார்டு இடைத்தேர்தலில் சகோ.இப்ராஹீம், அல்-அமீன் பள்ளிப் பிரச்சினைக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு ஆதரவாகப் தேர்தலில் போட்டியிட்டபோது சகோதர வாஞ்சையுடன் தவறைச் சுட்டிக்காட்டினோம். அதே சகோ.இப்ராஹிம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நமதூர் சக பதிவான அதிரை போஸ்டில் வெளியான பதிவுக்கு மறுப்பையும் உரியவர்கள் விளக்கமளிக்க வாய்ப்பையும் வழங்கி நடுநிலை பேணினோம்.

நமதூர் MSM நகரில் மனநலம் குன்றியவர்களுக்கான விடுதி பெயரால் நடந்த மோசடியை அம்பலப்படுத்தியதோடு அதனால் நேரடியாக வஞ்சிக்கப்பட்ட சகோ. அலாவுதீன் அவர்களின் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்ல வகை செய்தோம். அதே சமயம் மனநலம் குன்றியவர்களுக்கான விடுதியின் தேவை குறித்தும் எழுதத் தவறவில்லை (பதிவர் அதிரை புதியவன் அது குறித்த பதிவை தானாக முன்வந்து நீக்கிவிட்டார்)

இப்படியாக, நமதூர் குறித்த விசயங்களில் தேவையான/தேவையில்லாத்போது மூக்கை நுழைக்கும் அதிரை எக்ஸ்ப்ரஸில் எழுதுபவர்கள் உங்களைப்போன்று மெத்தப்படித்த மேதாவிகளோ அல்லது நிலக்கிழார்களை அனைத்து ரீதியிலும் எதிர்கொள்ள சக்தியுள்ள செல்வச்சீமான்களோ அல்லர். சிலர் சென்னையிலும் சிலர் வளைகுடா நாடுகளிலும், சிலர் அமெரிக்காவிலும் மற்றும் சிலர் அவ்வப்போது இருக்குமிடங்களில் இருந்தும் ஊர்நலன் குறித்த ஒரே அக்கரையுடன் தாமாக முன்வந்து எழுதும் எழுத்தார்வப் பேர்வழிகளே என்பதை அறியவும்.

அரசியல் பின்புலம் கொண்டவர்கள், ஆளும் தரப்பினரின் அடாவடிகளையும் அக்கிரமங்களை எதிர்கொள்ளும் சமூகஎழுத்துப் போராளிகளுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு கிடைக்காத சூழலில் சிலநேரம் முகமூடி அவசியம். முகங்காட்டி கடமையச் செய்த ஆட்சியர் சந்திரலேகாவுக்கு ஆசிட் அபிசேசகம் செய்த சமூகத்திலிருந்து கொண்டு, சுய அடையாளங்களைச் சொல்லி சமூகநல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பது சரியான நிலைப்பாடா?

தன்னை இன்னாரென்று வெளிப்படுத்திக் கொண்டதன்றி நாமறிந்து வேறு தவறிழைக்காத சகோ.தவ்ஃபீக் தற்போது கண்டதும் சுட்டுப்பிடிக்க வேண்டிய தேடப்படும் குற்றவாளி என்பது தெரிந்த பிறகும் சமூகஎழுத்துப்போராளிகளை முகமறியாதவர்களும் நடமாடும் பொதுவெளியில் முகம் காட்டச்சொல்வது முறையா?

ஐயா, இதில் எழுதுபவர்கள் எவரும் உங்களைப்போல் பல்தேசம் சென்று பொருளீட்டி சென்னையில் செட்டிலான டிவிட்டர்களல்லர் என்பதோடு,முகம் காட்டத் துனிவுள்ளத் தாங்கள் முன்வந்தால் அதிரை எக்ஸ்ப்ரஸின் அனைத்து செயல்களையும் கைவிட்டு, உங்களைப்போல் மேட்டுக்குடிகள் புழங்கும் டிவிட்டரில் பின்தொடருபவராக இருந்து அவரவர் தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டு ஒதுங்கிக் கொள்கிறோம்.

முகமூடியற்ற உங்கள் வீரத்திருமுகத்துடன் நமதூரின் அவலங்கள, அநீதிகளை அடையாளம்காட்டி ஆளும் தரப்பையும்,அதிகார வர்க்கத்தையும் எதிர்கொள்ளத் தயாரெனில் தயைகூர்ந்து adiraixpress@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும். உங்கள் புண்ணியத்தில் கம்பன் எக்ஸ்ப்ரஸ் தேவை குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் உரியவர்களைச் சென்றடைய வேண்டும். தடைபட்ட இறையில்லம் அல்-அமீன் பள்ளி தடைநீங்கி கட்டப்பட வேண்டும்.

அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுக்கு,

அதிரை எக்ஸ்ப்ரஸ் குறித்த நேர்மறை/எதிர்மறை கருத்துக்களுக்கு இதுவரை போதிய விளக்கங்களை தேவையானபோது கொடுத்து வந்துள்ளோம். விமர்சனங்களை எதிர்கொள்வதும் அதற்கு விளக்கமளிப்பது,மூன்றாந்தர நபர்களின் அனாமதேய அரட்டைகளுக்கு தொடர்ந்து பொறுப்பாக்குவதும் அனாவசிய மன அயர்ச்சியையும் சுமையையும் கொடுக்கிறது என்பதால் மேற்கண்ட அதிரை எக்ஸ்ப்ரஸின் நிலைப்பாடு பற்றி தங்கள் மனம் திறந்த கருத்துக்களை மடலாக (adiraixpress@gmail.com)க்கும், தனிப்பதிவாக adiraixpress.direct@blogger.com என்ற முகவரிக்கும் அனுப்பி வைத்தால் இத்தளத்தில் பிரசுரிக்கத் தகும்பட்சத்தில் பிரசுரிக்கிறோம்.

அதிரை எக்ஸ்ப்ரஸ் பங்களிப்பாளர்களுக்கு,

அமானிதமாக நமக்குநாமே முன்வந்து பகிர்ந்து கொண்ட செயல்களுக்கு நற்கூலி வழங்கப் போதுமானவன் அல்லாஹ் மட்டுமே.பிரதிபலன் எதிர் பாராது அதிரை நலன்சார்ந்த தங்கள் ஆக்கங்களை அனேக நியாயவான்கள் உணர்ந்துள்ளனர்.

பொதுவில் இயங்கும் நம்மைப்போன்றோர் இத்தகைய தொடர்தாக்குதல்களை நேரடியாகவும் மறைமுகமாவும் எதிர்கொண்டாக வேண்டும். ஆனால், நம்மில் எத்தனைபேருக்கு அதில் ஆர்வமுள்ளதென்று தெரியாதென்பதால், மேற்கண்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பரஸ்பரம் அல்லாஹ்வின் அருள்வேண்டியவர்களாக இதுவரை இணைந்து வந்தமைக்கு நன்றியும் துஆவும் உரித்தாகட்டும்.

மாஸ்ஸலாம்!
மிக்க அன்புடன்,
அதிரை எக்ஸ்ப்ரஸ்
Share: