"ஷிஃபா" மருத்துவமனைக்கு மறுமலர்ச்சி!

"நான் நோயுற்றால், அதைக் குணப்படுத்துபவன் அல்லாஹ்தான்" (26:80) என்பது, இஸ்லாத்தின் அருள்மறையாம் குர்ஆன், மனிதனை இறை வல்லமை மீது நம்பிக்கை கொள்ளச் செய்து அறிவுறுத்தும் அருள் வாக்காகும்.

ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. சரியான மருந்தால் சிகிச்சை செய்யும் போது, அல்லாஹ் நாடினால், அந்த நோய் குணமாகும்" (சஹீஹ் முஸ்லிம்) என்பது நபிமொழியாகும்.  இதுவும் இஸ்லாத்தின் இனிய போதனைதான்.

கி.பி.1983 இல் பொதுநல நோக்குடன் தொடங்கப்பெற்றது நமதூரின் 'ஷிஃபா' மருத்துவமனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அரசு மருத்துவமனையில் இல்லாத வசதிகளுடன் உருவாயிற்று இந்த 'ஷிஃபா' மருத்துவமனை என்பதும் நாமறிந்ததே.சிறந்த மகப்பேறு பெண் மருத்துவர்கள் இங்கு முழு நேரச் சேவையில் ஈடுபட்டிருந்ததால், சுகப் பிரசவங்கள் பல நிகழ்ந்துள்ளன.  (இக்கட்டுரையாளரின் மூன்று பிள்ளைகள் இம்மருத்துவ மனையில்தான் பிறந்துள்ளனர்.)  

பல அவசர சிகிச்சைகளும் பெற்றுச் சுகமடைந்தவர்களும் நம்மூரில் ஏராளம்.  சிறப்பு மருத்துவர்கள் பலர் இங்கு வருகை தந்து சிகிச்சைகளும் தந்துள்ளனர்.  இவ்வாறு,அரசு சாராத பொது மருத்துவமனையாகவும்,சேவை மனப்பான்மையிலும் இயங்கிவந்த 'ஷிஃபா'வுக்குச் சில ஆண்டுகளாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற கசப்பான உண்மையை உணரத்தான் வேண்டும். 

அதற்கான காரணங்கள் யாவை என்று ஆராய்வது,இக்கட்டுரையின் நோக்கமன்று.  'நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனி நடக்க வேண்டியது நல்லதாக இருக்கட்டும்' என்ற எண்ணத்தில், நமதூரின் நலனில் அக்கறை கொண்ட சிலர் இம்மருத்துவமனைக்குப் புத்துயிர் அளிக்க முன்வந்துள்ளனர் என்பது ஓர் ஆறுதலான செய்தியாகும்.எமது நட்பிற்குரிய அந்த நல்லுள்ளங்களின் வேண்டுகோளின்படி, நாம் ஒரு First Hand Report எடுப்பதற்காக 'ஷிஃபா'வுக்குச் சென்றோம்.

எமக்கு 'ஷிஃபா'வின் எல்லாப் பகுதிகளும் சுற்றிக் காட்டப்பட்டன.  'மாஷா அல்லாஹ்!'  இதே Infrastructure வேறு ஊர்களில் இருந்தால், இன்றைக்கு இதன் நிலையே வேறாக இருந்திருக்கும்.  எல்லா வசதிகளும் இருந்தும், அதிரையின் மருத்துவச் சேவையில் இந்த 'ஷிஃபா'வுக்கு உரிய இடமில்லாமல் போனதற்கு என்ன காரணம்?  யார் யார் காரணம்?  கேள்விகளால் கவலைதான் கூடிற்று!  இது ஒரு Full-fledged Hospital என்ற தகுதியில்,இதன் மறுமலர்ச்சிக்கான தேவைகள் யாவை என்று ஆராய முயன்றோம்.

அப்போதுதான், இந்த மருத்துவமனைக்காக அண்மையில் பணியமர்வு பெற்ற மகப்பேறு மருத்துவர் டாக்டர் கோமதி MBBS, DGO அவர்கள் 'ஷிஃபா'வுக்குள் இன்முகத்துடன் நுழைந்தார்கள்.  அந்நேரத்தில் அவர்களுக்கு நோயாளி ஒருவரும் இல்லாததால், நமக்கு அவர்களுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிட்டியது.

டாக்டர் கோமதி அவர்கள் நமதூருக்குப் புதியவர் அல்லர்.  'ஷிஃபா'வில்  சில ஆண்டுகள் பணியாற்றியதன் பின்னர், சஊதி அரேபியா, யமன் போன்ற அரபு நாடுகளில் சில ஆண்டுகள் மருத்துவச் சேவை செய்துவிட்டுத் திரும்பி வந்துள்ளார்கள்.  'ஷிஃபா'வின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களின் அன்பழைப்பை ஏற்று, இந்த மகப்பேறு மருத்துவர் நமதூருக்கு வந்துள்ளார்கள்.  

டாக்டர் கோமதி அவர்களைத் தற்போதைய 'ஷிஃபா'வின் இயக்குநர்கள் மிகுந்த பொருள் செலவில் வரவழைத்து, இங்குப் பணியில் அமர்த்தியுள்ளார்கள்.  டாக்டர் அவர்களின் பேச்சிலிருந்து, இந்த மருத்துவமனையை முன்னேற்றம் செய்யவேண்டும் என்ற அவரின் நோக்கம் தெரிந்தது.  தலைமை மருத்துவர் என்ற முறையில், டாக்டர் அவர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்தார்கள்.  அவை முறையாக இதன் இயக்குநர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுவிட்டன.  டாக்டரின் அயல்நாட்டு அனுபவங்களின் தாக்கம், அவர்களின் பரிந்துரைகளில் வெளிப்பட்டது.

மொத்தத்தில், 'ஷிஃபா'வுக்கு ஒரு Face-lifting அவசரத் தேவை.  இதனை நாம் மின்னஞ்சல் மூலம் இதன் நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துவிட்டோம்.  அவர்களும், இவை இன்றியமையாதவை என்றே உணர்கின்றனர். அதன் அறிகுறி, இப்போதே தென்படுகின்றது.  அதாவது, எம் பரிந்துரைகளுள் சில இப்போதே செயலுருப் பெறத் தொடங்கியுள்ளன.  மருத்துவ உபகரணங்கள் பழுது பார்க்கப்பட்டுப் பயன்பாட்டு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த MBBS பெண் மருத்துவர் (GP) ஒருவரும் அண்மையில் பணியமர்வு பெற்றுள்ளார்.  உள்ளூர் டாக்டர்களுள், டாக்டர் ஹகீம் MBBS, DA அவர்கள் தொடக்க காலம் முதல் 'ஷிஃபா'வுடன் ஏற்படுத்திக் கொண்ட சேவைத் தொடர்பு பாராட்டத் தக்கதாகும்.

மகப்பேறு சிறப்பு மருத்துவருடன் சில பரிந்துரைகளில் நாமும் ஒத்த கருத்தில் உடன்பட்டோம்.  அவற்றுள் ஒன்று,நன்கு பயிற்சி பெற்ற 'நர்ஸ்'கள் மிகத் தேவை என்பதாகும்.சரியான பணியுடை (Uniform) அணிந்து, முறையாக அவர்கள் சேவை செய்யும்போது,நோயாளிகளுக்கு ஓர் ஆறுதல் உண்டாகின்றது.

குழந்தை நல மருத்துவர் ஒருவரின் தேவை பற்றியும் 'ஷிஃபா'வின் இயக்குநர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  அதற்கு, உடனடியாக, உள்ளூரில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரை on call basis பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்பாடு நடைபெறுகின்றது.  தற்போது வருகை தரும் பல் மற்றும் 'ஹோமியோபதி' மருத்துவர்களின் சேவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கின்றது.

மருத்துமனையின் உள்ளும்புறமும் பல சீர்திருத்தங்களால் மிளிரப் போகின்றன, மிக விரைவில்.  நாம் வழங்கிய பரிந்துரைகளுள், கீழ்க்கண்டவை Long term projects என்ற அடிப்படையில்,'ஷிஃபா'வின் இயக்குநர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன:

*'ஷிஃபா'வின் சுற்றுச் சுவருக்குள், இங்கே பணி புரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கான வீட்டு வசதி செய்து கொடுத்தல்.
 * புதிய மருத்துவப் பிரிவுகளுக்கான கட்டட வசதி செய்தல்.

 * 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்யப் போதுமான வருமானம் தரும் துறைகளைத் தொடங்குதல்.

 * ஏழைகள் மற்றும் வசதியற்றவர்களின் சிகிச்சைகளுக்காகப் பொறுப்பேற்கும் நல்லுள்ளம் கொண்டவர்களை நியமித்தல்.

* வருகையாளர்களின் வசதிக்காகப் பள்ளிவாசல் கட்டுவது.

 தற்போதைய நிர்வாகிகளாகப் பட்டதாரிகள் இருவர் பணி புரிகின்றனர் என்ற செய்தி, கடந்த கால illiterate நிர்வாகிகளால் நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தியாகும்.

இந்த மருத்துவமனை தொடங்க இருந்த கால கட்டத்தில்,நமதூரின் தலைவர்களுள் ஒருவர் தொலைநோக்கோடு ஒரு பரிந்துரை செய்தாராம்.  அதாவது, இந்த 'ஷிஃபா' மருத்துவமனையைத் தஞ்சாவூரில் கட்டினால் நல்லதல்லவா?  நம்மூர் மக்கள் வந்து தங்கித் தமக்குப் பிடித்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெறுவார்களே.அதனால் பல டாக்டர்களின் தொடர்பு ஏற்படுமே என்பதெல்லாம் அப்பெரியவரின் ஆலோசனையாம்.  

ஆனால், நம்மூர் மக்கள் வெளியூர்களுக்குப் போய் சிரமங்களை ஏற்கக் கூடாது; செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்றெல்லாம் கருத்துக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு, மர்ஹூம் AMS முதலியவர்களால் இந்த மருத்துவமனை தொடங்கப் பெற்றதாம்.

அத்தகையோரின் நல்ல நோக்கங்கள் நிறைவேற நாமெல்லாம் பங்களிப்புச் செய்ய வேண்டாமா?  எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்றும், 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்வதற்கு, இதன் வருமானத்தைப் பெருக்க என்னென்ன வழிகளைப் பின்பற்றலாம் என்றும் கருத்திடுங்களேன், பார்ப்போம்!

ஆக்கம்: அதிரை அஹ்மது
Share:

துபாயில் மேலத்தெரு முஹல்லாவாசிகள் சந்திப்பு - பழைய வீடியோ

சென்ற மாதம் துபாய்க்கு சாச்சா  ஜனாப் மமுசெ அப்துல் வஹாப் அவர்கள் சென்றிருந்தார்கள். வியாபார நோக்கமென்றும், அரசியல் காரணங்கள் என்றும் இருவேறாக சொல்லப்பட்டது. அப்போது தனது முஹல்லா சகோதரர்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள்.

குசலம் விசாரித்தபோது
முதல் வீடியோவைக்காண கிளிக்கவும்


விருந்து காட்சிகள்

பாட்டு தலைப்பு: உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்... (படம் பேரு என்ன?)

இந்த நிகழ்வில் சாச்சா தனது அபிலாசையாக நடுத்தெரு வார்டு தேர்தலில் நிற்க விரும்பியதை ஜனாப் சிங்கப்பூர் அஸ்லம் அவர்கள் மூலம் வெளிப்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. அது பற்றி கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அதிரை எக்ஸ்பிரஸில் எழுதலாமே.
Share:

நரகத்திற்கே உரித்தான சதை

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்
1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.
2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.
3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.
5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.
6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.
7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.
8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.
9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.
10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.
11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், "சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்" என்று கூறினார்கள்.    (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)

நன்றி:மனாருல்ஹுதா ஜூலை 2007

Share:

Indian Rupee Symbol (Want to Download?)

Now we have a Rupee Symbol to represent the Indian currency.

Use the below font file to key in the Rupee Symbol, (Copy the font file to "C:\Windows\Fonts" folder.
Usage - following key is used to type in the Rupee Symbol,
For example, Select the font "Rupee Foradian" and type in using the button


Click here to Download Rupee Font


- Irfan
Share:

அதிரையில் நடந்த இப்தார் நிகழ்ச்சி

நடுத்தெருவில் கடந்த 26-08-2010 அன்று நோன்புத் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெருவாசிகள் அநேகர் கலந்து கொண்டு நோன்புத் திறந்தனர். இதில் ஆலிம்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒற்றுமை எனும் தலைப்பில் மெளலானா ஹாரூன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

கடந்த வருடங்களில் உள்ளூர் வாசிகள் அனைவரும் கலந்து கொண்ட நோன்புத் திறக்கும் நிகழ்ச்சிகள் நடந்ததுண்டு.
நீங்கள் கலந்து கொண்ட இப்தார் நிகழ்ச்சி வீடியோக்களை அதிரை எக்ஸ்பிரஸ் விக்கி தளத்தில் நீங்களாகவே பதிவேற்றம் செய்து பகிர்ந்துகொள்ளுங்களேன்.

முகவரி:http://adiraixpress.wikia.com
Share:

சில நினைவுகள்...சில பகிர்தல்கள்..சில கேள்விகள்

தலைப்பைப் பார்த்துவிட்டு ஓவர் பில்டபாக இருக்கிறதே என்று யாரும் அதிக எதிர்பார்ப்புடன் வந்துவிட வேண்டாம். இப்படியெல்லாம் தலைப்பிட்டால்தான் மக்கள் படிப்பார்கள். ;) என்று தஸ்தகீரும் நெய்னாவும் சொல்லவில்லை. :)

நினைவுகள்:

1) ஒவ்வொரு வருடமும் ரமலானில் தமது குழந்தைகளை நோன்பு நோற்க வைப்பார்கள். இஸ்லாத்தின் மூன்றாம் கடமையான ரமலான் நோன்பை முதன்முதலில் நோற்க பயிற்று விக்கும் உற்சாகமான நிகழ்வு. அல்ஹம்துலில்லாஹ். நம் தாய்மார்கள் தலைநோன்பு நோற்கும் குழந்தைகளை தங்கள் நகைகளை அணிவித்து சொந்தபந்த வீடுகளுக்கு அனுப்பி வைப்பர்.பதிலுக்கு அவர்களும் அன்பளிப்புகளைக் கொடுத்து ஊக்குவிப்பர்.

2) தாய்வீட்டில் வசிக்கும் கொடுத்து வைத்த மணமகள்கள் மாமியார் வீட்டுக்கு நோன்பில் கஞ்சி+வாடா அனுப்பி தங்கள் அன்பை புதுப்பித்து பெருநாள் செலவு பணம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்து கொள்வர்.

3) குர்ஆன் ஓதிக்கொடுப்பதை தொழிலாகக் கொண்டிருக்கும் உஸ்தாதுகள் தங்களிடம் குர்ஆன் ஓதக்கற்றவர்களில் அழகிய குரல்வளம் கொண்டோரை தேர்த்தெடுத்து அல்குர்ஆனின் அர்ரஹ்மான் சூராவை ஓதிக்கொண்டே வீதி வலம் வருவார்கள். அவர்களின் பின்னால் சில மாணவர்கள் رَبِّكُمَا تُكَذِّبَانِ என்று "இறைவனின் அருட்கொடைகளில் எவற்றைப் பொய்யாக்குவீர்கள்? என்று சொல்லிக்கொண்டே பின்தொடர்வர். அவர்களை உவகையுடன் வரவேற்று தாய்மார்கள் தங்கள் வீடுகளில் ஓதச்செய்து உஸ்தாதுக்கு அன்பளிப்புகளை வழங்கி அனுப்பி வைப்பர்.

4) ரமலான் இரவுகளில் கிளித்தட்டு,பீக்கா (இவையெல்லாம் காமன்வெல்த் போட்டிகளில் ஏன் இடம்பெறவில்லை என்று தெரியவில்லை:) போன்ற நட்பு பாராட்டும் விளையாட்டுக்களை விளையாடாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.(ஏம்பா நோன்பு நேரத்துல அவற்றை எல்லாம் ஏன் நினைப்பு காட்டுகிறாய்? என்று ஜமீல் காக்கா,அஹமது காக்கா போன்ற (பேரிச்சை) பழம் தின்று கொட்டை போட்ட சீனியர்கள் பல்லைக் கடிப்பதும் தெரியாமல் இல்லை :)))

5) தராவிஹ் தொழுது விட்டு, குர்ஆன் ஹிஸ்பு முடித்து விட்டு நார்சாவை பொருப்பாக வீட்டில் கொடுத்துவிட்டு அல்லது நொறுக்குத்தீனியாக தனித்து விழுங்கிவிட்டு சஹர்வரை இந்த விளையாட்டுக்கள் விளையாடப்படும். பிற்கால சிறார்கள் கேரம்போர்ட், செஸ், வீடியோ கேக்ஸ் என்று தடம்மாறி தற்போது JETIX, POGO, CN என்று சேட்டலைட் சேனல்களில் மூழ்கிவிட்டதை நினைக்கும்போது கிளித்தட்டும் பீக்காவும் பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.

பகிர்தல்கள்:

* பள்ளிகளில் இஃப்தார் கஞ்சி வழங்க முன்பெல்லாம் ஆள் கிடைக்காது. தற்போது பள்ளிகள் கிடைக்காத அளவுக்கு பரக்கத் நிறைந்த மாதமாக ரமலான் ஆகி பலவருடங்களாகி விட்டன. அல்ஹம்துலில்லாஹ்! எனினும் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கஞ்சி வழங்க வலியுறுத்துவதால் கஞ்சி விரயமாவதாகச் சிலர் சொல்கிறார்கள்.இன்னும் சிலரோ தலா ஒரு வாளி கஞ்சியை ஸ்பான்சர் செய்யும் வீடுகளுக்கு அனுப்பி இன்று உங்கள் வீட்டுக் கஞ்சி என்று ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நம்பச் செய்வதாக குறைகூறுகிறார்கள்.

அனைத்து ரமலான் நோன்பு நாட்களுமே சிறப்பானவை என்றிருக்கும்போது சில நாட்களில் கஞ்சி வழங்குவதால் கூடுதல் நன்மை என்ற மனப்பான்மை எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. வீண் விரயத்தை தவிர்க்க நாள், கிழமை விசயங்களில் ஸ்பான்சர்கள் வலியுறுத்தாததே சிறந்தது. ஒரே நாளில் குவிந்த கூடுதல் தொகையை பள்ளியின் இதர செலவினங்களுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால் இதைத் தவிர்க்கலாமே.

* எம்மதத்திலும் இல்லாத சிறப்பு இஸ்லாத்தில் உள்ளது. ஏழையின் பசியை அறியும் நோன்புபோக,அவர்களின் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற ஜகாத் எனும் ஏழைவரியை மார்க்கக் கடமையாக்கிய மதம் உலகிலேயே இஸ்லாம் தவிர்த்து வேறெதுவும் இல்லை. ஜகாத்தை யாருக்கு வழங்க வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டுதல் மூலம் ஏழ்மையை ஒழிக்க இஸ்லாம் பரவலாகத் திட்டமிட்டுள்ளது.

எனினும் நம்மவர்கள் ஏழைகளை வீடுகளில் அடைத்து வைத்து, விரலில் மையிட்டு படபடக்கும் கரண்ஸியை கொடுக்கிறார்கள். இன்னும் சிலரோ வேட்டி-சேலை என்று பொருளாக வழங்குகிறார்கள். பைத்துல்மால் போன்ற நலநிதி நிறுவனங்கள் இருந்தும் இந்நிலை நீடிக்கின்றன என்றால் நமது மார்க்கப்புரிதல் சரியில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

பகட்டுக்காக நிறைவேற்றும் கடமையல்ல ஜகாத் மாறாக ஏழைகளின் உரிமை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

கேள்விகள்:

1) சம்சுல் இஸ்லாம் சங்கம் தேர்தல் குறித்த செய்திகள் தினந்தோறும் வந்த வண்ணமுள்ளன. சட்டமன்ற தேர்தலைப்போல் பரபரப்பாக இருப்பதாக ஊர் நண்பர் சொன்னார். முஹல்லா சங்க தேர்தலுக்கு இத்தனை ஆரவாரங்கள் தேவையா?

2) தராவிஹ் தொழுகை 8+3 என்று சொல்லிவந்த XYZ ஜமாத்தினர் துபையில் வெளியிட்ட வாராந்திர நோட்டீஸில் ரமலானில் இரவுத் தொழுகை 20 ரகாத் என்று இருப்பதாக நண்பரொருவர் சொன்னார். அதாவது 20 ரக்காத் 'வித்ரு' என்று தொழலாம் என்று சொல்லப்பட்டிருந்ததாம்!

வித்ரு ஒற்றைப்படை என்றிருக்கும்போது 20 ரக்காத் எப்படி ஒற்றைப்படை ஆகும்? இரண்டிரண்டாக 20 ரக்காத் தொழலாம் என்று சொல்வது சரியெனில் ஏன் இத்தனை வருடங்களாக அதை அவர்கள் சொல்லவில்லை? தராவிஹ் என்றபெயரில்தான் 20 ரகாத் தொழக்கூடாது வித்ரு என்ற பெயரில் 20 ரகாத் தொழலாம் என்றால் இத்தனை வருட களேபரங்களுக்கு பெயர்க்குழப்பம் தான் காரணமா?

3) அதிரை எக்ஸ்ப்ரஸில் எழுதுபவர்கள் தங்கள் அடையாளத்துடன் எழுதச் சொல்லி சிலர் எழுத்துப்போர் செய்தார்கள். அடையாளத்தைச் சொன்னபிறகு அவர்களெல்லாம் எங்கு போய் ஒழிந்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு சமயம் யாரிவன்? என்று அறிவதுதான் அவர்களின் நோக்கமாக இருந்ததோ?

இதையெல்லாம் எழுதத் தோன்றியதால் எழுதியுள்ளேன். மற்றவர்களும் தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் பரஸ்பரம் பயனுள்ளதாக இருக்கும்.

"கற்றது கைமண் அளவு - கல்லாதது கடலளவு"

அன்புடன்,
அபூஅஸீலா
Share:

THE REMINDER

ஏக இறைவன் அல்லாஹ்  கட்டளையிட்ட ஏழைகளுக்கு செலுத்தவேண்டிய வரியை (ஜகாத்) செலுத்திவிட்டீர்களா?

அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம்!!

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)
2:177

Share:

உதவி செய்பவர்களுக்கு உதவுங்கள்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்...

அதிரை பைத்துல்மால் கடந்த 17 ஆண்டுகளாக அதிரை மற்றும் சுற்றுவட்டார ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு பொருளாதார உதவித் திட்டங்களைச் செய்து வருவதை அறிவீர்கள்.

அதிரைவாசிகளிடமிருந்து ஜகாத்,ஃபித்ரா தர்மங்களை வசூலித்து மார்க்க வழிகாட்டலின்படி விநியோகித்து வருகிறது. எவ்வித மீடியா விளம்பரமும் இன்றி,முஹல்லா வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தகுதியுள்ள ஏழை, எளியவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கண்ணியத்திற்கு எவ்விதத்திலும் பங்கம் ஏற்படாத வகையில் செயல்பட்டு வருகிறது.ரமலான் மாதம் மட்டுமின்றி ஆண்டு முழுமைக்குமான திட்டங்கள் தீட்டி ஜகாத் நிதியை அல்-குர்ஆன் வழிகாட்டியுள்ளபடி விநியோகித்து வருகிறது. எவ்வித ஆதரவுமில்லாத 50 ஏழை மற்றும் முதியோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தலா ரூ.250 வீதம் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கி அவர்களின் குறைந்த பட்ச உணவுத்தேவைகளை நிறைவேற்றி வருகிறது.

அதிரை பைத்துல்மால் அதிரைவாசிகளிடமிருந்து மட்டுமே நன்கொடை வசூலித்து வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமித்து அவர்களின் இல்லங்களுக்கே சென்று நன்கொடைகளை வசூல் செய்து வருகிறது. பல்வேறு சமுதாய அமைப்புகளும் ரமலான் நன்கொடை வசூலிப்பதால் வழக்கமாக அதிரை பைத்துல்மால் பெற்றுவந்த நன்கொடை குறைந்துள்ளன.இதனால், வழக்கமாக அதிரை பைத்துல்மாலிடமிருந்து உதவி பெற்று வந்தவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனினும், அவர்கள் ஏமாற்றம் அடையாமல் தடையின்றி உதவி பெறுவதை உறுதி செய்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

அன்பார்ந்த அதிரைவாசிகளே, இந்த ரமலானில் நீங்கள் வழங்கும் ஸதகா மூலம் மட்டுமே ஆண்டுமுழுவதும் பல்வேறு நலஉதவிகளை தடையின்றி செயல்படுத்த முடியும் என்பதால் அருள்கூர்ந்து உங்கள் நன்கொடைகளை அதிரை பைத்துல்மாலுக்கு மனமுவந்து வழங்குங்கள். இணைப்பிலுள்ள சுற்றறிக்கைகளை உலகெங்கும் பரவியுள்ள அதிரைவாசிகளுக்கு அனுப்பி, அதிரை பைத்துல்மாலின் சேவைகள் தொடர ஊக்கமும் துஆவும் வழங்கி உதவுங்கள்.

துபையில் உங்கள் ஃபித்ரா, ஜகாத் மற்றும் நன்கொடைகளைச் செலுத்த கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

S.M.A.சாகுல் ஹமீது - 050-3792167
அமீனுத்தீன் - 050-5050922
ஜமாலுதீன் - 050-4737200


அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் துபை கிளை
Share:

கோவை சிறைவாசிகளின் பொருளாதார கோரிக்கை - வீடியோ


ABUL HASSAN SATHALI(ADIRAI)
9842653248
NASEER(KOVAI)
9787450725
SALEEM BATHUSHA
9786675408
Share:

ஷ‌ம்சுல் இஸ்லாம் ச‌ங்க‌ நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான.

ஷ‌ம்சுல் இஸ்லாம் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள் தேர்தல் ச‌ம்ப‌ந்த‌மாக‌ பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க http://adiraixpress.wikia.com/wiki/Samsul islam sangam பக்கத்திற்கு செல்லவும். அங்கு உங்களது கருத்துக்களை பதிய edit this page, அல்லது Leave a message லிங்கை சொடுக்கி தெரிவிக்கலாம். மறக்காமல் save page பொத்தானை அழுத்தவும்.

அதிரை எக்ஸ்பிரஸில் பின்னூட்ட வசதி நிறுத்தப்பட்டதால் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இடமாக அதனை உபயோகித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வீடியோ நீக்கப்பட்டது

அதிரை எக்ஸ்பிரஸின் பெயரை முன் அனுமதியின்றி பேட்டியில் பயன்படுத்தியதால் வீடியோ நீக்கப்பட்டது. மேற்கண்ட பேட்டியை அதிரை எக்ஸ்பிரஸ் குழு எடுக்கவில்லை

-- அதிரை எக்ஸ்பிரஸ்
Share:

இழந்த சக்தியை மீட்க எடுக்கப்படும் தவறான முடிவு (Energy drinks for iftar wrong choice)

Energy drinks for iftar wrong choice
By SARAH ABDULLAH | ARAB NEWS
 

JEDDAH: It is true that after a long day of fasting and partaking of the iftar one can usually feel weak and in need of a long nap, but to get around this many youths in the Kingdom have turned to taking energy drinks to break their fasts in order to give them a boost to enjoy Ramadan nightly activities and to stay up until the pre-dawn suhur.

"I prefer an energy drink after I have eaten my iftar meal," said 22-year-old Saudi Afnan Labban. "It gives me a pick-me-up to go shopping and to enjoy other Ramadan activities with my family and friends."

Faiz Al-Otaibi, a 19-year-old Makkawi, said using energy drinks has "become the newest way we have found of beating the fatigue we feel after fasting and allowing us to go out with our friends to clubs and malls."

However, nutritionists advise against using such beverages to break fasts.
"After fasting the body is in need of fluids to cleanse and replenish the body as well as help moderately adjust sugar levels in the blood," said Dr. Khalid Madani, general supervisor of the Nutrition Department at the Ministry of Health and vice president of the Saudi Society for Food and Nutrition.

"Consuming energy drinks which are high in sugar and caffeine can cause many health problems, such as kidney and liver damage and cause conditions such as diabetes and symptoms such as dizziness, nervousness, and severe headaches."

Water is considered the best fluid to drink during fast-breaking. A recent article by researchers at Nova Southeastern University in the US state of Florida — published in The Physician and Sportsmedicine journal — said energy drinks "may cause adverse effects, particularly with high episodic consumption."

Energy drinks contain as much as 505 mg of caffeine in a single 355 ml can, the same as contained in 14 cans of cola, in addition to high amounts of sugar and taurine.

Stephanie Ballard, one of the US researchers who coauthored the article also said there is conflicting evidence about whether these drinks contribute to weight loss.
Ballard also indicated that the US Food and Drug Administration (FDA) determined the acceptable amount of caffeine to be 71 mg in a 355 ml can while energy drinks contain 505 mg in the same container.

"Many people think that one cannot overdose on caffeine, but it is a drug as any other and consumption of too much caffeine whether from energy drinks or other sources can cause sleepy and nervous tension, osteoporosis, heart disease, vascular problems as well as complications in the intestine and even death," she said.

Saleh Bawazir, vice president of the Saudi Food and Drug Authority (SFDA), in a previous interview with Arab News concerning energy drinks, said he is not aware of any complaints concerning local products but said if consumers do find a problem they can lodge their complaints at their website at: www.sfda.gov.sa

இழந்த சக்தியை மீட்கஎடுக்கப்படும் தவறான முடிவு.

வருடத்தில் பதினொன்று மாதங்கள் மனிதன் தன் உடலின் தேவைக்கேற்ப திட, திரவப்பொருட்களை உணவாக தேவையான நேரத்தில் பொருளாதார வசதிக்கேற்பஉட்கொள்கின்றான். உயிரை வளர்ப்பதாக கூறி தன் வயிற்றை வளர்ப்பவர்களும் அதில் உண்டு. இஸ்லாம் அரபு மாதங்களில் ஒன்பதாவது மாதத்தை புனித ரமளானாக்கி அதை மனிதர்கள் காலை முதல் மாலை வரை உணவு, நீரின்றி பசித்திருந்து உணவு, குடிநீரின்றி அன்றாடம் வாடும் எத்தனையோ வரியவர்களின் சொல்லாத்துயரங்களையும், வேதனைகளையும் உள்ளவர்களும் உணரச்செய்ய வேண்டி ஒரு மாத காலம் இறைவன் இந்த சிறந்த ஏற்பாட்டை முந்தைய சமுதாயங்கள் போல் கடைசி மனித சமூகம் வரை வர இருக்கும் அனைவருக்கும் கட்டாயக்கடமையாகஏற்படுத்தித்தந்துள்ளான்.

மற்ற பிற மாதங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பை இம்மாதத்திற்கு வழங்கி உள்ளான். மாமறை திருக்குர்'ஆன் இறக்கப்பட்டது முதல் மனிதன் மனிதனாக வாழ தேவையான எல்லா வாழ்க்கைப்பாடத்தையும் எம்பெருமானார் நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் நமக்கு கற்றுத்தருகிறான்.

அல்ஹம்துலில்லாஹ் நாமும் அந்த புனித மாதத்தில் பயணித்து வருகின்றோம். மார்க்கம் முறையே போதித்தது போல் நாமும் அதிகமதிகம் நற்கருமங்களையும், நல்ல பல அமல்களையும் செய்து ஈருலக பாக்கியங்கள் எல்லாவற்றையும் நம்மை படைத்தவனிடமே சன்மானமாக பெற்றிடுவோம் இன்ஷா அல்லாஹ்...

நோன்பு திறக்கும் சமயம் நாம் காலையிலிருந்து மாலை வரை பசித்திருந்து, தாகித்திருந்து வரும் உடல் மற்றும் மனச்சோர்வை போக்க உடலுக்கு (தற்காலிக) உடனடி சக்தி தருவதாக சொல்லப்படும் பல செயற்கையானவேதியியல் பொருட்களால் உருவாக்கப்படும் குளிர்பானங்கள் (பைசன், ரெட் புல், பவர் ஹார்ஸ் போன்ற) உடலுக்கு பல பக்க விளைவுகளை குறிப்பாக நுரையீரல், சிறுநீரக கோளாறுகளையும் இன்ன பிற உடல் உபாதைகளையும் தருவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அதை தவிர்க்க வேண்டுமாய்  கேட்டுக்கொள்கிறார்கள். (பார்க்க மேலே: அரபு நியூஸின் ஆங்கிலக்கட்டுரை) (நம்மூரில் பெரும்பாலான வீடுகளில்  இஞ்சை தட்டிப்போட்டு காய்ச்சப்படும் தேத்தண்ணி தரும் உடனடி சுறுசுறுப்பையும், விறுவிறுப்பையும் அவர்கள் அறியமாட்டார்கள் போலும்).

நோன்பு திறக்கும் சமயம் நம்மில் பெரும்பாலானோர் (ஆக்கப்பொறுத்தவன் ஆரப்பொறுக்க வில்லை) என்று பெரியவர்கள் சொல்வது போல் காலையிலிருந்து பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் பல நல்ல அமல்கள் செய்து விட்டு நோன்பு திறக்கும் சமயம் பல விசயங்களில் பொறுமை இழந்து விடுகிறோம். எளிதில் கோபம் வந்து விடுகிறது. நோன்பு திறக்கும் சமயம் வாகன ஓட்டிகளுக்கு கோபம் இன்னும் அதிகமாக வருகிறது. அதனால் பல விபத்துக்கள் அரபு நாடுகளில் அன்றாடம் நடந்து வருவதாகசமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

நம் மார்க்கம் இஸ்லாம் எக்காலத்திற்கும் அறிவியலோடு ஒத்துப்போகக்கூடிய மற்றும் அறிவியலே வியந்து தன் மூக்கில் கைவைக்கும் அளவுக்கு பல பொக்கிஷத்தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இஸ்லாத்திற்கு விரோதமான சக்திகள் சொல்வது போல் இஸ்லாம் ஒரு கண்மூடித்தனமான, காட்டுமிராண்டியான மார்க்கமாக இருந்திருந்தால் தன் கட்டாயக்கடமையான புனித ரமளான் நோன்பை பச்சிளம் குழந்தை முதல், சிறுவர், சிறுமியர், தீராத நோயுடையோர், மாதவிடாய் பெண்கள், புத்தி சுவாதீனமானவர்கள், தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் என எல்லோரையும் கட்டாயம் பிடிக்க கட்டளையிட்டிருக்குமல்லவா? நிச்சயமாக இஸ்லாம் மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்டு எதையும் செய்ய ஒரு போதும் ஏவியதில்லை..

சிந்திப்போமாக....

ம் எல்லோரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக, நம் எல்லா நல்லமல்களையும் ஏற்றுக்கொள்வானாக....ஆமீன்....

மு.செ.மு. நெய்னா முஹம்மது 
சவூதி அரேபியா.
Share: