பரப்பப்பட்ட புருடாக்களும், மறைக்கப்பட்ட வரலாறுகளும்..(நமக்கென்று ஏன் வேண்டும் ஊடகம்? பகுதி 2)நமது தலைநகர் டெல்லி, புது டெல்லி, மற்றும் பழைய டெல்லி என்று அழைக்கப்படுகிறது. பழைய டெல்லி என்றழைக்கப்படும் புரதான சின்னங்கலடங்கிய, அதாவது செங்கோட்டை, குதுப்மினார், ஜாமா மசூதி போன்ற வரலாற்று புகழ்பெற்ற கட்டிடங்கள் அடங்கிய பழைய டெல்லியில் பெரும்பாலும் வசிக்கும் இஸ்லாமியர்கள் வறுமைக்கோட்டிற்கு மிகவும் கீழே இருப்பவர்களை காணப்படுகிறார்கள். அவர்களிடம் இஸ்லாமிய பெயர்கள் மட்டுமே இருக்கின்றது.. மற்றபடி அவர்களது பழக்க வழக்கங்கள் போதைக்கு அடிமைப்பட்டவர்களாய் காணப்பப்டுகிரார்கள். ஜாமா மசூதி, செங்கோட்டை போன்ற சுற்றியுள்ள பகுதிகளை வசிக்கும் பெரும்பான்மையான இஸ்லாமிய மக்கள், ரிக்ஷா, ஆட்டோ, ஓட்டும் தொழிலாளர்களாகவும், சுமைதூக்கும் தொழிலாளர்களாகவுமே இருக்கிறார்கள்.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிற்கு வருகை தந்த - கவனிக்கவும், வருகைதந்த முகலாயர்கள் - இந்தியர்களின் விருப்பத்திற்கிணங்க தான் ஆட்சி புரிந்தார்கள். அதாவது கி.பி. 1526 நடைபெற்ற முதல் பானிபட் போர் எனபது, அப்போது டெல்லியை ஆண்ட மன்னன் இப்ராஹீம் லோடி என்பவனுக்கும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த பாபர் என்பவருக்கும் நடந்தது. இந்த போரில் தான் முதன்முறையாக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன எனபது வரலாறு.

அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹீம் லோடி என்பவரின் ஆட்சியை விரும்பாத மக்கள் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மன்னர் பாபரை அழைத்தனர். இதைதான் வரலாற்று புரட்டர்கள் முகலாய படையெடுப்பு என்ற நச்சுகருத்தை நமக்கு சிறுவயதிலேயே திணிக்கின்றனர்.அது படைஎடுப்பல்ல, அப்போதைய மக்களின் விருப்பம். அதனால்தான் பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு எழுதிய கடிதத்தில் கூட, பசுவை தெய்வமாக வணங்கும் மக்கள் நிறைந்த நாடு இது, எனவே பசுவை இறைச்சிக்காக அறுக்கவேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.படையெடுத்துவந்த மன்னன் அந்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவானா, தன்னிஷ்ட்டப்படி ஆட்சி செய்வானா?

அதன்படி, பாபர், ஷெர்ஷா, ஹுமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப் என்று வரிசயாக இஸ்லாமிய மன்னர்கள் தொடர்ந்து - சொந்த விசயங்களில் அவர்கள் தவறானவர்களாக இருந்திருக்கலாம்..ஆனால் ஆட்சி என்று வரும்போது, அன்றைய மக்கள் விரும்பிய- நல்லாட்சிகளேயே வழங்கி வந்தனர். அது மட்டுமல்ல, பல்வேறு குட்டி குட்டி ராஜ்யங்கலாகவும், சமஸ்தானங்களாகவும், தமக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டு பல்வேறு பிரதேசங்களாக இருந்த இந்த நாட்டை, இந்தியா என்ற ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைத்தது முகலாயர்களின் சாதனை.
அவுரங்கசீப் வரை அனைத்து மக்களின் நலனை கொண்டே எல்லாரும் ஆட்சி செய்த காரணத்தினால்தான், அவுரங்கசீப்பினால் தனது ராஜ்யத்தை தென்னிந்தியாவரை விஸ்தரிக்க முடிந்தது. அவர் ஒரு பரிபூரண இஸ்லாமியராக - கொள்கையுடன் வாழந்த காரணத்தினாலேயே இந்த வரலாற்று புரட்டர்களால், முகலாய மன்னர்களிலேயே மோசமானவராக சித்தரிக்கபடுகிறார்.அவர் இருக்கும்வரை கட்டுக்கோப்பாக இருந்த முகலாய சாம்ராஜ்யம், அவுரங்கசீப்பிற்கு பின்னர்தான் சீரழிந்தது. இறுதியில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட கொல்லப்பட்ட முகலாய கடைசி சக்கரவர்த்தி "ஷா" மன்னரின் ராஜ்ஜியம் அவரது அரண்மைக்குள்ளே மட்டும்தான் என்றால் பார்த்துக்கொள்ளவேண்டியது.
ஆனால் இன்று முகலாய மன்னர்களின் வாரிசுகள் யார், எங்கிருக்கிறார்கள் என்ற எந்த ஒரு சான்றும் எனக்கு தெரிந்து இல்லை என்றே நினைக்கிறேன்..(அப்படி இருந்தால் யாராவது தெரிவியுங்களேன்..பிளீஸ் )
முன்னூறு ஆண்டுகளுக்கும் இந்தியாவை ஆண்ட இந்த மன்னர்களின் வாரிசுகள் எங்கே சென்றார்கள்? அவர்களின் வாரிசுகதான் பழைய டெல்லியில் வசிக்கும் சாலையோர வாசிகளோ.? அதனால்தான் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு அடித்தட்டு மக்களைவிட மோசமான நிலையில் இருகிறார்களோ?

ஆனால்...
நாற்பதினாயிரம் மனைவிகளை மணந்து, ஒரு முனிவர் கொடுத்த ஏதோ ஒரு கனியின் மூலம் நான்கு மகன்களை பெற்ற தசரதன்...

நூறு பேர் கொண்ட படையை வென்ற ஐந்து பேர்கொண்ட பஞ்ச பாண்டவர்கள் -

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் வைத்திருந்த மணிமேகலை

சாவே வராத நெல்லிக்கனியை தின்ற அவ்வையார்

தனது கன்றை கொன்ற மன்னனின் மகனை கம்ப்ளைன்ட் செய்த பசு மாட்டிற்காக (?) மகனை தேர் எற்றிகொன்ற மனுநீதி சோழன்

ஒரு குச்சியை வைத்தால் நின்று விடும் முல்லைக்கு விலை மதிப்புள்ள தேரை கொடுத்த பாரி

மயிலுக்கு குளிர் எடுக்கும் என்று போர்வை வழங்கிய பேகன்

கணவனுக்கு தண்டனை வழங்கியதற்காக மதுரையையே எரித்த கண்ணகி.

போன்ற புனைக்கதைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், இங்கே - நம் நாட்டை பல நூறு வருடங்கள் ஆண்ட முகலாய சரித்திரத்திற்கு கொடுக்கப்படாமல் இருப்பது வரலாற்று மோசடி என்பதைத்தவிர வேறு என்ன இருக்க முடியும்?
Share:

அதிரையில் – சமையல் GAS தட்டுப்பாடு !முந்தைய காலக்கட்டங்களில் நமதூரில் சமையலுக்காக பயன்படுத்தி வந்த விறகுகள் (அதிரையிலிருந்து அருகில் உள்ள அலையாத்தி காடுகளுக்குச் சென்று விறகு வெட்டி வந்து சமைப்பார்களாம். இவ்வாறு எனது சிறுவயதில் என்னுடைய உம்மம்மா மற்றும் வாப்புச்சி சொல்லக்கேட்டுள்ளேன் .) தேங்காய் மட்டைகள், பாலை, பூக்கமலை, கொரங்கு மட்டைகள், கொட்டாங்கட்சிகளில் அடுப்பு எரித்து வந்த நமது சமுதாயம் தற்போதுள்ள நவ நாகரிக உலகில் GAS STOVE ( 2, 4, 5 PCS BURNER களில் ), ELECTRIC HOT PLATES, ELECTRIC INDUCTION COOKER மற்றும் COOKER HOODS போன்ற நவீன சாதனங்களை காலத்திற்கேற்ப மாற்றி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாதனங்களைப் பயன்படுத்த முக்கிய ஆதாரமாக உள்ளது GAS மற்றும் ELECTRIC POWER. நமதூரில் 80 % மக்கள்கள் GAS CONNECTION ஐ அரசு நிறுவனமான INDANE முலமாகப் பெற்றுள்ளார்கள்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தங்குதடையின்றி BOOKING செய்து ஒரு வார காலக்கெடுவுகளில் கிடைத்து வந்த சிலிண்டர்கள் தற்போது ஒரு BOOKING க்கு 25 நாட்கள் எடுத்துக்கொண்டு டெலிவரி செய்கிறார்கள். மறு BOOKING செய்ய மறுபடியும் 25 நாட்கள் கழித்துதான் BOOKING ஐ உறுதி செய்கிறார்கள். ஆக மொத்தத்தில் நுகர்வோருக்குப் போய்ச் சேர இரண்டு மாதங்களாகி விடுகிறது. அதுவும் தற்போது மழைக் காலத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விறகுகளையும் பயன்படுத்த முடியாமல் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.இக்குறைகளைப்பற்றி அதிரையில் உள்ள பொதுமக்கள் சிலரிடம் கருத்து கேட்டபொழுது....


பாதுஷா ( தொழில் அதிபர் ) :-நான் கடந்த 5-11-2001 அன்று BOOKING செய்தேன். ஆனால் இன்று (30-11-2011 ) வரையில் எனக்கு டெலிவரி செய்யவில்லை. நான் போனில் AGENCY ஐ தொடர்பு கொண்டு கேட்டபொழுது இன்னும் LOAD வர வில்லை என்கிறார்கள்.
பெயர் சொல்லவிரும்பாத ஒரு ஏழைப் பெண்மணி :-
நான் இலவசமாகக் கிடைத்த கலைஞர் காஸ் இணைப்பை பெற்றுள்ளேன். முதல் புக்கிங் செய்து பெறப்பட்ட சிலிண்டர் கிடைத்தவுடன் மறு சிலிண்டர் கிடைக்க சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் காத்துக்கொண்டு இருக்க வேண்டியுள்ளது.
அப்துல் காசிம் ( ஆட்டோ டிரைவர் ) :-
‘ நான் ஒரு இணைப்பை வைத்துள்ளேன். இருபது நாட்களுக்குள் காஸ் தீர்ந்து விடுகிறது. மறு சிலிண்டர் கிடைக்கும் வரை விறகு, மட்டைகளை சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார் எனது கர்ப்பிணி மனைவி. அவள் புகையினால் ரொம்ப கஷ்டப்படுகிறாள்.’கபீரா ( வாடகை வீட்டில் வசிக்கும் பெண் ) :-எங்கள் வீட்டில் காஸ் இணைப்பு இல்லை.பஷீர் அகமது ( மளிகை கடை வைத்துருப்பவர் ) :-நான் புக்கிங் செய்து இருபது நாட்களாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் AGENCY க்கு போன் செய்து கேட்கும்போதும் இன்னும் ஒன்று , இரண்டு வாரங்களில் கிடைக்கும் என்பதே பதிலாக உள்ளது.
பெயர் சொல்லவிரும்பாத சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் :-
சிலிண்டர்களை ஆம்னி வேன், ஆட்டோ ஓட்டும் நபர்களிடம் கூடுதல் விலைக்கு விற்று விடுகிறார்கள் என்றும் நுகர்வோர் பயன்படுத்தும் சிலிண்டர்களை COMMERCIAL பயன்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள் என்று தன் ஆதங்கத்தை வெளிபடுத்துகிறார்.மேற்கூறிய மக்களின் குறைகளைப்பற்றி INDANE ஏஜென்சியை தொடர்புகொண்டு கேட்டபொழுது அவர்களின் பதில், "முன்பு வாரம் ஏழு லோடு ஓசூரிலிருந்து வரும். தற்பொழுது இரண்டு லோடுகளே வருகிறது. அதை PRIORITY பிரகாரம் டெலிவரி செய்கிறோம்" என்கிறார்கள்.ஆக மொத்தத்தில் பாதிக்கப்படுவது மக்களாகவே உள்ளார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இக்குறைகளைப் போக்கி மக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.மக்களின் சார்பாக,

M. நிஜாமுதீன் B.sc.

( 9442038961 )

Share:

துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!


வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்ட...ியுள்ளது. 


சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப நாடுகடத்தவும் செய்கின்றது. எனினும், துபாய் மோகத்தால் இத்தகைய சட்டவிரோத வேலைவாய்ப்புகள் வெவ்வேறு வகைகளில் நடந்து வருவதை அந்நாட்டு அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்குமுன்பு குடிபுகல் நடைமுறைகளை மாற்றியமைத்து பல கட்டுப்பாடுகளை விதித்தது. அவ்வகையில் சுற்றுலாப் பயணியாக வந்தவர்கள் சம்பளத்திற்கோ அல்லது பயிற்சி பெறும்நோக்கிலோ வேலைசெய்வதைக் கட்டுப்படுத்தியது. எனினும், அங்குள்ள சில நிறுவனங்கள் உடனடியாக நிரந்தர ஊழியர்களை நியமிப்பதைவிட சுற்றுலா விசா காலம் முடிவதற்குள் வேலைவாங்கிக்கொண்டு, அவகாசம் முடியும் தருவாயில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற ஒப்புக்கொள்ளச் செய்து பிறகு வேலைக்கான விசாவுக்கான நடைமுறையை பின்பற்றுகின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய், மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் குறுகியகால வேலைவாய்ப்பு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பணியாளர் நலத்துறை அமைச்சக உயரதிகாரி குமைத் பின் டீமாஸ் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, குறுகிய காலத்திற்கு விசா தேவைப்படும் நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகத்தக்க குறுகிய கால "குறிக்கோள் விசா" (Mission Visa) கோரி விண்ணப்பிக்கலாம்.

இது, ஏற்கனவே அந்நாட்டிலுள்ள தற்காலிகப் பணியாளர்களுக்கும் ,புதிதாக விசா வேண்டுபவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறுகிய கால விசா வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் அந்நாட்டிற்குள் வந்து செல்லவேண்டும். அதிகபட்சம் 90 நாட்கள் இந்த விசா அனுமதியுடன் வேலை செய்யலாம். புதுப்பிக்க வேண்டும் எனில் நாட்டைவிட்டு வெளியேறிய 90 நாட்கள் கழித்தே மீண்டும் புதுப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் குறுகியகால விசா மூலம் வருகை தந்தவர்களுக்கு நிரந்தர வேலைகிடைக்கும் பட்சத்தில் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

அப்துல் ஜலீல்
கீழத்தெரு முஹல்லா
துபாய்
Share:

ஆண்ட‌ கட்சியும், ஆளும் கட்சியும்


ஆண்டு முடித்த கட்சி ஆளும் கட்சியையும், ஆளும் கட்சி ஆண்டு முடித்த கட்சியையும் ஒருவருக்கொருவர் குறை சொல்லியே நலத்திட்டங்கள் பல‌ மக்களுக்கு சென்றடையாமல் அவர்களை நட்டாற்றில் நிறுத்தி வேடிக்கைப்பார்த்து வருவது இன்றைய நாட்டு/ஊர் நடப்பாக இருக்கின்றது.

மேற்க‌ண்ட‌ ம‌க்க‌ள் விரோத‌ போக்கும், ஊர் நலனுக்கு வேட்டு வைக்கும் தவறான அணுகு முறையும் ந‌ம் ஊரில் நட‌ந்தேறிவிட‌க்கூடாது என்ப‌தே ந‌ம் எல்லோரின் எதிர்பார்ப்பும் ஆவ‌லும்.

மனிதர்களின் ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ளையும் செய‌ல்க‌ளையும் ம‌ன‌தார‌ பாராட்ட‌ ம‌ன‌ம் இற‌ங்கி வ‌ருவ‌தில்லை. குறை சொல்ல‌ ம‌ட்டும் ஏனோ சிம்மாச‌ன‌ம் இட்டு தானே அம‌ர்ந்து கொள்கிற‌து.

க‌ட்சிக‌ள் பேத‌மின்றி, காழ்ப்புண‌ர்ச்சியின்றி ம‌ற்றும் மாற்றான் தாய் வீட்டுப்பிள்ளை போல் பொடுபோக்காக க‌ருதாம‌ல் எங்கெங்கெல்லாம் ம‌க்க‌ளால் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ (கட்சிசார்ந்த, சாராத) த‌லைவ‌ர்கள் உள்ள‌ன‌ரோ அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ உத‌விக‌ளை செய்வ‌துடன் அவர்களின் கோரிக்கைக‌ளையும் நிறைவேற்ற‌ ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ளுக்கு முழு பொறுப்பும் க‌ட‌மையும் உண்டு. அப்பொழுது தான் ந‌ம் பார‌த‌ம் உள்நாட்டிலும் உல‌க‌ அர‌ங்கிலும் ஒளிந்து கொள்ளாமல் பிரகாசமாய் ஒளிரும்.

மின் த‌ட்டுப்பாடு ஒரு பிரதான‌ பிர‌ச்சினையாக‌ ந‌ம் நாட்டில் இன்று இருந்து வ‌ருவ‌தால், அத‌ற்கு மிக‌வும் முக்கிய‌த்துவ‌ம் த‌ந்து அதை க‌ளைய‌ முன்வ‌ர‌ வேண்டும். இதில் ந‌ல்ல‌ பெய‌ரை யாரும் த‌ட்டிச்சென்று விடுவாரோ? என்ற‌ அச்ச‌ம் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கும் அத‌ன் த‌லைவ‌ர்க‌ளுக்கும் தேவையில்லை. க‌ல்வெட்டில் யார் பெய‌ர் இருந்தால் என்ன‌? மின்வெட்டில்லா மாநில‌மாக‌ மாற்றிக்காட்டினால் ந‌ல்ல‌து தானே?

ஊரில் அறிவிக்க‌ப்ப‌ட்டோ அல்ல‌து அறிவிக்க‌ப்ப‌டாம‌லோ எந்நேர‌மும் வ‌ரும் மின்த‌டையும் அதைத் தொட‌ர்ந்து வ‌ரும் கொசுக்க‌டியும் குறைந்த‌ கால‌ விடுமுறையில் ஊர் செல்லும் ந‌ம்மை ஓட‌, ஓட‌ விர‌ட்டி எங்கோ நாடு க‌ட‌த்தி விடுகிற‌து. தாய் நாட்டின் மேல் ஒரு பிடிமான‌ம‌ற்ற‌ த‌ன்மையையும் வெறுப்பையும் த‌ற்காலிக‌மாக‌ ஏற்ப‌டுத்தி விடுகின்ற‌ன‌. என்ன‌தான் தாய் த‌ன் குழ‌ந்தையை க‌த‌ற‌க் க‌த‌ற‌ அடித்தாலும் "உம்மா/அம்மா" என்றே அக்குழ‌ந்தை அடித்த த‌ன் தாயை க‌ட்டித்த‌ழுவ‌ ஓடிச்செல்வ‌து போல் நிரந்த‌ர‌மாக‌ த‌ன் தாய் நாட்டின் மேல் ஒரு போதும் ந‌ம‌க்கு வெறுப்பு வ‌ந்து விடாது.

பெரும்பாலான‌ வீடுக‌ளில் இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) என்னும் மின்சார‌த் த‌டையின் போது மின்சாரத்தை சேமித்து உற்ப‌த்தி செய்து த‌ரும் க‌ருவி பொருத்த‌ப்ப‌ட்டுள்ள‌தால் எந்நேரமும் நிலவி வரும் மின்த‌டை ப‌ற்றி யாருக்கும் அக்க‌ரையும் க‌வ‌லையும் மற்றும் ம‌க்க‌ளின் அல்ல‌ல்க‌ளை அர‌சின் க‌வ‌னத்திற்கு ஜ‌ன‌நாய‌க‌ முறையில் கொண்டு வர‌ அவ‌ர‌வ‌ர் உள்ள‌த்தில் உருவாகி வெளியாகும் முய‌ற்சிக‌ள் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை. ஏதேதோ கார‌ண‌ங்க‌ள் சொல்லி ந‌ம் விவேக‌மான‌ முய‌ற்சிக‌ள் அவ்வ‌ப்பொழுது ம‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌து ஏனோ உண்மை.

வ‌ரும் கால‌ங்க‌ளில் வ‌ர‌க்கூடிய‌ தேர்த‌ல் அறிக்கையில் "வீடுக‌ளுக்கு இல‌வ‌ச‌ இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) க‌ருவி பொருத்த‌ப்ப‌டும்" என்று சொல்லும் க‌ட்சி அமோக‌ வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அம‌ர்ந்தாலும் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை.

மத்திய அரசு ப‌தினான்காயிர‌ம் கோடி செல‌வ‌ழிக்கும் வ‌ரை ப‌ல்லிளித்துக்கொண்டிருந்த‌ ம‌க்க‌ளும், அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளும் இன்று கூட‌ங்குள‌ம் அணுமின் உற்ப‌த்தி தொட‌ங்க‌ இருக்கும் இறுதி க‌ட்ட‌ நேர‌த்தில் வ‌ரிந்து க‌ட்டிக்கொண்டு அந்த‌ அணுமின் நிலைய‌த்தை மூட‌ க‌ள‌த்தில் குதித்திருப்ப‌து வேத‌னையான‌ வேடிக்கைய‌ன்றி வேறொன்றும் சொல்வ‌த‌ற்கில்லை.

மத்திய, மாநில அரசுகள் ஆங்காங்கே மக்களின் புகார்களுக்கென்று ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டு அது முழு அதிகாரத்துடன்/கட்டளையுடன் அரசியல் கலக்காமல் உடனுக்குடன் செயல்பட தனித்துவம் வாய்ந்த துறையாக எவ்வித தயக்கமும் இன்றி செயல்பட ஆவண செய்தாலே அன்றாடம் வரும் மக்கள் குறைகளையும், பிரச்சினைகளையும் தீர்க்க/போக்க முடியும் என்பதே என் ஆணித்தரமான கருத்து.

நமதூரில் ஆட்சி செய்த கட்சியும், ஆளும் கட்சியும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பதால் ஒருவருக்கொருவர் எதிரும், புதிருமாக இருந்து கொள்ளாமல் நல்ல‌ புரிந்துணர்வு ஏற்பட்டு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வித தடையுமின்றி நம் ஊருக்கு கொண்டு வந்து சேர்ப்பார்களேயானால் நம் ஊர் தமிழகத்திற்கு மட்டுமல்ல நம் நாட்டிற்கே ஒரு நல்ல முன்மாதிரியாக எல்லோராலும் நல்ல முறையில் எடுத்து பேசப்படும். இந்த அரிய வாய்ப்பை நம் ஊர் பயன்படுத்திக்கொள்ளுமா? அல்லது இந்த அரிய‌ வாய்ப்பை கொல்லுமா? என்பது போகப்போக தெரிய வரும்.

ந‌ல்ல‌வைக‌ளுக்காக நாட்கள் சில காத்திருப்பதால் ந‌ம‌க்கொன்றும் ந‌ட்ட‌ம் இல்லை தானே?

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து
Share:

வீட்டை விட்டு ஓடும் பெண்கள் "நரகத்தை நோக்கி"


இன்றைய சூழலில் நம் சமுதாய இளசுகள் செல்போன் மற்றும் நவீன கருவிகளின்பால் சென்று விரும்பத்தகாத காரியங்களில் ஈடு படுவதால் குடும்பத்தார்கள் சகிதம் தலைகுனிவை சந்திப்பது வாடிக்கையாகிவிட்டது

ந்த இழிசெயலை அப்படியே படமாக்கி இருக்கிறார் தயாரிப்பாளர்கடையநல்லூரை சார்ந்த ரஃபிக் ரோமன் .இந்த படம் ஒவ்வொரு சமுதாய மக்களும் கண்டிப்பாக பார்த்து பாதுகாக்க வேண்டிய குறும்படம் இந்த படத்தின் குறுந்தகடை அதிரையில் பெற சகோதரர் ஹாலித் (தமுமுக) அவர்களை தொடர்புகொண்டு பெற்றுகொள்ளலாம்.
தொடர்புகொள்ள வேண்டிய எண்: +91 9500668986
Share:

ஹஜ் யாத்திரை செல்ல பிப்-2012 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்!


இந்தியன் ஹஜ் கமிட்டி 2012 புனித ஹஜ் பயணத்திற்கான வேலைகளை இப்பொழுது முதலே துவங்கியுள்ளது இந்நிலையில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் 2012-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தெரிவித்தார். இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் கூறியது:

2012-ம் ஆண்டில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் பிப்ரவரிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஹஜ் பயணிகளிடம் பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.எனவும் அவர் தெரிவித்தார்.

Share:

லண்டன் (LONDON) வாழ் அதிரை நண்பர்களுக்கு ஒர் வேண்டுகோள்…

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அமீரகம் மற்றும் அதிரை போன்று லண்டனிலும் “அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF)” அமைப்பதற்கான முயற்ச்சியில் நமதூர் சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர், 


எனவே லண்டன் வாழ் அதிரை நண்பர்கள் அனைவரும் கீழ் காணும் சகோதரர்களை தொடர்பு கொண்டு இந்த நல்ல முயற்ச்சிற்க்கு தங்களின் முழூ ஒத்துழைப்பையும் தருமாறு 


அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


தொடர்புக்கு:

சகோ. குத்தூஸ் - 0044 740 405 2728  

சகோ. இம்தியாஸ் - 0044 746 639 3312

சகோ. இத்ரிஸ் - 0044 759 241 8177

சகோ. பாஸ்னியா - 0044 796 766 6288

மின்னஞ்சல் (email)    : aamflondon@gmail.com

இப்படிக்கு

Adirai All Muhallah Forum (AAMF)

அமீரக கிளை (UAE)
Share:

ஓ... ! பழங்கள் ! ! – HEALTH TIPS

1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்


2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்


3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.


4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்


5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி


6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்


7. ஆப்பிள் பழம் :-


வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.


8. நாவல் பழம் :- நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.


9. திரட்சை :-


1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்.


10. மஞ்சள் வழைப்பழம் :- மலச்சிக்கலைப் போக்கும்.


11. மாம்பழம் :-


மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகாpக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. 12. கொய்யாப்பழம் :-


உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும். சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.


13. பப்பாளி :-


மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். மாதவிடாய் சாpயான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நோpடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.


14. செர்ரி திராட்சை :- கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.


15. அன்னாசி :-


அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அhpய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றhக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.


16. விளாம்பழம் :-


விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜPரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.


17. மாதுளம் பழம் :-


மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிhpல் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.


18. வாழைப்பழம் :-


மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜPரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசாp உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தௌpவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தாpக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தாpக்க வாய்ப்பாகும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.


19. ஆரஞ்சுப்பழம் :-


ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றhக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.


20. திராட்சைப் பழம் :-


எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சாpயாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றhக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளாpல் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது. தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றhக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகாpப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜPரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.


21. பேரீச்சம்பழம் :-


தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.


22. எலுமிச்சம்பழம் :-


அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீhpல் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும். நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.தகவல் : M. நிஜாமுதீன் B.Sc
ஆதாரம் : சமுக வலைத்தளம் மற்றும் மருத்துவ நூல்கள்
Share:

வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…
இந்தப்படத்தின் நோக்கம்

நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லக்கூடிய ஒரு படிப்பினை.

முதலில் இந்த குறும் படத்தை எழுதி,இயக்கிய கடையநல்லூரை சார்ந்த ரபீக் ரோமான் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

படம் தரும் படிப்பினை

பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சித்திகரிக்கப்படும் பாத்திமா மற்றும் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் தஸ்லீமா.இந்த இருவர்தான் கதையின் கதாபாத்திரங்கள்.

அந்நிய ஆண்களுடன் பழகுவதினால் ஏற்படும் விளைவுகள் மிக கொடுரமானதாக இருக்கும் என்பதை மிக அருமையாக காட்டி உள்ளார் இயக்குனர் ரபீக் அவர்கள்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்லம் என்ற பெயரில் அதிக சுதந்திரம் கொடுப்பதினால் ஏற்படும் விளைவுகள், மிஸ்ஸிடு கால்களினால் மிஸ்ஸாகி போகும் பெண்களின் வாழ்க்கை என பெற்றோருக்கு அறிவுரை கூறும் படமாக உள்ளது.

ஆங்காங்கே குரான் வசனங்கள் சுட்டி காட்டபடுவது மிக அருமை.

தவறான வழியைத் தேர்ந்தெடுக்கும் இளம் பெண்கள், இந்தப் படத்தை பார்த்துத் திருந்த வேண்டும் என்பதே இயக்குனர் அவர்களின் நோக்கம்.

இந்த படத்தை தயாரித்தவர்களின் நோக்கம் வெற்றியடைய நாம் அனைவரும் துஆ செய்வோம்.

இத்துடன் இந்த படத்தின் குறுந்தகடு வேண்டுவோர் கீழ்காணும் தொலைப்பேசி எண்ணை (9944426360) தொடர்புகொண்டு பெற்றுகொள்ளலாம் .விலை ரூ 65 மட்டுமே !(தபால் செலவு தனி)

இந்த குறும்படம் சி.டி வடிவில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.வேண்டும் என்பவர்கள் kdnl.org@gmail.com என்ற முகவரிக்கு மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.
Share:

பிலால் நகர் மக்களுக்கு உதவிடுவீர்,வேண்டுகோள் ஒலிப்பேழை !!!

அதிரை பிலால் நகர் வெள்ள பாதிப்பு நிகழ்வுகளை அதிரையின் முக்கிய ஊடகங்கள் அவ்வபொழுது வலையேற்றி வந்த வண்ணம் உள்ளனர் .
ஆனால் பாதிக்கப்பட்ட இந்த ஏழைகளுக்கு இன்று வரை எந்த வித வாழ்வாதார உதவிகளை அரசும் .நம் சமுதாய மக்களும் செய்ய முன்வரவில்லை என தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார் ஜனாப் M.A. மரைக்கான் அவர்கள் .இவர் பிலால் நகர் பள்ளியின் சார்பில் நியமிக்கப்பட்ட ஐவரில் ஒருவராவார் .

adirai bilal nagar by
Share:

எல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்


இந்தியக் குடிமக்களுள் நெற்றியில் நாமம் தீட்டிய அல்லது நீறு பூசிய எவரும் தீவிரவாத இந்து அல்லர்; நெஞ்சில் சிலுவை அணிந்த எவரும் கிருத்துவ தீவிரவாதி அல்லர். ஆனால், தொப்பி அணிந்து தாடி வளர்த்திருந்தால் அவர் 'முஸ்லிம் தீவிரவாதி' என்பதை நமது தொலைக்காட்சி/அச்சு ஊடகங்கள் தீர்மானித்து வைத்திருக்கின்றன. குறைந்த பட்சம் முஸ்லிம் பெயர் ஒருவருக்கு இருந்தால் மட்டும் போதும்; அவர் தீவிரவாதி என அடையாளப்படுத்துவதற்கு எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன என்பதுபோல் நமது பெரும்பாலான ஊடகங்கள் செயல்படுகின்றன. 

பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் 'அதிபயங்கரமான ஐம்பது முஸ்லிம் தீவிரவாதிகள்' பட்டியல் ஒன்றை அண்மையில் நமது உள்துறை அமைச்சகம் தயாரித்தது. அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து, "இவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டது. 

நமது ஊடகங்களுக்கு இதைவிட வேறு தீனி வேண்டுமா? பேனைப் பெருச்சாளியாக்கி, நம் நாட்டின் எல்லா மொழி ஊடகங்களும் அதை எழுதித் தள்ளின  

பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருந்த வாஜுல் கமர் கான் என்பவர், இந்தியாவின் மும்பையை அடுத்துள்ள தானேவில்தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை சில நடுநிலை ஊடகங்கள் மூலம் வெளிவந்தது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "... சிறிய தவறு நடந்துவிட்டது. இத்தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்" என்று பெருந்தன்மையாக அறிவித்தார். 

அடுத்த சில நாட்களில் இரண்டாவது 'சிறிய தவறு' வெளிவந்தது. அதே 'அதிபயங்கரமானவர்களின் பட்டியலில்' 24ஆவது ஆளாக இருக்கும் இன்னொரு தீவிரவாதியான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில்தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமானது. முதல் தீவிரவாதியான வாஜுல் கமர் கான் என்பவராவது தானேவில் வசிக்கும் சாதாரண இந்திய முஸ்லிம். இரண்டாமவரான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் என்பவர் ஏற்கனவே 1993இல் மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு வழக்கில் 'சேர்க்கப்பட்டு'க் கடந்த 2010 பிப்ரவரி மாதம் கைதாகிச் சிறையில் இருப்பவர். http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/india/29563936_1_arthur-road-jail-mumbai-jail-special-tada-court 

மும்பை (ஆர்தர் சாலை) சிறையில் இருக்கும் ஃபெரோஸ் கானுக்கு எதிராக இண்டர்போலில் புகார் செய்து "தேடப்படும் குற்றவாளி" ஃபெரோஸ் கானுக்கு எதிராக ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு ஏறத்தாழ இரண்டாண்டுக்கும் மேலாக உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது நமது புலனாய்வுத்துறை. அது மட்டுமின்றி, மும்பைச் சிறையிலிருக்கும் ஃபெரோஸைப் பாகிஸ்தானில் 'பதுங்கி'க் கொண்டிருப்பதாகவும், இந்தத் தீவிரவாதியைப் பிடிப்பதற்குப் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சுமத்தியும் வந்தது. 

நமது நடு(!)நிலை ஊடகங்கள் பலவும் 'தேடப்படும் முஸ்லிம் தீவிரவாதி'களைப் பற்றித் தலைப்புச் செய்தி போட்டுத் தங்களது சேவையைச் செவ்வனே செய்தன. 

*****

ஏறத்தாழ இதேபோன்று ஒரு செய்தியை, சன் குழுமத்தின் நம்பர் ஒன்(?) மாலை இதழான 'தமிழ் முரசு' கடந்த 23.11.2011இல் தலைப்பாக்கி வெளியிட்டது. 

தலைப்பு: "8 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த தீவிரவாத இயக்கத் தலைவர் கைது!" http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943 

அதிரையைச் சேர்ந்த, தவ்ஃபீக்கைக் காவல்துறை 8 ஆண்டுகளாகத் தேடி வந்ததாகத் தலைப்பில் மட்டுமின்றி செய்தியின் உள்ளேயும் அழுத்தம் திருத்தமாக தமிழ் முரசு நாளிதழ் கூறியுள்ளது. காணொளியாக சன் தொலைக்காட்சியில் செய்தியும் சொல்லப்பட்டது. 

தமிழ் முரசு நாளிதழின் இதே செய்தியை அதே "8 ஆண்டுகள் ..." தலைப்பிட்டு நெல்லை ஆன்லைன், தன் செய்தியைப் போன்று அப்படியே வாந்தி எடுத்துப் பதித்துள்ளது. http://nellaionline.net/view/32_24021/20111123164224.html 

இதே செய்தியை தி ஹிண்டுவும் ஆங்கிலத்தில் செய்தி வெளியிட்டது. http://www.thehindu.com/news/states/other-states/article2651009.ece?homepage=true  பொடா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் இந்து நாளிதழ் மற்றொரு இடத்தில் 2008ஆம் ஆண்டு தவ்ஃபீக் பிணையில் வெளிவந்ததாகவும் கூறுகிறது. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் பிணையில் வெளிவருவது சுலபம் அல்ல என்பது இந்து நாளிதழுக்குத் தெரியாததன்று. பின் எந்த வழக்கில் அவர் பிணையில் வந்தார் என்பதையும், அவர்மீது போடப்பட்ட பொடா சட்டத்தின் நிலை என்னவாயிற்று என்பதையும் இந்து நாளிதழ் அறிந்து கொள்ள விரும்பவில்லை.

8 ஆண்டுகள் தவ்ஃபீக்கைத் தேடியதில் என்னதான் சிக்கல்? 

கடந்த 2.12.2002இல் மும்பையின் அம்ருத் நகரிலிருந்து காட்கோபர் இரயில் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் வெடிகுண்டு வெடித்து இருவர் பலியாயினர்; 49 பேர் காயமடைந்தனர். சுறுசுறு(!)ப்புக்குப் பேர்போன மும்பைக் காவல்துறை உடனடியாக, மும்பை ஜேஜே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் முஹம்மது அப்துல் மத்தீன், ஷேக் முஹம்மது முஸம்மில், ஸாஹிர் அஹ்மது, இம்ரான் அஹ்மது கான், முஹம்மது அல்தாஃப் இஸ்மாயீல் ஆகிய ஐவரை மேற்காணும் வெடிகுண்டு வழக்கில் 'சேர்த்து' வழக்குப் பதிந்தது. ஆறாவது விசாரணைக் கைதியான ஸையித் காஜா யூனுஸ், காவல்துறை கஸ்ட்-அடியில் மரணமடைந்தார். பதறிப்போன மும்பைக் காவல்துறை, ஹைதராபாத் என்கவுண்ட்டரில் நவம்பர் 2002இல் போட்டுத் தள்ளப்பட்ட ஸையித் அஸீஸ் (எ) இம்ரானையும் தமிழ்நாட்டின் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தவ்ஃபீக்கையும் இந்த வழக்கில் 'சேர்த்து' அடுத்த வாரம் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தது. மேலும், இவர்கள் அனைவரும் ஜெய்ஷே முஹம்மது, அல் காயிதா, லஷ்கரே தொய்பா, சிமி ஆகிய தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் என்பதாக வழக்கை ஜோடித்தது மும்பை காவல்துறை. http://articles.timesofindia.indiatimes.com/2003-04-10/mumbai/27270630_1_imran-rehman-khan-supplementary-chargesheet-mohammed-abdul-mateen 

பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது. 

குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும், 11.6.2005இல் 'அப்பாவிகள்' எனத் தீர்ப்பளித்து நீதிமன்றம் விடுதலை செய்தது. அத்துடன் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிபதி அஷோக் பங்காலே, "இந்த வழக்கு அரசுத் தரப்பால் கட்டியெழுப்பப்பட்டது" என்று குட்டும் வைத்தார். http://www.milligazette.com/Archives/2005/01-15July05-Print-Edition/011507200529.htm / http://www.hindu.com/2005/06/12/stories/2005061206340100.htm

இந்த வழக்கில் தவ்ஃபீக்கின் தொடர்பு என்ன? 

கடந்த 2002ஆம் ஆண்டு கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்பது டெட்டனேட்டர்களைக் காவல்துறையினர் 'கண்டு' எடுத்தனர். அவற்றை மறைத்து வைத்திருந்ததாகக் கூறி, தவ்ஃபீக்கை 26 நவம்பர் 2002இல் கைது செய்து சிறையில் அடைத்து, மூன்று நாள்கள் கழித்து, 29 நவம்பர் 2002இல் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் தவ்ஃபீக்கைக் காவல்துறை விசாரணைக் கைதியாக (வழக்கு எண் 681/2002) சிறையில் அடைத்தது. இச்செய்தியும் வழக்கம்போல் எல்லா ஊடகங்களிலும் வெளியானது. 

நவம்பர் 26இல் சென்னைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருந்த தவ்ஃபீக்கை, டிஸம்பர் 2இல் நடந்த காட்கோபர் பேருந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக மும்பைக் காவல் துறை குற்றம் சுமத்தி, தன் வழக்கில் புத்திசாலித் தனமாகச் 'சேர்த்து'க் கொண்டது. 

2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தவ்ஃபீக், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டார். http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/SE/179/AC179CANDIDATE.htm 

பின்னர், கொடுங்கையூர் வழக்கு பிசுபிசுத்துப்போய் பிணையில் வெளிவந்தார் தவ்ஃபீக். என்றாலும் அவ்வப்போது முக்கிய அரசியல் தலைவர்கள் சென்னைக்கு வரும்போது தவ்ஃபீக்கைக் காவல்துறையினர் அழைத்துப் போய் சிறையில் வைத்திருந்து வெளியே விடுவது 2008வரை வழக்கமாகவே இருந்து வந்தது. 

அவ்வப்போது நமது புலனாய்வு(!) எழுத்தாளர்கள் சிலர், தவ்ஃபீக்கை சர்வதேச பயங்கரவாதி என்பதுபோல் சித்தரிப்பது தொடர்ந்தது. 

இரா. சரவணன் என்பவர் ஜூவியின் 25.5.2008 பதிப்பில் "டென்ஷனில் தமிழகம்! டேஞ்சரஸ் தவ்பீக்..." என்று தலைப்பிட்டு நல்ல கற்பனை வளத்துடன் ஒரு கட்டுரை எழுதினார்.

அவருடைய கற்பனை வளத்துக்குச் சான்றான பகுதி:

"ஜெய்ப்பூரிலும், சென்னையிலும் ஒரே சமயத்தில் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் சென்னை தப்பியிருக்கிறது. ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புக்கும் தவ்பீக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினரின் மெயில் மிரட்டலில் 'டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களையும் தகர்ப்போம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் தன் மீது கண் பதித்திருந்ததால்தான் தவ்பீக்கால் சென்னையைத் தகர்க்கும் அசைன்மென்ட்டை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. (ஜூனியர் விகடன் 25-5-2008 இதழிலிருந்து). 

இந்தப் பதிவுக்குப் பின்னர் ஜூவியைத் தொடர்பு கொண்டு தவ்ஃபீக்கைப் பற்றி உண்மைக்கு மாற்றமாக எழுதியதை அவருடைய குடும்பத்தார் விசாரித்தபோது, தவ்ஃபீக்கின் குடும்பத்தினரின் கருத்துகளையும் உண்மை அறியும் குழுத் தலைவரும் வழக்கறிஞருமான மனோகரனின் கருத்துகளைப் பெற்று, மூன்று மாதத்துக்குப் பின்னர் ஜூவி வெளியிட்டது. அதில்,  சர்வதேச மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகிறார்: 

'என்னை என்கவுன்ட்டர் செய்ய முயன்றால், தமிழகத்தையே குண்டு வைத்துத் தகர்ப்பேன்' என்று தவுபீக் சொன்னதாகச் சொல்கிறார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தப் பட்ட தவுபீக், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தார். உளவுத்துறை, அவரைத் தங்களின் உளவாளியாக மாறச்சொல்லி நெருக்கடி கொடுத்தது. இதை எதிர்த்த காரணத்துக்காக, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் அவரை சம்பந்தப்படுத்தியதுடன், இந்துத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், சுற்றி வளைத்தபோது தப்பிவிட்டதாகவும் கதை கட்டியிருக்கிறார்கள். http://adiraixpress.blogspot.com/2008/08/blog-post_4794.html 

கடந்த 2008 மே மாதம் 17இல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் 13.5.2008இல் ஜெய்ப்பூரின் 9 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. பத்தாவது குண்டைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்புகளில் அப்பாவிகள் 63 பலியாயினர்; 216 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக மும்பையைச் சேர்ந்த விஜய் என்பவனை முதன்முதலாகக் காவல் துறை கைது செய்தது. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=1618&Itemid=54 

வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தால் தனக்கு 1 லட்சம் ரூபாய் தருவதாக ஆசைகாட்டி மீனா எனும் பெயருடைய பெண் கூறியதாகக் காவல்துறையினர் விஜயிடமிருந்து வாக்குமூலம் 'வாங்கினர்'. தொடர்ந்து மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர். http://tamil.oneindia.in/news/2008/05/14/india-60-killed-150-injured-as-terror-strikes-raja.html 

ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புக்கு ஆர் டி எக்ஸ் எனும் சக்தி வாய்ந்த வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆர் டி எக்ஸ் என்பது இராணுவத்தில் பயன்படுத்தப்படுவது. நமது இராணுவத்துக்குச் சொந்தமான ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளில் பெரும்பகுதி, முன்னாள் இராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் மூலம் கடத்தப்பட்டு சங் பரிவாருக்கு சப்ளை செய்யப்பட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். http://www.satyamargam.com/1096 

மும்பை மாலேகான் ஸ்கூட்டர் குண்டு வெடிப்பில் சங் பரிவாரின் சாமியாரிணி சாத்வீ ப்ரக்யா சிங் தாகூரோடு முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப்பட்டனர். http://www.satyamargam.com/1078 

இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு மூலகாரணமாக சங்பரிவாரங்களும் சாதுக்களும் சாமியார்களுமே இருக்கிறார்கள் என்று நிரூபனமான பிறகும் ஊடகங்களுக்கு மட்டும் இந்திய முஸ்லிம்கள் மீதான வன்மம் ஓயவில்லை! காவல்துறைக்கும் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து இன்ஃபர்மர்களாக மாற்றும் திட்டம் மாறவில்லை. 

சென்னையில் தங்கியிருந்து கொண்டு 2008 மே மாத இறுதியில் குமுதம் ரிப்போர்ட்டருக்குப் பேட்டி கொடுத்த தவ்ஃபீக், ஜெய்ப்பூருக்குப் போய் குண்டு வைத்ததாகத் தமிழகக் காவல்துறை கதை புனைந்தது. பின்னர், அவரைத் தங்களுக்கு உளவு சொல்பவராக மாற்ற முயற்சி செய்தது.  அவர் மறுக்கவே, என்கவுண்டரில் போட்டுத் தள்ள அப்போதைய காவல்துறை முயன்றது. இதை தவ்ஃபீக் கூறுகிறார்: 

எனது வக்கீல் சந்திரசேகரின் பெசண்ட் நகர் வீட்டுக்கு இரவு ஏழு மணிக்குப் போனேன். அவர் வீட்டில் நான் போய்ச் சேர்ந்த பத்து நிமிடத்தில் அவருக்கு ஒரு போலீஸ் நண்பர் போன் செய்திருக்கிறார். வழக்குரைஞரின் முகமே வியர்த்துவிட்டது. என்னிடம் திரும்பியவர், `ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷல் டீம் எனது வீட்டை நோட்டம் விடுவதாகச் சொல்கிறார். யாரைச் சொல்கிறார்?' என்று கேட்டார். நான் இரண்டு நாளைக்கு முன்பு நடந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரும் தனது ஜூனியர்களை வெளியில் அனுப்பி பார்த்து வரச் சொன்னார். ஒரு ஆம்னி வேன், பைக் ஆகியவற்றில் மஃப்டி போலீஸார் இருந்தனர். அந்த நேரத்தில் தெருவில் லைட் ஆஃப் ஆனது. வக்கீல் வீட்டில் மட்டும் லைட் எரிந்தது. உடனே எனது இயக்கத்தவர்களுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் ஒரு முப்பது பேர், ஜூனியர் வக்கீல்கள் எனத் திரண்டு வந்து என்னைத் தப்ப வைத்தனர். http://adiraixpress.blogspot.com/2008/05/blog-post_2465.html /  http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-25/pg4.php 

"எங்களுக்கு உளவு சொல்; இல்லையென்றால் நீ காலி" என மிரட்டிய காவல்துறையிடமிருந்து தப்பி, கடந்த மூன்றாண்டு காலமாக தலைமறைவு வாழ்க்கை நடத்திய தவ்ஃபீக் பட்ட துன்பங்கள் போதும்.

தவ்ஃபீக்கின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு முறையான நேர்மையான விசாரணை நடைபெறவேண்டும். அதுவும் விரைந்து நடைபெறவேண்டும். அப்போது நீதி நிலைபெறும். அதுவரை, "8 ஆண்டுகள் தேடப்பட்ட..." கதை சொல்லும் ஊடகங்கள் அடக்கி வாசிக்கட்டும். 

2003ஆம் ஆண்டு காட்கோபரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை 1999ஆம் ஆண்டு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டு தமிழ் முரசு நாளிதழ் தன்னுடைய அரைவேக்காட்டுத் தனத்தை வெளிப்படுத்தியது.

ஊடகங்களில் செயல்பாடுகளை அண்மையில்தான் பிரஸ் கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கண்டித்திருந்தார். பதவியில் இருக்கும் நீதிபதிகளின் தீர்ப்பையே மதிக்காத ஊடகங்கள் வழக்கம் போலவே கட்ஜுவின் கண்டிப்பை பெரிதுபடுத்தவில்லை.

குடிமக்களே செய்தியாளர்களாக மாறியுள்ள சூழலில் இத்தகைய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தால் மக்களின் நம்பிக்கையை இவை இழக்க நேரிடும் என்பதைச் சொல்லி வைக்கிறோம்.

***

முன்பு தௌபீக் மீது புனையப்பட்ட பல கேஸ்களில் மும்பை காட்கோபர்-ல் பஸ்ஸில் குண்டு வைத்ததாக புனையப்பட்ட கேசும் ஓன்று. அதில் முக்கிய சாட்சி அந்த பஸ்ஸின் கண்டக்டர். அவரிடம் குறுக்கு விசாரணை செய்த டிபென்ஸ் லாயர் திரு மஜீத் மேமன் : "நீங்கள் தௌபீக் -ஐ எங்கு கண்டீர்கள்?


கண்டக்டர் : "ஒரு பையை வைத்துவிட்டு அவசரமாக வெளியே இறங்கினார்"

திரு மஜீத் மேமன் "எப்பொழுது வெடித்தது"

கண்டக்டர் : "ஒரு சில நொடிகளில்"

இப்பொழுது ஜட்ஜின் பக்கம் திரும்பிய திரு மஜீத் மேமன் : "யூஆர் ஆனர், இங்கு கண்டக்டர் குறிப்பிட்ட நாள், நேரம் மாதத்திற்கு பல வாரங்களுக்கு முன்பாகவே வேறொரு கேசில் குற்றம் சாட்டப்பட்ட தௌபீக் சென்னை ஜுடிசியல் கஸ்டடி-ல் ரிமான்ட் செய்யப்பட்டு உள்ளே இருக்கிறார்" என்று சொல்லிவிட்டு சான்றுக்கான டாகுமென்ட்களையும் ஜட்ஜின் பார்வைக்கு சமர்பித்தார்.

அதை நன்றாக பார்த்து பரிசீலனை செய்தபின் அதை ஆமோதித்து தலை அசைத்து திரு மஜீத் மேமனைப்பார்த்தார்.

இப்பொழுது மஜீத் மேமன் சொன்னது ஒட்டு மொத்த கோர்ட் வளாகத்தையும் சிரிப்பொலியால் அதிரவைத்தது.


"யு ஆர் ஆனர், இப்படி சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்த என் கட்சிக்காரர் பலமான கம்பிகளை வளைத்து பல நூறு கிலோ மீட்டர் பறந்து வந்து இந்த வெடிப்பை ஏற்படுத்திவிட்டு மீண்டும் பறந்து சென்று சிறைக்கம்பிகளுக்குள் புகுந்து கொண்டார் என்று என் கட்சிக்காரரை சூப்பர் மேன் அளவுக்கு உயர்த்துவதை என்னால் நம்பமுடியவில்லை" என்று சொன்னதை ஜட்ஜ் உள்வாங்கிக் கொண்டு இலேசாக உடல் குலுங்க சிரித்துவிட்டார். அதே நேரம் கண்டக்டர் பம்பாய் போலீஸ் அதிகாரிகளை பார்த்தவிதம் "உங்களை எல்லாம் ............ டா" என்பதுபோல் இருந்தது.

*** 

கூடுதல் தகவல்களுக்கு 2008ஆம் ஆண்டு மே மாதம்

தவ்ஃபீக்கின் குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டி:

http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-25/pg4.php

http://adiraixpress.blogspot.com/2008/05/blog-post_2465.html
Share:

நோய் பரப்பும் அரசு மருத்துவமனை !

நோய் வந்தால் மருத்துவமனைக்கு  செல்வோம் மருத்துவமனைக்கு சென்று நோய் வந்தால் யாரிடம் செல்வது ? 

தமிழகத்தின் தலைநகரில் ஆசியாவிலேயே மிகபெரும் அரசு  மருத்துவமனையான ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சுகாதாரமின்றி எந்நேரமும் துர்நாற்றம் வீசுவதாதாக சிகிச்சைக்கு  வரும் நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர் . 
cc:to.Tn Health Department. 

Thanks: Civil Abu
Share:

அதிரையில் - சீட்டு கட்டு ராஜா !


தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய, வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரபல கல்வி நிறுவனங்கள், மார்க்கத்தை பயிற்றுவிக்கும் மதரசாக்கள், மஸ்ஜிதுகள், பைத்துல்மால், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் இருக்ககூடிய ஊர்களில் அதிராம்பட்டினமும் ஓன்று. இவ்வூரில் பிரபல தொழில் அதிபர்கள், கல்வி சீமான்கள், கொடை வள்ளல்கள், மார்க்க அறிஞர்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் தெரிந்த வல்லுனர்கள், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற ஊரில்....... வட்டி !


மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட, கடுமையாக விலக்கி வைக்கப்பட்ட இவ்வட்டியினால் எத்தனையோ குடும்பங்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நடு வீதிக்கு வந்துள்ளார்கள். இவ்வட்டியானது சமுதாயத்தில் பல்வேறு பெயர்களில் உலவி வருகிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.


1. சீட்டு :-
என்ன சகோதரர்களே! பெயரே வித்தியாசமாக இருக்கிறதா? இது ஒரு நூதன வட்டி ! சீட்டு நடத்துபவர் ஒரு காலக்கெடுவை (12 அல்லது 20 மாதங்கள் ) நிர்ணயம் செய்து ஒவ்வொரு மாதமும் பணத்தை வசூல் செய்வார். அவ்வாறு வசூல் செய்யும் முதல் மாத பணத்தை இலவசமாக ( வட்டி ) சீட்டை நடத்துபவர் எடுத்துக் கொண்டு மற்ற மாதங்களில் வசூல் செய்யும் பணத்தில் ஓவரி என்று அழைத்து ஒரு குறிப்பிட்ட தொகையை இலவசமாக ( வட்டி ) பணத்தை செலுத்துபவர்களுக்கு கொடுப்பார்கள். இவ்வாறாக செயல்படும் முறையில் சீட்டு போடுபவர்களுக்கு இடையில் பணம் தேவை ஏற்பட்டால் சீட்டு நடத்துபவர்கள் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட தொகையை தள்ளுபடிசெய்து ( வட்டி ) மீதி தொகையை கொடுப்பார்கள். பெரும்பாலும் நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தினர் இவ்வலையில் சிக்கியுள்ளார்கள்.


2. ஒத்திக்கு (குத்தகை) :-


வீடு, தென்னந்தோப்பு, கடைகள் இவைகளை அடமானமாக ஒரு குறிப்பிட்ட பணத்தை பெற்றுக்கொண்டு கொடுப்பார்கள். பணத்தை செலுத்தும் நபர் இவற்றிலிருந்து கிடைக்கப்பெறுகிற வருமானத்தை (வட்டி) அடைவார்கள். மேலும் மற்றொரு வகையில் வீடு மற்றும் சொத்து பத்திரங்களை அடமானமாகக் கொடுத்து அவர்கள் நீட்டிய இடத்தில் வெற்றுப் பத்திரங்களில் கையொப்பம் இட்டு ( பின் விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல்) பணம் பெறுவது. குறிப்பாக இதில் அனைத்து வர்க்கத்தினரும் சிக்கியுள்ளார்கள்.


3. நாள் வட்டி (சைக்கிள்காரன்):-


நம் சமுதாய மக்களிடேய பெரும் சவாலாக உள்ளது இதுதான். நமது தெருக்களில் அங்காங்கே உலாவரும் வசூல் ராஜாக்கள் குறிப்பாக பாமர மக்களிடம் பணத்தை நாள் வட்டிக்குக் கொடுத்து திரும்ப தினமும் சைக்கிள் மற்றும் மோட்டார் பைக்கில் வசூல் செய்ய வருகிற இவர்களால் ஏற்படுகிற (பதிவில் ஏற்ற முடியாத அளவுக்கு ) பல்வேறு பிரச்சனைகள். பெரும்பாலும் ஏழை எளியோர்கள்தான் இவ்வலையில் சிக்கியுள்ளனர்.


4. மேலும் பேங்கில் பெறப்படுகிற நகை கடன், டெபாசிட் தொகைகள், வீடு, வாகனம், தொழில் தொடங்க பெறப்படுகிற கடன்கள், இன்சூரன்ஸ்கள், ஷேர் மார்கெட் முதலீடு இவற்றைக்கொண்டு வருகிற இலாப, நஷ்டங்கள் அனைத்தும் வட்டியாகவே கருதப்படுகிறது.


தீர்வுதான் என்ன ?
1. மக்களிடேய விழிப்புணர்வு ஏற்ப்பட வேண்டும்.


2. வரவுக்கேற்ற செலவு செய்ய ஒவ்வொரு குடுபங்களும் ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றி நடந்து கொள்ளவேண்டும்.


3. இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி இம்மக்களிடையே COUNSELLING செய்து அவர்களுடைய அறியாமையை அகற்றிட வேண்டும்.


4. நிபந்தனைக்கு உட்பட்ட வட்டியில்லாத கடன்களை வழங்க ஏற்பாடு செய்யலாம்.


5. அதிரையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் அனைவர்களும் ஒன்று இணைந்து இதனால் மக்களுக்கு ஏற்படுகிற இழப்பீடுகளை மனதில் எடுத்துக்கொண்டு சட்ட சிக்கல்களை ஆராய்ந்து பைனான்ஸ் நிறுவனங்களை தடை செய்யலாம்.


என்ன சகோதரர்களே! இத்தலைப்புக்கும் இக்கட்டுரைக்கும் சம்மந்தம் இல்லை என்கிறீர்களா ? இருக்கிறது…! இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்.


குறிப்பு :-


மேலும் நல்ல கருத்துக்களுடன் கூடிய ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. (Readers can publish your valuable comments on the comment page )


மக்களின் சார்பாக,


M. நிஜாமுதீன் B.sc.


( 9442038961 )
Share:

மிதக்கும் மன்னடி !

தமிழகம் முழுதும் கொட்டிதீர்க்கும் கனமழையால் தமிழகமே தத்தளிக்கிறது  சென்னையில் இன்று காலைமுதல் பலத்த மழை பெய்துவருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன.இன்றுகாலை வரை பெய்த மழையின் 50 மிமீ  அளவாக  உள்ளது என மத்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது இன்று விடுமுறை நாள்  என்பதால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மன்னடி சற்று மந்தமாகவே காணப்படுகிறது .       


civil  Abu 
Share:

11:30மணி நிலவரப்படி அதிரையின் வானிலை(ஒலிபேழை )

அதிரை வானிலை நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக மத்திய வானிலை நிலைய தொலைப்பேசி எண்ணை தொடர்புகொண்டோம் .இன்று காலை 11:30மணி நிலவரப்படி உள்ள வானிலை தகவலை தானியங்கி குரல் பதிவு மூலம் பதிவு செய்யப்பட்ட ஒலிபேழை இதோ...

Share:

மருத்துவ மனையின் அவசியம் !
அஸ்ஸலாமு அலைக்கும்.


கீழ்காணும் விஷயம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சற்று கவனமாக படித்து தங்கள் மேலான கருத்துக்களை பதிவதோடு, தொடர்ந்தாற்போல் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது நம்மீதுள்ள சமுதாயக் கடமையாக உள்ளது.

அதிரை மக்கள் பல துறைகளில் நன்கு மேம்பட்டு வருகின்றனர். குறிப்பாக,மாணவ-மாணவியர் அதிக ஈடுபாட்டுடன் கல்வி கற்று, அவரவர்களின் துறைகளில் வெற்றிபெற்று வருகின்றனர். நமதூரிலுள்ள பொது பயன்பாடுகள் மற்றும் வசதிவாய்ப்புகள் குறித்த புள்ளிவிபரம்:

1) பள்ளிவாசல்கள் = 35 (ஏறக்குறைய)
2) குர்ஆன் மதரசாக்கள் = 3
3) பள்ளிகூடங்கள் =8
4) கலைக்கல்லூரி=1
5) மருத்துவ மணைகள்=5
6) தேசிய வங்கிகள்=5
7) ATM மையங்கள்=4
8) குளங்கள்=10
9) ரயில்வே நிலையம் =1
10) வானிலை ஆய்வுமையம்=1
11) தபால் நிலையம்=1
12) பெட்ரோல் பங்க்=2
13) கேஸ் ஸ்டேஷன்=1
14) போலீஸ் ஸ்டேஷன்=1
15) முஹல்லா சங்கங்கள்=7

போன்றவற்றுடன் சொல்லப்படாத மேலும் சில வசதிகள் உள்ளன. மக்கள் தொகை ஏறத்தாழ 35,000 பேர்கள். மேற்சொன்ன எல்லா வசதிகளும் நம் தேவைக்கு போதமானது.ஆனால், மருத்துவ வசதி மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளதா? என்றால் , இல்லை என்பதே யதார்த்த உண்மை.

கடந்த 23 வருடங்களுக்குமுன் ஆரம்பிக்கப்பட்ட ஷிஃபா மருத்துவமனை ஆரம்ப காலத்திலும்,அதன் பின்னரும் மக்களுக்கு மருத்துவ சேவைகளை ஆற்றி வந்ததை யாரும் மறுப்பதற்கில்லை.சிலகுறைபாடுகள் ஏற்பட்டதையும் நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். சேவையில் குறைபாடு ஏற்படக் காரணம் பல இருப்பினும் பொதுவான காரணம் என்வென்று ஆராய்ந்தால், மருத்துவர்கள் அதிரைபோன்ற பின்தங்கிய நகர்புறங்களில் பணியாற்ற முன்வருவதில்லை. தங்கள் குழந்தைகளை நகரங்களில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர்.

அடுத்த காரணம், நமது மக்களிடம் வெளிவூர் சென்றுதான் தரமான வைத்தியம் பார்க்க முடியும் என்ற மனப்பான்மையும் உள்ளது. மேலும்,மற்ற வேலைகளுக்காகவும்,பொழுது போக்கிற்காகவும் பட்டுகோட்டை,தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு சென்று விடுகின்றனர்.ஆனால்,அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படும்போது ஷிஃபா மருத்துவமனையை நாடுகின்றனர்.அத்தகைய தருணங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) வசதி இல்லாததாலும்,நல்ல மருத்துவர் கிடைக்காததாலும், முதலுதவியைக்கூட கொடுக்க இயலுவதில்லை.

மருத்துவமணை நிர்வாகம் தரப்பில் இதுகுறித்து வினவும்போது,பொதுமக்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு கிடைத்தால்தானே மேற்கண்ட மருத்துவ உதவிகளை கொடுக்க இயலும்! இவற்றை இயக்குதல்,பராமரித்தல் ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகளைக் கூட பெறுமளவுக்கு மக்கள் பயன்படுத்துவதில்லை என்று பதில் கிடைக்கிறது.

இதற்கு என்னதான் தீர்வு? இதோ சில ஆலோசனைகளும், அதற்கான தீர்வுகளும்:

உள்ளூர் மருத்துவர்களின் பங்களிப்புடன் வணிக ரீதியில் புதியதொரு திட்டம் தயாரிக்கபட்டுளது.அதன் விபரம் பின்வருமாறு:


1. அதிரை மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள மருத்துவர்கள் குறைந்தது ரூ.1 லட்சம்வரை முதலீடு செய்வது.

2. அவ்வாறு முதலீடு செய்யும் மருத்துவர்கள் இயக்குனர்களில் (DIRECTOR) ஒருவராக கருதப்படுவார்.

3. ரூ.50 லட்சங்கள் வரை முதலீடுகளைத் திரட்டுவது,

4. வருங்காலங்களில் ரூ.2 கோடி வரை முதலீட்டை அதிகரித்து மருத்துவ சேவைகளை நவீனப்படுத்துவது.

5. மேற்கண்ட முதலீடுகள் மூலம் நவீன அறுவை சிகிச்சைக்கூடம் (Modern Operation Theater), குழந்தைகள் நல மருத்துவம், அவசர/பேறுகால உபகரணங்களை வாங்குவது,பெண்களுக்கான மருத்துவ சேவையை மேம்படுத்துவது, முக்கியமாக நீரிழிவு நோய்க்கான மருத்துவப் பிரிவு ஒன்றை ஏற்படுத்துவது, INTENSIVE CARE UNIT (ICU) அமைப்பது.

6.TELEMEDICINE வசதியை ஏற்படுத்தி அப்போலோ மருத்துவமனை,சங்கர நேத்ராலய போன்ற பிரபல மருத்துவமனைகளுடன் இன்டர்நெட் மூலம் இணைப்பு ஏற்படுத்தி அவசரகால CONSULTATION செய்வது போன்ற பல நவீனரக நலத்திட்டங்களை நடைமுறைபடுத்த முயற்சிகள் மேற்கொள்வது.

இதற்காக, 20/11/11 அன்று இமாம் ஷாஃபி பள்ளியில், ஹாஜி M.S.தாஜுதீன் அவர்களின் முயற்சியுடன் கீழ்க்கண்டவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Dr.அமீன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அரிய பல ஆலோசனைகளை தெரிவித்தார். அதிரையின் சகாப்தத்தில் இதுஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.கடந்த காலங்களில் வர்த்தக ரீதியாக நிர்வாகம் செய்யாத காரணத்தால், இத்துறையை வெற்றிகரமாக மாற்ற இயலாமல் போனது வருத்ததிற்குரிய விசயம். பொது நோக்கத்துடன் சேவை செய்தாலும், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தை கொடுத்தபின் ஏழை எளியோருக்கு நிச்சயமாக உதவிடலாம். இதற்கென புதியதொரு நிறுவனத்தை உருவாக்கி, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார ( 2 லட்சம் பேர்கள் ) கிராம மக்களுக்கும் மருத்துவ சேவை செய்யலாம்.

இந்த உயரிய திட்டத்திற்கு அதிரை மருத்துவர்கள் முன்வந்து முதலீடு செய்வதற்கும் அவர்களின் மேலான வழிகாட்டுதலின்படி நிர்வாகத்தை நடத்த முடிவு செய்த விசயம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.


கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்:
1. ஜனாப். M.S.தாஜுதீன்
2. Dr.முஹமது ஹனீப்
3. Dr.ராஜு
4. Dr.மீராசாஹிப்
5. திருமதி. செல்வ ராணி
6. ஜனாப் சிப்ஹதுல்லாஹ்

7. பேராசிரியர் அப்துல் காதர்
8. ஜனாப் A.S.M.அப்துல் ஹமீது
9. பேராசிரியர் பரக்கத்
10.ஜனாப் S.M. ஷேக் முஹம்மது
11.ஜனாப் அப்துல் ரஜாக்

மேற்கண்ட திட்ட முன்வரைவு (Project Model) அதிரைவாசிகளின் வசதிக்காக இணைக்கப்பட்டுள்ளது.உங்கள் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டால் நமதூருக்கான நலத்திட்டம் இன்ஷா அல்லாஹ் வெற்றிகரமாகச் செயபடுத்த முடியும். இத்திட்டம் குறித்து மேலதிக தகவல் வேண்டுவோர் tajudeen@seapol.com ல் தொடர்பு கொள்ளலாம்.
Share:

பிலால் நகரில் வெள்ளம் ! தத்தெடுப்பார்களா செல்வந்தர்கள் !


இப்படங்களை பாருங்கள்


இவர்கள் அனைவரும் அன்றாட வேலைகள் செய்து வருமானத்தை எதிர்நோக்கி குடிசைகளில் வாழும் ஏழை முஸ்லிம்கள். இவர்கள் வீட்டினுள் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளித்து அன்றாட வாழ்க்கைகள் பாதிப்புக்கு உள்ளானவர்கள்.

அதிராம்பட்டினத்தில் உள்ள பிரபல தொழிலதிபர்கள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் இவர்களின் வாழ்வாதரத்தில் பங்கெடுப்பார்களா ?.

மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )
Share:

பிலால் நகரில் வெள்ளம், உதவிடுவீர்!
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் !
ஹஜரத் பிலால் நகரில் எற்பட்ட வெள்ள சேதாரத்தை மீடியாக்களில் பார்த்திருப்பிர்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் சிறிதளவு பங்கெடுத்து இவர்களின் துயரைப்போக்க நிதி மற்றும் பொருள் உதவிகள் அனைத்து சகோதரர்களும் தாராளமாக உதவிட ஹஜரத் பிலால் நகர் முஹல்லா சார்பாக அன்புடன் கேட்டுகொள்கிறோம். அல்லாஹ் நம் அனைவருகளுக்கும் நன்மையையும், நற்கிருபையும் செய்வானாக ! ஆமின் !
 குறிப்பு :-
உதவிகள் நேரிடையாகவோ அல்லது நியமிக்கப்பட்ட நபர்கள் சார்பாகவோச்செய்யலாம்.
மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )


Share:

செல்லியன் குளம் - ஆர்டிஓ நேரில் ஆய்வு! (படங்கள்)


RDO (தஞ்சாவூர்), பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் ஏரிப்புறக்கரை ஊராட்சித் தலைவர் ஆகியோருக்கு நன்றி !

எனது கோரிக்கையை உடனடியாக ஏற்று ( ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக அகற்றி தூர் வாருதல் மற்றும் செல்லியன் குளம் உடையும் அபாயம் தொடர்பாக ) சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வந்து வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டு மற்றும் செல்லியன் குளத்தை ஆய்வு செய்தார்கள். மேலும் இவ்வாழ்வாதார கோரிக்கையை ஆவணம் செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள்.( படங்கள் இணைப்பு )

மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், மீடியா நண்பர்கள் ( குறிப்பாக ADIRAI XPRESS, ADIRAI BBC,  ADIRAI.IN, TIYA), ஆதரவாக இருந்த உள்ளூர் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )
Share:

மருத்துவ உதவி

ஒரே குடும்பத்தை சார்ந்த அண்ணன் தம்பிகள் மூவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்குமுன் ஒருவருக்கு அறுவை சிகிச்சி மூலம் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது மீதம் உள்ள இருவருக்கும் மாதம் மூன்று முறை ரத்த சுத்திகரிப்பு மூலம் தங்களது வாழ்நாளை கழித்து கொண்டு வருகின்றனர் இதற்க்கு மாத மாதம் ஒரு தொகை செலவாகிறது என இன்று மன்னடி பகுதியில் உள்ள முஸ்லிம்களிடம் உதவிகள் கேட்டுகொண்டிருந்தார் .
எனவே தாங்கள் உங்களது உதவிகளை இந்த பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கி இறை பொருத்தத்தை பெற்றுகொள்ள வேண்டுகிறோம் . 


 
 


Share: