துபாய்: பால்கனியில் துணி உலரப்போட்டால் அபராதம்!

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய மாகாணங்களில் குடியிருக்கும் கட்டிட பால்கனியில் துவைத்த துணிகளைக் காய வைப்பதும், டிஷ் ஆண்டெனாவை பொருத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் துபாயின் சில பகுதிகளில் வரும் மார்ச்-1,2012 முதல் பால்கனியில் துணிகள், டிஷ் ஆண்டெனா மற்றும் பார்பிக்யூ அடுப்பு ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRAKHEES எனப்படும் அரசாங்க துணை அமைப்பு கடந்த ஆறுமாதங்களாக இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருவதாகவும் இம்மாதம் பிப்ரவரி 29 ஆம் தேதியோடு அந்த பிரச்சாரம் நிறைவடைகின்றது என்றும் தெரிவித்துள்ளது.

பால்கனியில் துவைத்த துணிகளைக் காயவைப்பதும்,சீதோசனப் பயன்பாடு தவிர்த்த ஏனைய தளவாடங்களை வைத்திருந்தால் 500 திர்ஹம்ஸ் (சுமார் 6,500 ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய்: பால்கனியில் துணி உலரப்போட்டால் அபராதம்!தற்போதைக்கு துபாயில் இந்தக் கட்டுப்பாடு பாம் ஜுமைரா, ஜுமைரா லேக் டவர்ஸ், இண்டர்நேசனல் சிடி, டிஸ்கரி கார்டன் ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.

தமிழர்களும் ஆசிய நாட்டவர்களும் பெருமளவில் தங்கியிருக்கும் டேரா துபாய், பார் துபாய் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியான சோனாப்பூர் ஆகிய இடங்களில் பெரும்பாலான கட்டிடங்களில் துணிகளைக் காயவைக்கவும்,டிஷ் ஆண்டெனா பொருத்தவும் வீட்டின் பால்கனிகளே உபயோகிக்கப்படுகின்றன என்றாலும் மேற்கண்ட அறிவிப்பில் இப்பகுதிகள் குறிப்பிடப்படவில்லை என்பது ஆறுதலான செய்தி.

எனினும், துபாய் முனிசிபாலிடியின் கெடுபிடி மற்றும் அபராத விதிப்பிலிருந்து தப்பிக்க இவ்விசயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நன்றி: இந்நேரம்.காம்

Share:

நல்ல தமிழ் எழுதுவோம்! – 4 ஒன்றும் பலவும் (தொடர்)


                          
ஒன்றும் பலவும் (தொடர்)

வெகுவாகக் காணப்படும் எழுத்துப் பிழைகளுள் குறிப்பிடத் தக்கவை, மறுப்புச் சொற்களாகும்.  நாள், வார, மாத இதழ்களிலும் இணையக் கட்டுரைகளிலும் நம் கண்களை உறுத்தும் பிழைகள் இந்த மறுப்புச் சொற்களில் ஏராளம் என்றால் மிகையாகாது.  சற்றே ஊன்றிப் படியுங்கள்.


அன்று – அல்ல – அல்லன் – அல்லர்:

ஒருமை, பன்மை வேறுபாடுகளுக்குத் தகுந்தவாறு இச்சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது, தமிழ் இலக்கண வரம்பாகும்.  மாறுபாடான தன்மையைச் சுட்டிக் காட்டி மறுத்துரைப்பதற்காக, “இது சரியல்ல” என்றோ, “இது சரியில்லை” என்று எழுதுவது தவறில்லாதது போன்று தெரிகிறது.  ஆனால், தவறு!  எப்படி?

‘இது’ என்பது ஒருமையாகும்.  ‘அல்ல’ என்பது, பன்மையின் மறுப்புச் சொல்லாகும்.  ஒருமையும் பன்மையும் ஒன்றுபடுமா?  எனவே, ‘இது சரியன்று’ என எழுதுதலே சரியாகும் என்பதை அறிக!  ‘அன்று’ என்ற ஒருமை மறுப்புச் சொல்லின் பன்மையே ‘அல்ல’ என்பதாகும்.  இவ்வாறு தவறின்றி எழுதும் பழக்கம் கைவரப் பெறுவது எவ்வாறு?  எழுதிச் செல்லும்போது ஒருமை-பன்மை மீது சற்றே கவனம் வைத்தால் போதும்.  அவ்வளவுதான்.

ஒருவர், “நான் குற்றவாளியில்லை” என்று எழுதினார்.  ஆனால், அவர் தவறிழைத்தவர்!  எதில்?  எழுத்தில்.  ‘அல்ல’, ‘இல்லை’ என்ற சொற்களை ஒருமையுடன் இணைத்து எழுதிய குற்றவாளி ஆகிவிட்டார்!  “நான் குற்றவாளி அல்லன்” என்றே எழுதியிருக்க வேண்டும்.

இது போன்றே, “அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்லர்” என்று எழுதுவதற்குப் பகரமாக, “அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல” என்று எழுதக் கூடாது.  ‘அல்லன்’ என்ற ஒருமையின் பன்மை ‘அல்லர்’ என்பதாகும்.  இவை உயர்தினைக்கே வரும்.  அஃறிணையுடன் வரும் மறுப்புச் சொல் ‘அல்ல’ என்பதாகும்.  “காரணங்கள் அவையல்ல” என்பது போன்று எழுதுதல் வேண்டும்.  

சில – பல – சிலர் – பலர்:  

இவையனைத்தும் பன்மைகளாகும்.  ஆனால், இவை சுட்டும் திணைக்குத் தக்கவாறு மாறுபட்டுப் பயன்படுத்தப்படும்.  ‘சில’ என்பதும் ‘பல’ என்பதும் அஃறிணைக்கே சார்பாக வரும்.  “சில நண்பர்கள்” என்றோ, “பல மக்கள்” என்றோ எழுதுவது தவறாகும்.  இவற்றை, “நண்பர்கள்” என்று மட்டுமோ, “மக்கள்” என்று மட்டுமோ எழுதலாம்.  அல்லது, “நண்பர்கள் பலர்” என்று, அல்லது “மக்கள் பலர்” என்றும் எழுதலாம்.

உண்டு:

பலர் இச்சொல்லை உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாகப் பயன்படுத்துகின்றனர்!  ‘இருக்கின்றது’ என்பதற்கு இணையான மற்றொரு சொல், ‘உண்டு’ என்பதாகும்.  இதனை உயர்திணைக்குப்  பயன்படுத்துவது, பெருந்தவறாகும்.  “ஆடு உண்டு”, “மாடு உண்டு” என்று சொன்னால் தவறில்லை.  “மனிதன் உண்டு” என்று சொன்னால்....?  தவறுதானே?  “மனிதன் உள்ளான்” அல்லது, “மனிதர் உள்ளார்” அல்லது, “மனிதன் இருக்கின்றான்” என்று எழுதுதலே முறையாகும்.      


(திருத்தங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)    

- அதிரை அஹ்மது
Share:

குழந்​தைக​ளைக் குறி​வைக்கும் விளம்பரங்களும், விபரீதங்களும்!

"வாப்பா! ஹார்லிக்ஸ் வாங்காம வந்துடாதே"

- சாமான்கள் வாங்குவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த தந்தையை நோக்கி 6 வயது மகன் கூறினான்.

ஹார்லிக்ஸ் விலையை யோசித்த போது மனம் தயங்கினாலும், தந்தைக்கு உள்ளூர ஒரு பூரிப்பு. சாக்லேட் தவிர வேறெதையும் இதுவரை கேட்டிராத பிள்ளை, இன்று சத்தான ஆகாரமான ஹார்லிக்ஸ் வாங்கிக் கேட்கிறானே.

"ஹார்லிக்ஸ் வாங்கித் தரேன். பாலில் கலந்து தந்தால் மடக்கு மடக்குன்னு குடிக்கணும் என்ன" இது தந்தை.

உடனே மகன் சொன்னான்: "பாலில் கலக்கி நீயும், உம்மாவும் குடிச்சுக்கங்க. எனக்கு அந்த டிஜிட்ரோனிக்ஸ் வாட்ச் போதும்."

"டிஜிட்ரோனிக்ஸ் வாட்சா?"

"ஆமா. டி.வி.யில விளம்பரம் பார்க்கலையா? அந்த வாட்ச் என்னா அழகா இருக்கு! கையில கட்டுனா சூப்பரா இருக்கும்." மகன் சொல்லி விட்டு துள்ளிக் குதித்தான். வாப்பா வாயடைத்துப் போனார்.

மிட்டாய் வாங்கித் தரவேண்டும், பிஸ்கட் வாங்கித் தர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது குழந்தைகளுக்குப் புதிதல்ல. ஆனால் அந்தக் காலமெல்லாம் மலையேறி வருகிறது. இன்று வெறுமனே ஒரு சாக்லேட்டையோ, பிஸ்கட்டையோ வாங்கிக் கொடுத்து குழந்தைகளைத் திருப்திப்படுத்திட முடியாது. அவர்களுக்கு இஷ்டப்பட்ட கம்பெனி, இஷ்டப்பட்ட பிராண்ட் தின்பண்டங்கள்தான் வாங்கிக் கொடுக்கவேண்டும்.

இதற்குக் காரணம் இன்று பரவலாகியிருக்கும் விளம்பரங்கள். குறிப்பாக குழந்தைகளைக் குறி வைக்கும் டி.வி. விளம்பரங்கள். அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் குழந்தைகளின் மனங்களில் ஆழப் பதிந்து விடுகின்றன.


"எனக்கு நெஸ்லே சாக்லேட்டுதான் ரொம்பப் பிடிக்கும். விளம்பரத்தில் வர்ற நாய்க்குட்டி உடம்புல நட்சத்திரம் மின்னுறது எவ்வளவு அழகா இருக்கு?" என்று இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை சொல்கிறது. அக்குழந்தை நெஸ்லே சாக்லேட் இல்லாமல் பள்ளிக்கூடமே போவதில்லை.

சாக்லேட்டும், பிஸ்கட்டும் போய் இன்று ஆடைகள் விஷயத்திலும் குழந்தைகளை ஆட்டிப் படைக்கிறது விளம்பரங்கள்.

விளம்பரங்களில் வரும் வாசகங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் அப்படியே பதிந்து விடுகின்றன.

"Boost is the secret of my energy" என்று சச்சின் டெண்டுல்கர் விளம்பரத்தில் சொன்னாலும் சொன்னார். இங்கே நமது வீடுகளில் எல்.கே.ஜி. குழந்தைகள் கையில் டம்ளரைப் பிடித்துக்கொண்டு, புஷ்டியைக் காட்டிக்கொண்டு அப்படியே சச்சின் மாதிரி சொல்கின்றன.

இப்போதுள்ள முக்கிய வியாபாரத் தந்திரமே இதுதான். குழந்தைகளுக்குப் பிடிக்கும் பொருட்களை "இலவசம்" என்று இணைத்துக் கொடுப்பது. அப்போதுதான் குழந்தைகள் பெற்றோர்களை நச்சரித்து அந்தச் சாமான்களை வாங்கச் சொல்வார்கள்.

சில பொருட்கள் வாங்கினால் 'டாடூஸ்" (Tatoos) என்ற கையிலும், உடம்பிலும் ஒட்டும் பொருட்களை இலவசமாகக் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும் கார்ட்டூன் கதாபாத்திரங்களும், மிருகங்களும், குத்துச்சண்டை வீரர்களின் படங்களும் இன்று டாடூஸாகக் கிடைக்கின்றன. நமக்கே தெரியாத, வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் குழந்தைகள் சரளமாகச் சொல்கின்றன.

கிஸான் (Kissan) ஜாம் வாங்கினால் "போக்கிமான்" கார்டு இலவசம்.

லேய்ஸ் (Lays) வாங்கினால் சேகரித்து வைக்குமாறு தூண்டுகிற டாடூஸ் இலவசம்.

இவைகளெல்லாம் குழந்தைகளிடத்தில் மிகப் பிரபலம்.

டி.வி.எஸ். விக்டர் என்ற இரு சக்கர வாகனம் வந்த புதிதில், "நீ பெரியவனானால் என்ன வண்டி வாங்குவாய்?" என்று ஒரு குழந்தையிடம் கேட்க, "டி.வி.எஸ். விக்டர் வாங்குவேன்" என்று சட்டென்று பதில் வந்தது.

ஏன் என்று கேட்க வாயைத் திறக்கும் முன்பே அடுத்த பதில் வந்தது: "அது டெண்டுல்கர் வண்டி. அவர்தான் எனக்குப் பிடித்த ஸ்டார்!"

பெற்றோர்கள் ஷாப்பிங் செல்லும்பொழுது பிள்ளைகளும் கூடச் செல்கின்றன. பெற்றோர்கள் தங்கள் ‘பட்ஜெட்டு’க்கேற்ப பொருட்களை விலையைப் பார்த்துப் பார்த்து வாங்குவதில் மும்முரமாக இருப்பார்கள்.

பிள்ளைகளின் கண்களோ ஆவலாய் அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டிருக்கும். டி.வி.யில் பார்க்கும் விளம்பரப் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கும். இதனால் சில சூப்பர் மார்க்கெட்டுகளில் 'கிட்ஸ் ட்ராலி' என்று குழந்தைகளுக்குத் தனியாக ட்ராலி வைத்திருக்கிறார்கள்.

ஷாப்பிங் மட்டுமல்ல. விடுமுறை தினங்களில் எங்கே 'பிக்னிக்' எனும் சிற்றுலா செல்லவேண்டும் என்று இப்பொழுதெல்லாம் தீர்மானிப்பது குழந்தைகள்தான். கிஷ்கிந்தாவோ, எம்.ஜி.எம்.மோ, அதிசயமோ, பிளாக் தண்டரோ எல்லாம் குழந்தைகள் கையில்!

அத்தோடு இன்று டி.வி. விளம்பரங்களில் குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்கள். குழந்தைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சோப்புகள், மருந்துகள், ஏன், வங்கிகள், செல்போன்கள் விளம்பரங்களிலும் குழந்தைகள்தான் முக்கிய கதாபாத்திரங்கள். பால் வடியும் குழந்தைகளின் முகங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அத்தோடு குழந்தைகளும் அந்த விளம்பரங்களை விரும்பிப் பார்க்கின்றன. ஆதலால் விளம்பரத்தில் இப்படியொரு தந்திரத்தைக் கையாளுகின்றனர்.

ஒரு குழந்தை ஒரு விளம்பரத்தை விரும்பிப் பார்க்கிறது என்றால் அதற்கு அடுத்த கட்டம் என்பது அந்தப் பொருள் தன் வீட்டில் இருக்க வேண்டும் என்று அது விரும்புவததான். உடனே பெற்றோர்களை அது நச்சரிக்க ஆரம்பித்து விடுகிறது. இப்படி அந்தப் பொருளின் விற்பனை அதிகரிக்கின்றது. இதற்காகத்தான் விளம்பரங்கள் அனைத்தும் குழந்தைகளைக் குறி வைத்து வெளிவருகின்றன.

அதிகமாக ​தொ​லைக்காட்சி​யைப் பார்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகளில் சிலவற்றைத்தான்​ மே​லே கண்​டோம்.


தொடர்ந்து ​தொ​லைக்காட்சி​யைப் பார்க்கும் குழந்​தைகளுக்கு ஒருமுகத்திறன் (Concentration Power) படு​வேகமாகக் கு​றைகிறது என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அந்தக் குழந்​தைகளால் வகுப்புகளில் ​தொடர்ந்து பாடங்க​ளைக் கவனிக்க முடியவில்​லை. ​குழந்​தைகள் அவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன் படங்க​ளைப் பார்ப்பதில் தவறில்​லை. ஆனால் ஒரு நா​ளைக்கு குறிப்பிட்ட மணித்துளிகள்தான் ​தொ​லைக்காட்சி​யைப் பார்க்க​ குழந்​தைக​ளை அனுமதிக்க​வேண்டும். இதில் ​​பெற்​றோர்கள் எப்​பொழுதும் மிகக் கண்டிப்பாக இருக்க ​வேண்டும்.

​பொது அறி​வை வளர்க்கக் கூடிய ​சேனல்க​ளையும், அறிவியல் ​சேனல்க​ளையும் பார்க்க குழந்​தைகளுக்கு ஆர்வம் ஊட்ட ​வேண்டும்.கார்ட்டூன் க​தைக​ளை ​தொ​லைக் காட்சியில் பார்ப்ப​தை விட புத்தகமாகப் படிக்கக் ​கொடுத்தால் இன்னும் நல்லது. இது குழந்​தைகளின் வாசிப்புப் பழக்க​த்​தை அதிகரிக்கும்.

​தொ​லைக்காட்சி​யை அதிகமாகப் பார்க்கும் குழந்​தைகள் அதி​லே​யே மும்முரமாக ஒன்றிப்​ ​போய் விடுவ​தைப் பார்க்கி​றோம். அந்தச் சமயத்தில் ​வெளியிலிருந்து யாரும் வீட்டுக்கு வந்தாலும் குழந்​தைகள் அவர்களிடம் முகம்​​கொடுத்துப்​ பேசுவதில்​லை. ​வைத்த கண் வாங்காமல்​ தொ​லைக்காட்சி​யை​யே பார்த்துக்​ ​கொண்டிருக்கும்.

இப்படி பிறரிடம் முகம் ​கொடுத்துப் ​பேசாமல் வளரும் குழந்​தைகள் கூச்ச சுபாவம் உ​டையவர்களாகவும், தன்னம்பிக்​கை கு​றைந்தவர்களாகவும் பிற்காலத்தில் இருப்பார்கள் என்று கண்டறிந்துள்ளார்கள். இவர்களால் ஒரு கூட்டத்தி​லோ​ மே​டையி​லோ​ பேச​வே முடியாது. திருமணம் ​போன்ற மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் ஒதுங்கி​யே இருப்பார்கள். வி​ரைவில் அந்த இடத்​தை விட்டு அகல​வே முயல்வார்கள். எந்தக் காரியத்​தைச் ​செய்ய எண்ணினாலும் அவர்களுக்கு முதலில் வருவது தயக்கம்! இது தன்னம்பிக்​கைக் கு​றைவினால் ஏற்படுவது.

பிற்காலத்தில் குழந்​தைகள் இப்படி பாதிப்ப​டையாமல் இருக்க நாம் இப்​​பொழு​தே கவனமாக இருக்க ​வேண்டும். வீட்டுக்கு விருந்தாளி​க​ளோ​ தெரிந்தவர்க​ளோ வந்தால் அவ்வமயம் குழந்​தைகள்​ தொ​லைக்காட்சி​யைப் பார்த்துக் கொண்டிருந்தால் உட​னே நாம் ​செய்ய ​வேண்டியது - அத​​னை அ​ணைப்பதுதான்!

அத்​தோடு வீட்டுக்கு வந்தவர்களிடம் குழந்​தைக​ளை அ​ழைத்து அறிமுகப்படுத்த ​வேண்டும். அப்படி அறிமுகப்படுத்தும் ​பொழுது குழந்​தைக​ளிடம் உள்ள நல்ல குணங்க​ளையும், அவர்கள் ​செய்த நல்ல காரியங்க​ளையும் ​சொல்லிக் காட்ட ​வேண்டும். வீட்டுக்கு வந்த விருந்தாளிகளின் ​நேரத்தில் சிறி​தை இப்படி குழந்​தைகளுக்காகவும் நாம் எடுத்துக்​ ​கொள்ள​ வேண்டும். இது குழந்​தைகளுக்கு உள்ளூற தன்னம்பிக்​கை​யை ஏற்படுத்தும். அத்​தோடு குழந்​தைகள் அந்நியர்களுடன் அளவளாவும் ​பொழுது அவர்களது கூச்ச சுபாவமும் ​மெல்ல​ மெல்ல ம​றையும்.

இந்தப் பழக்கம் குழந்​தைகளின் எதிர்காலத்​தை ஒளி மிக்கதாக ஆக்கும்!

நன்றி: http://www.kayalpatnam.com


Share:

அதிரை தவ்ஹீது பள்ளியில் சகோ.அஸ்ரப்தீன் பிர்தௌஷி அவர்களின் ஜும்ஆ உரை

அதிரையில் சகோ.அஸ்ரப்தீன் பிர்தௌஷி அவர்கள் 24.02.2012 அன்று ஆற்றிய ஜும்ஆ உரை
Share:

சப்- இன்ஸ்பெக்டர் முகம்மது அனஸ்..!

கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்தவர் யூசுப் சாகிப் மகன் முகம்மது அனஸ். இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். சென்னை புதுக்கல்லூரியில் 2005 - 2008 ஆண்டுகளி பி.காம் பட்டபடிப்பை முடித்த இவர் தொடர்ந்து மேற்படிப்பான எம்.பி.ஏ. 2008 - 2010 வரை கீழக்கரை சதக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். இவர் சென்ற வருடம் ஜூலை மாதம் தேர்வு எழுதி சப் - இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார். ஒரு ஆண்டு பயிற்சிக்காக சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் பயிற்சி எஸ்.ஐயாக பணி புரிந்து வருகிறார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அகமது அனஸ் கூறியதாவது,
என்னுடைய தந்தையின் கனவு, நான் வெளிநாடு செல்லாமல் நமது தாய்நாட்டிலேயே பணி புரிய வேண்டும், குறிப்பாக அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்பது தான். மேலும் எம்.பி.ஏ நிறைவு செய்த நேரம் எஸ்.ஐக்கான தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைத்து, தேர்வானேன். இதற்கு என் தந்தையார் கொடுத்த ஊக்கம்தான் முக்கிய காரணம் என்றார் .

 பயிற்சியின் போது


இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் கூறியதாவது,

காவல்துறைக்கு தேர்வு பெற்ற அசனுக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும். மேலும் ஐ.பி.எஸ் தேர்வு எழுத தேவையானவற்றை அவருக்கு செய்து தர தயாராக இருக்கிறோம். இவரை பின்பற்றி இளைஞர்கள் அதிகளவில் அரசுபணிக்கு தயாராக வேண்டும் என்றார்.

கீழக்கரையிலிருந்து காவல்துறைக்கு செல்லும் முதல் நபர் இவர்தான் என்று கூறப்படுகிறது. இவரை போல் இளைஞர்கள் அரசு ஒதுக்கியுள்ள சிறுபான்மையினருக்கான 3.5 இட ஒதுக்கீட்டை முழுமையாக பயன்படுத்தி இன்னும் ஏராளமானோர் அரசு பணியில் சேரவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் ஆவல்.


நன்றி:-  அதிரை முஜீப்
Share:

மரண அறிவிப்பு (அனஸ்-வாய்க்கால்தெரு)


அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] நமதூர் வாய்க்கால் தெருவைச் சார்ந்த மர்ஹூம் அப்துல் ஸமது அவர்களின் மகனும், "சோனி" நெய்னாம்ஷா அவர்களின் மருமகனும், அலி அக்பர் (எலெக்ட்ரீசியன்), இப்றாஹிம் ஆகியோரின் சகோதரரும், தமீம் மற்றும் பாஷா ஆகியோரின் மாமனாரும், அப்துல்லாஹ்வின் தகப்பனாருமாகிய அனஸ் அவர்கள் இன்று (27-02-2012) திங்கள் கிழமை பின்னேரம் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் செவ்வாய் கிழமை (28-02-2012) காலை10:00 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

21:35 كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَنَبْلُوكُم بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ
21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.


தகவல்: A-அப்துல் மாலிக் (துபாய்)
Share:

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி !

நமதூரில் அடிக்கடி மின்சாரம்  தடை  ஏற்படுவதின் காரணமாக நாள் தோறும் வழங்கப்பட்டு வருகின்ற குடிதண்ணீர் இனிமேல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படும் என பேரூராட்சியின் அறிவிப்பை அடுத்து, ஒரு சில தெருக்களுக்கு குடிநீர் செல்வதில் சிரமங்கள் இருந்தது. மேலும் பொதுமக்கள்கள் படுகின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக வாடகைக்கு “ஜெனரேட்டர்” களை வைத்து பம்பு மோட்டார்களை இயக்குவது என முடிவு செய்து அதன் பிரகாரம் இயக்கி வருகின்றது.

இதனால் ஏற்படுகிற கூடுதல் செலவினங்களைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் நலனே முக்கியம் என கருதி துரித நடவடிக்கை எடுத்த அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர், தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவர்களுக்கும் அதிரை வலைதள சகோதரர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் நல்ல பல ஆலோசனைகளுடன் கூடிய கருத்துகளைப் பதிந்த வலைதள நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் போன்றவர்களுக்கும் வாழ்த்துகள். 
Share:

மின்வெட்டால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்கள் : அரசு ஏற்பாடு !


மின்வெட்டு காரணமாக அரசு பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உள்ளிட்ட அனைத்து செலவையும் அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு காரணமாக, பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதால், அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், அவ்வாறு இயலாத சூழ்நிலையில், மின்வெட்டு உள்ள நேரங்களிலும், தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில், அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு  பெற்று வழங்கும்.  ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உட்பட அனைத்துச் செலவையும் அரசே ஏற்கும்.

இதே போன்று அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவினை அரசு அவர்களுக்கு ஈடு செய்யும்.  
Share:

அதிரை நல்வாழ்வு பேரவையின் மாதாந்திர கூட்டம் !


சென்னை சீபோல் நிறுவனத்தின் அருகில் உள்ள பள்ளிவாயிலில் இன்று நடைபெற்ற சென்னை வாழ் அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை நமது பகுதி அகல ரயில் பாதை சம்பந்தமான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .
அதன் பேரில் இன்று காலை கூடிய அந்த கூட்டத்தில் நேற்று ப .சிதம்பரத்தின் பரிந்துரையின் பேரில் நம் பகுதி அகல ரயில் பாதை பணிக்கு நிதி ஒதுக்கியுள்ளதை கருத்தில் கொண்டு விவாதிக்கப்பட்டது .

இதில் பேரவைத்தலைவர் மு க செ.அகமது அலி ஜஃபர், அர்டா தலைவர் எம் எஸ்.தாஜுதீன் ,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

அதிரை மக்கள் வெகுவாக வசிக்கும் மன்னடி பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு 30 நபர்களுக்குள்ளாக மட்டுமே கலந்து கொண்டது வேதனையளிக்கிறது.
Share:

திருவாரூர் காரைக்குடி அகல இரயில் பாதைக்கு நிதி ஒதுக்கீடு.(ரேடியோ செய்தி இணைக்கப் பட்டுள்ளது).திருவாரூர் காரைக்குடி அகல இரயில் பாதைக்காக முதல்கட்டமாக மத்திய அரசு ரூ 505 கோடி ஒதுக்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நமதூர் பிரமுகர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களை சந்தித்து இது சம்மந்தமாக கோரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம்.

அதன் பயனாக மத்திய மந்திரி ப. சிதம்பரத்தின் முயற்ச்சியால் இந்த நிதி - மத்திய இரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பாகவே- ஒதுக்கப்பட்டிருப்பது - நமதூருக்கு அகல இரயில் பாதைக்காக பெரும் முயற்ச்சி செய்த பெரியோர்களின் இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனக்கொள்ளலாம்..

தகவல் : மு.க.செ. அஹமது அலி ஜகபர் அவர்கள்..
Share:

சென்னை வாழ் அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவையின் வேண்டுகோள்...
அஸ்ஸலாமு அலைக்கும், சென்னை வாழ் அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவையின் மாதாந்திர கூட்டம் வரும் 26/02/2012 ஞாயிற்று கிழமை காலை நமதூர் முக்கியஸ்தர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது...Share:

அதிரை அல் அமீன் பள்ளி : நீண்ட விவாதத்தில் சுமூக முடிவு !

 
அதிரை "அல் அமீன் ஜாமிஆ பள்ளி நல்லிணக்க குழு " சார்பாக இன்று அஸர் தொழுகைக்குப் பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஹாஜி S.M.A.  அக்பர் ஹாஜியார் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்கள்
இக்கூட்டத்திற்குப் அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக அதன் நிர்வாகிகள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா போன்ற அதிரையைச் சார்ந்த இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.

நிகழ்ச்சியின் நிரலாக....................
1.       அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான விவாதம் சுமார் 4 மணி நேரங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
2.       அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமாக இதுவரையில் கூட்டப்பட்ட ஆறு கூட்டங்களும் தோல்வியில் முடிந்தது என்றும் இந்த ஏழாவது கூட்டம் கண்டிப்பாக வெற்றியாக அமையவேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3.       அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி அவர்களின் வழக்குகள் சம்மந்தமான விளக்கங்களுடன் கூடிய உரை சுமார் 1.30 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
4.       அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகம் சார்பாக வழக்கு சம்மந்தப்பட்ட குறிப்புகள் அடங்கிய நகல்கள் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளிடமும் கொடுக்கப்பட்டது.
5.       இப்பள்ளி அமைய மர்ஹூம் M.M.S. அப்துல் வஹாப் சாச்சா அவர்கள் எவ்வாறு உதவி புரிந்தார்கள் என்பதை அதிரை பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி , அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF )  தலைவர் M.M.S. சேக் நசுருதீன் போன்றோர்கள் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
     6.       அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) செயலாளர்  பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், அதிரை பேரூராட்சித் தலைவர் சகோ. அஸ்லாம் மற்றும் உறுப்பினர்கள் சகோ. இப்ராகிம், சகோ. செய்யது, சகோ.காதர், ஹாஜி S.M.A.  அக்பர் ஹாஜியார், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக பொருளாளர் சகோ. செய்யது, சகோ. சாகுல் ஹமீது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி சகோ.அன்வர் அலி ஆகியோர்கள் உரைகள் நிகழ்த்தி அல் அமீன் ஜாமிஆ பள்ளி கட்டவேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டப்பட்டது.

7.       நிகழ்ச்சிகளை தரகர் தெரு “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.


கூட்டத்தின் தீர்மானம் :
அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான வழக்குகள் கோர்ட்டில் இருப்பதால் அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளி மற்றும் அதிரை பேரூராட்சி ஆகியோர்கள் தங்களின் சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் தங்களால் போட்டப்பட்ட வழக்குகளை இரு தரப்பினரும் வாபஸ் பெறுவது என்றும் இதற்காக அல் அமீன் ஜாமிஆ பள்ளி நிர்வாகத்திற்கு இரண்டு மூன்று நாள்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு சுமூக முடிவை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது. இத் தீர்மானத்திற்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் குறிப்பாக அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக தலைவர் M.M.S. சேக் நசுருதீன்,  செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், பொருளாளர் சகோ.ரகத் அலி மற்றும் அதிரை இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கையொப்பமிட்டு உறுதிசெய்தனர்.நிகழ்ச்சியின் இறுதியாக துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.
Share:

திருச்சி விமான நிலையம் : வழியனுப்பிய உறவினர்களின் நெகிழ்ச்சி !

அதிரையிலிருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் உள்ள திருச்சி விமான நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் தங்களின் விமான சேவையை இயக்கி வருகின்றன.
அபரிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் திருச்சி விமான நிலையத்திற்கு, சர்வதேச அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பது பயணிகள்-பொதுமக்களின் நீண்ட கால விருப்பமாகும்.
குறைந்தபட்சம் 9,000 அடி நீளத்துக்கு ஓடுதளத்தை உயர்த்தினால் மட்டுமே சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தை வடிவமைத்த நிபுணர் மத ஈடுபாடு உள்ளவராக இருப்பாரோ ! என்னவோ ? மதச்சார்பற்ற இந்தியாவில் உள்ளோம் என்பதை மறந்துவிட்டு " கோபுரம் அதன் மீது கவசங்கள் " இருப்பது போல் உருவாக்கி கொடுத்துள்ளார்.

மனதை வருடிய காட்சிகள் :
வழியனுப்ப வந்துள்ள தங்களின் உறவினர்களிடம் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் விடைபெற்றுக்கொண்டது. மனதை வருடிய காட்சிகள் குறிப்பாக.....................
1.       குழந்தைகள் தங்களின் வாப்பாவைக் ( Father ) “டாட்டா” க் ( Bye Bye  ) காண்பித்து வழியனுப்பியது..............................விரைவில் வந்துவிடுவேன்ட “செல்லம்” ,  “தங்கம்” என கன்னத்தில் தட்டி கண்ணீரை அடக்கிக்கொண்டு குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியது...........................

2.       அன்பான மனைவியோ தங்கள் கணவன் இரண்டு மூன்று ஆண்டுகளில் திரும்ப வந்துவிடுவார் என்ற நினைவில் மூழ்கியவாறு கண்களில் கண்ணீருடன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் வழியனுப்பியது.........................

3.       பெற்றோர்களோ தங்களின் எதிர்பார்ப்பில் “ நாம் கஷ்டப்பட்டு படிக்க வைத்து உருவாக்கிய நமது மகன் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் நிச்சயமாக போக்குவான் ” என்ற நம்பிக்கையில் கையசைத்து வழியனுப்பியது......................

4.       அன்பான மனைவியின் பிரிவு, குழந்தைகளின் படிப்புச் செலவுகள், சகோதரிகளின் திருமணச் செலவுகள், பெற்றோர்களின் மருத்துவச் செலவுகள், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள் வாங்குதல் போன்ற என்னற்றக் கடமைகளை ( ? ) மனதில் சுமந்துவாறு “கையசைத்து” விட்டு நுழைவாயிலை நோக்கி நடந்து சென்ற பயனாளிகளின் முகத்தை பார்த்தது......................
இவைகள் எல்லாம் என் மனதை வருடியது.

கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் :
        1.       விமான நிலையங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் பார்சல்களை  வாங்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் அவர்கள் பெண்களாக இருந்தாலும் சரி......................
2.       பதற்றத்துடன் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

3.       பயணம் மேற்கொள்ளும் முன் தங்களின் உடமைகளை சரிபார்த்துக்கொள்ளவும் குறிப்பாக தங்களின் பாஸ்போர்ட், விமான டிக்கெட் போன்றவைகளை.

4.       கூடுதல் எடைகளுடன் கூடிய பொருட்களை தவிர்க்கவும். விமான நிறுவனங்களால் அனுமதிக்கப்பட்டவை மாத்திரம் கொண்டுசெல்லவும்.

குறிப்பு : இன்று திருச்சி விமான நிலையத்திற்கு நண்பர் மற்றும் எனது உறவினர் ஆகியோர்களை “துபாய்” நாட்டிற்கு வழியனுப்பி வைப்பதற்காகச் சென்றேன். அங்கே கண்ட என் மனதை வருடியக் காட்சிகளை இங்கே பதிந்துள்ளேன்.

இறைவன் நாடினால்  !                   தொடரும்...........................
Share:

அல் அமீன் பள்ளி விவகாரம்!

அதிரை அல்அமீன் பள்ளி விவகாரம் சம்பந்தமாக தரகர் தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் கூட்டப்பட்ட நல்லினக்க கூட்டத்தில் இரு தரப்பாரும் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுவது என ஏகமனதாக ஒப்பு கொள்ளப்பட்டது இதில் பேரூர் மன்ற தலைவர் மற்றும் வார்டு உருப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். .அல்ஹம்துலிலாஹ். முழு விபரம் விரைவில்.
Share:

மரண அறிவிப்பு ( வக்கீல் முனாஃப் தகப்பனார் )

புதுமனை தெரு வை சார்ந்த மர்ஹும் முசெமு அப்துல் மஜீத் அவர்களின் மகனும் வக்கீல் முனாஃப், மர்ஹும் அப்துல் வாகித், பொளஜூல் அமீன், இவர்களின் தகப்பனாரும் ஜம்ரூத் அவர்களின் மாமனாருமான எம் எஸ் எம் அப்துல் காதர் (75) அவர்கள் இன்று மதியம் காலமாகி விட்டார்கள்(இன்னா...) அன்னாரின் ஜனாசா நாளை காலை 8 மணியளவில் மறைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செயப்படும் என அன்னாரின் நெருங்கிய உறவினர்கள் கூறினர்.
தொடர்புக்கு : முனாஃப் 9791947724

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!”
அல் குர்ஆன்

Share:

பிளாஸ்டிக் ஒழிப்பில் கசாப் கடை !


அதிரை நகரில் சுற்று சூழலை மாசு படுத்தும் பாலிதீன் பைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அதிரை நகர் மன்ற தலைவர் SH அஸ்லம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார் .

வருகின்ற மார்ச் மாதம் 5 ஆம் தேதி முதல் அதிரை நகரில் இருந்து இந்த பிளாஸ்டிக பைகள் இல்லாத முன்மாதிரி நகரமாக மாற்ற பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

அதன் பேரில் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியருகில் உள்ள கசாப் கடையில் இன்று முதல் பனை ஓலையில் இறைச்சி விற்பனை செய்கிறார் இந்த கடையின் உரிமையாளர் அஷரப் அவர்கள் .

இது போன்று மற்ற நிறுவனங்களும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மாற்று ஏற்பாடுகளை செய்து எதிர்கால சந்ததியினருக்கு தொல்லை இல்லா நகராக மாற்றிட ஒத்துழைப்பு நல்கிட கேட்டுகொள்ளபடுகிறது .
Share:

அரிய நோய்க்கும் அருமருந்து இருக்கிறது அல்குரானிலே!

நான் கல்லூரி மாணவனாக இருந்த போது உலக குத்துச் சண்டையில் கொடிகட்டிப் பறந்த 'கேசிஎஸ் கிளை' எதிரிகள் மீது குதித்து குதித்து விடும் குத்துக்களையும், எதிரிகள் விடும்குத்துக்களை லாவகமாக சமாளித்தும், எதிரிகளை டான்ஸ் ஆடி கோப மூட்டியும் அதன் பின்பு அவர்களை வீழ்த்துவதும் கண்கொள்ளாக்காட்சிகளாக இருக்கும்.

எப்படி மஞ்சு விரட்டில் மாட்டின் திமில் மீதுதொத்திக் கொண்டு சீறி பாயும் காலை மாட்டினை அடக்குகிறானோ அதேபோன்று பல களங்களை வெற்றிக் கொண்ட வீரராகத் திகழ்ந்தார். சில நேரங்களில் தோற்றாலும் மூன்று முறை உலக குத்துச்சண்டை பட்டத்தினை வென்று வாகை சூடிய ஒரே வீரன் அவர். இரும்புபோன்ற வலுவான உடல் வாகு கொண்டஅவர் உள்ளம் மட்டும் ஏக இறைவன் அல்லாஹ் நோக்கியே இருந்தது.

ஓரிறைக் கொள்கை கொண்ட அவர் பெயரையும் முகமது என மாற்றிக் கொண்டது அனைவருக்கும் தெரியும். அது மட்டுமா அந்நிய அப்பாவி மக்களைக்
கொல்லும் அமெரிக்கா ராணுவத்தின் கட்டாய சேவையில் பதவி போனாலும் செல்ல மாட்டேன் என்று பட்டத்தினை பறிகொடுத்து, திரும்பவும் வென்று காட்டிய மாவீரன் முகமது அலியே சேரும். வல்லவன் என்பது ஒருவனை அடித்து வீழ்த்துவது அல்ல, மாறாக அவனை நேசக் கரத்தோடு நெஞ்சில் அனைத்துக் கொள்வதே ஆகும் என்ற தத்துவத்தினைப் போதித்தவரும் அவரே!

ஆகவே தான் அவரை உலக நாடுகளின் சபையின் அமைதிக்கான தூதுவராக நியமித்து அழகு பார்த்தது. ஆனால் தற்போது அவர் உடல் 'பார்க்கின்சன்' நோயால் துவண்டு போய் உள்ளது.

என்னோடு புதுக் கல்லூரியில் 1966-69 ஆண்டுகளில் படித்து, விடுதியில் ஒன்றாக தங்கி புதுக் கல்லூரிக்கு கூடைப் பந்திலும், சிறகுப் பந்துப் போட்டியிலும் பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வாங்கித் தந்த முகமது இர்பான் என் இனிய நண்பர். படிப்பிற்குப் பின்பு ஹாங்காங் நகரில் கல் வியாபாரம் செய்தார். 1985 ஆம் ஆண்டு நான் ஹாங்காங் சென்றபோது விருந்தோம்பலில் திளைக்க வைத்தார். அங்குள்ள டிராமினை விட வேகமாக நடக்கும் ஆற்றலினை அவரிடம் கண்டேன். இருபது ஆண்டுக்குப் பின்பு அவர் சென்னையில் குடியேறி விட்டார் என கேள்விப் பட்டு எங்களது கல்லூரித் தோழர் அமீர் அப்துல் காதருடன் நுங்கம் பாக்கம் வீட்டிற்கு வீட்டுக்குச் சென்றோம்.

எங்களை அதே பாசத்துடன் கட்டி அணைத்து வரவேற்றார். ஆனால் அவர் உடல் மட்டும் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப் பட்டது கண்டு மனம் வேதனையில் நொறுங்கிப் போனது. இறைவா ஏன் என் இனிய நண்பருக்கு இந்த நோயினைக் கொடுத்தாய் என்று குறை படவும் தோன்றியது.

அப்போது பார்க்கின்சன் நோயென்றால் என்ன என்று அலசத் தோன்றியது மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் இழந்து உடல் உறுப்புகள் ஆட்டம் கண்டும், விரைப்புத்தன்மை கொண்டும், செயல்பாடுகள் மெதுவாகவும் இருத்தல் என்று அறிந்தேன்.

21.2.2012 தினசரி பத்திரிக்கையினை புரட்டும்போது ஒரு சுவையான செய்தி வெளி வந்திருந்ததினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். அமெரிக்கா நரம்பியல் இயக்குனரக தலைவர் மார்க் மாட்சென் வயது முதிர்ச்சிப் பற்றி ஆராயும்போது ஒரு கண்டு பிடிப்பினை வெளியிட்டுள்ளார். 'ஒரு மனிதன் சில நாட்கள் உண்ணா நோன்பு இருந்தால் அவனால் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழமுடியும். எப்படி என்றால் உண்ணா நோன்பு இருந்தால் கலோரி மூளைக்குச் செல்வது குறைக்கப் பட்டு மூளையின் நரம்பு மண்டலத்தினை பாதுகாத்து பார்க்கின்சன் (Parkinson) மற்றும் அல்ஸைமர் (Alzheimer's Disease) போன்ற நோய்களிடமிருந்து காப்பாற்ற முடியும்' என்கிறார்.

அல்ஸைமர் நோய் என்றால் என்ன என்று பார்க்கும்போது, சாதாரணமாக 65 வயதினரைப் பாதிக்கும் மறதி நோய் இளம் வயதினரையும் பாதித்து, ஞாபக சக்தி குறைவு, குழப்பங்கள் ஏற்படுகின்றன என்றும் சொல்லப் படுகிறது.

அல்குரானிலும், ஹதீசுகளிலும் பார்க்கும்போது பல ஆதாரங்கள் கிடைத்தன. அவற்றில் சில வற்றை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்னை ஆயிஷா ரலி...அவர்கள், " அண்ணலார் அவர்கள் ஷாபான் மாதம் அதிக நோன்பு கடைப் பிடித்தார்கள்' என்றார்கள்.

அல்குரானில் 2:183 அத்தியாயத்தில், "நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது, நோன்பில் பல நன்மைகளும் உள்ளதாக" கூறுகிறது.

இமாம் புகாரி அவர்கள், " நோன்பு நோற்பதால் பலவீனமோ, சோர்வோ அடைய மாட்டார்கள்" என்று கூறினார்கள்.

இமாம் அபுதாவுது அவர்கள், "நோன்பு இருந்து முடித்ததும் தாகம் தீர்ந்து, நரம்புகள் வலுபெறும், இறைவன் நாடினால் திண்ணமாக நற்கூலியும் கிடைக்கும்" என்றார்கள்.

நோன்பு காலங்களில் பசித்திருந்து, தனித்துருந்து, விழித்திருந்து இறை நேசத்துடன், தீமைகளை சுட்டெரிக்கும் வகையில் ஒருவன் செயல் பட்டால் நரம்பு தளர்ச்சி நோய்கள் ஒருவனை நெருங்காது என்று மேற்கண்ட ஆதாரங்கள் கூறவில்லையா?

ஆனால் இந்த நவீன மோக உலகத்தில் நோன்பு காலங்களில் கூட வயிறுபுடைக்க சாப்பிட்டும், மது அருந்தியும், புகைத்தும், இன்னும் கூட சில இஸ்லாமிய ஊர்களிலும் அல்லது வெளி நாடு சென்ற இளைஞர்களிடம் காணலாம்.

அவர்கள் சிறார்களாக இருந்தபோது நோன்பு வைக்க பெற்றோர்கள் வற்புறுத்தி இருப்பார்கள் என்பது நிச்சயம். ஆனால் எப்படி பிற்காலத்தில் அதனை கடைப் பிடிக்காமல் முரண்படுகின்றனர் என்பது ஆச்சரியமாக இல்லையா? நான் கடுமையான காவல்துறை பணியில் இரவு பகலாக வேலைப் பார்த்தாலும் நோன்பினை விட்டதில்லை. நோன்பு இருக்கும்போது மாற்றார்கூட நம்மீது மதிப்புடன் நடந்து கொள்வார்கள் என்பதினை நான் கண்கூட பார்த்திருக்கின்றேன்.

1400 ஆண்டுகளுக்கு முன்பு நோன்பின் தத்துவத்தினை எடுத்து இயம்பிய அல்குரான், ரசூலுல்லாஹ்வின் ஹதீசுகள் இன்றைய விஞ்ஞான உலகில் மெய்யாகி இருக்கின்றது என்பதினை மார்க் மாட்சென் கண்டு பிடிப்பு கூறவில்லையா?

ஆகவே சமுதாய மக்கள் தங்கள் சிறார்கள், இளைஞர்கள் ஆகியோரை பார்க்கின்சன், அல்ழேமிர் நோய் போன்றவை தாக்காமல் பாதுகாக்க வேண்டுமென்றால் அவர்களை நோன்பு நோற்கச் செய்து, தீய செயல் பக்கம் நாடாது இருக்க அறிவுரை சொல்ல வேண்டும்.

சாதாரண காலங்களில் கூட வயிறு முட்ட சாப்பிடாது அரை வயிற்றுடன் சாப்பிட்டு அடுத்தவர்க்கு பகிர்ந்து அளிக்கும் ஈகைக் குணம் வேண்டும்.

திருமண, மற்றும் விசேசங்களில் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் தவிர்க்க வேண்டும்.

பெரியவர்கள் உணவுக் கட்டுப் பாடுகளுடன் நடந்து கொள்வதால் அல்ழேமிர் போன்ற நோய்கள் தாக்காது இருக்கும். அத்துடன் மற்றவர்க்கு பாரமாக இருக்க மாட்டோம்.

உணவுக் கட்டுப் பாட்டு, ஆயத்துள் குர்சி, அல்பாத்திஹா போன்ற ஆயத்துகளை ஓதி, வல்ல அல்லாஹ்வே எங்களுக்கும், எங்கள் சந்ததிகளுக்கும் பக்க வாதம், பார்க்கின்சன், அல்ஸைமர் போன்ற நோய்கள் தாக்காது பாதுகாக்க வேண்டும் என்று இரு கையேந்தி துவா கேட்போமா?

ஆக்கம் : முனைவர் A.P.முகமது அலி, PhD.,IPS (R)

Share:

பயணங்கள் அனுபவம் – “ சீனா “ - பகுதி 5


எனது அலைப்பேசி ஒலித்தது. எடுத்தேன்.... பேசினேன்..................! மறுமுனையில் என் சீன நண்பன் “ஜேம்ஸ்” எனக்காக “XingGongDong”  மெட்ரோ ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருப்பதைக் கூறினான்.
ரயில் மெதுவாக நின்றது.......ரயிலிருந்து இறங்கிய நான், எனது நண்பனுடன் நம்மைப்பற்றிய விவரங்களைப் பதிவு செய்து “அடையாள அட்டை” ( Badge ) பெறுவதற்காக அருகில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி வணிகச் சந்தையின் ( Trade Fair ) பதிவு அலுவலகத்துக்கு சென்றோம். முதல் நாள் என்பதால் கடுமையான கூட்டமாகக் காணப்பட்டது.
1.    நுழைவுக்கட்டணம் RMB 200 ( Chinese Currency ) செலுத்தி ( முதல் தடவையாக பதிவு செய்பவர்கள் மாத்திரம் இக்கட்டணத்தை செலுத்தவேண்டும் ) எனது பாஸ்போர்ட், பிஸ்னஸ் கார்டு மற்றும் இரண்டு போடோக்களைக் அவர்களிடம் கொடுத்து பதிவு செய்து அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டேன்.
2.    இவ்அடையாள அட்டை வணிகச் சந்தை நடக்கும் அரங்கத்திற்குள் நாம் நுழைவதற்கு உதவும்.
3.    ஒரு முறை பதிவு செய்துவிட்டால் ஒவ்வொரு வருடமும் இருமுறை நடக்கும் இவ்வணிகச் சந்தைக்கு ( Trade Fair ) நம் நாட்டில் உள்ள சீன தூதரகத்தில் விசா பெற இலகுவாக நமது முகவரிக்கு இவ்வணிகச் சந்தையின் அமைப்பாளரால் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
4.    இவ்அடையாள அட்டையைப் பயன்படுத்தி நிரந்தரமாக வணிகச் சந்தையில் நாம் பங்குபெறலாம்.
1957ம் ஆண்டு முதல் துவங்கிய இவ் ஏற்றுமதி இறக்குமதி வணிகச் சந்தை ( Trade Fair ) ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலம் ( Spring ) மற்றும் இலையுதிர்க் காலம் ( Autumn ) என இரண்டு காலக் கட்டங்களில் நடைபெறுகிறது. சீன வரலாற்றில் மிக நீண்டகாலம் நீடித்து, மிகப் பெரியளவில் நடைபெறும் பல்நோக்கு சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியாக, சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் வெளிப்பாடாகவே இவைக் கருதப்படுகிறது.
பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கிற இவ்வணிகச் சந்தையின் ( Trade Fair ) மூலம் சீனாவின் தொழில் வளர்ச்சிகள், பொருளாதார மேம்பாடுகள் உயர்ந்த நிலையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் பங்களிப்புடன் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.
சீனர்கள் தங்கள் நாட்டில் உற்பத்திச் செய்யப்படும் ஒரு சிறிய பொருளை எவ்வாறு சந்தைப்படுத்தப்பட வேண்டும் ?
குறிப்பாக............
1.    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் தேவைகள் என்ன ? என்பதை ஆய்வு செய்தல்
2.    திட்டமிடல்
3.    முறைப்படுத்தப்பட்ட நிர்வாகம்
4.    சர்வதேச வணிக சட்ட திட்டங்கள்
5.    மூலப் பொருள்கள் எளிய வழியில் சேகரித்தல்
6.    பொருட்களின் தரம்
7.    விலைகளை நிர்ணயம் செய்தல்
8.    எளிய வகையில் தகவல் பரிமாற்றம்
9.    எளிய வகையில் விநியோகம்
10.  சர்வதேச வணிகச் சந்தைகளில் பங்குபெருதல்
11.  விளம்பரம்
போன்ற வணிக நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்களாக உள்ளார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய அளவில் பங்காற்றும் அவர்களின் திறமைகள் எனக்கு பெரும் வியப்பாகவே இருந்தது.

சீன மாணவர்களைப் பொறுத்த வரையில் அதிகளவில் “வணிகத்” தொடர்பான படிப்புகளையே தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.  இவர்கள் பிற நாட்டினரோடு நண்பர்களாகப் பழகுவதை பெரிதும் விரும்புகிறார்கள். குறிப்பாக ஆங்கில மொழி பேசும் திறனை நன்கு வளர்த்துக்கொள்ள இது உதவும் என்பதால் இந்த கூடுதல் ஆர்வம் அவர்களிடையேக் காணப்படுகிறது.
அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட நான், உலகப்புகழ் பெற்ற மிகப்பெரிய அரங்கத்தின் நுழைவாயிலை நோக்கி பயணமானேன்.
நுழைவாயிலில் நடைமுறைப் பணிகளை முடித்துக்கொண்டு அருகே ராஜ கம்பீரத்துடன் ( ? ) காட்சியளிக்கும் ( ! )...............................................

இறைவன் நாடினால்  !    பயண அனுபவங்கள் தொடரும்.....................
Share: