தஞ்சை மாவட்ட அளவில் அதிரை AFCC அணி 5 வீரர்கள் தேர்வு

தஞ்சாவூர்  கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டியில் தமது அணியினரை அழைத்து மொத்தம் 11 பேர் தஞ்சாவூர் சென்றனர் அவர்களில் ஐந்து பேர் முப்பது பேர்க்கொண்ட குழுவில் தகுதி பெற்றுள்ளனர்

19 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியலில் அதிரை AFCC அணியின் 


1, ஃபாயாஸ் -  All - Rounder'க தகுதி 
2, இப்ராஹிம்  (தீன்னுல்  ஹக் பிரதர்) - தகுதி பெறவில்லை 
3, முபீன் - தகுதி பெறவில்லை 

மற்றும்  22 வயதிற்குட்பட்டவர்கள்  தகுதி சுற்றில் பங்கு பெற்ற அதிரை AFCC'ன் இளம் வீரர்கள் 

1, ஃபவாஜ் - மட்டை வீச்சாளராக தகுதி  
2, நிஜார்  MT - மட்டை வீச்சாளராக தகுதி  

3, ஃ ஜிப்ரி - All - Rounder'க தகுதி 
4, வஹாப் - சுழற்பந்து வீச்சாளராக தகுதி

5, ஜாஸிம் - தகுதி பெறவில்லை 
6, இப்ராஹீம் - தகுதி பெறவில்லை 
7, சாதிக் - தகுதி பெறவில்லை 
8, முஸ்தஃபா - தகுதி பெறவில்லை 

இவர்களின் தகுதி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளுடனும் தகுதியை இழந்த வீரகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து தகுதியிழந்த வீரர்கள் தங்களின் பயிற்சியில் தீவிரம் காட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ஆண்டில் இதேபோன்றொரு தகுதி சுற்றியில் மாவட்ட அளவிலான தகுதி பெற அல்லாஹ்விடம் தூஆ கேட்போம்..இன்ஷா அல்லாஹ் 

தகுதி பெற்ற  அதிரை AFCC'ன் இளம் வீரர்களை உள்ளம் குளிர வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்து மகிழ்கின்றது  AFCC நிர்வாகம்.

இங்ஙனம் 
AFCC - நிர்வாகம் 
நன்றி:அதிரை தென்றல் இர்பான் 

Share:

அதிரை SSM அணி அதிர்ச்சி தோல்வி-கோப்பையை கைப்பற்றியது கண்டனூர் அணி

அதிரை இளைஞர் கால்பந்துக் கழகம், மற்றும் மர்ஹூம் S.S.M. குல் முஹம்மது அவர்களின் நினைவாக நடந்து வந்த 19 ஆம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டியின்  இறுதி போட்டி ITI விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இந்த  இறுதி ஆட்டத்தில் அதிரை SSM குல் முஹம்மது அணியும் கண்டனூர் 7S  கண்டனூர் அணியினர் மோதினர். இதில்  கண்டனூர் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
Share:

தஞ்சை மாவட்ட அளவில் சிறந்த ஆல் - ரவுண்டராக அதிரை AFCC அணி வீரர் தேர்வு

தஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டியில் நமது AFCC அணியினரை அழைத்துள்ளார்கள். 19 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியலில் அதிரை AFCC அணியின் வீரர்கள் மூன்று பேர்  ஃபயாஸ், இப்ராஹீம்,முபீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதில்  தஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன்  மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டியில் ஆல் - ரவுண்டராக  AFCC அணி வீரர் ஃபயாஸ் அவர்கள் தேர்ந்தேடுக்ப்பட்டார். 
Share:

ஜூலை -6 கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி அழைக்கிறது த.மு.மு.க!

ஜூலை - 6  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் மாபெரும் கோரிக்கைப் பேரணி.


Share:

The Tree Mother Of Africa


ஆப்பிரிக்காவில், மரத்தின் அன்னை (The Tree Mother Of Africa) என போற்றப்பட்டு வந்த வங்காரி மாத்தாயின் இறப்புச் செய்தி உலக மக்கள் அறிந்திருப்பர். அவரின் மரணச்  செய்திக் கேட்டு உலக மக்கள் யாவரும் மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருப்பது மாத்தாயின் உயர்ந்த சேவையை எண்ணிப் பார்க்க வைக்கின்றன. இது உலக மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு எனலாம்.
 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வங்காரி மாத்தாய், கடந்த 25 செப்டம்பர் 2011, தனது 71ஆம் வயதில், நைரோபியிலுள்ள மருத்துவமனையில் தனது உயிரைத் துறந்தார். 1 ஏப்ரல் 1940-ல் பிறந்த இவர், தனது கென்யா நாட்டின் பெண்களின் அடையாளமாய் விளங்கினார். பெண்களுக்கு மிகவும் பக்கப் பலமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்த இவரின் செயலைக் கண்டு பலரும் பெருமை பட்டனர். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், கென்யா நாட்டில் பெரும்பான்மையான கிகுயு (kikuyu) என்ற இனத்தைச் சார்ந்தவர். இந்த பெண்மணியின் சேவையையும் தியாகத்தையும் பாராட்டி 2004ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முதல் ஆப்பிரிக்கா பெண்மணி என்ற பெருமையும் இவரையே சேரும். அரசியல், சமூகம் மற்றும் சுற்றுச் சூழல் நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டும் வந்தார். கென்யா நாட்டின் சுற்றுச் சூழல் அமைச்சின் துணை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார்.


வறுமையின் காரணமாக, எத்தொழிலையும் செய்யத் துணிந்த ஆப்பிரிக்கா மக்கள், தங்களின் சுயநலத்திற்காக மரங்களையும் வெட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பதை அறிந்த பின், இவர் மிகவும் மன உளைச்சல் அடைந்தார். அவர்களின் இந்நடவடிக்கைகள் எதிர்காலத்தின் அழிவிற்கு வித்திடும் என நம்பிய இவர் கிரீன் பெல்ட் (Green Belt) என்ற இயக்கத்தைத் தொடங்கி அதில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தார். இவ்வியக்கத்தின் மூலம் மரங்களின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் ஆப்பிரிக்கா மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். இந்நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பு மாத்தாய் முதலில் கென்யா மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தார். இவர்களின் அவசியமானது சிலவற்றையே, அவைகள் நல்ல குடிநீர், சமைப்பதற்கு விறகுகள், சத்துள்ள உணவு, கட்டுமானப் பொருட்கள் என இன்னும் சில தேவைகளை முன்வைத்தனர்.
அதற்கு, மாத்தாய் உங்களுக்குப் பணம் வேண்டுமானால் மரத்தை நடுங்கள். அவை உங்களுக்குப் பணம் தரும்.என்றார். ஆப்பிரிக்கா பெண்கள் எங்களுக்கு மரம் நட தெரியாதுஎன்றார்கள். சில வன அதிகாரிகளின் உதவியை நாடியப்பின் பெண்கள் மரக்கன்றுகளை நடத் தொடங்கினர். வளர்ந்த மரக்கன்றுகளைத் தங்களின் நிலத்திலேயே நட்டு வந்தனர். இப்படியே பல ஆயிர மரங்களை உருவாக்கினர். மரம் வளர்ந்த பிறகு நல்ல விலையில் போனது. இது பெரும் மாற்றத்தை பெண்களிடம் கொண்டு வந்தது. ஏனென்றால் மரம் நடுதல் அவர்களுக்குப் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.

மாத்தாய் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொள்ளாமல், சமூகத்தின் வளர்ச்சியிலும் அதனால் நாட்டிற்கு ஏற்படும் முன்னேற்றங்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கலானார். அதனால், இம்மூன்று கூறுகளையும் ஒன்றிணைத்து பார்க்கத் தொடங்கினார். தமக்கு நோபல் பரிசு வழங்கு விழாவில் அமைதி இல்லாத ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்காது. மக்களாட்சி மாண்புகளை மதிக்காத ஒரு நாட்டை நீங்கள் முன்னேற்ற முடியாது. மேலும் இயற்கை வளங்களைச் சரியாக கையாளாத நாட்டின் வளங்கள் சுரண்டப்படுகின்றன. பெரும்பான்மையை ஏமாற்றி சிறுபான்மையிடம் வளங்கள் ஒப்படைக்கப்படுகின்ற ஒரு நாட்டை முன்னேற்றவே முடியாது என தனது ஏற்புரையில் கூறினார்.


சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க வேண்டும் என்ற விழிப்புணவை ஏற்படுத்த அவர் மேலும் பல திட்டங்களைத் தீட்டிக் கொண்டு வந்தார். அதில் ஒன்று, இவ்விழிப்புணர்வைச் சிறுவயதில் மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக புதிய பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கினார். இவரின் இச்செயலால் ஆப்பிரிக்கா மக்கள் தங்களின் நில அவசியத்தை மிக அருகில் புரிந்துக் கொண்டனர்.
இப்படியே பெண்கள், மனித உரிமைகள் என்று பல அடிப்படைகளில் பிரச்சாரங்களை ஆப்பிரிக்காமக்களிடையே பரப்பினார். எப்படிப்பட்ட பெண்கள் ஆப்பிரிக்காவிற்கு வேண்டும் என்பதையும் ஆழமாக உணர்த்தினார். இவரின் பணியை எண்ணில் அடக்க முடியாத வகையில் அவர் விட்டுச் சென்ற நல்ல விசயங்கள் மட்டும் உயிரோடிக் கொண்டிருக்கின்றன.
Thanks: Miss. Mary Gete Merseds, Kenya, Africa.

தகவல் சேகரிப்பு: K.M.A. ஜமால் முஹம்மது.


Share:

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

அதிராம்பட்டினம் ஓ.கே.எம் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் ஹாஜி ஒ.கே.எம் நைனா முஹம்மது அவர்களின் சகோதரரும் ஹாஜி ஒ.கே.எம் சிபகதுல்லாஹ் அவர்களின் சச்சாவுமாகிய ஹாஜி ஓ.கே.எம் உதுமான் ஹுசைன் அவர்கள் நேற்று அதிகாலை இலங்கையில் வபாத்தகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா  நேற்று ஜும்மாவுக்கு முன்பாக இலங்கையில்  நல்லடக்கம் செய்ய பட்டது 


அவர்களின் பாவத்தை அல்லாஹ் மன்னிபனாக... ஆமீன்

தகவல் :S MD SHAREEF 
Share:

அதிரையில் குடிநீர் விநியோகம் தடை -பொதுமக்கள் பாதிப்பு

 அதிரையில் சுமார் 2 நாட்களுக்கு முன்பு அதிக மின்சார சப்ளை (high voltage) காரணமாக மிலாரிகாடு பகுதியில் மோட்டார் பம்ப்கள் பழுதடைந்து விட்டது. இதனால் நடுத்தெரு cmp லைன்,புதுமனைதெரு போன்ற தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது . இதனால் சம்மந்தப்பட்ட பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை அதிரை பேரூர் நிர்வாகம் உடனடி கவனத்தில் எடுத்துகொண்டு குடிநீர் தட்டுபாடு பிரச்சனையை விரைவில் தீர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது.
Share:

அதிரையில் மாபெரும் வீட்டுமனை விற்பனை துவக்கவிழா அழைப்பிதழ்!

அதிரையில் ஹசன் நகர் வீட்டுமனை விற்பனை துவக்கவிழா 30/06/2013 ஞாயிறு மாலை 4 மணிக்கு ஹசன் நகரில் நடைபெற உள்ளது. இந்தவிழா அன்று மனையை முன்பதிவு செய்பவர்களுக்கு 2கிராம் தங்க நாணயம் வழங்க இருக்கிறார்கள்!Share:

அதிரை பைத்துல்மால் ஜக்காத் நிதி வேண்டுகோள்!


அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் சார்பாக  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

அதிரை பைத்துல்மாலில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், வறிய  மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுன்னத் உதவி ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டங்கள் யாவும் ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் ஜக்காத் நிதியைக்கொண்டும் கூட்டுகுர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் நன்கொடைகளைக்கொண்டும் அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்று வருகின்றன. ஆகவே, நல்லுள்ளம் படைத்த தாங்கள் கடந்த வருடம்போல் இவ்வருடமும் அதிரை பைத்துல்மாலுக்கு தங்களுடைய ஜக்காத் நிதியை வழங்கி அல்லாஹ்வின் அளப்பரிய திருப்பொருத்தத்தை அடைந்துகொள்வீர்களாக. தங்களுக்கும் தங்கள் குடுபத்தார்களுக்கும் அல்லாஹ்  இம்மை மறுமைப் பேறுகளை வழங்கிடுவானாக ஆமீன். 

தாங்கள் அனுப்ப விரும்பும் ஜக்காத் நிதிகளை அதிரை பைத்துல்மாலின் கீழ்க்கண்ட அக்கவுண்ட்டில் செக்காகவோ, D.D. யாகவோ செலுத்தலாம்.    

                                            
1. ADIRAI BAITHULMAL, DHANALAKSHMI BANK, ADIRAMPATTINAM BRANCH, CURRENT A/C NO. 115-53-332

2. ADIRAI BAITHULMAL, CANARA BANK, ADIRAMPATTINAM BRANCH, S/B A/C NO. 120 110 102 3472

வஸ்ஸலாம்.

குறிப்பு : ABM-கிளைகள் கவனத்திற்கு  இதனை நகல் எடுத்து அதிரை வாழ் மக்களுக்கு கொடுத்து அவர்களின் ஜகாத் நிதியை அவர்களிடமிருந்து பெற்றிட வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Share:

தியாகம்

தீயகம் களைவதே
....தூயநல் தியாகமாம்
ஐயமில் விருப்பமும்
....ஆங்குதான் உதயமாம்சோம்பலின் எதிரியாம்
....சொர்க்கத்தைத் தருவதாம்
காண்பதில் அரியதாம்
....கர்ப்பத்தில் உரியதாம்தூய்மையின் பிறப்பிடம்
....தியாகத்தின் உறைவிடம்
தாய்மையின் சிறப்புதான்
....தரணிக்கே முதலிடம்விழுப்புண் போலவே
...வியர்வை விழவே
உழைக்கும் தந்தையும்
....உயர்வின் தியாகி


தோணியாய்க் கரைசேர்க்கத்
...தோழமையின் உணர்வுடன்
ஏணியாய் இருந்தார்கள்
....ஏற்றிவிட்ட  தியாகிகள்வானத்தின் தியாகமதை
....வடித்துவைக்கும் மேகமழை
தானத்தின் செடிகளெலாம்
....தியாகவிதை   வீசியதே


பசித்தவரின் துயரத்தைப்
....பசித்திருக்கும் பயிற்சியினால்
ருசித்துணரும் தியாகத்தை
.....ருசித்தவர்தான் உணர்ந்திடுவர்இறையின் கட்டளை
....இறுதிக் கடமையை
முறையாய்ச் செய்வதும்
....முழுமைத் தியாகமே
-- அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர் ,அதிராம்பட்டினம்
Share:

ஒருவரின் மானம் மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்துவதும் புறமே!

புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுக்கின்றீர்கள்” (49:12)

மதூரில் நடக்கும் நிகழ்வுகளை செய்தியாக மட்டுமே வெளியிடுவதை அதிரை எக்ஸ்பிரஸ் செயல்படுத்தி வருகிறது. அதுகுறித்த சார்பு/எதிர்ப்பு கருத்துகளை அதிரை எக்ஸ்பிரஸின் கருத்துரிமை கொள்கைக்கேற்ப இருந்தால் மட்டுறுத்தி அனுமதிக்கிறோம். ஒருநடுநிலை செய்திதளத்தின் செயல்பாடு இவ்வாறுதான் இருக்க முடியும்/வேண்டும். தளநிர்வாகி இன்னாரென்று தொடர்பு செல்பேசியுடன் வெளிப்படையாகத் தெரிந்திருப்பதால் குறிப்பிட்ட செய்திகளால் எவரேனும் பாதிக்கப்பட்டால் அதன் நிர்வாகியைத் தொடர்புகொண்டோ அல்லது வேறுவழிகளிலோ தேவையற்ற சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் மூத்த நிர்வாகிகளின் அறிவுறுத்தலின்பேரில் இவ்வாறு செயல்பட்டு வருகிறோம். எனினும் எங்கள் மீதான குற்றச் சாட்டுகள் பரவிய வண்ணமே உள்ளன.

ஒரு செய்தியை செய்தியாக வெளியிடுவதற்கும், அதில் சொந்தக்கருத்தையும் விருப்பு/வெறுப்புகளையும் நுழைத்து பதிவிடுவதற்கும் வித்தியாசம் உண்டு. அதிரை எக்ஸ்பிரஸின் முந்தைய பதிவுகள் மூலம் பெற்ற அனுபவங்களிலிருந்து அதிரை நிகழ்வுகளை எங்கள் கருத்தை திணிக்காமல் செய்தியாக மட்டுமே பதிந்து வருகிறோம்.சர்ச்சைகள் இல்லாமல் தளம் தொடர்ந்து இயங்குவதற்கு இதுவே சரியான அணுகுமுறை என்ற ஆலோசனையின் பேரில் இதில் உறுதியாக இருக்கிறோம்.

நமதூர் மட்டுமின்றி உலகளவில் முஸ்லிம்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது. ஊடகத்துறையில் நமது பங்களிப்பு 1% கூட இல்லாத நிலையில் முஸ்லிம்கள் குறித்த அவதூறுகளை எதிர்கொள்ளும் நோக்கில் இணையத்தில் செயல்பட்டு வருகிறோம்.நமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளுமளவில் முஸ்லிம்களிடம் ஊடகம் இல்லாத நிலையில், நமது குறைகளையும் இணையத்தில் எழுதுவது மேற்கண்ட முயற்சியை பலவீனப்படுத்தவே செய்யும்.நமது பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரில்பேசி தெளிவுபடுத்த/தீர்வுகாண முடியுமென்றால் அவற்றை பொதுவில் எழுதுவதால் நமது எதிரிகளுக்குத்தான் சாதகமாக அமையும் என்பதை உணர்ந்தே செய்திகளை செய்திகளாக மட்டும் வெளியிடுகிறோம். எனினும், நியாயமான மாற்றுக்கருத்துகளையும் வெளியிடுகிறோம்.

பிறர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி வேறொருவரிடம் கூறுவது மட்டும் புறம் அல்ல. பிறரைப் பற்றி பொதுவில் பதிவாக எழுதி அவமானப் படுத்துவதும் புறமே.

ஒருவர் செய்யும் தவறை தனிப்பட்ட முறையில் அவரிடம் மட்டுமே சுட்டிக் காட்டி அவரை திருத்த முயற்சிக்க வேண்டும் என்று இஸ்லாம் காட்டும் வழியே தவிர. நான்கு பேரிடம் அவரின் தவறை சொல்லிக் காட்ட  எந்த சந்தர்பத்திலும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

புறம் என்பதின் அர்த்தத்தை நபி (ஸல்) அவர்கள் நபிமொழியில் தெளிவு படுத்தியுள்ளார்கள்: 

‘புறம் பேசுதல் என்றால் என்ன? என்று நீங்கள் அறிவீர்களா?" என நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்" எனக் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் "(புறம் பேசுதல் என்பது) நீ உம் சகோதரனைப் பற்றி அவன் விரும்பாததைக் கூறுவதாகும் என்று கூறினார்கள். நான் கூறுவது என் சகோதரனிடம் இருந்தாலுமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நீ கூறுவது அவனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசி விட்டாய். நீ கூறுவது அவனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி அவதூறு கூறி விட்டாய்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

எனவே புறமென்பது ஒரு முஸ்லிமைப் பற்றி அவனிடம் உள்ள- அவன் விரும்பாத தன்மைகளில் ஒன்றைக் கூறுவதாகும். அவனுடைய உடல், மார்க்கம், உலக விவகாரம், குணநலன்கள், உடலமைப்பு என எது தொடர்பானதாக இருந்தாலும் சரியே! இப்படிப் புறம் பேசுவதற்குப் பல முறைகள் உள்ளன. அவனுடைய குறைகளை அல்லது அவனுடைய நடவடிக்கைகள் பழக்க வழக்கங்களைக் கேலியாக எடுத்துச் சொல்வதும் அவற்றுள் ஒன்றாகும்.

‘யார் தன்னுடைய சகோதரனின் கண்ணியம் மற்றும் மான மரியாதைக்கு களங்கம் ஏற்படுவதை விட்டும் தடுக்கின்றாரோ அவருடைய முகத்தை அல்லாஹ் மறுமையில் நரகத்தை விட்டும் தடுப்பான்’ (நபிமொழி) அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்: திர்மிதி.
Share:

ரியாத்தில் அதிரை பைத்துல்மாலின் 2 வது கூட்டம் (புகைப்படங்கள்)

அதிரை பைத்துல்மால் பல்வேறு நாடுகளில் பல கிளைகளைக் கொண்டிருந்தாலும் சவூதி ரியாத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கிளையொன்று தொடங்குவது என்றும், அன்றைய முதல் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த  14-06-2013  அன்று சவூதி ரியாத்தில் கிளைத்தலைவர் சகோதரர் சரபுதீன் அவர்களின் தலைமையில் இரண்டாவதுக் கூட்டம் கூட்டப்பட்டது.


நிகழ்ச்சியின் நிரலாக...

1. கிராத் : சகோதரர் முஹம்மது கமாலுதீன்

2. கூட்டத்தின் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

3. கிளை உறுப்பினர்கள் ரமலான் மாத ஜக்காத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது. 

 4.பித்ரா தொகை நபர் ஒருவருக்கு தலா 15 ரியால் என நிர்ணயம் செய்து அவற்றை வசூல் செய்து தலைமையகத்துக்கு ரமலான் பிறை 20 க்குள் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

 5.லாரல் பள்ளியில் கல்வி பயிலும் சமுதாய மாணவர்கள், தாய்மார்கள், அவ்வழியேச் செல்லும் பொதுமக்கள் ஆகியோர் நலன் கருதி அப்பகுதியில் சமுதாயக்கூடமொன்றை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இம்முயற்சியை தலைமையகம் மூலம் முன்னெடுத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.

6.ஜனாஸா குளிப்பாட்டுவதற்குரிய உலோகத்தட்டு வாங்குவதற்குரிய பற்றாக்குறை செலவீனங்களை தெரியப்படுத்தினால் கிளையினர் பகிர்ந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது.

7.கிளை சார்பாக மே மாதம் வசூலிக்கப்பட்ட தொகை 590 ரியால்

8.கிளை சார்பாக ஜூன் மாதம் வசூலிக்கப்பட்ட தொகை 600 ரியால்

 9.அடுத்த மாதாந்திரக் கூட்டம் வருகின்ற (12-07-2013 ) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ரியாத் வாழ் அதிரையர்கள் அனைவரும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

இறுதியாக கிளைத்தலைவர் சகோதரர் சரபுதீன் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றன.

புகைப்படம்:அதிரை புதியவன்  

Share:

முத்துப்பேட்டை ஜும்ஆ பள்ளி திறப்பு -ஏராளமான அதிரையர்கள் பங்கேற்பு

அதிரைக்கு அருகே அமைந்துள்ள முத்துப்பேட்டை ஆசாத் நகரில் புதிதாக கட்டப்பட்ட புதிய ஜூம்மா மஸ்ஜித் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை காலை தொடங்கி ஜும்ஆ  தொழுகையுடன் இனிதே நிறைவுற்றது.
இதில் நமதூரை சேர்ந்த ஆலிம்கள்,ஹாபிழ்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Share:

அதிரை TNTJ கிளையினர் வழங்கிய வாழ்வாதார உதவி

TNTJ அதிரை கிளையின் சார்பாக அதிரையின் முக்கிய பகுதிகளில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம், தெருமுனை பிராச்சரங்கள், கல்வி உதவித்தொகை, இரத்ததான உதவி, மருத்துவ உதவி ஆகியவற்றின் வரிசையில் வாழ்வாதார உதவியாக சி.எம்.பி லைனைச் சார்ந்த ஏழை சகோதரி ஒருவருக்கு தையல் இயந்திரமொன்று TNTJ யின் அதிரை கிளை நிர்வாகிகளால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.
 
நன்றி:அதிரை tntj 
Share:

துபாயில் தமிழ் உணவகம் திறப்பு விழா - 50% சிறப்புத் தள்ளுபடி

துபாய் - டேரா-ஃப்ரிஜ்முரார் பகுதியிலுள்ள லத்திஃபா பள்ளி பார்க்கிங் அருகே மலபார் சூப்பர் மார்க்கெட் பின்புறம் "ராஜ்பவன் ரெஸ்டாரன்ட்" என்ற பெயரில் உணவகம் 28-06-2013 வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.

திறப்புவிழாவை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை மட்டும் அனைத்து விதமான உணவுகளும் (பிரியாணி உட்பட) 50% தள்ளுபடியில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரை மற்றும் மதுக்கூர் சகோதரர்களால் புதிய நிர்வாகத்தின்கீழ் தொடங்கப் பட்டுள்ள இந்த ஹோட்டலை தெரிந்த நண்பர்களுக்கும் பரிந்துரைக்கும்படி பங்குதாரர்களில் ஒருவரான சகோ.முஹம்மது ஹுசைன் கேட்டுக்கொண்டார் .View Larger Map

குறிப்பு: அதிரை எக்ஸ்பிரஸில் இடம்பெறும் விளம்பரங்கள் அதிரையர்களின் நிறுவனங்கள் மற்றும் பொருட்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் எத்தகைய கட்டணமுமின்றி இலவசமாக வெளியிடப்படுகிறது என்பதுடன் இதன்மூலம் எத்தகைய லாபநோக்கமும் இல்லை என்பதால் லாப/நட்டங்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பல்ல.
Share:

ஆண்மை குறைபாட்டை போக்குகிறதாம்... அதிரை கடல் பகுதி மீன்கள்

அதிரை  கடல் பகுதியில் மீனவர்கள் கூரல் கத்தாழை, கொடுவா, காளை ஆகிய மீன்களை தனி வலை பயன்படுத்தி பிடிக்கின்றனர். இந்த மீன்கள் 10 முதல் 20 கிலோ எடை வரை இருக்கும்.மேலும் ஆண்மை குறைபாட்டை போக்குவதாக கருதப்படும் கூரல் கத்தாழை மீன்களின் நெட்டிகள், கிலோ ரூ.1.4 லட்சத்துக்கு விற்கப்படுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூரல் மீன்களின் வயிற்றில் உள்ள நெட்டி என்ற உறுப்பை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஒரு கிலோ நெட்டி ரூ.1.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. இந்த மீன்களை வாங்குவதற்கு போட்டி அதிகம் இருக்கும். வாரம் ஒருமுறை கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் இங்கு வருகின்றனர். அமெரிக்கா, லண்டன், மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு நெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வியாபாரிகள் ஆண் மீனை விட பெண் மீனுக்கு விலை குறைத்து நிர்ணயிக்கின்றனர்.

இதுகுறித்து மீன் வியாபாரி அதிரை அப்துல் ரஜாக் கூறுகையில், கூரல் கத்தாழை மீன்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் 5 பெரிய நெட்டிகள் ஒரு கிலோ எடை இருக்கும். இது ரூ.1.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. பெண் நெட்டி ரூ.80 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. கூரல் கத்தாழை நெட்டிகள் வாங்குவதற்கு அதிக போட்டி உள்ளது.மேலும் கூரல் கத்தாழை நெட்டிகள் ஆண்மை குறைபாட்டை நீக்கும் மருந்து தயாரிக்கவும், பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள ஸ்டார் ஓட்டல்களில் உயர் ரக சூப் தயாரிக்கவும் இந்த நெட்டிகளை பயன்படுத்துகின்றனர்’’ என்றார்.
Share:

அதிரையில் உலா வரும் போலி அதிகாரிகள்? (மக்களே உஷார்)

அதிரையில் தங்களை அரசு அதிகாரிகள் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் குடும்பம் மற்றும் சில தகவல்களை பெற அதிகாரிகள் வேஷத்தில் சிலர் உலா வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து கூறப் படுவதாவது:

நேற்று பகல் சுமார் 1:00 மணியளவில் புது ஆலடித் தெருவில் இரண்டு பெண்கள் அரசு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு வீட்டிலும்  மக்கள் தொகை கணக்கெடுக்க வந்ததாக கூறியுள்ளனர். அதே பெண்கள் வேறு சில வீடுகளில் முன்னுக்குப் பின் முரணாக பொருளாதாரக் கணக்கெடுப்பு என்றும் கூறியுள்ளனர். அவர்கள் அதிகாரிகள்தான் என்பதற்கு எந்த வித அடையாளமும் இல்லை என்றும் சொல்லப் படுகிறது. 

எனவே இதுபோன்று யாரும் வந்தால் தீர விசாரிக்கவும். அவர்களிடம் அதிகாரிகளுக்கான சான்று அல்லது அடையாள அட்டை எதுவும் உள்ளதா? என்றும் விசாரிக்கவும். பெண்கள் மட்டுமே வசிக்கும் வீடுகளில் அருகில் இருக்கும் உறவினர் அல்லது தெரிந்த ஆண்களை அழைத்து வந்திருக்கும் நபர்கள் உண்மையிலேயே அதிகாரிகள்தானா? என்பது குறித்து தீர விசாரித்து சந்தேகமாக இருப்பின் உடன் காவல்துறையினருக்கு தெரியப் படுத்தவும்.


தகவல்: ஆசிஃப் இக்பால்


பின்குறிப்பு : மின்னஞ்சலில் வந்த தகவலின் அடிப்படையில் இந்தப் பதிவு மக்களை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி பதியப் படுகிறது. ஒருவேளை வீட்டில் வந்து விசாரிப்பவர்கள் உண்மையிலேயே அரசு அதிகாரிகள்தான் என்கின்ற படசத்தில் அவர்களின் உண்மை நிலையை அறிந்து நாம் பதில் அளிப்பது நம் கடைமையாகும்.
Share:

வருக வருக ரமளானே....


ல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானதாகும். அவனது அருளும்சாந்தியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழிநடந்த முஸ்லிம்கள் மீதும் உண்டாகட்டுமாக!
ரமளான் பாக்கியம் நிறைந்த மாதமாகும். அதில்தான் அல்குர்ஆன் இறங்கியது. அது புனித புனிதமிக்க லைலத்துல் கத்ர் என்ற இரவில் இறங்கியது. அவ்விரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும். ரமளான் வந்தால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றனநரகவாயில்கள் மூடப்படுகின்றன. ரமளானை நபி (ஸல்) அவர்கள் பல வருடங்கள் சந்தித்து அதன் சிறப்பையும்மகிமையையும் அடைந்து கொள்ள பலவழிமுறைகளை தனது சமுதாய மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்கள். அவற்றை ஒரு முஸ்லிம் அறிந்து செயல்படுவதால் நிச்சயமாக ரமளானின் பாக்கியத்தை அடைந்தவனாக ஆகுவான்,2:185

.ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும்தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே,உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோஅவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;.அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிரஉங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும்உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

ரமளானின் நோன்பு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் சேர்க்கப்பட்டிருப்பதை சிறுபராயத்திலேயே ஒரு முஸ்லிம் போதிக்கப்படுது பெரியவனாகிய பின்பு அந்தக்கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான். சிறுபருவத்தில் நோன்பு நோற்கும் பழக்கப்பட்ட ஒரு முஸ்லிம் அதை நோற்கும் பருவ வயதெல்லையை அடைந்த பின்னால் அதைப் பாழடிக்க வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு பாழடிக்கின்றான். தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்பதைப் பொய்ப்பிக்கின்ற இந்தத் தீய நடைமுறையை வெளிச்சூழல்களில் இருந்தே அவன் கற்றுக் கொள்கின்றான். ஆரம்ப காலங்களில் பட்டினி கிடந்து நோன்பு நோற்ற சின்னஞ் சிறுசுகளின் பட்டியலில் இவனும் ஒருவனாக இருந்தான் என்பதை நினைக்கின்ற போது அல்லாஹ்வின் கடமையில் எவ்வளவு குறை செய்கின்றான் என்று சிந்தித்துப்பாருங்கள்.

ரமளான் மாத நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் முஸ்லிம்கள் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் கடமையாக நோன்பு நோற்று வந்தனர்ஸஹாபாப் பெண்கள் அதை நோற்றதோடு தமது குழந்தைகளையும் நோன்புபிடிக்கச் செய்தார்கள். பசியினால் கதறும் போது பஞ்சினால் தயாரிக்கப்பட்ட பொம்மைகளைக் கொடுத்து நோன்பு திறக்கும் நேரம் வரும் வரை அவர்களது கவனத்தை திசைதிருப்பிவிடுவார்கள் என்ற செய்தியை புகாரிமுஸ்லிம் உள்ளிட்ட பல ஹதீஸ் கிரந்தங்களில் காண்கின்றோம். இவ்வாறான நிலை நம்மிடமும்நமது குழந்தைகளிடமும் வருவதற்கு என்ன முயற்சி செய்துள்ளோம் என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

யார் இறை நம்பிக்கையுடனும்நன்மை நாடியும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்திய பாவம் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி).

புனித லைலத்துல் கத்ரின் துஆ:  அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! புனித லைலத்துல் கத்ரை (அதன் அடையாளங்களைக் கொண்டு) நான் அறியும் தருணத்தில் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்என வினவியபோது
'அல்லா ஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ பஃபு அன்னீ '
பொருள்:-அல்லாஹ்வே! நீ (பாவங்களை) மன்னிப்பவன். என்னை மன்னித்து விடுவாயாக! என பிரார்த்தனை செய்வாயாக என்று பதிலளித்தார்கள் (ஆதாரம்: திர்மிதி).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களில் அதிக கொடை வள்ளலாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் அதிகமதிகம் வாரிவழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் ரமளானின் ஒவ்வொரு இரவிலும் அது முடியும் வரையும் சந்திப்பார்கள். அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கின்றபோது தொடர்ந்து வீசும் புயல்காற்றைவிட (வேகமாக) நல்லதை வாரி வழங்குவார்கள். (புகாரி).

உடலும் உள்ளம் நலம் பெறும் மாதம்
இயற்கை மருத்துவத்தில் உண்ணாமை என்பது மருத்துவம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது,

டாக்டர்: சூ கூறுகிறார் உணவில்லாததால் இறந்து விட்டவர்களை விட வேண்டாத வேளையில் உணவுண்டு இறந்தவர்கள் எண்ணிக்கையே அதிகம் என்று அவர் ஆராய்ந்து கூறுகிறார் முப்பது நாட்கள் நோன்பிருப்பதால் உடல் பலவீனமாகும் என்பது தவறான கருத்தாகும்.

உலகறிந்த உயிரியல் விஞ்ஞானி பேராசிரியர்: ஹக்ஸ்ஸி சில மண் புழுக்களை வைத்து ஆராய்ச்சி செய்தார் அவற்றுக்கு விருப்பமான வழக்கமான உணவை கொடுத்து வந்தார் ஒரே ஒரு மண் புழுவை மட்டும் தனியாக எடுத்து ஒரு வேளை உணவையும் மறு வேளை பட்டினியாகவும் வளர்த்து வந்தார் தொடர்ந்து உணவை சாப்பிட்ட மண் பழு அழிந்துவிட்டன ஆனால் ஒரு வேளை உணவும் மறு வேளை பட்டியாகவும் சாப்பிட்ட மண் புழு நீன்ட நாட்கள் வாழ்ந்தது என்று தனது ஆய்வில் கூறுகிறார்.

பேராசிரியர்: சைல்டு இளமையோடு இருப்பதற்க்கு நோன்பு உதவி செய்கிறது என்று அவர் கூறுகிறார்

ரமலான் காலங்களில் செய்யவேண்டிய முக்கியமான செயல்கள்
'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியதுஇ அதற்கு நானே கூலி கொடுப்பேன்என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம்இ அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும். நபிமொழி (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)இ திர்மிதி 761)

பாவ மன்னிப்பு தேடுதல்இமாம் ஜமாத்துடன் ஐந்து நேரத் தொழுதல,; குர்ஆன் ஓதுதல,; தராவீஹ் தொழுதுதல்தஹச்சத் தொழுதல்ஒற்றுமையாக இருத்தல,; தஸ்பீஹ் செய்தல் குடும்பத்தார்களுக்கு உதவி செய்தல் ஏழைகளுக்கு உதவி செய்தல் உம்ரா செய்ய செல்லுதல் ஜாகத் உரியவர்க்கு முறையாக கொடுத்தல் நோன்பு திறக்க ஏழை எளியவருக்கு உதவி செய்தல் நன்மையை செய்ய பிற மக்களுக்கு உபதேசம் செய்தல் ஆர்வம் மூட்டுதல்உலக முஸ்லீம்களுக்காக துஆ செய்தல்இஃதிக்காப் இருத்தல்

ரமலான் காலங்களில் செய்யகூடாத முக்கியமான செயல்கள்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாகநோன்பு எனக்கு(மட்டுமே) உரியதுஅதற்கு நானே கூலி கொடுப்பேன்!.என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவேஉங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால்.நான் நோன்பாளி!.என்று அவர் சொல்லட்டும்! மு'ம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான் தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.'' என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள் .(நூல்: புஹாரி)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்''பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லா';வுக்கு எந்தத் தேவையுமில்லை!'' என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள். .(நூல்: புஹாரி)
பொய் பேசுதல் பாவம் செய்தல் தொழுகை விடுதல் வீண் பேச்சுக்கள் பேசுதல் சன்டையில் ஈடுபடுதல் தொலைக்காட்சி பார்த்தல் அதைப் பற்றி பேசுதல் காரணயில்லாமல் நோன்பை விடுதல்புறம் பேசுதல்,ஹரமான சம்பாத்தியம்ஹராமான உணவு சாப்பிடுதல்ஆடம்பரமான ஆடைகள் வாங்குதல்அண்ணிய பெண்களோடு பேசுதல்பார்த்தல்இரவு நேரங்களில் வீண் விளையாடுதல்

நஜ்முத்தீன் (காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தீனியாத் ஆசிரியர்)


Share:

இமாம் ஷாபி பள்ளியில் 11-ஆம் வகுப்பு திறப்பு நாள் அறிவிப்பு

இமாம் ஷாபி பள்ளி 11- ஆம் வகுப்பு வருகின்ற ஜூலை மாதம் 1 ஆம் தேதி திறக்கப்படுகிறது. தற்போது மாணவ/மாணவிகளுக்கு அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

மேலும் மற்ற பள்ளிகளில் 10ஆம் வகுப்பு படித்துவிட்டு 11 ஆம் வகுப்புக்கு இமாம் ஷாபி பள்ளியில் படிக்க வரும் மாணாக்கர்களுக்கு நாளை (27-06-13) அட்மிஷன் துவங்குகிறது.     
Share:

அதிரை லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு

அதிரை லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று செவ்வாய்கிழமை லாவண்யா திருமண மகாலில் மாலை 6:30 மணியளவில் நடைபெற்றது.மேலும் அதிரை பள்ளிகளில் சாதனை பெற்ற மாணவ/மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்ப்பட்டோர்  கலந்து கொண்டனர்.  
Share:

அதிரையில் திடீர் சாரல் மழை!!


நமதூரில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்த வந்த நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு திடீர் சாரல் மழை பெய்தது.காலையில் மழை பெய்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை, இருப்பினும் தற்பொழுது மிதமான சாரல் மழை பெய்துள்ளதால் வெயிலின் பிடியில் இருந்த நம்மூர் மக்கள் இந்த திடீர் சாரல் மழையால் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Share:

அதிரை TNTJ வின் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகிற்து அதன் அடிப்படையில் இந்த வருடமும் முதல் தவனையாக 11ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு ஒரு வருட கல்வி கட்டணமாக தலா  ரூ5250 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் வெற்றிலைக்காரத் தெருவை சார்ந்த 11ஆம் வகுப்பு மாணவிக்கான கல்வி கட்டணம் ரூ 5250 அவரின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது  கரையுர் தெரு சார்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் பவித்ரா என்ற மாணவிக்கான ஒரு வருட கல்வி கட்டணம் ரூ5250 அவரின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது
தகவல் : TNTJ
Share:

செக்கச் செவேரென்று இருந்த மாதுளை முத்துக்கள்.

ஜூன் கடைசி என்றாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. சரியான அனத்தலா இருக்குது,  சி.எம்.பி. லேனில் என் வீட்டுக்கு எதிரில் இன்பமான நிழல்கள் தரும் பெரிய மரங்கள் உண்டு, அதனடியில் ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தேன், 11.30மணிக்கு ஒரு பழவண்டி வந்தது, அதில் பலவகையான பழங்கள் இருந்தது, காபூல் மாதுளைப் பழமாம், மாதுளை முத்துக்கள் செக்கச் செவேரென்று இருக்குமாம், கிலோ ரூபாய் 160தாம், கிலோவுக்கு மூன்று பழங்கள் வீதம் இருந்தது, வாங்கி ஒருபழத்தை அறுத்து பார்த்ததில் அவன் சொன்னது போலவே மாதுளை முத்துக்கள் செக்கச் செவேரென்று இருந்தது.
இதனுடைய பலன்களை மேலும் தெரிந்து கொள்வதற்காக இணையத்தை நாடினேன், கீழ்க்கண்ட தகவல்கள்  கிடைத்தது.மாதுளை (Pomegranate)  வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.

தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
அதிக தாகத்தைப் போக்கும்.

மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல்

ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K. Mohamed Aliyar (Late)
Share: