கடந்த 27:11:2013 அன்று நமதூரின் முக்கிய தளங்களில் அதிரை சகோதரிக்கு உடனடி இரத்தம் தேவை என ஒரு பதிவை பதிந்திருந்தோம் நமதூர் மற்றும் சென்னை கல்லூரி மாணவர்கள் அதில் குறிப்பிட்ட எண்ணை தொடர்புகொண்டு குருதி கொடுக்க முன்வந்தனர் அல்ஹம்துளிலாஹ்.
குருதிகொடையளிக்கும் அதிரையர்கள்!
இதில் சவுதியிலிருந்து தொடர்புகொண்ட அருபுக்கோட்டையை சார்ந்த முகமது என்ற சகோதரர் இதுசம்பந்தமாக அவ்வபொழுது தொடர்புகொண்டு இரத்தம் பெறுவதற்கான வழிமுறைகளை தெரியபடுத்தினார்.அல்லாஹ் அவருக்கு நற் கூழியை வழங்குவனாக -ஆமீன். குருதி கொடைபெற்ற அந்த பெண்மணி பூரண குணமடைந்து இன்று மருத்துவ மனையிலிருந்து இன்று வீடு திரும்புகின்றனர்.அந்த பெண்மணி எம்மை அழைத்து இந்த பேருதவியை செய்த அனைத்து நலுள்ளங்களையும் நினைவு கூர்ந்து அவ்ரகளுக்காக அல்லாஹ்விடம் கண்ணீர் மல்க துஆ செய்தது என் நெஞ்சை நெகில செய்தது.
குறிப்பு:
மேற்கண்ட பெண்மணி உடல்நோய்வாய் பட்ட நிலையில் தஞ்சையில் உள்ள பிரபல மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்
அவரை பரிசோத்தித்த மருத்துவர்கள் இவருக்கு இரத்த புற்று நோய் தாக்கியுள்ளது என்றும் இவரை உடனடியாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார்
இங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் போதிய வசதி வாய்ப்பு இன்மையால் இவரை அந்த தனியார் மருத்துவமனை மருத்துவரே ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு எழுதி கொடுத்துள்ளார்.
அரசு மருத்துவ மனையில் அனுமதி செய்த உடன் அரசு மருத்துவர்கள் இந்த பெண்மணிக்கு மீண்டும் ஒருமுறை புற்றுநோய் சிகிச்சைக்கான சோதனையை கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்டதில் இவருக்கு புற்றுநோய் இருப்பதற்கான சாத்திய கூறுகளே இல்லை என உறுதிபட கூறியுள்ளனர் இவருக்கு நரம்பு சார்ந்த வியாதிதான் எனவும் அதற்க்கான மருதுகளையும் கொடுத்தனுப்பியுள்ளனர். அல்லாஹ் பெரியவன்
இப்பதிவின் நோக்கம்:
சாதாரண சளி பிடித்தாலே சட்டுபுட்டுண்டு தஞ்சைக்கு படையெடுக்கும் மக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காகவும்.
அவசர தேவைக்கு ஓடோடி வந்து உதவிடும் மன பக்குவம் இன்னும் ஏராளமானவர்களுக்கு வர வேண்டும் என்பதர்க்கவவுமே இந்த பதிவு.
ஆக்கம் : அபூபக்கர் , ஹாமித்