அதிரைக்கு உரையாற்ற வரும் செய்யது இப்ராஹீம்


இன்ஷா அல்லாஹ் விரைவில் அதிரையில் செய்யது இபுராகீம் உரையாற்றுவார்கள் நாள்  இடம் பின்னர் அறிவிக்கப்படும்.


Share:

கல்யாண வீட்டில் கலாட்டா-பதிவு எதிரொலி

அஸ்ஸலாமு அலைக்கும்.
சென்ற 2008ஆம் ஆண்டு எனது மூத்த மகனின் திருமண அழைப்பிதழ் அனுப்புதற்காக சென்னையில் உள்ள அதிரையர்களின் பெயர், முகவரி, டெலிபோன் நம்பர் ஆகியவை குறிப்பிட்டு ஒரு லிஸ்ட் தயார் செய்து இருந்தோம்.அந்த லிஸ்ட் அதிரையர்களுக்கு உதவியாக இருந்தது.இன்ஷா அல்லாஹ் வரும் 8.1.2015 அன்று சென்னையில் நடை பெற இருக்கும் எனது மகளின் திருமணத்திற்காக அந்த லிஸ்டை தேடிக்கண்டுபிடித்தோம்.அந்த லிஸ்ட் வேறுயார்யாரோ கைமாறி, எங்கள் குடும்பத்தவர், உறவினர்கள் பெயர் விபரங்கள் எடுக்கப்பட்டு இருந்தது.அதுமட்டுமல்லாது அதிரையர் அல்லாதவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு இருந்தது.ஊர் முழுவதற்குமாக புதிய லிஸ்ட் தயாரிக்கலாம், ஊர்க்காரர்களுக்கு உதவும் என நினைத்து, அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகியுடனும்,என்னுடைய உறவினர்  A.L. அன்வர் அவர்களுடனும் பேசியிருந்தேன்.இன்ஷா அல்லாஹ் எனது மகளின் திருமண வேலைகள்முடிந்து செய்து கொள்ளலாம் என இருந்து விட்டேன்.

இன்ஷா அல்லாஹ் இனி செய்ய வேண்டியது:
A. மேற்குறிப்பிட்டபடி “உலகம் முழுவதும் உள்ள அதிரையர்”களின்1. குடும்பப்பெயர் அல்லது ஸ்தாபனத்தின் பெயர்
2. பெயர்
3. தந்தை பெயர்
4. தற்போதய உள்நாட்டு/வெளிநாட்டு முகவரி (அவசியம்)
5. ஊர் முகவரி (அவசியம்)
6. டெலிபோன் நம்பர் (அவசியம்)
7. ஈமெயில் ID (அவசியம்)
ஆகியவை குறிப்பிட்டு புதிய லிஸ்ட் தயாரிக்கனும்.


B. இதற்கு அதிரை எக்ஸ்பிரஸ் பொருப்பேற்றுக்கொள்ளனும்.


C. அந்த லிஸ்ட்டை அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகக்தினரை தவிர மற்றவர்கள் தன் இஷ்ட்டப்படி மாற்றம் செய்ய இயலாதபடி இருக்கணும்.


D. தனது விபரங்களில் மாற்றம் செய்ய விரும்புவோர் அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகக்தினரை தொடர்பு கொண்டு மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.


E. அதிரை எக்ஸ்பிரஸார், Excelல் லேபில் போல் தயாரித்து வைத்துவிட்டால் வேண்டியவர்கள் யார்யார் பெயர் விபரங்கள் தங்களுக்கு வேண்டுமோ, அவற்றை காப்பி & பேஸ்ட் செய்து கொள்ளலாம்.


F. திருமண அழைப்பிதழ் அனுப்புதற்காக மட்டுமல்லாது வேறு தொடர்புகளுக்கும் இது உதவும். டெலிபோன், ஈமெயில் மூலமாக தொடர்புகொள்ளலாம்.


G. லிஸ்ட்டில் உள்ளவர்கள் யாரும் மரணமடைந்து விட்டால் அவரின் விபரங்ளை அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகள் அவ்வப்போது நீக்கி விடணும்.


H. வாடகை வீட்டில் வசிப்பவர்கள், முகவரி மாற்றங்கள் ஏற்படலாம் என நினைத்தால்,  உறவினர்கள் அல்லது நண்பர்களின் நிலையான வீட்டு/ஸ்தாபன முகவரியை கொடுக்கலாம்.


I. கண்டிப்பாக இது அதிரையர்க்கு மட்டும்தான்.


J. இதன்பின் அதிரைஎக்ஸ்பிரஸ் நிர்வகிகள் என்ன முடிவு செய்து எப்படி உங்களின் விபரங்களை பெற விரும்புகிறார்களோ, அதன்படி செய்து கொள்ள வேண்டியது.


K. அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகள், இந்த லிஸ்டை அதிரையர்கள் மட்டும் பார்ப்பதற்காக USER ID & PASSWORD ஏற்படுத்திக்கொடுக்கலாம். இது மற்றவர்கள் தவறான முறையில் இதை உபயேகப்படுத்துவதை தடுக்கும்.


இத்துடன் பழைய லிஸ்ட்டின் காப்பி இணைத்துள்ளேன்.


இதில் இல்லாத பெயர் விபரங்களை இன்ஷா அல்லாஹ் பின்பு அனுப்பி வைக்கிறேன்.


காயல்பட்டிணத்தில் இதுபோல் உள்ளது: http://kayal.8m.com/email/a2h.htm

அல்லாஹுத்தஆலா உங்களின் முயற்சிகளில் வெற்றியை தந்தருள்வாக.


அன்புடன்,
புளியாணம் முஹம்மது இர்பான்
S/o புளியாணம் ஹாஜி மஹ்மூது அலியார்.

இன்ஷா அல்லாஹ் மேல் கூறப்பட்ட அணைத்து விதி முறைகளுக்கும் உட்பட்டு இன்னும் சில தினங்களில் நமது தளத்தில் சென்னை வாழ் அதிரையர்களின் முகவரிகள் வெளியிடப்படும்.  

Share:

முஷ் கிச்சன் வழங்கும் மில்க் கேக் செய்முறை -நியூ இயர் ஸ்பெஷல்

முஷ் கிச்சன் வழங்கும் புத்தாண்டு ஸ்பெஷ்லாக மில்க் கேக் ரெசிபி செய்முறையை விளக்குகிறார் நமது நெய்னா அவர்கள்.... 


Share:

செக்கடி குளத்தை சுத்தபடுத்தும் வாத்துகள் (வீடியோ காணொளி)

அதிரை செக்கடி குளம் ஆற்று நீர்,மழை நீரால் நிரம்பி காட்சி தரும் நிலையில் அங்கு உள்ள பாசிகளை சுத்தம் செய்ய 12 மணி வாத்துகள் அப்பகுதி சமூக ஆர்வலர் குளத்தில் வாத்துகளை விட்டுள்ளார்.மேலும் அந்த வாத்துகளை காண ஏராளமான சிறுவர்,சிறுமியர்கள் அங்கு குவிய துவங்கி உள்ளனர். 


Share:

அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் மூன்றாம் ஆண்டு துவக்கம்

அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் மூன்றாமாண்டு துவகக விழா மற்றும் புதிய  நிர்வாகிகள் பொருபேர்ப்பு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் வல்லேகோ சிட்டி இஸ்லாமிக் சென்டரில் 25 ந்தேதி வியாழகிழமை மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு சகோ மீயன்னா சலீம் அவர்களின் புதல்வர் மாஸ்டர் ஜாபிர் கிராத் ஓத இனிதே துவங்கியது . 

நார்தர்ன் கலிபோர்னியாவில் வசிக்கும் அணைத்து அதிரை மக்களும் தங்கள் குடும்பத்துடன்  கலந்து கொண்டனர் . வந்திருந்த அனைவருக்கும் கூட்டமைப்பின் சார்பாக மதிய உணவு பரிமாறப்பட்டது பிறகு புதிய நிர்வாகிகல் பொருபேர்ப்பு தலைவராக சகோதரர் ஷேக் அலி அவர்களும், துணை தலைவராக மீண்டும் சகோதரர் ஷிப்லி முஹம்மத் அவர்களும்,. செயலாளராக சகோதரர் மீயன்னா சலீம் அவர்களும் , துணை செயலளாராக சகோதரர் ஷேக் அப்துல் காதர் அவர்களும் பொருளாளராக சகோதரர் முஹம்மத் அவர்களும் பொறுப்பேற்று கொண்டனர். 


பிறகு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபற்றன அதிராம்பட்டினம் பஸ் ஸ்டான்ட் அருகில் உள்ள அல் அமீன் பள்ளிக்கு மேற்கூரை அமைத்த வகையில் ஏற்பட்ட செலவினங்களுக்காக அதிராம்பட்டினம் ஹிமாயதுல் சங்கத்தின் வேண்டுகோள் கடிதம் உறுப்பினர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டு பள்ளிக்கு நிதியதவி அளிப்பதர்க்கான தீர்மானமும் கலிபோர்னியாவில் வசிக்கும் அதிரை மக்களின் வியாபார நோக்கத்திற்காக இதுவரை மூவருக்கு கடனுதவி அளித்திருப்பதையும் மேலும் உறுப்பினர் சந்தா தொகையில் இருந்து.

 மேலும் யாரேனும் கடனுதவி தேவைப்பட்டு மனு செய்தால் நிர்வாகிகள் முடிவு செய்து கடனுதவி அளிப்பதற்கு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றபற்றன தீர்மானத்தில் முக்கியமாக அதிராம்பட்டிணத்தின் முக்கிய நீர் ஆதாரத்தை பாதிக்கும் ஒலிம்பிக் வாட்டர் சப்ளை கம்பெனியின் நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் லிட்டரை உறுஞ்சி எடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கு AAF  ஆனால் உதவிகளை செய்வது என வந்திருந்த அணைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த கோரிக்கியினை ஏற்று ஊரில் உள்ள அணைத்து தெரு சங்ககளுக்கும் தபால் எழுதுவது .தமிழ் நாடு அரசுக்கும் தஞ்சை கலக்டர் தஞ்சை எஸ் .பி .   c m  செல்லுக்கு கோரிக்கை வைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றபற்றன .மக்ரிப் தொழுகைக்கு பிறகு விழா இனிதே நிறைவுற்றது.

Share:

புத்தாண்டை கொண்டாடலாமா?-அதிரை நஜ்முதீன்

இஸ்லாமிய புத்தாண்டுகள் இரண்டு மட்டுமே அதில நோன்பு பெருநாள் ஹஜ் பெருநாள் மட்டுமே ஆனால் இன்றைய இஸ்லாமியர்கள் புதிய புதிய பழக்க வழக்கங்களை ஏற்படுத்துகிறார்கள் அதில் இஸ்லாத்திற்க்கு மாற்றமான செயல்கள் அதிகம் இருக்கிறது.

பிறந்த நாள் கொண்டாடுவது புதிய வருடம் கொண்டாடுவது இது போன்று என்னெற்ற செயல்கள் அண்ணியவர்களின் பழக்க வழக்கம் தன்னுடைய வாழ்க்கையில் வருகிறது அது தவறு என்றே அவர்களுக்கு தெரியவில்லை அதுமட்டுமல்ல அதை செய்தால் நன்மை என்றே கருதி வருகிறார்கள். அந்த புத்தாண்டில் புதிய ஆடைகள் சிறியோர் பெரியோர் அனைவரும்  மேலும் அன்றைய தினம் பெருநாளைப்போன்று விதவிதமான உணவுகள் தயாரிக்கப்படுகிறார்கள்.மேலும் அன்றை தினம் வானவேடிக்கை (வெடி) வெடிக்கிறார்கள் இது முற்றிலும் தவறு பெறும் பாவம் எத்தனையோ அரபுநாடுகளும் இதற்க்காக பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்யப்படுகிறது சில நிமிடங்கள் சந்தோசம் ஆனால் பல ஆயிரம் ரூபாய்கள் நஷ்டம். இன்று எத்தனையோ முஸ்லீம்ங்கள்  வருமையால் வாழ்வதை நாம் பார்த்து வருகிறோம் அந்த வருமையால் வாழ்கின்ற மக்களுக்கு வானவெடிக்கைக்கு செலவு செய்கின்ற பணத்தை கொடுத்து உதவி செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் சிந்தியுங்கள் ஆகவே புத்தாண்டை கொன்டாடுவது அன்னியவர்களின் பழக்கம்நமது இஸ்லாமிய காலாச்சாரம் தான் மனிதனை மனிதனாக வாழ முடியும். வேற எந்த காலாச்சாரத்தையும் நாம் பின்பற்றுவது கூடாது அப்படி ஒரு முஸ்லீம் பின்பற்றினால் மிகப்பெரிய தவறு.புத்தாண்டு கொண்டாடுவது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானதாகும் அந்நியர்களின் செயலாகிய இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒரு வருடம் கழியும் போது மறுமையில் பயனுக்காக நாம் உழைக்கும் நாட்களில் ஒரு வருடம் குறைந்து விட்டது. மேலும் நமது ஆயுளில் ஒரு ஆண்டு குறைந்து  மரணத்தை நோக்கி ஒரு ஆண்டு விரைந்துள்ளோம். 

நாம் இழுக்கும் ஒவ்வொரு மூச்சும் நம் மண்ணறை நோக்கி எடுத்து  வைக்கும் ஒவ்வொரு அடியாகும் இந்த புத்தாண்டின் மூலம் நாம் சென்ற வருடம் எவ்வளவோ பாவம் செய்துயிருப்போம் அதற்க்காக பாவ மன்னிப்பு கேட்டு வரும் காலங்களில் அல்லாஹ்வுடைய கட்டளைகளை பேணி நடந்து அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழி முறைகளை அனுதினமும் பின்பற்ற எனக்கும் உலக முஸ்லீம்களுக்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன் ஆகவே அந்நிய காலாச்சாரத்தையும் பின்பற்றாமலும் வாழ கிருபை செய்வாயாக ஆமீன்.

நஜ்முத்தீன் தீனியாத் ஆசிரியர்Share:

அப்துஸ் சலாம் அவர்களை பற்றி ஒரு சிறுகுறிப்பு

ஜனாப் மர்ஹும்.அப்துஸ் சலாம் அவர்கள் மொய்தீன் ஜும்மா பள்ளியில் குத்பா முன் அறிவிப்பு செய்பவர்.அவருடைய அறிவிப்பு கனத்த குரல் மிக அழகான தமிழில் அறிவிப்பார்.
மேலும் புதுமனை தெருவில் அமைந்து உள்ள பெண்கள் மதரசாவில் பல ஆண்டுகளாக கணக்காளராக பணி புரிந்து வருகிறார்.அதுமட்டும் இல்லாமல் அப்துஸ் சலாம் அவர்கள் விடுகதை,நகைச்சுவை சொல்வதில் திறமையானவர்.இவர் சாலைகளில் செல்லும்போது ஏராளமான சிறுவர்கள் அவரிடம் விடுகதை,ஜோக்குகள் கேட்டு மகிழ்வார்கள்.    

image:adirainews
Share:

அதிரை பெண்கள் மதரசா கணக்காளர் மரணம்

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி அ.மு.க முஹம்மது ஹனீபா அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், அன்சாரி, அஸ்ரப் ஆகியோரின் சகோதரரும், அப்துல் ஹாக், இஸ்மாயில், முஹம்மது ஹசன் ஆகியோரின் மச்சானும், புதுமனைதெரு  பெண்கள் மதரசாவில் கணக்காளராக பணிபுரிந்து வந்த அப்துஸ் சலாம் அவர்கள் இன்று காலை11 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.  


Share:

திருமண வீட்டில் கலாட்டா


திருமணத்திற்க்கு முன்பு திருமண அழைப்பு அறிவிப்பு செய்வது சுன்னத்தாகும் அதன் அடிப்படையில் நமதூரில் அன்றைய கால பழக்கம். திருமண சமயத்தில் உறவினர்களும் மற்றும் திருமண பத்திரிக்கை கொடுக்கும் நியமன ஆட்கள் ஒன்று சேர்ந்து திருமண அழைப்பிதழ் எழுவது பழக்கம் ஆனால் இன்று நமதூரில் பத்திரிக்கை எழுத முறையான ஆட்கள்  இல்லாத காரணத்தால் அதை முறையாக கொடுப்பது கிடையாது. 
வீட்டில் பெயர் எழுதாமல் அப்படியே போட்டுவிட்டுசெல்கிறார்கள்,பெயர் மாற்றி கொடுக்கிறார்கள் யாருக்கோ எழுதிய பத்திரிக்கை யாருக்கோ செல்கிறது மூத்தவர்கள் திருமண அழைப்பு வரும் என்று மிக்க ஆவலுடன் இருப்பார்கள் ஆனால் திருமண அழைப்பு வராத காரணத்தால் திருமண வீட்டில் மிகப் பெரிய கலாட்டா ஏற்படுகிறது.பெரும்பாலான வீட்டில் ஆண்கள் இருப்பது கிடையாது திருமண சமயத்தில் வெளியிலிருந்து வரும் திருமண வீட்டார்களுக்கு இதை எப்படி விணியோகம் செய்வது என்று புரியவில்லை  முகவரியில் உள்ள பெயரும் தெரியவில்லை குடும்பத்தின் பெயரும் தெரியவில்லை.பெரும்பானைமையாக திருமண அழைப்பிதல் கொடுக்கும் போது வீடுகளை தட்டி உங்கள் வீட்டில் பெரியவர்களின் பெயர்கள் சொல்லுங்கள் என கேட்டு அழைப்பிதழ் எழுதும் சூழல் நிலவுகிறது.மேலும் இது போன்ற செயலால் உறவினர்கள் பெயர்கள் விட்டு போவதால் குடும்பங்கள் இடையே மனகசப்பு ஏற்படுகிறது.

இது போன்ற செயல்கள் வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க  உங்களின் கருத்துக்களை பின்னோட்டம் வாயிலாக தெரியபடுத்துங்கள். 

ஆக்கம்:நஜ்முதீன் (ஆசிரியர்)    Share:

அமீரக TIYA பொதுக்குழு கூட்ட அழைப்பு!

அமீரகத்தில் வரும் வியாழக்கிழமை மாலை நடைபெறவுள்ள  TIYA பொதுக்குழு கூட்டத்திற்கு அனைத்து மேலத்தெரு மஹல்லா சகோதரர்களும் கலந்துகொள்ளூமாறு அழைக்கப்படுகிறார்கள்,

நாள்: 01.01.2015 வியாழக்கிழமை மாலை 06:00மணி

இடம் : சகோ சேக்காதி ரூம் (கோட்டை பள்ளி அருகில்)


Share:

சூனியம் பற்றி உரையாற்ற மவ்லவி.அப்பாஸ் அலி அதிரை வருகை

சூனியம் பற்றி உரையாற்ற மவ்லவி. அப்பாஸ் அலி அதிரை வருகை 

Share:

நிரம்பிய குளங்களும்,நிரப்பமான திருமணங்களும்

அரையாணடு தேர்வுகள் முடிவுற்ற நிலையில் நிரப்பமாக திருமணங்களும் அதிகளவிலே நமதூரிலே நடைபெற்றுவருகின்றது. வழக்கமாக முழு ஆண்டு தேர்வுக்குப்பின் தான் அதிக திருமணங்கள் நடைபெறும், சென்னையில் தொழில்புரிபவர்களும் மே மாதங்களில் தங்கள் பிள்ளைகளுடன்  தேர்வு விடுமுறையில் ஊருக்கு வருவது வழக்கம்.

தற்போது இறுதியில் (டிசம்பர்) சென்னை வாழ் அதிரை பெருமக்கள் அதிகளவில் இத்திருமணங்களில் பங்குப்பெற்றதையும் காண முடிந்தது. செக்கடிப்பள்ளி கிட்டத்தட்ட திருமண மண்டபம் போல எந்நேரமும் படு பிஸியாக இருந்தது. ஒரு நிக்காஹ் நடைப்பெற்றுக்கொண்டிருக்குப்போதே அடுத்த மாப்பிள்ளை வந்த வண்ணம் இருந்தது. வகை வகையான கார்களும் நம்மூரில் உலா வருகின்றன. கிட்டத்தட்ட கோடை விடுமுறை மற்றும் பெருநாட்களில் காணப்படும் பரபரப்பும் பிஸியுமான சூழ்நிலை தற்பொழுது நிலவி வருகிறது. கடும் குளிரும், பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது.மேலும் ஆற்று நீர் வருகை,தொடர் மழை போன்றவற்றால் குளங்கள் நிரம்பி காட்சி அளிப்பதால் அதிரை சுற்றுவட்டார பகுதி மிகவும் ரம்மியமாக காட்சி தருகிறது.  
Share:

முத்துப்பேட்டையில் கேமிரா பொருத்திய விமானம் கிழே விழுந்தது

முத்துப்பேட்டை கடற்கரை பகுதியாகும். இங்குள்ள அலையாத்தி காடுகள் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய அலையாத்தி காடு. தீவிரவாத அச்சுறுத்தல் நிறைந்த பகுதி என்பதால் கடலோர பாதுகாப்பு படை மற்றும் விமானப்படையின் தீவிர கண்காணிப்பு எப்போதும் இருக்கும். சமீப காலமாக விமானப்படைக்கு சொந்த மான விமானங்கள் தாழ்வாக பறந்து  இப்பகுதியைக் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 2 அடி நீளம் 1 அடி அகலம் கொண்ட ஆள் இல்லாத ரிமோட் மூலம் இயக்கக்கூடிய சிறிய ரக விமானம் ஒன்று இப்பகுதியில் வட்டமிட்டது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த விமானம் பேட்டை செம்படவான்காடு என்ற கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே ஒரு தென்னை மரத்தில் மோதி கீழே விழுந்தது.

அங்கு சென்று பார்த்தபோது 5கிலோ எடையுடய அந்த விமானத்தில் 4 இறக்கைகளும், அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

முருகானந்தம் என்ற இளைஞர், நண்பர்களுடன் அந்த விமானத்தை எடுத்து சென்று முத்துப்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அதை முத்துப்பேட்டை டி.எஸ்.பி. கணபதியிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் நடந்த விசாரணையில் அந்த விமானம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் தமீம் என்பவருக்கு சொந்தமானது என்றும், அவர் தனது வீட்டு மாடியில்  நின்று பறக்க விட்ட போது அது கீழே விழுந்ததும் தெரிய வந்தது.

அந்த கேமரா வின் பதிவில் சிங்கப்பூரில் உள்ள பல இடங்களின் காட்சிகள் இருந்தது. எதற்காக இந்த விமானம் பறக்கவிடப்பட்டது, கேமரா பதிவின் தூரம் எவ்வளவு? விமானம் சிங்கப்பூரிலிருந்து கொண்டு வர முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share:

அதிரையில் நாளை மின்தடை


அதிரை மின்சார வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளையதினம் (30-12-14) செவ்வாய்கிழமை  காலை 9 மணி  முதல் மாலை 6.00 மணி வரை நடக்கிறது.
இதனால் அதிரை சுற்று வட்டார பகுதிகளில் நாளையதினம் மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகளால் கூறப்படுகிறது.

Share:

அரசு போக்குவரத்து ஊழியகள் வேலை நிறுத்தம் - அதிரை பொதுமக்கள் தவிப்பு

இன்று முதல் நடைபெறும் என, அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டத்தை, போக்குவரத்து ஊழியர்கள் நேற்றே துவக்கியதால், தமிழகம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.இன்று அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறபடுகிறது. இந்நிலையில் அதிரை பகுதியில் நேற்று இரவு 7.00 மணி முதல் பேருந்து நிறுத்தம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள்.Share:

அதிரையில் பட்டிமன்றம் -1000 மேற்பட்டோர் பங்கேற்ப்பு

அதிரை ஷிபா மருத்துவமனை சார்பில் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி புதுமனை தெரு செக்கடி பள்ளி வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு துவங்கி இரவு 9.00 மணி வரை நடைபெற்றது.இதில் உடல் நலம் பேணுவது இளமையிலா ?முதுமையிலா? என்கின்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  


Share:

சிறப்பாக நிறைவு பெற்ற இலவச மருதுவ பரிசோதனை முகாம்

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் ஷிபா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று காலை 9.00 மணிக்கு துவங்கி பகல் 1.00 மணி வரை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மேலும் மருத்துவர்கள்,இமாம் ஷாபி பள்ளி ஆசிரியர்கள்,சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட இளைஞர்கள் ஆகியோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் கனிவுடன் கவனித்தனர்.   

Share:

ஹேப்பி பர்த் டே வாசன் ஜீ -அதிரையில் கொண்டாட்டம்

தமிழக முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் GK வாசன் அவர்களின் 50 வது பிறந்த நாள் விழாவை அணைத்து தமாகதொண்டர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் அதிரை நகர த மா கா வாசன் அவர்களின் பிறந்தநாளை இன்று நகர அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடினர்.இதில் த மா கா நிர்வாகிகள் MMS கரீம்,மொய்தீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  facebook/adirai maideen

Share:

அதிரையில் பட்டிமன்றம் துவக்கம்

அதிரை ஷிபா மருத்துமனை சார்பில் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி புதுமனை தெரு செக்கடி பள்ளி வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு துவங்கியது.
Share:

அதிரையில் சதுரங்க போட்டி -அழைப்பிதழ்

அதிரை ஃ பைடு செஸ் கிளப் சார்பாக வருகின்ற 30-12-14 அன்று சதுரங்க போட்டி நடைபெறுகிறது.

தொடர்புக்கு:9500427339  


Share:

அதிரையில் காலை முதல் தொடர் தூரல் மழை

அதிரையில் ஒரு வார காலமாக மழை பெய்யாமல் இருந்து வந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக மிதமான தூரல் மழை பெய்து வருகிறது.
வானம் மேக மூட்டத்துடன் காணபடுவதால் தொடர்ச்சியாக மழை வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.  
Share:

அதிரையில் நடக்கும் மார்க்க அறிவுபோட்டிக்கு முன்பதிவு துவக்கம்

எதிர்வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி இஸ்லாமிய மாணவர்களுக்காக "இளம் இஸ்லாமியன்" என்னும் மார்க்க அறிவு போட்டி அதிரை AL  பள்ளியில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் மாணவர்களுக்கான முன்பதிவு நடுத்தெரு நவ்ராஸ் ஹோட்டல் பகுதியில் ஏராளமான பள்ளிமாணவர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.    
Share:

அதிரையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் - ஏராளமானோர் பங்கேற்ப்பு

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் ஷிபா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வருகின்றனர்.  
Share:

அமீரகம் துபாய் மண்டல TNTJ அதிரை கிளையினர் நடத்திய மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் !


கடந்த  வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் டேரா துபையில் உள்ள JT மர்க்கஜில் துபாய் மண்டல அதிரை TNTJ கிளையின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துபாய் மண்டல அதிரை TNTJ கிளையின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துபாய் மண்டல அதிரை TNTJ கிளையின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்களுடனும், ஆதரவாளர்களுடனும் நல்லபல பயன்தரக்கூடிய  திட்டங்கள் யாவும் கலந்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் பேசப்பட்டு ஆலோசிக்கப்பட்ட திட்டங்கள்: 
-----------------------------------------------------------------------------

1, 2015 கல்வியாண்டில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால்  நமதூரில் துவங்கயிருக்கும் இஸ்லாமிய பெண்கள் மதரஸா கல்லூரி  பற்றி அது சம்மந்தமாக பல ஆலோசனைகள் கலந்துரையாடப்பட்டன.

2, அதிரையில் TNTJ சார்பாக இஸ்லாமிய  நூலகம் அமைப்பது குறித்து பேசப்பட்டன.

3, நடுத்தெருவில் உள்ள ஆயிஷா மகளிர் அரங்கத்தில் வாரம் தோறும்  வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் நடத்தும் மார்க்க சொற்ப்பொழிவு பயானை மேலும் விரிவுபடுத்துவது  குறித்தும்  அனைவரிடத்திலும் கலந்து ஆலோசிக்கப் பட்டன.
 
 

.

Share:

மரண அறிவிப்பு (புரூனை தமீம் அவர்கள் மனைவி)

நடுதெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு செய்யது முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி மு.செ.மு முஹம்மது தமீம் (புரூனை)  அவர்களின் மனைவியும், ஹாஜி மு.செ.மு முஹம்மது அப்துல்லா அவர்களின் சகோதரியுமான ஹாஜிமா ஜெமீலா அம்மாள் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9.00 மணிக்கு  மரைக்கா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.  
Share:

அதிரை அசத்தல் மொழி - கொஞ்சூண்டு..!

நம்ம ஊருலே நிலத்தடி நீர் வத்தி போச்சுன்னு சொல்றாங்க உண்மைதான். அதுக்காக இப்போ ஒரு ஆலோசனைக் கூட்டமும் போட்டிருக்காங்க. ஆனாலும் நம்ம ஊரு பேச்சு மொழி மட்டும் எந்தக் காலத்திலும் வத்தி போகாது தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும். சர்வ சாதரணமாக நாம பேசிக் கொண்டு இருக்கும் போதே நம்மையும் அறியாமல் ஒருசில வார்த்தைகள் கரைபுரண்டு அலையடிக்கும். அப்படியாக வந்து விழும் மண்வாசனை மணக்க இங்கே வாக்கியமாய் உங்களின் பார்வைக்கும் பகிர்வுக்கும்.

ஊருலே பேஞ்ச மழைலே பள்ளிகொடம் போன புள்ளையலுவோ "தொப்பு தொப்பா" நோனஞ்சி போச்சி !

மோட்டார் சைக்கிளில் இருந்து கிழே  உளுந்ததுலே காலு "பெசண்டு போச்சு" 

ஊருக்குள்ளே நடக்குற விபத்தை நெனச்சா "ஈரக் கொல நடுங்குது"

ஊருக்குள்ளே  இப்பெவெல்லாம் "மட்டப்பா ஊடு"ஒன்னுமே இல்லே  

"நேத்தையாணம்"அப்பமும் எப்போதும் நாக்கை விட்டு அகலாத ருசி !

"நீச்ச கஞ்சி" இதை புதுசா ஐஸ் பிரியாணின்னு சொல்றாங்க !

"வடிச்சங் கஞ்சி"இதன் ருசி இப்ப உள்ள புள்ளையளுக்கு தெரியாம போச்சு !

இவனோட நடப்பு எப்போவும் 'புதுனமா "தான் இருக்கும்..!

எப்போதும் இந்த ஆளு "மேமினுக்கா "தான் இருப்பாக  !

ஊரு தண்ணீலே சாக்கடையும் கலந்து வர்றதாலே அதுலே குளிச்சா தல ஒரே "பிசுக்கா"  இருக்கு !

"ஈறு வலி" இதல்லாம் இப்போ "காண கெடைக்கல”

அழுக்கு "கசமா" இருக்கு 

மீனை கழுவி  ஊத்துனதுலே "வெடுக்கு நாத்தம்" தாங்க முடியலே 

வாப்பாவுக்கு "ஒகப்பான புள்ள" 

தூக்கத்துலே  "சொலக்கு சொலக்குன்னு"முழிப்பு வருது 

இவன் சரியான "வக கெட்டவன்"

ராத்திரி புடி பட்ட கள்ளனே "சாங்கமாங்களா" போட்டு "சாத்திபுட்டனுவோ" [காணொளி இணைப்பு இல்லை]

பேய் தொடரைப் படிச்சதுலே  பயந்து "தட்டு கெட்டு" போய்ட்டான் !

அங்கிட்டு "நவந்து" உட்காரு !

இங்கிட்டும் அங்குட்டுமா "லாத்தாம" ஒரு எடத்துலு உட்காரு ! 

இவருதான் ஊட்டுக்கு "மூத்த முனியன்"

இவனுக்கு என்னத்தை கொடுத்தாலும் ஒரே "கொறதான்"

மழை பெய்ச்சிட்டா கொசு 'சல்லே"தாங்க ஏலால…!

“அவந்தரைக்கு” உதவாம போறீயம்மா ?

“பொஸுப்பு” இல்லமா புள்ளைக்கு !

“ஆக்கினை” புடிச்சவனாவுல இருக்கான்…

“படக்கலம்” புடிச்சு அலையுதுங்கமா…

டெல்லிக்கு ராசாவாகப் போன பேராண்டி… அம்மாவை தேடிகிட்டு திரும்பி வந்த்துடான்… ! 

வெற்றி என்று ஒன்று இல்லாவிட்டால் தோல்வி என்ற ஒன்று நம் வாழ்வில் இல்லாமலே போய்விடும் என்பது அடியேனின் வாக்கு ! 

Sஹமீது
courtesy:adirainiruber.in

Share:

அதிரையில் ஆங்கிலத்தில் சரளமாக பேச இலவச பயிற்சி வகுப்புகள்

அதிரையில் ஆங்கிலத்தில் சரளமாக பேச இலவச பயிற்சி வகுப்புகள்

Share:

அதிரையில் சூடு பிடிக்கும் அதிமுக உள்கட்சி தேர்தல்

தமிழக முழுவதும் அதிமுக உள்கட்சி தேர்தல் சூடு பிடித்து உள்ளது.இதில் மாவட்ட செயலாளர்,ஒன்றிய செயலாளர்,நகர செயலாளர் என பல பிரிவுகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதிரையில் 21 வார்டு செயலாளர்களுக்கான தேர்தல் இன்று காலை லாவண்யா திருமண மணடபத்தில் அதிமுக தலைமையகம் நியமனம் செய்த தேர்தல் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெற்றது.இதற்கான தேர்தல் முடிவுகள் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று அதிமுக நிர்வாகிகளால் தெருவிக்கபட்டது.       
Share:

அதிரையில் பட்டிமன்றம் LIVE

அதிரை புதுமனைதெரு செக்கடிபள்ளி அருகில் நாளைய தினம் நடைபெறும் பட்டிமன்றம் நிகழ்ச்சி நேரலையாக ரேடியோ தாவாவில் கேட்டு பயன்பெறலாம்.     Share:

வரதட்சினையை ஒழிக்க முடியுமா..?


ரதட்சினை என்ற கொடிய நோய் குறித்து பல காலமாக அலசிக் கொண்டு இருக்கிறோம் ஆனால் முழுமையான தீர்வு எறபடாமலேயே இது ஒரு வைரஸாக வளர்ந்துகொண்டு இருக்கிறது.

இதுகுறித்து  பல வகைகளில் விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதில் வரதட்சினையின் ஒரு சிறு பகுதி மட்டுமே விவாதிக்கப் படுகிறது.

வரதட்சினை கூடாது, ஹராம், கேவலம் என்றெல்லாம் எழுதுவதும் பேசுவதும் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் இதை ஒழிக்க முடியாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தற்கால தலைமுறையினராவது வரதட்சினை வாங்கக்கூடாது என்ற மனநிலையில் ஓரளவு உள்ளனர். ஆனால், இதற்கு முந்தைய தலைமுறையினரிடம் இதுகுறித்த விழிப்புணர்வோ அல்லது குற்ற உணர்வோ இல்லை. ஏனெனில்,நமதூரின் சமூக வாழ்க்கைமுறை அப்படி!

18-20 வயது வரை கல்லூரி படிப்புபோக அவரவர் தகுதிப்படி அல்லது வசதிப்படி வளைகுடா அல்லது சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கோ சென்று 25 வயதுவரை சம்பாதிக்கின்றனர். சம்பாத்தியத்திற்கும் திருமணத்திற்க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டுகளிலேயே நேரடி வரதட்சினையாகவோ அல்லது மறைமுக லொட்டு லொசுக்குகளாகவோ விலை பேசப்படுகின்றனர். இந்த விபரம் திருமணத்திற்கு முன்பாக பெரும்பாலான மணமகன்களுக்குத் தெரிவதில்லை.

வளைகுடாவுக்குச் செல்வதற்குமுன்பு (அறியாமைக்காலத்தில் அல்லது யாரும் அறியாமல்:) வாங்கிய வரதட்சினையை 'அக்மார்க் தவ்ஹீது' முத்திரைபெற்று ஊர்வந்தபிறகு சிலர் திருப்பிக் கொடுக்கும் நிகழ்வுகளும் 5-6 வருடங்கள்வரை நடந்தன. 10-15 வருடத்திற்கு முன்பு 50,000 பெற்றவர், 10-20 வருடம் கழித்து அதே தொகையைத்  திருப்பிக் கொடுப்பாராம்! அப்போது இருந்த விலைவாசி என்ன? அதைத்திரட்ட அப்போது பட்ட கஷ்டங்கள் என்ன என்பதையெல்லாம் யார் ஈடுசெய்வது என்ற விபரமில்லை. 1965களில் ஒரு பவுன் 100 ரூபாயாக இருந்தது. அக்காலகட்டத்தில் 1000 ரூபாய் வரதட்சினை வாங்கியவர்  40 வருடங்கள் கழித்து அதே 1000 ரூபாய் கொடுத்தால் சரியாகிவிடுமா?

அப்புறம், நாங்களெல்லாம் வரதட்சினை பொருளாகவோ, பணமாகவோ வாங்கவும் இல்லை கொடுக்கவும் இல்லை என்றும் சிலர் சொல்வர். மேலோட்டமாக இதில் உண்மையிருந்தாலும் கவுரமாகவும்,கோத்திரமாகவும் வரதட்சினை வாங்கியிருப்பர்? இதென்ன புதுக்கரடி? அதான் சார் குண்டான் மாற்று! அதாவது சகோதரிக்கு மாப்பிள்ளை வாங்கி, மச்சானின் சகோதரிக்கு மாப்பிள்ளையாக விற்கப்படும் பண்டமாற்று! இதற்கு தவ்ஹீதுவாதிகளும் விதிவிலக்கல்ல!  

மார்க்கப்படி இதில் தவறில்லை என்றாலும், இதுவும் ஒருவகையான தட்சினைதான். பரம்பரை சொத்துக்கள் புதிதாக வேறு குடும்பத்திற்குச் சென்றுவிடக்கூடாது என்று நல்லெண்ணமும் ஒரு காரணம்! இருவீட்டிலும் ஜோடிகள் இருந்தால் மாற்றிக்   கொள்ளலாம்.   அதில் ஒருவீட்டில் ஏதோஒன்று குறைந்தாலும் குண்டான்மாற்று கிடையாது.பதிலுக்கு மாப்பிள்ளை இல்லாத குடும்பத்தில் மாப்பிள்ளை மட்டும் கொடுத்து திருமணம் செய்வதற்கு எத்தனைபேர் தயாரென கைதூக்குங்க பார்ப்போம்! 10-20 குடும்பங்கள் தேறுமா? விரல்விட்டு எண்ணிவிடலாம்! சரி, இதில் எங்கே வரதட்சனை வந்தது?

100 ரூபாய்க்குப் பகரமாக இன்னொரு 100 ரூபாயை அல்லது அதற்கு ஈடான பொருளை மாற்றிக்கொண்டால் அதில் குழப்பமில்லை.ஆனால், 200 ரூபாயைக்கு 100 ரூபாயைத் திரும்பப்பெற விரும்பாததன்மூலம் இந்த பரிவர்த்தனையில் பொதிந்துள்ள மறைமுக லாப-நட்டக் கணக்கீட்டையே சொல்கிறேன்.புரியவில்லையா! நாங்கள் என்ன பணம்/நகையா கேட்கிறோம். மாப்பிள்ளைக்கு பதில் மாப்பிள்ளைதானே கேட்கிறோம் என்ற கல்யாணச் சந்தை நியாயங்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

தங்கள் குடும்பத்தைவிட்டு பிறகுடும்பத்தில்,தெருவைவிட்டு பிறதெருவில், ஊரைவிட்டு பிற ஊர்களில் திருமண உறவு கொள்வதற்கு மார்க்கத்தில் தடையேதும் உள்ளதா? தவ்ஹீதுபேசுபவர்களில் எத்தனைபேர் இந்த மனத்தடைகளிலிருந்து விடுபட்டுள்ளோம் என்று அவரவர் சுயபரிசோதனை செய்துகொள்ளட்டும்! நடந்துமுடிந்துவிட்டது. அதைப்பற்றிப்பேசி பயனில்லை என்றாலும், தங்கள் குழந்தைகளையேனும் மேற்கண்ட சமூக மனத்தடைகளைத் தகர்த்து நபிவழிதிருமணம் செய்தாலன்றி வரதட்சினை அல்லது அதுசார்ந்த பொருளாதார பரிவர்த்தனையை ஒழிக்கவோ குறைக்கவோ முடியாது.  

அகமும்,புறமும் சமூக அழுக்குகளுடன் உழன்றுகொண்டு,ஒரே குடும்பத்திற்குள் அல்லது குண்டான் மாற்று திருமணம் முடித்துள்ள தைரியத்தில் வரதட்சினை குறித்த வியாக்கியானங்கள் வெறும் ஏட்டுச்சுரைக்காயாகவே இருக்க முடியும். வரதட்சினை ஓர் நோய் என்றால், அதை ஊட்டிவளர்க்கும் சமூகக் காரணிகளுக்கும் சேர்த்து மருந்துண்டாலன்றி முழுதாக ஒழிக்க முடியாது.வரதட்சினையை மறைமுகமாக ஊக்குவிக்கும் சில சமூகக் காரணிகளாக நான் கருதுவது.

1) உள்ளூரில்,ஒரேதெருவில்/முஹல்லாவில் மட்டுமே திருமண உறவு .

2) குடும்பம் மாறி திருமண உறவில்லை என்ற குலப்பெருமை,

3) ஆயிரங்களில் இருந்த வீட்டுமனைகளின் விலையை அரைகோடியாக உயர்த்திய நிலத்தரகர்கள்.

4) சம்பாதிக்கும் மாப்பிள்ளைக்கே வரன் கொடுப்போம் என்ற அவநம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பு.

இதுபோல் பல்வேறு காரணிகளுடன் பின்னிப்பிணைந்துள்ள சமூகத்திலிருந்து வரதட்சினையை மட்டும் விரட்டலாம் என்பது இடியாப்பத்தை பிரித்துச் சாப்பிடுவதற்குச் சமம்.

- ஜாஃபர் 


Share:

அதிரையில் "இளம் இஸ்லாமியன்" மார்க்க அறிவுப் போட்டி


எதிர்வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி இஸ்லாமிய மாணவர்களுக்காக "இளம் இஸ்லாமியன்"என்னும் மார்க்க அறிவு போட்டி அதிரையில் சமுக, சமுதாய அக்கரைக் கொண்ட இளைஞர்களின் முயற்சியில் இன்ஷா அல்லாஹ் நடைப்பெற உள்ளது. இப்போட்டியில் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை பங்கு பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நோக்கம்:
1.தற்பொழுது நமதூர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் உலக கல்வியின் மீதுஆர்வமாக உள்ளனர்.

2.மேலும் பல மாணவர்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களையும் வரலாறுகளையும்அறியாதவர்களாக உள்ளனர்.

3.எனவே நமதூர் மாணவர்களிடம் மார்க்க கல்வி மற்றும் மார்க்க சட்ட திட்டங்கள், இஸ்லாமிய வரலாறுகளை அறிய ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டியை நடத்தஉள்ளோம்.

4.மேலும் எதிர்வரும் அரையாண்டு விடுமுறைகளை மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.

பரிசுகள்
பிரிவு-1
(5 முதல் வகுப்பு வரை)
பிரிவு-2
(8 மற்றும் 9ம் வகுப்பு)
முதல் பரிசு

இரண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு
3000 (மதிப்பிலான பொருள்)

2000 (மதிப்பிலான பொருள்)

1000 (மதிப்பிலான பொருள்)
3000 (மதிப்பிலான பொருள்)

2000 (மதிப்பிலான பொருள்)

1000 (மதிப்பிலான பொருள்)
விதிமுறைகள்:
1.100 
மதிப்பெண்கள் கொண்ட போட்டியான இது எழுத்து முறையில் மாணவர்களுக்கு மட்டும்நடைபெறும்.

2. 
இந்த தேர்வில் இடம்பெறும் வினாக்கள் இளம் இஸ்லாமியன் கேள்வி-பதில் புத்தகத்தில் இருந்து மட்டுமே கேட்கப்படும்.

விபரங்கள்:

1.போட்டி நடைப்பெறும் இடம்: ஏ.எல்.மெட்ரிகுலேசன் பள்ளி(வி.கே.எம்.ஸ்டோர் எதிரில்) (சி.எம்.பி.லேன்அதிராம்பட்டினம்)

நாள்: ஜனவரி 14 2015 (புதன் கிழமைநேரம்காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை.

2.முன்பதிவு: காதிர் முகைதீன் பெண்கள் மேனிலைப்பள்ளி எதிரில்(பழைய நவ்ரஸ் ஹோட்டல்)நடுத்தெருஅதிராம்பட்டினம்.

நாள்: 27,28,29-12-2014 நேரம்காலை 10:00-12:30, பகல் 2:00-3.00


புத்தகம் கிடைக்கும் இடம்: மதினா நெட்வொர்க்ஸ்பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடுஅதிராம்பட்டினம்.
இப்படிக்கு: இளம் இஸ்லாமியன் கமிட்டி

தொடர்புக்கு: 
         9597773359, 9944323895, 7200364700, 720056330
Share: