அதிரையரின் 50 ஆயிரம் பணம் திரும்பகிடைத்தது!

அதிரை கடற்கரை தெருவை சேர்ந்தவர் சாஹுல் ஹமீது இவர் இன்று மதியம் அதிரை பாரத ஸ்டேட் வங்கியில் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்து விட்டு வீடு திரும்பும் வழியில் பணத்தை தவற விட்டதாகவும் அதனையாராவது கண்டெடுதிருந்தால் தகவல் தர  வேண்டி அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் அதிரையில் 50 ஆயிரம் பணம் தவறவிட்டவரின் வேண்டுகோள் என்ற தலைப்பில்  அவரின் வேண்டுகோளுக்கிணங்க பதிவு செய்திருந்தோம். 

இதற்கிடையில் பாரத ஸ்டேட் வங்கியின் அதிரை  மேலாளர் சம்பந்த பட்ட நபரை தொடர்பு கொண்டு பணம் வங்கியின் பணம் பெறும்  கவுண்டர் அருகே இருந்ததகாவும் எங்களிடம் வந்து பெற்றுகொள்ளுமாறு அழைத்துள்ளார். சாஹுல் ஹமிதும் தொலைத்த பணத்தை வங்கியின் மேலாளரிடம் பெற்றுகொண்டார். 

பணம் திரும்பி கிடைக்கபெற்ற அவர் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் தன்னுடைய வேண்டுகோளுக்கிணங்க செய்தி வெளியிட்டு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிதுக்கொள்வதாக கூறினார்.

பொதுமக்கள் வங்கியிலிருந்து பணம் பெறும்பொழுது சாரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்த பிறகே  செல்ல வேண்டும் என வங்கி மேலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
 
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

அதிரையில் 50 ஆயிரம் பணம் தவறவிட்டவரின் வேண்டுகோள்

அதிரை கடற்கரை தெருவை சேர்ந்தவர் சாஹுல் ஹமீது இவர் இன்று மதியம் அதிரை பாரத ஸ்டேட் வங்கியில் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்து விட்டு முத்தம்மாள் தெருவழியாக கடற்கரை தெருவிற்க்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் செல்லும் வழியில் தான் வைத்திருந்த ஐம்பதாயிரம் பணத்தை தவறவிட்டுள்ளார். மீண்டும் அவ்வழியே பணத்தை தேடி அலைந்தபோது சந்தேகத்தின் பேரில் சிலரிடமும் விசாரித்துள்ளார். ஆனால் யாரும் தெரியவில்லை என கூரியுள்ள்னர். 

இந்நிலையில்  கானாமல் போன தனது பணத்தை யாரவது கண்டெடுத்திருந்தால் அது பற்றிய தகவல் தருமாரு கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸிற்க்கு அளித்த தகவலில் அவசர தேவையாக அந்த பணத்தை வங்கியிலிருந்து எடுத்ததாகவும் தனது நிலையை உணர்ந்து பணம் யாராவது கண்டெடுந்திருந்தால் தகவல் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தகவல் அளிக்க வேண்டிய தொலைப்பேசி எண்: Shahul hameed : 9789160203 , 9789160204.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

அதிரையில் பலத்த கனமழை

தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நிலை கொண்டதால் கடலோர மாவட்டங்களில் பலந்த கனமழை பொழிந்து வருகிறது .அதன் தொடர்ச்சியாக அதிரையில் இன்று பிற்பகல் முதல் பலத்த மழை பொழிந்து வருகிறது .

             

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

அதிரையில் மழையினால் சாலை சேதம்

அதிரை 21வது வார்டுக்கு உட்பட்ட CMP லைன் பகுதியில் கடந்த மாதம் பேரூர்  நிர்வாகம் சார்பில் புதிய இனைப்பு சாலை அமைக்கபட்டது. இந்த தொடர்ந்து கனமழை காரணமாக சாலை மிகவும் மோசமான நிலையில்  உள்ளது .இது குறித்து பேரூர் நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் பலன் அளிக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி வாசி ஒருவர் நம்மை தொடர்புகொண்டு நம்மிடம் கூறுகையில் பேரூர் நிர்வாகம் சார்பில் சமிபத்தில் அமைத்த  சாலை தரமான முறையில் சாலை அமைக்காததால் மழை காலத்தில் சேதம் அடைந்துள்ளது .பேரூர் நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும் .
Share:

மரண அறிவிப்பு!


மேலத்தெரு தோசா வீட்டை  சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிஹ்  அவர்களின் மகனு ம், மர்ஹூம் M.S. சேக் நசுருதீன்  மர்ஹும் M.S. ஷாகுல் ஹமிது  அவர்களின் சகோதரரும் , M.M. ஷேக் தாவூத், M.K முஹம்மது மீராசாஹிப் M.S. பசீர் அஹமது ஆகிரின் மாமாவும் 
M.S. பசிர்  அஹமது , M.S.  இக்பால்  M.S. ஹாஜி முஹம்மது ஆகியோரின் தகப்பனாருமான M.S.  செய்யது முஹம்மது  அவர்கள் இன்று அதிகாலை  வஃபாத்தாகி விட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அசர் தொழுகைக்கு பின்  மேலத்தெரு ஜும்மா  பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

செக்கடி குளம் அதிரையில் ஓர் அடையாளம்

அதிரை பேரூர் மன்ற தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்களின் பெரும் முயற்சியில் செக்கடி குளத்திற்கு பம்பிங் மூலம் ஆற்று நீர் கொண்டு வந்து குளத்தை பேரூர் ஊழியர்களால் நிரப்பினார்கள் .மேலும்  பருவ மழை நமதூரை நனைக்க செய்யும் நிலையில் மக்கள் செக்கடி குளத்தில் அதிகாலை முதல் குளிக்க வருகின்றனர் .அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் செக்கடி மேடு நடைமேடை பகுதியில் வண்ண பூக்கள் பூத்து குலுங்க ,மக்கள் மனதில் இதமான அனுபவம் நிரம்பி வழுகிறது .வெளிநாட்டில் இருந்து விடுமுறையை கழிக்க வரும் நபர்கள் குளத்தில் அழகை ரசிக்க தவறியதில்லை .மாலை தென்றல் காற்று வீசே இளைஞர்கள் பட்டாளம் குளத்துடன் செல்பி எடுத்து கைபேசியில் பதிந்து ஆரவாரம் செய்கின்றனர் .ஊரில் அணைத்து பகுதிகளில் இருந்து மக்கள் குளத்தின் வடிவத்தை பார்த்து ரசித்தும் செல்கிறார்கள் .தற்போது செக்கடி குளம் அதிரையின் புது அடையாளத்தை தருகிறது .

புகைப்படம் ---பயாஸ்  அஹ்மத் 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

அதிரை எக்ஸ்பிரஸ் கேள்விபதில் பரிசு போட்டி!பொதுமக்களுக்கு பொது அறிவின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாதந்தோறும் வெளியாகும் அதிரை எக்ஸ்பிரஸ் இதழில் கேள்வி-பதில் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம் அதன்படி தற்பொழுது விநியோகத்தில் இருக்கும் டிசம்பர் மாத அதிரை எக்ஸ்பிரஸ் இதழில் கேள்விபதில் பரிசு போட்டிக்கான வினாக்கள் பக்கம் 6ல் கேட்கப்பட்டுள்ளன. இதில் தங்களுக்கு தெரிந்த பதில்களை டிக் செய்து அந்த பக்கத்தை வெட்டி எடுத்து வெள்ளை காகிதத்தில் தங்களின் பெயர், முகவரி, தொலைபேசி ஆகியவற்றை குறிப்பிட்டு 34-2, ( யூனிட்டேட் ஃபவுண்டேஷன் எதிரில்) நடுத்தெரு, அதிராம்பட்டினம் என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ள கேள்வி-பதில் பெட்டியில் போடவும் அல்லது தபால் மூலமும் அனுப்பிதரலாம். மேலும் வெற்றி பெரும் 5 நபர்களுக்கு சிறப்பு பரிசுபொருட்கள் வழங்கப்படும். விடைகள் அனுப்பிதர வேண்டிய கடைசிநாள் 14.12.2015 ஆகும். வெற்றியாளர்கள் குறித்த விபரம் அடுத்த மாத இதழில் பிரசுரிக்கப்படும். மேலும் சந்தேங்களுக்கு 9551070008 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.
Share:

மரண அறிவிப்பு [ சேக்கனா நிஜாம் தந்தையின் சகோதரி ]


நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் செ.மு ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது ஹசன், மர்ஹூம் முஹம்மது புஹாரி, முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் உமர் தம்பி, மர்ஹூம் அபூபக்கர், அஹமது ஹாஜா ஆகியோரின் மாமியாரும், சேக்கனா நிஜாம் அவர்களின் தந்தையின் சகோதரியுமாகிய செய்யது பீவி அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சேர்மன் வாடி அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று பகல்11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

கோமா நிலையில் இருக்கும் பிலால்நகர் வாலிபருக்கு உதவிடுவீர்...!!!

அதிரை அருகே பிலால் நகரை சேர்ந்த  ஆஷிக்  பேரூந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்தார்.கடந்த 21.11.2015 அன்று மதியம் உணவகத்திலிருந்து ஈசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அதிரை பேரூராட்சி அருகே எதிரே வந்த வாகனத்தின் மீதி மோதி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கோமா நிலையில் இருக்கும் இவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஏழ்மை நிலையில் இருக்கும் இவர் குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகின்றனர். குடும்பத்தினர் நம்முடைய உதவியை நாடி வந்துள்ளனர். கோமா ஸ்டேஜில் உயிருக்கு போராடி வரும் இந்த ஏழை சகோதரனின் மருத்துவ சிகிச்சைக்காக நாம் தாராளமாக உதவுவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் இறைவனின் நற்கூலியை பெறுவோம். உதவி செய்ய விரும்புவோர், இந்த  முகவரியை தொடர்பு கொள்ளவும்

MAHATHIR MOHAMED 
CANARA BANK A/C NO: 1201101049663
IFSC CODE : CNR B0001201  
ADIRAMPATTINAM BRANCH
Contact  : 7094891839

Share:

மரண அறிவிப்பு !!


தக்வாபள்ளியின் முஅத்தீன் ஹாஜா ஷரிப் அவர்களின் மாமியார் இன்று உடல் நல குறைப்பாட்டால் காலமானார் . மதுரையை சேர்ந்த ஹாஜா சரிப் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு அதிரையில் குடிபெயர்ந்தார் இதன்பின்னர் புதிதாக கட்டி திறக்கப்பட்ட மஸ்ஜித்துத் தக்வா பள்ளியில் முஅத்தினாக பணியமர்த்தபட்டு இன்றுவரை சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது மாமியாரை இஸ்லாத்தின் பால் அழைப்புகொடுத்து  அவரை ஆயிஷா அம்மாள் என பெயர் சூட்டி  இஸ்லாத்தில் இணைத்தார் . தனது தாயார்  இஸ்லாத்தை ஏற்றுகொண்ட ஒரே காரணத்திற்க்காக அவரது மகன்கள், மற்றும் மகள் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற்றினர்.

இதனை அடுத்து பரிதவித்த அந்த பெண்மணி அதிரையில் உள்ள ஹாஜா சரிப்பின் இல்லத்தில் தஞ்சம் அடைந்தார் பின்னர்  மார்க்கபற்றுடன் இஸ்லாமிய கடமைகளை ஆற்றி வந்த நிலையில்  சமிபத்தில் பெய்த கனமழை காரணமாக உடல் உபாதைகள் ஏற்பட்டு சற்று நேரத்திற்கு முன்னர் இறைவனடி சேர்ந்தார் ( இன்னா....) 

அன்னாரின் நல்லடக்கம் நாளைகாலை 9மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் . 

தொடர்புக்கு : ஹாஜா சரிஃப் - +91 9750197162 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

மக்களை சந்திப்போம் துவக்கவிழாவில் கலந்து கொண்ட தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள்!
தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மக்களை சந்திப்போம்  பிரச்சார பயணம் நவம்பர் 28 முதல் டிசம்பர் 13 வரை நடைபெற இருக்கிறது. இதன் துவக்கவிழா நேற்று கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை என்ற ஊரில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவில்  தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது இலியாஸ், மாவட்ட பொதுசெயலாளர் ஹாஜிசேக் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர்ரஹ்மான்மதுக்கூர் நகர தலைவர் சாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

அதிரையில் கூட்டு வலிமா விருந்து சாத்தியமா???

அதிரையில் பெரும்பான்மையாக டிசம்பர் மற்றும் மே மாதங்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.இந்நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் 20 தேதி முதல் அதிக திருமணங்கள் நடைபெற இருக்கிறது.இதில் பெரும்பான்மையான நாட்களில் முன்று அல்லது நான்கு திருமணங்கள் ஒரே நாட்களில் நடைபெறும் சூழல் நிலவி வருகிறது,

இதனால் மாப்பிளைகள் வீட்டார் கொடுக்கும் வலிமா விருந்துகள்  ஓரே நாளில் நடைபெறுவதால் உணவு வகைகள் மிஞ்சும் நிலை ஏற்படுகிறது.மேலும் காயல்பட்டினம்,பள்ளபட்டி போன்ற ஊர்களில் ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் திருமண வீட்டார்களை அழைத்து பேசி அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே செலவில் விருந்துகள் கொடுப்பதை கடைபிடித்து வருகின்றனர்.இதில் ஏற்படும் பலன் பணம் வீண் விரயம் ஆகாது.இது போன்ற சூழலை அதிரையில் சாத்தியப்படுத்த ஊர் ஜமாத்தார்கள் ,மஹல்லா அமைப்புகள் ,மஹல்லா சங்கங்கள் முயற்சிக்க வேண்டும். 
Share:

காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் & உதவிப் பேராசிரியர் பணி!


MKN மதரஸா ட்ரஸ்ட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காதிர் முகைதீன் கல்லூரியில் காலியாக உள்ள தாவரவியல் (Botany), வேதியியல் (Chemistry), ஆங்கிலம் (English),  இயர்பியல்(Physics) ஆகிய துறைகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் (Aided) நிறப்பப்படவுள்ளன.

மேற்கண்ட துறைகளில் முதுகலை படிப்புடன் NET அல்லது SLET அல்லது Ph.D., ஏதேனும் ஒன்று முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலியாகவுள்ள பொருளியல் (Economics) முதுநிலை உதவியாசிரியர் பணிக்கு பொருளியலில் முதுகலைப் பட்டத்துடன் M.Ed. அல்லது B.Ed. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து பணிகளுக்கான விண்ணப்பங்களும் 20.12.2015க்கு முன்பாக 
Administrator,
Khadir Mohideen College Campus,
Adirampattinam-614701
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும் படி கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பரிந்துரைகளுடன் வரும் விண்ணப்பங்கள் ஏற்க தகுதியற்றவை என்றும் கூறப்பட்டுள்ளது.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

அதிரையில் 106 வயது மூதாட்டி மரணம்

மேலத்தெவை சேர்ந்த மர்ஹூம் தொ.கா.மு முஹம்மது முகைதீன் ராவூத்தர் அவர்களின் மகளும்,மர்ஹூம்  ஹாஜா முகைதீன் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி பக்கீர் முஹம்மது, மர்ஹூம் ஏஎம் முஹம்மது யூசுப், மர்ஹூம் எஸ்.எம் ஷேய்க் அலி, மர்ஹூம் தொ.கா முஹம்மது முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் மாமியாரும், எம்.ஹெச் ஜமால் உசேன்,  பஷீர் அஹமது, சம்சுதீன் ஆகியோரின் தாயாருமான ஜெமீலா அம்மாள் அவர்கள் இன்று காலை 10 மணிக்கு வபாத்தாகி விட்டார்கள். இவர்  106 வயதுடைய பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.  
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

விபத்தில் சிக்கிய ஹைதர் அலி சிறப்பு பேட்டி! (வீடியோ இணைப்பு)இன்று காலை விபத்தில் சிக்கிய தமுமுகவின் மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்கள் தான் நலமாக உள்ளதாக தொண்டர்களுக்கு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். ஹாலித், நகர செயலாளர், மமக
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

இதோ ஒரு M.P யின் அரசு வருமான கணக்கு.

படித்தப்பின் பகிரவும்.
இச்செய்தியை நாடறியச் செய்யவும்.

M.P யின் மாதச் சம்பளம்
                       ₹50000/-
இதர வருமானம்
                        ₹45000/-
மாத அலுவலகச் செலவு
                         ₹45000/-
மகிழுந்து பயணச் செலவு
(கி.மீ க்கு ₹8/ வீதம் 6000கி.மீ வரை)
                          ₹48000/-
தினபடி(பாராளுமன்றம் கூடும்போது)
                           ₹1000/-
புகைவண்டியில் முதல் வகுப்பு
எத்தனைமுறைப் போனாலும் இலவசம்.

வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (Business class) இலவசம்.

டெல்லியில் தங்கும் அறை இலவசம்

மின்சாரக் கட்டணம்
50000 unit வரை இலவசம்

தொலைபேசி கட்டணம்.       (1,50,000 calls) இலவசம்.

ஆக ஒரு MP யின் மாதச் செலவு
                            ₹292000/-
வருடத்திற்கு. ₹35,04,000/-

5 வருடத்திற்கு ₹1,75,29, 000/-

மொத்தம் 543 எம்பிகளுக்கும்
ஐந்தாண்டிற்கான செலவு
                             ₹951,33,60,000/-
அதாவது ஏறக்குறைய
                         950 கோடி ரூபாய்.
இது அத்தனையும்
நம் மக்களுடைய வரிப்பணம்.

படிக்காத, பட்டம்பெறாத.....
இந்த அரசியல் வாதிகளுக்கு
கிடைக்கும் சலுகை....
நமக்கும்..........
உணவளிக்கும்
விவசாயிகளுக்கும் இல்லை.....!

Share:

அதிரை அருகே விபத்தில் சிக்கிய தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி!திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடைபெற இருந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றுகொண்டிருந்த பொழுது அதிரை அருகே உள்ள கருங்குளம் என்ற இடத்தில் சென்னையிலிருந்து அதிரை நோக்கிவந்துகொண்டிருந்த கார் நேருக்குநேர் மோதியது. இதில் தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களுக்கு லேசான காயங்களுடனும் கார் ஓட்டுனருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன. மேலும் எதிரே வந்த காரில் பயணித்த பயணிகளுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share:

இறுதியாக மரணிக்கும் மனிதனின் மரண அறிவிப்பை அறிவிக்கப்போவது யார்?


இறுதியாக மரணிக்கும் மனிதனின் மரண அறிவிப்பை அறிவிக்கப்போவது யார்?
மானிட வாழ்வில் எப்படி பிறப்பு உண்டோ! அப்படியே மரணமும் உண்டு. இந்த விதியிலிருந்து மனிதன் தப்பவே முடியாது.

இந்த நவீன காலத்தில் எந்த செய்தியாக இருந்தாலும் ஊடகங்கள், இணையங்கள், வலைத்தளங்கள் வாயிலாக அதிவிரைவாக மின்னல் வேகத்தில் உலகம் முழுக்க உடனுக்குடன் பரவி எல்லா மக்களையும் சென்றடைத்துவிடுகின்றது.

அதேபோலதான் மரணச் செய்தியும்.

இதற்கு முன்பெல்லாம் மரணச் செய்தியை தபால் அஞ்சல் அட்டை வழியாகவும், இந்திய தபால் தந்தி தொலை தொடர்பு இலாகா (Indian Postal and Telegraphs Department) மரணச் செய்தியை அனுப்பி வந்தார்கள், மேலும் மரணச் செய்திக்கு மட்டும் இந்திய தபால் தந்தித் துறை வெறும் சாதாரண கட்டணத்தில் அதாவது “XXX” (Very Very High Speed Express Telegraphs) என்ற அதிவேக முறையில் விரைவாக மரணத்தந்தியை உரிவர்களுக்கு சென்றடையும் வகையில் வசதிகளை செய்து இருந்தார்கள். (தற்போது தந்தி சேவை இல்லை.)

எனக்கு பள்ளி படிப்பு வாலிப வயசு இருக்கும், அந்த நாட்களில் அது 1973-களில் நமதூர் செக்கடிப் பள்ளியில் “அரசர்குளம் அல்லது அழகன்குளம் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு நபர் “மோதினார் பணியில் இருந்து வந்தார், அவரின் பெயர் அப்துல் ஹமீது என்று நினைக்கின்றேன் (அப்படித்தான் இருக்கும்).

அவர் நமதூரிலேயே இறந்து விட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

இந்த மரண செய்தியை அவர் உறவினர்களுக்கு தந்தி மூலம் அனுப்ப அன்று வெறும் 50 பைசாக்கள் மட்டுமே. (அன்று இந்த மரண செய்தியை அனுப்ப உதவியாக இருந்தது மர்ஹூம் அப்பாஸ் ஹாஜியார் அவர்கள்)

இன்று மரணம் பல விதங்களில் சம்பவித்து வந்தாலும். அதை உடனுக்குடன் புகைபடத்துடன் பல ஊடகங்கள், இணையங்கள், வலைத்தளங்கள்  வாயிலாக உலகமுழுவதும் பரவிக்கிடக்கும் பல மக்கள் அறிந்து வந்தாலும், இதற்கு பிறகு இன்னும் என்னென்ன வரப்போகுதோ? எல்லாம் வல்ல அல்லாஹ் அறிவான்.

இப்படியாக ஒவ்வொரு மனிதனும் மரணிக்கும் போது மரண அறிவிப்பு வருகின்றது.

இறுதியாக மரணிக்கும் மனிதனின் மரண அறிவிப்பை அறிவிக்கப்போவது யார்?

இறுதி மனிதன் என்றால், அவனுக்கு பிறகு வேறு மனிதன் இல்லை என்றுதானே அர்த்தம், ஆகவே மரண அறிவிப்பு தேவைப்படாமல் இருக்குமோ!. எலாம் வல்ல அல்லாஹ் அறிவான்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
CONSUMER RIGHTS.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

மது விளக்கா அப்டினா? அது ஒரு அறிய கண்டுபிடிப்பு பாஸு (வீடியோ)

மது விளக்கா  அப்டினா? என்னா கேட்கும் குடிமகன்கள்

Share:

களத்தில் வார்டு உறுப்பினர் அப்துல் லத்திப்


மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அவர்களின்  கோரிக்கை அடிப்படையில் அதிரை பேரூர் மன்ற  தலைவர் அஸ்லம், துணைத்தலைவர் பிச்சை,மற்றும்  செயல் அலுவலர் ஆகியோரின் உத்தரவின் பேரில் அதிரை பேரூர் நிர்வாகத்திற்கு  உட்பட்ட 15 வது வார்டு பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்றது.இப்பணி வார்டு உறுப்பினர் அப்துல் லத்திப்  மேற்பார்வையில் நடைபெற்றது .


                                       

                                       ---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

அவசர இரத்தம் தேவை : AB Negative

அவசரமாக திருச்சியில் அனுமதிக்க பட்டுள்ள ஒருவருக்கு AB Negative இரத்தம் தேவை படுகிறது.


Contact: காலித் 8056394348


Share:

ததஜ ஷிர்க் ஒழிப்பு மாநாடு - அதிரையர்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எதிர்வரும் ஜனவரி 31 ஆம் தேதி திருச்சி மாநகரில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.இது தொடர்பாக அதிரை ததஜ சார்பில் மாநாடு குறித்த விளம்பரங்ககள் அறிமுகபடுத்தபட்டு உள்ளது.மேலும் அதிரை பொதுமக்களுக்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுபடி அதிரை த த ஜ சார்பில் அழைப்புகள் விடப்பட்டு உள்ளது.  

Share: