அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் சசிகலா??


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா டிசம்பர் 5 தேதி அன்று காலமானார். நிதியமைச்சராக பணியாற்றி வந்த ஒ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக தேர்வு செய்யபட்ட நிலையில் காலியாக உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்த பொதுச்செயலாளரை நியமிக்க அதிமுக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். ஆயினும் இந்த முடிவு அதிமுகவின் தொண்டர்கள் மத்தியில் எந்தவித வரவேற்பையும் பெறவில்லை.
 ஒரு பக்கம் ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் மகள் தீபாவிற்கு மக்கள் மத்தியில் வெகுவாக ஆதரவு வலுத்து வரும் நிலையில் மறுபக்கம் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அமைச்சர்கள் சசிகலாவை பொதுச்துசெயலாளராக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் கூடியது. இந்த பொதுக் குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளராக கொண்டு கட்சியை வழிநடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் பொதுச் செயலாளர் பதவியை அவர் ஜனவரி 2 தேதி முதல் ஏற்றுக் கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது அதிமுகவின் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

2014 செய்திகளை இப்ப யாரு கேட்டா?
ரன்னிங் ந்யூஸ மாத்துங்க.

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget